Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம் Mithuna / 2024 ஜனவரி 30 , பி.ப. 05:36 - 0 - 59 உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. நிர்வாக வெளிப்படைத்தன்மை, இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த காரணிகளின் அடிப்படையில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வழங்கப்படுகிறது. பூஜ்ய (0) மதிப்பெண் பெறும் நாடு ஊழல் மிகுந்த நாடாக குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 180 நாடுகளில் எந்த நாடும் 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. அதாவது உலகம் முழுவதும் ஊழல் இருப்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. 90 மதிப்பெண் பெற்ற டென்மார்க் ஊழல் மிகவும் குறைந்த நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து 2-ம் இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 93-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 40 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 39 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதேபோல் கஜகஸ்தான், லெசோத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 133-வது இடத்தையும், இலங்கை 115-வது இடத்தையும் சீனா 76-வது இடத்தையும் பிடித்துள்ளன. வெறும் 11 மதிப்பெண்களுடன் சோமாலியா நாடு கடைசி இடத்தில் உள்ளது. Tamilmirror Online || ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்
  2. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற போதிலும் இலங்கையின் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு முக்கிய தொடர்புள்ளதை வெளிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதே திட்டம் தெரிவித்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனது வன்முறை மிகுந்த கடந்தகாலத்தை கையாள்வதில் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக கோட்டாபய ராஜபக்சவை பொறுப்புக்கூறலிற்கு உள்ளாக்குவதே அதற்கான அமில பரிசோதனையாக காணப்படும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகபணியாற்றிய வேளை போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு அவர் வழங்கிய உத்தரவுகள் தொடர்பான புதிய ஆதாரங்களை உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச சட்டத்தின் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. இராணுவதளபதியாக இல்லாவிட்டாலும் பாதுகாப்புபடையினர் தொடர்பில் கட்டளையிடுவது குறித்து வலுவான கட்டுப்பாடு காணப்பட்டது என தெரிவித்துள்ள புதிய அறிக்கை அவருக்கு பாதுகாப்பு படையினர் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை சர்வதேச குற்றவியல் சட்டங்களை மீறுவது குறித்து நன்கு தெரிந்திருந்தது ஆனால் அவர் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறினார் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்ளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த தயங்கினார் எனவும் ஐடிஜேபியின் அறிக்கை தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர்பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகதன்மைமிக்க விசாரணையை மேற்கொள்வதற்கும் நீதிநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அவருக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களிற்கும் போதிய சந்தர்ப்பமிருந்தது எனினும் உண்மை வெளியில் வருவதற்கு அனுமதிப்பதற்கு பதில் கோட்டாபய ராஜபக்சவும் ஏனைய ஆட்சியாளர்களும் உரிமை மீறல்களில் பாதுகாப்பு படையினருக்கு தொடர்புள்ளதை மறுத்துவந்துள்ளனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் அவர்களிற்கு பதவிஉயர்வுகளை வழங்கியுள்ளதுடன் பாதுகாத்து வந்துள்ளனர் எனவும் ஐடிஜேபி தெரிவித்துள்ளது. https://itjpsl.com/assets/Tamil_Gotabaya-Rajapaksas-war-time-role-Jan-2024_Final_26.01.2024_compressed.pdf போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை | Virakesari.lk
  3. Published By: VISHNU 30 JAN, 2024 | 12:23 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன் மணல் மயானத்தில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் எரியூட்டி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அதன் பணிகள் பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது. எதிர்வரும் வரும் மார்ச் மாதம் முதல் எரியூட்டி தொழிற்பட தொடங்கும் என பணிப்பாளர் தெரிவித்தார். மார்ச் முதல் யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி இயங்கும் - பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி | Virakesari.lk
