Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 06 MAY, 2024 | 08:26 PM வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு இன்று திங்கட்கிழமை (6) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டவர் ஒருவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசா விநியோகிக்கும் முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும் ஏற்கும் என்றும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விசா நடைமுறை குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Virakesari.lk
  2. கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார். கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது. அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார். அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html
  3. வடக்கு - கிழக்கு மாகாணத்தை பிரித்த ஜே.வி.பி; தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு தரும்: சிறீரங்கேஸ்வரன் கேள்வி..... இனிய பாரதி. இணைந்திருந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தை உச்ச நீதிமன்றம் சென்று பிரித்த ஜே.வி.பி தமிழ் மக்களின் அதிகாரத்துக்கான நியாயமான உரிமைகளை எவ்வாறு தரும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பை மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் அவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில், பிரபல ஆங்கில ஊடகமான சண்டே ரைம்ஸ் ஊடகத்திற்கு ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸ்சநாயக்க நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டுவந்த தமிழ் மக்களின் அதிகாரத்துக்கான நியாயமான உரிமைகளை உறுதி செய்வதோடு இலங்கையில் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப தன்னால் முடியும் என கூறியுள்ளார். அதேநேரம் 2019 ஆம் ஆண்டு தங்களது கொள்கை குறித்த ஆவணத்திலும் 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைகள் குறித்து தமது நிலைப்பாட்டை வெளியிட்டிரப்பதாகவும் சூசகமாக கூறியுள்ளார். இந்திய இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை தமிழர்களின் ஒரு நிலத் தொடருள்ள தாயக பூமியாக தமிழ் மக்கள் வாழ்வதை கூட விரும்பாத ஜே.வி.பி அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடி வடக்கு கிழக்கை தனித்தனி மாகாணங்களாக பிரித்தது. குறைந்தபட்சமாக வடக்கு கிழக்கு மாகாணத்தை தமிர்கள் ஒன்றிணைந்து வாழ்வதைக் கூட விரும்பாத இனவாத சிந்தனையுடன் செயற்பட்ட ஜே.வி.பி இப்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறக் கூடும் என்ற சூழலில் தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளை உறுதி செய்வதாக அந்த ஊடகத்திற்கு கூறியுள்ளார். இதிலிருந்து பட்டவர்த்தனமாக புலப்படுவது தேர்தலை இலக்குவைத்து சமிபத்தில் புலம்பெயர் தேசம் சென்றிரந்த ஜே.வி.பி தலைவர் அங்குள்ள அமைப்புகளின் கருத்துக்களை அறிந்து வாக்கை அபகரிக்கின்ற யுக்தியாக இவ்வாறான ஒரு கருத்தை சொல்ல முனைந்துள்ளார். உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் தீர்வுகளை முன்னெடுக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஜே.வி.பி எவ்வாறான முட்டுக்கட்டைகளை அரசாங்கங்களுக்கு போட்டிருந்தது என்பதை தமிழ் மக்கள் கண்ணூடக பார்த்துள்ளனர். கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் வலம்புரி விருந்தினர் விடுதியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த ஜே.வி.பி தலைவர் நான் சமஷ்டியை தருவேன் என்றோ, 13 ஆவது திருத்தத்தை தருவேன் என்றோ இங்கு பேரம் பேச வரவில்லை என இனவாத மமதை கலந்த போக்குடன் கூறியிருந்தார். எனவே குறைந்தபட்சமாக உள்ள மாகாண முறைமையை கூட ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு எவ்வாறு நியாயமான உரிமைகளை வழங்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடக்கு - கிழக்கு மாகாணத்தை பிரித்த ஜே.வி.பி; (newuthayan.com)
  4. Published By: DIGITAL DESK 7 03 MAY, 2024 | 11:38 AM யாழ்.நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்ப்போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (2) நடைபெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார். யாழ் கோட்டையின் உட்புறம் மற்றும் வெளிப்புறச் சூழலை, சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அழகுபடுத்த தேவையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து புதிய திட்டங்களை வடிவமைக்குமாறும், அதற்கான அனுமதியை மத்திய அமைச்சு மற்றும் துறைசார் திணைக்களங்களிடம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். வரலாற்றுச் சின்னமாக காணப்படும் கோட்டையை பாதுகாப்பதற்கும், அதனூடாக வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய சுற்றுலா இடங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஆளுநர் தெரிவித்துள்ளார். இதேவேளை தொல்பொருள் திணைக்களமும், மத்திய கலாசார நிதியமும் மாகாண சபையுடன் இணைந்து செயற்படும் போது, அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என கௌரவ ஆளுநர் கூறினார். கௌரவ ஆளுநரின் பணிப்புரைகளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், பணிப்புரையை துரிதமாக செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். யாழ். கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்குமாறு ஆளுநர் பணிப்பு | Virakesari.lk