  4. Published By: DIGITAL DESK 3 30 JAN, 2024 | 05:10 PM கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அயல் வீட்டு குடும்பஸ்தரினால் குறித்த கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்த நிலையில் அது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே கேப்பாபிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நான்கு நாட்களாக தொடர்ச்சியான முறையில் இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றையநாள் நான்காவது நாளாக தொடரும் இவர்களின் போராட்டத்தினை குறித்த பகுதி கிராம அலுவலரோ, பொலிஸாரோ கண்டுகொள்ளவில்லை. இதுவரை குறித்த போராட்டத்திற்கான நீதி கிடைக்காததனால் இரு குடும்பங்களும் வீட்டிற்கு செல்ல முடியாமலும், வீட்டில் இருக்க பாதுகாப்பற்ற நிலையிலும் வீதியிலேயே இருக்கின்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபடும் இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கும் போது குறித்த பகுதி கிராம அலுவலரும் தம்மை கண்டு கொள்ளவில்லை எனவும், பொலிஸார் நேரடியாக நீதிமன்றத்துக்கே தம்மை அனுப்புவதாகவும், தமக்கு குழந்தைகளும் இருப்பதனால் வீதியில் தொடர்ச்சியாக கொசுகடிக்குள் இருக்க முடியாது,வேலைக்கும் செல்ல முடியாது, வருமானமும் இல்லாமல் போக நாம் வீதியிலையே இருக்கின்றோம். எம் பிள்ளைகள் வீதியிலே போகும்போது எதிராளிகள் துப்புகின்றனர். எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கின்றது எனவும், எம் உயிர் போக முன்னமே சமாதானமாக வாழ நீதியை பெற்றுதருமாறு கேட்டுக்கொள்கின்றோம் . இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்ட வேளை வீட்டில் தனிமையில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தபோது பிரச்சினைக்குரிய அயல் வீட்டு குடும்பஸ்தர் அங்கு சென்று போதைப்பொருளை வைத்து விட்டு பொலிஸாரை அழைத்துவந்து குறித்த இரு சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல் வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்தும் நியாயம் கிடைக்கவில்லை எனவும் அதற்கான நீதி தமக்கு வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி இரு குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கேப்பாபிலவில் தீர்வுகளின்றி 4 ஆவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்! | Virakesari.lk
  5. Published By: VISHNU 30 JAN, 2024 | 08:36 PM அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை (30) பகல் கொழும்பு விகாரமாதேவி பூங்கா சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது. போராட்டத்தை கலைப்பதற்கு போராட்டகாரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை வீச்சு மேற்கொள்ளப்பட்டது. ''மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் - 2024'' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் கொழும்பில் முன்னெடுத்த எதிர்ப்புப் பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். வெட் வரி உள்ளிட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குரிய தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்பிற்கு வருகை தந்திருந்தனர். கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த பேரணி ஆரம்பமாகி முதல் 15 நிமிடங்களுக்குள்ளால் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகையும்,நீர்த்தாரைப் பிரயோகமும் இடம்பெற்றது. மீண்டும் பேரணியில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுடனும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதமும் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பிரதான நுழைவாயில் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச பேரணி உரையை நிகழ்த்தினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு மூன்று நீதவான் நீதிமன்றங்களினால் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட தடை விதித்து,இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு கொழும்பு இலக்கம் 04 நீதவானால் இன்று முற்பகல் தடையுத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே,மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆகியனவும் தடை உத்தரவு பிறப்பித்திருந்தன. வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாமெனவும் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் உட்பிரவேசிப்பதைத் தவிர்க்குமாறும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதமேற்படுத்த வேண்டாமெனவும் நீதிமன்ற உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. இதேவேளை,எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை,நீர்த்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரணியை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரதேசமதாச கொழும்பு தேசிய வைத்தியாசலைக்கு சென்று பாதிக்கப்பட்ட கட்சி ஆதரவாளர்களின் நலன் விசாரித்தார். (படப்பிடிப்பு –ஜே.சுஜீவகுமார்) கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு போராட்டம் ! | Virakesari.lk
  6. பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் கைது @ ஆந்திரா சென்னை: பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்டோ மதிவாணனும், அவரது மனைவி மெர்லினாவும் தங்களது வீட்டில் பணிபுரிந்த 18 வயது பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வழக்குப் பதிவு செய்யப்பட்டது முதலே, ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில், இருவரையும் தமிழக தனிப்படை போலீஸார் ஆந்திரா அருகே கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், உடனடியாக சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சென்னை அழைத்து வரப்படும் இருவரிடமும் விசாரணை நடத்தி பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு இன்று காலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணிடம் அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கி உள்ள நிலையில், திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் ஆந்திரா அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலேயே, தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும், என கோரி இவர்கள் இருவரும் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் கைது @ ஆந்திரா | Maid Torture Case DMK MLA son, daughter-in-law arrested in Andhra Pradesh - hindutamil.in
  7. “அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிரதமர் மோடி செய்தது ‘மன்னர்கள்’ வேலை” - இளையராஜா சென்னை: “இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். என்னென்ன செய்தார்கள் என்று பாருங்கள். அதில் யார் செய்தது அதிகம் என்று எண்ணிப் பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே... அதை சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது” என்று இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபா அரங்கில் ‘சென்னையில் அயோத்தி’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய இளையராஜா, “இன்றைய நாள் சரித்திரத்தில் முக்கியமான நாள். ராமர் கோயில் நிகழ்வு பிரதமர் மோடிக்கு அழியாப் புகழைத் தேடித் தரும். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். யாரால் செய்ய முடியும்? எல்லோராலும் செய்துவிட முடியுமா? யாராலும் செய்ய முடியாது. பிரதமர் நரேந்திர மோடிக்கு என்று கடவுள் எழுதியுள்ளார். இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். என்னென்ன செய்தார்கள் என்று பாருங்கள். அதில் யார் செய்தது அதிகம் என்று எண்ணிப்பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே.. அதை சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது. அயோத்தியில் இருக்க வேண்டிய நான் இங்கு இருப்பது வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வது ஆறுதலை அளிக்கிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் எத்தனையோ கோயில்கள் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் ஆண்ட மன்னன் கட்டிய கோயிலாகத்தான் அது இருக்கும். மொத்த இந்தியாவுக்குமான கோயிலாக ஒன்று உருவாகியிருக்கிறது என்றால், அது அயோத்தி ராமர் கோயில்தான். மன்னர்கள் கோயில்களைக் கட்டிய நிலையில், ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்காக கோயில் கட்டியுள்ளார் பிரதமர் மோடி. பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மன்னர்கள் செய்த வேலையை பிரதமர் செய்துள்ளார்” என்றார். “அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிரதமர் மோடி செய்தது ‘மன்னர்கள்’ வேலை” - இளையராஜா | Ilaiyaraaja praise prime minister modi over Ram Mandir Inauguration - hindutamil.in