  5. Published By: RAJEEBAN 03 MAY, 2024 | 01:06 PM 2024ம் ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை வெளியிட்டுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு இலங்கையை 150 வது இடத்தில் பட்டியலிட்டுள்ளது. 2023ம் ஆண்டு இலங்கை 135வது இடத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பத்திரிகை சுதந்திர விடயங்கள் 2009ம் ஆண்டுவரை அந்த நாட்டில் காணப்பட்ட உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புபட்டவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தமிழ்கிளர்ச்சி ஒடுக்கப்பட்டவேளை பல பத்திரிகையாளர்களிற்கு எதிராக இடம்பெற்ற இன்னமும் தண்டிக்கப்படாத வன்முறைகுற்றங்களிற்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கும் தொடர்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஊடகத்துறையில் பன்முகத்தன்மை இன்மை ஊடகத்துறை அரசியல் உயர் குழாத்தினை சார்ந்துள்ளமை போன்றவற்றின் காரணமாக 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கையில் இதழியல்துறை இன்னமும் ஆபத்தில் உள்ளது எனவும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக ஊடக தொழில்துறையினர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமலாக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு 2015ம் ஆண்டின் பின்னர் எந்த பத்திரிகையாளரும் கொல்லப்படவில்லை ஆனால் முந்தைய கொலைகளுக்கானவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்கள் இன்னமும் இராணுவத்தினர் பொலிஸாரினால் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுகின்றார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிற்கு செல்வதற்கு சுயாதீன ஊடகங்களிற்கு அனுமதிமறுக்கப்படுகி;ன்றது எனவும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2024 பத்திரிகை சுதந்திர குறிகாட்டியில் இலங்கைக்கு 150வது இடம் - எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு அறிக்கை - 2023 இல் 135வது இடம் | Virakesari.lk
  6. விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி போராட்டம் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குறித்த போராட்டத்தை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பினர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக முன்னெடுத்தனர். (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி போராட்டம் | Virakesari.lk
  7. லண்டன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பயணியொருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த சம்பவம் கடந்த 1ஆம் திகதி அன்று இடம்பெற்றுள்ளது. 272 பயணிகளுடன் பயணித்த இந்த விமானமானது, பயணியொருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. பின்னர் மீண்டும் லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியன்னாவில் இருந்து புறப்படத் தாமதமாகியது. இந்நிலையில், விமானம் புறப்படும் வரை ஐரோப்பாவுக்கான விசாவை பெற்றிருந்த அனைத்து பயணிகளையும் வியன்னா நகரில் தங்க வைக்க வசதிகள் செய்யப்பட்டன. பின்னர் இந்த விமானமானது நேற்று (2) லண்டன் நேரப்படி 21:30 மணிநேரத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்தது. லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்! | Virakesari.lk
  8. கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் (25 வயது) ஆகியோர் 90 வயதானவர்கள் உட்பட பல வயதானவர்களை ஏமாற்றி மோசடி செய்து அவர்களது கடனட்டை மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்மை வங்கியில் மற்றும் கடனட்டை கம்பெனிகளில் வேலை செய்வதாகக் கூறி, வயதானவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, அவர்களது கணக்குகள் மற்றும் கடனட்டை விபரங்கள் Hack செய்யப்பட்டதாக கூறி, அவர்களது முகவரிக்கு கூரியர் அனுப்பி, அவர்களது கடனட்டை மற்றும் பண அட்டை (Debit card) ஆகியவற்றின் கடவுச் சொல்லை பெற்றுக் கொண்டு அவற்றின் மூலம் பணத்தை அவர்களது கணக்குகளில் இருந்து திருடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலதிக விபரங்கள்: 90-year-olds among victims in Durham frauds targeting seniors, 2 face charges Lakshanth Selvarajah, 27, (left) and Akshayah Tharmakulenthiran, 25, both of Ajax, are facing dozens of charges, including fraud over $5,000 and unauthorized use of credit card. By Michael Talbot Posted May 1, 2024 10:41 am. A man and woman are facing 40 charges after Durham Regional Police allege, they targeted seniors in a bank and credit card scam. Investigators say the suspects would call seniors impersonating bank and credit card companies, telling them their accounts were compromised. They would then arrange to obtain their cards. “A courier was sent to the victim’s homes to retrieve their bank cards and passwords, which were then used for fraudulent purchases,” a police release states. Police say the victims included a couple in their 90s. Lakshanth Selvarajah, 27, and Akshayah Tharmakulenthiran, 25, both of Ajax, are facing dozens of charges, including fraud over $5,000 and unauthorized use of credit card. 2 charged in Durham fraud case targeting seniors: police (citynews.ca)