  8. மாதவன். மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தல் யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் உரியவாறு அப்புறப்படுத்தாமையால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவங்களின் ஊடாக மலக்கழிவகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பவுசர்களில் நிரப்பிச் செல்லப்படும் மலக்கழிவை உரியவாறு அப்புறப்படுத்துவதில்லை எனவும் ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையில் இவை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விடயங்களை கேட்டறிந்துக் கொண்ட ஆளுநர் பின்வரும் நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 1. மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணித்தல். 2. மலக்கழிவகற்றும் செயற்பாடுகளில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் மாகாண சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும். 3. இந்த செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் பவுசர்களில் , நிறுவனத்தின் பெயர், பதிவு விபரங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும். 4. இவர்களுக்கான ஒழுங்கு விதிகளை உள்ளுராட்சி நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும். 4. குறித்த பவுசர்களை போக்குவரத்து காவல்துறையின் ஒத்துழைப்புடன் கண்காணிக்க வேண்டும். இந்த கூட்டத்தில் உள்ளூராட்சிமன்ற பணிமனை ஆணையாளர், யாழ்.மாநகர சபை ஆணையாளர், ஏனைய மணிமனைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். (ச) நவீன தொழினுட்ப கண்காணிப்பில் கழிவகற்றும் பவுசர்கள் (newuthayan.com)
  9. Published By: VISHNU 12 JAN, 2024 | 04:22 PM மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மாணவர்களும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வெள்ள அபாயத்தால் பாதிக்கப்படும் என சந்தேகிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்த அகற்றக்கூடிய அனைத்து பொருட்களும் பல்கலைக்கழக அனர்த்த முகாமைத்துவ குழுவில் கண்காணிப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. இருந்தபோதும் தொடரான மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக எதிர்பாராத சில பிரதேசங்களையும் வெள்ளம் ஆக்கிரமித்துள்ளது. எதிர்காலத்தில் மேலதிக வெள்ள அபாயம் ஏற்படலாம் என எதிர்பார்க்கும் இடங்களில் உள்ள ஆவணங்களையும் பல்கலைக்கழக சொத்துக்களையும் பாதுகாக்கும் அகற்றும் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இழப்புக்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் பின்னர் அறிவிப்பதாகவும் தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளையும் கள நிலவரங்களையும் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினர் உன்னிப்பாக ஆராய்ந்து வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார். இதேவேளை பல்கலைக்கழக ஊழியர்களுடன் இணைந்து முப்படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது : கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைப்பு | Virakesari.lk
  10. 12 JAN, 2024 | 07:10 PM லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கத்திக்குத்து தாக்குதல் திங்கட்கிழமை இரவு (08-01-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட இளைஞன் லண்டனில் குத்திக்கொலை | Virakesari.lk
  11. கேப்டன் மில்லர் Review: பல சப்ஜெக்ட்களின் அணிவகுப்புடன் திரையனுபவம் எப்படி? வெள்ளக்காரன் கண்ணுக்கு கொள்ளக்காரன். ஊர் மக்கள் கண்ணுக்கு துரோகி. உண்மையில் யார் இந்த கேப்டன் மில்லர்? அவன் சாதித்தது என்ன? - இதுதான் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஒன்லைன். சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையில் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்). அக்கிராமவாசிகள் கட்டிய கோயிலுக்குள்ளேயே அவர்களை அனுமதிக்காத அரசன். நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என இருபுறமிருந்தும் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். முன்னதாக பிரிட்டிஷ் படையில் இணைந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன் அதில் இணைகிறார். ஆனால், அங்கு தன் கையாலேயே தனது மக்களை கொல்லும் சூழல் ஏற்படுகிறது. இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அனலீசன் பிரிட்டிஷ் படையிலிருந்து வெளியேறி ஊர் திரும்ப, கொலைகாரன் என கூறி துரத்தியடிக்கப்படுகிறார். பின்னர் கொள்ளைக் கும்பல் ஒன்றுடன் கைகோக்கும் அவர், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் மூலம் உள்ளூர் அரசனுக்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவதுடன், ஒடுக்குமுறையிலிருந்து மக்களை மீட்டது எப்படி என்பதே திரைக்கதை. ஆங்கிலேயே ஆதிக்கத்தையும், அரசனின் சாதிய ஒடுக்குமுறையையும் ஒரே புள்ளியில் இணைத்து, அதனைச் சுற்றி ‘மாஸ்’ தருணங்களை கட்டமைத்து அழுத்தமான கதையாடலை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். சுதந்திர போராட்டக் கதையை சாதிய ஒடுக்குமுறைக்குள்ளிருந்து சொல்ல முயன்றது சிறப்பு. “முன்னாடி அவனுக்கு அடிமையா இருந்தோம், இப்போ வெள்ளக்காரனுக்கு அடிமையா இருக்கோம். கோயில் கருவறைக்குள்ள போக விடுவானுங்களா?’ என தனுஷ் பேசும் வசனம், “கீழ் சாதி, மேல் சாதி, குடிசை மாளிகைன்னு எங்க இருந்தாலும் பெண்கள் அடிமை தான். நம்ம சொல்றத கேக்கணும்னா அதிகாரம் இருக்கணும்” என்ற அதிதி பாலன் வசனம் வழியே ஒடுக்குமுறையின் அனைத்து கதவுகளையும் பதம் பார்த்தற்கு பாராட்டுகள்! தனுஷின் இன்ட்ரோவும், அவருக்கான மாஸ் காட்சிகள் எழுதப்பட்ட விதம், ரசிகர்களுக்கான பிரத்யேக விருந்து. குறிப்பாக பரபர சேஸிங்கில், புகுந்து விளையாடும் கேமராவும், இமைக்கும் நொடியில் வரும் இன்டர்கட் ஷாட்ஸுடன் படமாக்கப்பட்ட இடைவேளைக் காட்சி அட்டகாசமான திரையனுபவம். 6 அத்தியாயங்களாக பிரித்து சொல்லப்படும் இக்கதையில் அருண் மாதேஸ்வரன் ஸ்டைலில் வன்முறைக் காட்சிகளும், தெறிக்கும் தோட்டாக்களும், ரத்தமும் சதையுமான திரைக்கதைக்கு தேவையாக இருந்தாலும், சில இடங்களில் ஓவர் டோஸ் உணர்வைத் தருகிறது. தனுஷுக்கும் சிவராஜ்குமாருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒத்துப்போகிறது. சிவராஜ்குமாரும், தனுஷும், சந்திப் கிஷனும் இணையும் இறுதிக் காட்சி ‘சூப்பர் ஹீரோ’ படத்துக்கு நிகரான சினிமாட்டிக் அனுபவம். எனர்ஜியூட்டும் ‘கில்லர் கில்லர்’ பாடல் படமாக்கப்பட்ட விதம், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஆகியவை ஓடிடி காலத்திலும் திரையரங்கில் படம் பார்ப்பதற்கான நியாயத்தை உறுதி செய்கிறது. “கோயில் கருவறைக்குள்ள நம்ம போகலாமா?” என கேட்கும்போது, “போக கூடாதுன்னு எந்த சாமியும் சொல்லலயே”, ‘நீ யாரு... உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்’ போன்ற வசனங்கள் அப்லாஸ் அள்ளுகின்றன. தனுஷ் பாத்திரம் ஒன்றை கழுவிக்கொண்டிருக்க, நிவேதிதா சதீஷ் துப்பாக்கியை துடைக்கும் காட்சி அட்டகாசம். மூன்று வெவ்வேறு தோற்றங்கள், அதற்கேற்ற உடல்மொழி, தன் மக்களை கொல்லும் இடத்தில் அஞ்சி நடுங்குவது, குற்றவுணர்ச்சியில் கூனிக்குறுகுவது, ஆக்ரோஷமாக திருப்பி அடிக்கும் இடங்களில் ‘அசுர’த்தனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் தனுஷ். சிவராஜ்குமாரின் சர்ப்ரைஸ் இன்ட்ரோவில் ‘ஜெயிலர்’ பட நடையாக இருந்தாலும் அவரது ஸ்கிரின் ப்ரசன்ஸ் ரசிக்க வைக்கிறது. சந்தீப் கிஷன் கேமியோவில் கவனம் பெறுகிறார். ஆக்‌ஷனில் களமிறங்கும் நிவேதிதா சதீஷ், ஓரிடத்தில் ஆக்ரோஷம் கொ(ல்)ள்ளும் பிரியங்கா மோகன் கதாபாத்திரங்களும் ரொமான்ஸுக்காக பயன்படுத்தபடுத்தாமல் கதைக்களத்துடன் ஒன்றியே பயணிக்க வைப்பதன் வழியே இயக்குநர் அருண் தனித்து தெரிகிறார். இருவரும் நடிப்பில் குறையில்லாமல் கொடுத்ததை செய்துள்ளனர். துணைக் கதாபாத்திரங்களான இளங்கோ குமரவேல், காளி வெங்கட், வினோத் கிஷன், அப்துல் லீ, ஜான் கொக்கன், ஜெயப்பிரகாஷ், நன்றாகவே எழுதப்பட்டுள்ளன. அடுத்த பாகத்துக்காக அதிதி பாலன். இந்தப் படத்தில் பெரிய அளவில் வேலையில்லை. உடுக்கை சத்தம் ஒலித்தபடி கொடுக்கப்படும் தனுஷின் இன்ட்ரோ தொடங்கி காட்சிகளுக்கான மாஸை மெருகேற்றி சின்ன சின்ன சீன்களை செதுக்கியது வரை ஜி.வி.பிரகாஷ் அதகளம் செய்திருக்கிறார். ஆனால், ‘உன் ஒளியிலே’ பாடலை ஷான் ரோல்டனின் வெர்ஷனை படத்தில் வைத்திருக்கலாம். சித்தார்த் நுனியின் கேமராவும், நாகூரான் ராமசந்திரனின் கட்ஸும் இன்டர்வல் ப்ளாக்கையும், க்ளைமாக்ஸையும் ரசிக்க வைக்கின்றன. பொறுமையாக நகரும் காட்சிகளும் அதீத வன்முறையும் சிலருக்கு அயற்சியை கொடுக்கலாம். தாய் இறந்துவிட்டதாக ஓரிடத்தில் வசனத்தில் சொல்லப்படும். அந்த வசனத்தையே இரண்டாம் பாதியில் மீண்டும் காட்சியாக்கியிருப்பது ஏன் என தெரியவில்லை. அதேபோல, பிரிட்டிஷ் ராணுவப் படையில் இணைந்தால், தன் மக்களை கொல்ல வேண்டியிருக்கும் என்பது கூடவா தனுஷுக்கு தெரிந்திருக்காது என்பன போன்ற லாஜிக் கேள்விகள் எழுத்தான் செய்கின்றன. இறுதியில் வரும் சண்டைக்காட்சி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கான நோக்கமும் தேவையும் பெரிய அளவில் கதையில் இருப்பதாக தெரியவில்லை. அதன்பின் வரும் காட்சிகளும் சற்று இழுவை. நாட்டார் தெய்வ வழிபாடு, கம்யூனிசத்தின் தூவல், ஆதிக்குடியினரின் நிலப்பறிப்பு, சாதிய பாகுபாடு, பிரிட்டிஷ் ஆதிக்கம் என பல சப்ஜெக்ட்டுகளை தொட்டிருக்கிறது படம். ஆனால், இதில் காட்டப்படும் பல விஷயங்கள் சுதந்திரத்துக்கு முன் நிகழ்வதாக சொன்னாலும் இன்றும் பொருத்திப் பார்க்க முடிவது படத்தின் பலம். மொத்தத்தில் திரையனுபவத்துக்கு ஏற்ற வன்முறை கலந்த வெகுஜன சினிமா எல்லோருக்குமானதாக இருக்குமா என்பதும் அவரவர் விருப்பம் சார்ந்ததே!கேப்டன் மில்லர் Review: பல சப்ஜெக்ட்களின் அணிவகுப்புடன் திரையனுபவம் எப்படி? | Dhanush starrer captain miller movie review - hindutamil.in
  12. விஜயத்தை பதிவு செய்தவர்களை கைது செய்ய வேண்டும்;காணொளி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தை சட்டவிரோதமாக வீடியோ பதிவு செய்த துறைமுக அதிகாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரிவின் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு அணைப்பகுதி கட்டுமாணப் பணிகள் தாமதமாகுவதால் இங்கு சென்று அதற்கான பணிகளை பார்வையிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விடுத்த கோரிக்கையை அடுத்து, 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பு துறைமுகத்திற்கு ஆய்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது ராஜாங்க அமைச்சர் என்ற வகையில் எனது கடமையாகும். சில ஊடகங்களும் அரசியல்வாதிகளும் நாங்கள் விருந்து வைத்தோம் என்று கூறி விஜயம் குறித்து வதந்திகளை பரப்புகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தொழிற்சங்க உறுப்பினர்கள் சட்டவிரோதமாக விஜயத்தை வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அவர்களை சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்,'' என்றார். துறைமுக அதிகாரசபையின் ஒரு சதம் கூட இந்த விஜயத்திற்காக செலவிடப்படவில்லை எனவும், நிகழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளின் சகல சட்டதிட்டங்களையும் தாம் சமர்ப்பிப்பதாகவும் அமைச்சர் கூறினார். நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் வேளையில் எம்.பி.க்கள் குழுவொன்று பொதுப் பணத்தைச் செலவிட்டு விருந்து வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  13. ( எம்.நியூட்டன் ) யாழ்ப்பாணம், மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண் மீது நேற்று புதன்கிழமை (10) இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்ற இருவரை பொலிஸார் துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் எனவும், இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தையும் , தீவகத்தையும் இணைக்கும், மண்டைதீவு சந்தியில் பொலிஸ் காவலரண் காணப்படுவதனால் தீவக பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப் பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ். மண்டை தீவு பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசிய இருவர் கைது | Virakesari.lk
  14. Published By: VISHNU 11 JAN, 2024 | 01:45 PM உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியுலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில் புதன்கிழமை (11) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனலைதீவை சேர்ந்த தர்சன் (வயது 23) எனும் இளைஞன் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இளைஞனை கடல் தாண்டி ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக அம்பியுலன்ஸ் படகுக்கு உறவினர்கள் அறிவித்து காத்திருந்த போதிலும் , படகு வர தாமதமாகியது. அதனால் கடற்படையினரின் விரைவு படகின் மூலம் இளைஞனை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். இளைஞனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தீவகத்திற்கான வைத்திய வசதிகளை செய்து தருமாறு பல வருடங்களாக தாம் கோரி வருகின்ற போதிலும் தீவகத்திற்கான வைத்திய வசதிகள் செய்து தரப்படவில்லை. கடல் தாண்டி வேறு வைத்தியசாலைக்கு செல்வதற்கு எந்நேரமும் கடலின் நிலைமை சாதகமாக இருக்கும் என சொல்ல முடியாது. ஆகவே தீவுகளில் உள்ள வைத்தியசாலையை மேம்படுத்தி வைத்திய வசதிகளை செய்து தருமாறு கோரினார். அனலைதீவு விபத்து - அம்பியுலன்ஸ் படகு வர தாமதித்தமையால் இளைஞன் உயிரிழப்பு | Virakesari.lk
  15. Published By: VISHNU 11 JAN, 2024 | 03:52 PM சுகாதார உதவியாளர்கள், பரிசாரகர்கள் உட்பட இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலையில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், வைத்தியசாலை மேற்பார்வையாளர்கள், தொலைபேசி இயக்குனர்கள், பரிசாரகர்கள், சுகாதாரப் பணி உதவியாளர்கள் ஆகிய அனைத்து சுகாதார ஊழியர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறை போராட்டம் வியாழக்கிழமை (11) முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை (11) காலை 6 மணி மணியிலிருந்து வெள்ளிக்கிழமை (12) காலை 8 மணி வரை வேலை நிறுத்த போராட்ட நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்பகிஸ்கரிப்பும் , கவனயீர்ப்பு போராட்டமும் இன்று இடம்பெற்றிருந்தது. குறிப்பாக பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை. எனவே அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சுகாதாரதுறை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு | Virakesari.lk