  9. கிளிநொச்சி 8 மணி நேரம் முன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தடங்களை மீட்டுக்கொண்ட எரிக்சொல்ஹெய்ம்! (அமுதரசி) நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று (01) கிளிநொச்சிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டார். தான் சமாதான தூதுவராக பணியாற்றிய போது கிளிநொச்சிக்கு பயணம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று சென்றிருந்தார். இவ்வாறாக அவர் பரவிபாஞ்சானில் அமையப்பெற்றிருந்த அரசியல்துறை நடுவப் பணியகம், மற்றும் சமாதான செயலகத்தைப் பார்வையிட்டார். குறித்த இடங்களின் பௌதீக சூழல் மாறியிருந்ததன் காரணமாக அவரால் இடங்களை அடையாளப்படுத்த முடியாமல் போனதாகவும், அந்தக் காலத்தில் அவ்விடங்களில் வைத்து விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த படங்களை இணையத்தளத்திலிருந்து தரவிறக்கி நிகழ்காலத்துடன் அவ்விடங்களை ஒப்பிட்டு பசுமையான நினைவுகளை அவர் மீட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர் சமாதான தூதுவராக கிளிநொச்சிக்கு வருகை தந்த காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் பணியாற்றிய தமிழ்ச்செல்வன் என்பவரையும் சந்தித்து தனது கடந்தகால நினைவுகளை பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அங்கு வசிக்கின்ற ஒரு பெண்ணிடம் நாட்டின் நிலைமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என வினவிய போது சண்டை மட்டுமே இப்போது இல்லை, மற்றும்படி நாங்கள் எதிர்பார்த்த வேறு எதுவும் நடக்கவில்லை என்று ஒற்றை வரியில் ஆழமான ஒரு பதிலை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. (ஏ)தமிழீழ விடுதலைப்புலிகளின் தடங்களை மீட்டுக்கொண்ட எரிக்சொல்ஹெய்ம்! (newuthayan.com)
  10. Published By: DIGITAL DESK 3 01 MAY, 2024 | 03:57 PM இந்தியாவில் தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் தப்பி வர உதவிய ஆறு பேர் என 8 பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த சைபுல்லா நவீத், இம்ரான், நைனா முகமது, ரகுமான் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று (30) இரவு தங்கச்சி மடம் பேருந்து நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அவர்கள் நால்வர் மீதும் முன்னதாக இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சந்தேகமடைந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கச்சிமடம் பொலிஸார் நால்வரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான சாந்தி மற்றும் ராஜேஸ்வரன் ஆகிய இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை வந்ததாகவும், சென்னையில் தங்கி இருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் கணேசன் லிங்கம் ஆகியோரை தொடர்பு கொண்டு சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். இதனை அடுத்து ராஜேஸ்வரனிடம் பணத்தை பெற்றுக் கொண்ட கணேசலிங்கம் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் வேதாளை பகுதியை சேர்ந்த நவீத் இம்ரானை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து ராஜேஸ்வரன், சாந்தி, கணேசலிங்கம், வினோத் குமார் ஆகிய நால்வரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வந்து தங்கச்சிமடம் அடுத்துள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்துள்ளனர். இன்று (1) புதன்கிழமை இரவு தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியா தப்பி செல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இலங்கை தம்பதிகள் இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவிய ஆறு பேர் என மொத்தம் எட்டு பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்து தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் உள்ள எட்டு பேரிடம் மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார் மற்றும் சட்ட ஒழுங்கு பொலிஸார் அடுத்தடுத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தங்கச்சிமடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற இருவர் உட்பட 8 பேர் கைது | Virakesari.lk
  11. 01 MAY, 2024 | 07:00 PM தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இக்கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த கிராம மக்கள் இன்றைய தினம் (1) மே தினத்தை ஒன்றுதிரண்டு மிகவும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் புனித லோறன்சியார் ஆலய பங்குத்தந்தை சந்தியோகு மார்க்கஸ் அடிகளார் தலைமையில் புனித லோரன்சியார் மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் லோரன்சியார் விளையாட்டு கழகம் கூட்டாக இணைந்து மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் மீன்பிடி துறையில் அமைந்துள்ள சுரூபத்தடியில் இன்று காலை மே தின கொண்டாட்ட நிகழ்வு திருப்பலியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மக்கள் யாவரும் ஒன்றுதிரண்டு மீன்பிடி துறைமுகத்தில் போட்டி நிகழ்வுகளில் ஈடுபட்டனர். நீச்சல் போட்டி, தெப்பம் வலிக்கும் போட்டி, பெரிய மற்றும் சிறிய படகுகளின் போட்டி, பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் கடற்படையினர் மற்றும் பொலிஸ் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர். மன்னர் மாவட்டத்தில் பல்வேறு மீன கிராமங்களில் மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மே தினத்தை கொண்டாடி மகிழ்ந்த தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள்! | Virakesari.lk