  16. Published By: VISHNU 11 JAN, 2024 | 03:29 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் நுணாவில் பகுதியில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது 129 இடங்கள் டெங்கு பரவுவதற்கு ஏதுவான இடங்களாக இனம் காணப்பட்ட நிலையில், 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டது. ஏனையவர்களுக்கு துப்பரவு செய்தவற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை | Virakesari.lk
  17. அரச வளங்களை பயன்படுத்திக்கொண்டு மஹிந்த உள்ளிட்ட சிலர் நடுக்கடலில் விருந்துபசாரம் - சஜித் 11 JAN, 2024 | 03:44 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாடு வங்குராேத்து அடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு நடுக்கடலில் விருந்துபசாரம் மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரச தரப்பு உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட குழுவினர் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்ஸகாவா மற்றும் தியகூலா ஆகிய 02 கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடல் நடுவில் விருந்துபசார கொண்டாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதற்கு துறைமுக இராஜாங்க அமைச்சர் எழுத்து மூல அனுமதியும் வழங்கியுள்ளார். நாடு வங்குரோத்தாகி உள்ள இவ்வேளையில், அரச நிதியை பயன்படுத்திக்கொண்டு, அரசுக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு அதற்கு தேவையான எரிபொருள் செலவிட்டு எவ்வாறு கடல் நடுவில் விருந்துபசாரம் மேற்கொள்ள முடியும். துறைமுகத்தில் உள்ள உணவகத்தில் இருந்து உணவு, குடிபான வகைகளை கூட பெற்றுக் கொண்டு, இவ்வாறு செயற்பட்டுள்ளனர். நான் தெரிவிக்கும் இந்த விடயம் உண்மை. அரசாங்கம் சவால் விடுவதாக இருந்தால், இதுதொடர்பான புகைப்படங்களை சபைக்கு சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன். வங்குராேத்து அடைந்துள்ள நாட்டில் இவ்வாறு செயற்பட முடியுமா? அமைச்சர்களின் தனிப்பட்ட செலவில் இந்த விருந்துபசாரங்களை நடத்துவது பிரச்சினையல்ல. என்றாலும்,அரச வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விருந்துபசாரங்கள் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் இந்த 2 கப்பல்களுக்கும் ஏறுவதற்காக சிவப்பு கம்பளம் கூட விரிக்கப்பட்டது. இவ்வாறு மக்கள் பணத்தை செலவு செய்து விருந்து வைப்பது தொடர்பில் தான் எமக்கு ஆட்சேபனை இருக்கிறது. நாட்டு மக்கள் இதனை தெரிந்துகொள்ள வேண்டும். இது பாரிய குற்றச்செயலாகும். இது தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார். அரச வளங்களை பயன்படுத்திக்கொண்டு மஹிந்த உள்ளிட்ட சிலர் நடுக்கடலில் விருந்துபசாரம் - சஜித் | Virakesari.lk
  18. Published By: VISHNU 11 JAN, 2024 | 03:59 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பிரதேச சபையை அலுவலகத்தை அண்மித்த பகுதியில் மிக அதிக அளவிலான கட்டாக்காலி கால்நடைகள் இரவு வேளைகளில் வீதியில் உறங்குவதால் வீதியில் செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதாக குற்றம் சுமத்துகின்றனர். எனவே குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீதிகளில் உறங்கும் கட்டாக்காலி கால்நடைகளால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு பலருடைய உடமைகள் மற்றும் அங்கங்களும் சேதமடைந்து இருக்கின்ற நிலைமையில் இது தொடர்பில் அதிகாரிகளும் அக்கறையற்று இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் இந்நிலையில் இந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த புதுக் குடியிருப்பு பிரதேச சபையினர் மிக விரைவில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கட்டாக்காலிகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை ! | Virakesari.lk
  19. பிரித்தானிய இளவரசி ஆன் யாழுக்கு விஜயம் - வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு 11 JAN, 2024 | 03:49 PM (எம்.நியூட்டன்) இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) உள்ளிட்ட குழுவினர் இன்று வியாழக்கிழமை (11) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்கு வானூர்தி மூலம் வருகை தந்த இளவரசி, யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தில் தரையிறங்கிய போது, வடக்கு மாகாண ஆளுநரான பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கு வரவேற்பு அளித்தார். இதன்போது பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது. பிரித்தானிய இளவரசி ஆன் யாழுக்கு விஜயம் - வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு | Virakesari.lk