  12. ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள்... ‘சிக்கிய’ தேவகவுடா பேரன் - கர்நாடகாவில் பாஜக-வுக்கு பின்னடைவா? கர்நாடகாவில் இருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளில், 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்த 14 தொகுதிகளுக்கு வரும் மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. மோடி பா.ஜ.க-வுக்கு தென் மாநிலங்களில் செல்வாக்கு இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. அங்கு, கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி-க்கு எதிராக எழுந்திருக்கும் பாலியல் புகார், கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்த விவகாரம், பா.ஜ.க கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவில் ஹாசன் மக்களவைத் தொகுதி எம்.பி-யாக இருப்பவர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா. இவர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் என்பதும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமியின் சகோதரர் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹாசன் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான பிரஜ்வல் ரேவண்ணா, இந்த முறையும் அந்தத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முந்தைய நாள், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோக்கள் வெளியாகின. ‘பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வக்கிரங்கள்’ என்ற பெயரில் 300 பாலியல் வீடியோக்கள் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டன. இந்த விவகாரத்தால் பா.ஜ.க - ஜே.டி.எஸ் கூட்டணியினர் பேரதிர்ச்சியடைந்தனர். அடுத்த சில மணி நேரத்தில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 2,800-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவின. தன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், தனது கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் என்று தொடங்கி, அரசுப் பணியில் இருக்கும் பெண் அதிகாரிகள் வரை பாலியல் ரீதியாக பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்திருக்கிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த பாலியல் காட்சிகளை அவரே வீடியோவும் எடுத்திருக்கிறார். 16 வயது சிறுமி முதல் 60 வயதுடைய பெண்கள் வரை பாலியல் அத்துமீறல்களில் பிரஜ்வல் ஈடுபட்டிருக்கிறார் என்பதை கர்நாடகா முழுவதும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார். தற்போது, அவர் ஜெர்மனியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு கர்நாடகா மாநில அரசு அமைந்திருக்கிறது. மேலும், புகார்கள் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக்கோரி கர்நாடகா முழுவதும் பெண்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். தேவகவுடாவின் மகனும் பிரஜ்வலின் தந்தையுமான ரேவண்ணா, முன்னாள் அமைச்சர் ஆவார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் மீதும் பாலியல் புகார் எழுந்திருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணாவைப் போலவே அவரது தந்தையும் தன்னை கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார் என்று, அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் தந்தை, மகன் இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். பிரஜ்வல் ரேவண்ணாவை பா.ஜ.க பாதுகாக்கிறது என்று கர்நாடகா அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் குற்றம் சாட்டியிருக்கிறார். அவர், ‘இந்து பெண்களின் தாலி குறித்து பிரதமர் மோடி பேசிவருகிறார். ஆனால், தனது கூட்டணிக் கட்சியினரின் பாலியல் வக்கிரங்களுக்கு மோடி என்ன சொல்லப்போகிறார்? அரசியல் ஆதாயத்துக்காக பிரஜ்வல் ரேவண்ணாவை பா.ஜ.க பாதுகாக்கிறது. இது உலக அளவில் நடைபெற்றிருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் மிக மோசமான வன்கொடுமை நிகழ்வாக இருக்கிறது. எனவே, இது தொடர்பான தனது நிலைப்பாட்டை பா.ஜ.க தெரிவிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் பா.ஜ.க-வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டுமென்பதற்காக பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸை கடுமையாக விமர்சித்ததுடன், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தையும் கர்நாடகாவில்தான் மோடி கிளப்பினார். “ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருக்கிறார்கள். மதரீதியில் இடஒதுக்கீடு வழங்கியிருப்பது சட்டவிரோதம்” என்றெல்லாம் பேசியதோடு, காங்கிரஸையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார் மோடி. ஆனால், அவரது பிரசாரத்தை தவிடுபொடியாக்கிவிட்டது பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ விவகாரம். இதனிடையே இந்த விவகாரம் குறித்து பேசிய அமித் ஷா, ``நாட்டின் பெண்கள் சக்தியுடன் நிற்போம் என்ற பா.ஜ.க-வின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக இருக்கிறது. கர்நாடகாவில் யாருடைய அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதை காங்கிரஸிடம் கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை. மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் அரசு இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆதரவாக இருக்கிறோம். எங்களின் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்)-ம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறது. இன்று இது தொடர்பான அக்கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று நடக்க இருக்கிறது. அதில் சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்” என்றார். இந்நிலையில் இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பிரஜ்வல் ரேவண்ணவை இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் என்.டி.ஏ கூட்டணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது, அக்கட்சி அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கை மூலம் தெரிய வருகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள்... ‘சிக்கிய’ தேவகவுடா பேரன் - கர்நாடகாவில் பாஜக-வுக்கு பின்னடைவா? | Will JDS candidate videos affect nda alliance in karnataka - Vikatan
  13. நிர்மலா தேவி: `மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறை' - நீதிமன்றம் தீர்ப்பு! க.பாலசுப்பிரமணியன்சே. பாலாஜி 2 Min Read மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், 5 பிரிவுகளின் கீழ் நிர்மலா தேவிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசியலாளர்கள் மற்றும் ஆளுநர் மாளிகையும் இணைத்து பேசப்பட்டதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பிறகு சூடுப்பிடித்த வழக்கின் விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் பலரின்மீது சந்தேகங்கள், விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இறுதியாக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 2018-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளும் வாதங்களும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை கடந்த 26-ம் தேதி வழங்குவதாக கூறியிருந்தார். 26-ம் தேதி தீர்ப்பிற்காக நிர்மலா தேவி வழக்கு எடுத்துக்கொண்ட போது பேராசிரியர் நிர்மலா தேவி நேரில் ஆஜராகாததால், தீர்ப்பினை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார். அதன்படி, பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை அரசு தரப்பில் ஆவணங்களோடு நிரூபிக்க தவறியதால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலா தேவி குற்றவாளி எனவும் கோர்ட் தீர்மானித்தது. மேலும், நிர்மலா தேவியின் தண்டனை விவரங்கள் இன்று தெரிவிக்கப்படும் எனவும் நீதிபதி பகவதியம்மாள் தெரிவித்தார். இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் 5 பிரிவுகளின் கீழ் நிர்மலா தேவிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 370-1பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை 370-3பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை 5(i)a பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறை 67 ITP பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை 9 ITP பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டதால், அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும்... மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி பகவதியம்மாள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நிர்மலா தேவி: `மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறை' - நீதிமன்றம் தீர்ப்பு! | court sentenced 5 years prison to nirmala devi - Vikatan
  14. தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கும் ஒன்று. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசியலாளர்கள் மற்றும் ஆளுநர் மாளிகையும் இணைத்து பேசப்பட்டதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பிறகு சூடுப்பிடித்த வழக்கின் விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் பலரின்மீது சந்தேகங்கள், விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இறுதியாக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 2018-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளும் வாதங்களும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை கடந்த 26-ம் தேதி வழங்குவதாக கூறியிருந்தார். 26-ம் தேதி தீர்ப்பிற்காக நிர்மலா தேவி வழக்கு எடுத்துக்கொண்ட போது பேராசிரியர் நிர்மலா தேவி நேரில் ஆஜராகாததால், தீர்ப்பினை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார். அதன்படி, பரபரப்பான சூழ்நிலையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியை நிர்மலா தேவி ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை அரசு தரப்பில் ஆவணங்களோடு நிரூபிக்க தவறியதால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலா தேவி குற்றவாளி எனவும் கோர்ட் தீர்மானித்தது. இந்த சூழலில் நிர்மலா தேவிக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு வழங்கப்படும் தீர்ப்பு குறித்து வாதங்களை முன்வைக்க விரும்புவதாக நீதிபதியிடம் பேசினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சி.பி.சி.ஐ.டி. சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் பேசினார். இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி பகவதியம்மாள் கூறினார். தொடர்ந்து நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'வழக்கில் 2-ம் மற்றும் 3-ம் நபர்களாக குற்றம்சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து நிர்மலா தேவிக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வாதங்களை முன் வைப்பதற்கு நீதிபதியிடம் அவகாசம் கேட்டிருக்கிறோம். வாதங்கள் குறித்து பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார். சி.பி.சி.ஐ.டி.தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் பேசுகையில், 'நிர்மலாதேவி வழக்கில் 2,3-ம் நபர்களாக குற்றம் சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதற்கு போதுமானது தான். ஆனால் வழக்கு விசாரணையின்போது முருகன் மற்றும் கருப்பசாமிக்கு எதிராக ஆரம்பக்கட்டத்தில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிறழ் சாட்சிகளாக மாறியதால் நீதிமன்றம் பிறழ்சாட்சிகளை கருத்தில் எடுத்துக்கொண்டு உதவி பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்திருக்கிறது. அதேசமயம் நிர்மலா தேவியை குற்றவாளி எனவும் தீர்மானித்துள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவருக்குமே தண்டனை பெற்று தருவதில் அரசு தரப்பு உறுதியாக உள்ளது. இந்த வழக்கிலே அரசுத் தரப்பில் 104 சாட்சிகள் வழங்கப்பட்டதில் 82 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 194 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. 46 சான்று பொருட்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முருகன், கருப்பசாமியின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம். அதேசமயம் பிறழ் சாட்சிகளாக மாறிய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்வார்கள். பிற்பகலில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும் நிர்மலா தேவி வழக்கில் வாதங்களுக்கான சிறப்பு கால அவகாசம் வழங்கக் கூடாது, இன்றைக்கே வாதங்களை முன்வைக்கவும் நியாயத்திற்கான தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம். எதுவாகினும் பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு பின்பு எதையும் உறுதியாக சொல்ல முடியும்' என்றார். பிற்பகலில், தீர்ப்பிறக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், 'இம்மார்டல் ட்ராஃபிக் ப்ரெவென்ஷன் ஆக்ட் சட்டத்தின்படி குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வாதங்களை முன்வைக்க எங்களுக்கு இறுதி வாய்ப்பு தர வேண்டும். இதேப்போல, பிரசாந்த் பூஷன் மீதான வழக்கிலும்கூட சுப்ரீம் கோர்டு இறுதிக்கட்டத்தில் எதிர்தரப்புக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது' என மேற்கோள் காட்டி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். இதைத் தொடர்ந்து அரசு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், நாளை ஒரு நாள் அவகாசம் அளித்து `தீர்ப்பு நாளை பிற்பகலில் வழங்கப்படும்' என வழக்கை ஒத்தி வைத்துள்ளார். `நிர்மலா தேவி குற்றவாளி; மற்ற இருவர் விடுதலை!'- மாணவிகளை தவறாக நடத்த முயன்ற வழக்கில் கோர்ட் தீர்ப்பு | srivilluputhur court convicted nirmala devi in the case of misbehaving with the students - Vikatan
  15. யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  16. யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது. பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
  17. மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது. ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது! | Virakesari.lk
  18. 25 APR, 2024 | 02:04 PM வவுனியா வைரவபுளியங்குளத்தில் வன்னியின் மகளிர் பலத்தால் கட்டியெழுப்பப்பட்ட நச்சற்ற சூழல் நேயமிக்க உற்பத்திப் பொருட்களுக்கான மாபெரும் உழவர் சந்தை மாவட்ட செயலாளர் சரத் சந்திரவினால் இன்று (25) திறந்துவைக்கப்பட்டது. குளங்கள் கிராமங்கள் மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களிடம் இருந்து இடைத்தரகர் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பெருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த சந்தை அமைந்துள்ளது. குளங்கள் கிராமங்கள் மறுமலர்ச்சித் திட்டத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் கனிசியஸ் தலைமையில் இந்த சந்தை திறக்கப்பட்டது. சந்தை திறப்பு விழாவில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன், யுன்டிபி நிறுவனத்தின் கள இணைப்பாளர் கலாநிதி கீர்த்திகா மற்றும் அரச உயர் அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். வவுனியா வைரவபுளியங்குளத்தில் மாபெரும் உழவர் சந்தை | Virakesari.lk
  19. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கோட்டா- ஆணைக்குழுஅறிக்கை வெளியான பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை என தெரிவிப்பு Published By: RAJEEBAN 25 APR, 2024 | 03:19 PM 1 பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டஇரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மறைக்கின்றார் அல்லது வெளிப்படையாக தவிர்க்கின்றார் 2 சிஐடி அதிகாரியை விசாரணைகளை சீர் குலைப்பதற்காக நான் பதவி நீக்கவில்லை 3 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகளே மேற்கொண்டனர் ------------------- பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை கடுமையாக சாடியுள்ளார் உயிர்த்த ஞாயிறு தொடர்பான கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டஇரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மறைக்கின்றார் அல்லது வெளிப்படையாக தவிர்க்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு என்னிடம் கையளிக்கப்பட்ட மறுநாள் நான் கர்தினால்மல்கம் ரஞ்சித்தைதொடர்புகொண்டேன் என கர்தினால் தெரிவித்துள்ளார் ஆனால் நான் அந்தஅறிக்கைசமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நான் கர்தினாலை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளவேயில்லை என கோட்டாபய தெரிவித்துள்ளார். முஸ்லீம் சமூகத்தினர் எனக்கு வாக்களிக்கவில்லை என்னை ஆதரிக்கவில்லை என்பது நன்கு தெரிந்த விடயம் இதன் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தடைசெய்யப்படவேண்டிய எந்த அமைப்பிலும் நான் ஏன் ஆதரவாளர்களை வைத்திருக்கவேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2021 ம் ஆண்டு பெப்ரவரிமுதலாம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்டது நான் அதனை ஆராய்ந்த பின்னர் சட்டமாஅதிபரிடம் பாரப்படுத்தினேன் 2021 பெப்ரவரி 23ம் திகதி அது நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது மார்ச் முதலாம் திகதி அதன் பிரதிகள் பௌத்த கர்தினால் மற்றும் கத்தோலிக்க ஆயர்களிற்கு கையளிக்கப்பட்டது எனவும் கோட்டாபய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பித்ததும் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நான் ஆறுபேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவை நியமித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபரின் பரிந்துரையின் கீழ் சிஐடியின் அப்போதைய இயக்குநர் 2019 நவம்பர் மாதம் பொலிஸ் ஆணைக்குழுவால்பதவிமாற்றம்செய்யப்பட்டார் இந்த பொலிஸ் ஆணைக்குழு 19வது திருத்தத்தின் கீழ் முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டது என தெரிவித்துள்ள கோட்டபாய ராஜபக்ச உயர்நீதிமன்ற வழக்கு தொடர்பில் நீதிபதிகளை செல்வாக்கிற்கு உட்படுத்துவது தொடர்பில் ரஞ்சன்ராமநாயக்கவுடன் மேற்கொண்டதொலைபேசிஉரையாடல்களை கசிந்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு இந்த சிஐடி அதிகாரியை சில வாரங்களின் பின்னர் பணியிலிருந்து இடைநிறுத்தியது எனவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்கு சில மாதங்களின் பின்னர் முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிரானகுற்றவியல் சம்பவமொன்று தொடர்பில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியமை தொடர்பிலான விசாரையின் பின்னர் இந்த சிஐடி அதிகாரி நீதிமன்றகாவலில்வைக்கப்பட்டார் என தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை சீர்குலைப்பதற்காக இந்த அதிகாரியை நானே பதவி நீக்கம்செய்தேன் என தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ளார். இந்த குறிப்பிட்ட சிஐடி அதிகாரி2017 இல் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்று பல மாதங்களின் பின்னரும் தொடர்ந்து பதவியிலிருந்தார் என குறிப்பிட்டுள்ள கோட்டபாய உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முந்தைய காலப்பகுதியில் வவுணதீவு விவகாரம் தொடர்பில் சிஐடியினரே விசாரணைகளை மேற்கொண்டனர் மாவனெல்லயில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை வனாவில்லில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலும் சிஐடியினரே விசாரணைகளை மேற்கொண்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட குழுவினரும் நபர்களுமே தொடர்புபட்டிருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்ட அமுலாக்கல் தரப்பினர் மேலும் எச்சரிக்கையுடன்இருந்திருந்தால் உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு முன்னரே ஜஹ்ரான் குழுவினரை கைதுசெய்திருக்கலாம் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச இந்த தாக்குதலை தடுக்க தவறியது சிஐடியின் இயக்குநரின் தவறே எனவும் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்தவில்லை என கர்தினால்தனது உரையில் குற்றம்சாட்டியுள்ளார் எனினும் குற்றவாளிகளை அரசியல்வாதிகளால் நீதியின் முன் நிறுத்தமுடியாது பொலிஸாரினாலேயே அதனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச சட்டமா அதிபர் திணைக்களமும் நீதிகட்டமைப்பும் இணைந்து இதனைமுன்னெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகளே முன்னெடுத்தனர் புலனாய்வு விசாரணைகளில் மிக முக்கிய அமை;பப்பான சிஐடி இந்த தாக்குதலிற்கு பல மாதங்கள்முன்னராகவே இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் மற்றும் அமைப்பு குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.ஆனால் அவர்கள் தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அவர்களை கண்டுபிடிக்க தவறிவிட்டது எனவும் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கோட்டா- ஆணைக்குழுஅறிக்கை வெளியான பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை என தெரிவிப்பு | Virakesari.lk
  20. Published By: VISHNU 25 APR, 2024 | 06:17 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுவரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிராம மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டடில் வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இயற்கை வளங்களை அழிக்கும் செயற்திட்டங்கள் தமக்கு வேண்டாம், இறால்பண்ணை, மற்றும் இல்மனைட் கம்பனிகளைத் தடைசெய்ய வேண்டும், எனத் தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்திட்டங்கள் தொடர்பில் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆளுனர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக்கூற வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோசங்களை முன்வைத்தனர். வாகரையில் முன்னெடுக்கப்படும் இறால்பண்ணை, இல்மனைட் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டு நகரில் மக்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
  21. Published By: VISHNU 25 APR, 2024 | 06:56 PM வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 1,500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவர்களில் 10 குடும்பங்கள் இன்னமும் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருவதாக கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடமாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் இடம்பெற்றதாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 4,567 மக்களுக்கு அரசாங்கம் இதுவரை எதனையும் செய்யவில்லை என, இக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ். மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் ஆளுநருக்கு அறிவித்தார் “1,512 குடும்பங்களைச் சேர்ந்த 4,567 பேர் இருக்கின்றனர். இவர்களில் 10 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களிலும் 1,502 குடும்பங்கள் உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. இவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள்.” ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வருடத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு ஆளுநர் அறிவித்துள்ளார். இதுவரை மீள்குடியேறாத மக்களை மீள்குடியேற்றுவதற்கான வேலைத்திட்டம் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட ஏனைய வசதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஆளுநர் மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். “உரித்து” காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கமையை மே மாத நிறைவுக்குள் வடக்கு மாகாணத்தில் 60,000 பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ஆளுநர் அறிவித்துள்ளதாக வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கீழ் நீர் தொடர்பான ஆய்வுகள் உரியவாறு மேற்கொள்ளாது சில தனியார் நிறுவனங்கள் குழாய் கிணறுகளை அமைப்பதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஆளுநர், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் யாழ்ப்பாணத்தில் 1,500 குடும்பங்கள் அகதி வாழ்வு! | Virakesari.lk
  22. Published:Today at 6 AMUpdated:Today at 6 AM மன்சூர் அலிகான் - செல்வப் பெருந்தகை வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி சார்பாகப் போட்டியிடும் அதன் நிறுவனர் மன்சூர் அலிகான், காங்கிரஸில் இணையப்போவதாக அறிவித்திருக்கிறார். முன்னதாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை மன்சூர் அலிகான் இன்று நேரில் சந்தித்தார். மன்சூர் அலிகான் - செல்வப்பெருந்தகை அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், ``தாய் கழகத்தில் இணைவதற்காகக் கடந்த ஆண்டு நவம்பரிலேயே கடிதம் கொடுத்திருந்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடனான கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டேன். பின்னர் மீண்டும் இணைய கடிதம் கொடுத்திருந்தேன். ஆனால், அது யாரிடமும் சேரவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான், இடையில் கட்சி ஆரம்பித்தேன். தற்போது, வேலூர் தொகுதியைத் தவிர எல்லா இடங்களிலும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறேன் என்று கூறிவந்தேன். அதோடு, சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி என்ற மகராசிக்கு பிரதமருக்கான முகராசி இருக்கு, அவர்தான் பிரதமராக வரவேண்டும் அல்லது ராகுல் காந்தி வரவேண்டும் என்று எனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன்'' என்று தெரிவித்தார். பிரதமர் மோடி மேலும், பிரதமரின் சமீபத்திய மத ரீதியிலான பேச்சு குறித்து பேசுகையில், ``முன்னாள் பிரதமர் மன்மோகன் 2006-ல் பேசியதைத் திரித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மனிதராக இருப்பதற்கே தகுதியற்றவர். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆளும் பிரதமர், வேலைவாய்ப்பை ஏற்படுத்தாமல் நாட்டு மக்களை யாசகர்களாக்கிவிட்டு, இன்றைக்கு இவரைக் கொலைசெய்ய வெளிநாட்டு சதி நடப்பதாக இவரே கூறுகிறார். இந்த மாதிரி எதையாவது பேசி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். முதலில் அவரை சிறைக்கு அனுப்புங்கள். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்" என்று கூறினார். Mansoor AliKhan: `தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு | actor and politician Mansoor Ali Khan announced he will join Congress (vikatan.com)
  23. இலங்கை இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யா யுத்தகளத்தில் மோதிக்கொள்கிறார்கள் -தயாசிறி ஜயசேகர (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற அமர்வின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கை இராணுவ சேவையில் இருந்து ஓய்வுப் பெற்ற இராணுவத்தினர் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இராணுவ முகாம் உதவியாளர் சேவைக்கு அழைத்து பின்னர் பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அண்மையில் குசந்த குணதிலக என்ற ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி உட்பட இருவர் பலவந்தமான முறையில் யுத்த தாங்கிக்குள் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.இவ்வாறான நிலையில் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளார்.குசந்த குணதிலக என்பவர் காணாமல் போயுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்ய இராணுவ சேவையில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பாரிய மோசடிகள் முன்னெடுக்கப்படுகிறது.ஒரு நபரிடமிருந்து தலா 18 இலட்சம் ரூபா பெற்றுக்கொள்ளப்படுகிறது. சமூக வலைத்தளங்கள் ஊடாகவே தொழில் வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விடுதலை புலிகள் அமைப்பை இல்லாதொழித்த எமது இராணுவத்தினர் இன்று ரஷ்யா - உக்ரைன் யுத்த களத்தில் மோதிக் கொள்கிறார்கள்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். இதன்போது எழுந்து பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முக்கியமானதொரு விடயத்தை முன்வைத்துள்ளார். இலங்கை இராணுவத்தினர் இலங்கையர்கள் உக்ரைன் மற்றும் ரஸ்யா இராணுவத்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக செல்கிறார்கள். இதன் ஊடாக மோசடிகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது. இவ்விடயம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சு மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி முழுமையான விபரத்தை அறிவிக்கிறேன் என்றார். இலங்கை இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யா யுத்தகளத்தில் மோதிக்கொள்கிறார்கள் -தயாசிறி ஜயசேகர | Virakesari.lk
  24. யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால் திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.