  20. கோவா: ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓ பெண் ஒருவர் கோவாவாவில் தனது நான்கு வயது மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுசனா சேத். 39 வயதாகும் இவர் பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைண்ட்ஃபுல் AI ஆய்வகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). இவர் கடந்த சனிக்கிழமை (ஜன.6) அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றுள்ளார். திங்கள்கிழமை சுசனா சேத், பெங்களூரு செல்ல டாக்ஸியை ஒன்றை முன்பதிவு செய்யுமாறு ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். ஹோட்டல் ஊழியர்கள் சுசனா சேத்தை விமானத்தில் பெங்களூரு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். காரணம் அங்கிருந்து சுமார் 600 கி.மீ தூரம் தொலைவில் உள்ள பெங்களூரு செல்ல சாலை வழியாக 12 மணி நேரம் ஆகும். அதுவே, விமானத்தில் 90 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும் என்பதால் விமான பயணத்தை ஹோட்டல் ஊழியர்கள் பரிந்துரைத்துள்ளனர். சுசனா சேத் ஊழியர்களின் அறிவுறுத்தலை நிராகரித்து டாக்ஸியில் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். டாக்ஸி வந்ததும் தனது அறையில் இருந்து பெரிய பையுடன் தனியாக வந்துள்ளார் சுசனா. ஹோட்டலுக்கு வரும்போது தனது நான்கு வயது மகனுடன் வந்த சுசனா, திரும்பி செல்லும்போது தனியாக செல்வதை கவனித்த அங்கிருந்த ஊழியர்கள், அவர் சென்றதும் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போதும் ரூமில் சிவப்பு நிறக் கறைகளைக் கண்ட ஊழியர்கள், அந்தக் கறை இரத்தம் என்பதை உறுதி செய்தவுடன் சந்தேகம் அடைந்து உடனடியாக கோவா போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் ஹோட்டலை அடைந்து, டாக்ஸி டிரைவர் மூலம் சுசனாவை தொடர்பு கொண்டுள்ளனர். சாதாரணமாக பேச்சு கொடுப்பது போல், சுசனாவிடம் அவரின் மகன் குறித்த தகவலை திரட்டியுள்ளனர். ஹோட்டலுக்கு அவருடன் வந்த மகனை காணவில்லை என்பதையும் போலீஸார் டாக்ஸி டிரைவர் மூலம் சுசனாவிடம் கேட்கவைத்துள்ளனர். அதற்கு, தனது நண்பர் ஒருவரின் வீட்டில் மகனை விட்டுவிட்டதாக கூறிய சுசனா, தவறான முகவரி ஒன்றையும் அளித்துள்ளார். உடனடி விசாரணையில் இறங்கிய கோவா போலீஸார் சுசனா கொடுத்தது போலி முகவரி என்பதை உறுதிசெய்துகொண்ட பின், டாக்ஸி டிரைவரை மீண்டும் தொடர்புகொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வண்டியை திரும்பும்படி உத்தரவிட்டுள்ளனர். போலீஸார் சொன்னது போல், கர்நாடகாவின் சித்ரதுர்கா நகர் காவல் நிலையத்துக்கு வண்டியை திருப்பிய டாக்ஸி டிரைவர் அங்கிருந்த போலீஸாரிடம் நடந்ததை எடுத்துக் கூறியுள்ளார். அதன்படி, சுசனாவை விசாரித்த போலீஸார், அவர் வைத்திருந்த பெரிய பையை சோதனையிட்ட போது அதிர்ச்சி காத்திருந்தது. சுசனாவின் நான்கு வயது மகன் கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த பெரிய பையில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீஸார் சுசனாவை உடனடியாக கைது செய்தனர். அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மீண்டும் கோவாவுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் மகனை கொன்றதை ஒப்புக்கொண்ட சுசனா, அதற்கான காரணமாக கணவரை பிரிய இருப்பதை கூறியுள்ளார். ஸ்டார்ட்-அப் நிறுவன சிஇஓ - மைண்ட்ஃபுல் ஏஐ லேப் எனப்படும் AI அல்லது செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுசனா சேத், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பிளாஸ்மா இயற்பியல் மற்றும் வானியற்பியலில் சிறப்புப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பெர்க்மேன் க்ளீன் மையத்தில் ஒரு பணியாளராகவும் இருந்திருக்கிறார். டேட்டா சயின்டிஸ்ட் பணியில் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுசனா சேத், கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் இருவர் பிரிவதையும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சமீப காலமாக மகிழ்ச்சி இல்லாமல் இருந்த சுசனா சேத், இதற்காக தனது மகனை கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். சுசனாவின் கணவர் தற்போது இந்தோனேஷியாவில் இருப்பதால் அவரை உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப போலீஸார் வலியுறுத்தியுள்ளனர். புத்திசாலி டாக்ஸி டிரைவர்...- ஹோட்டலுக்கு வரும்போது தனது நான்கு வயது மகனுடன் வந்த சுசனா, திரும்பி செல்லும்போது தனியாக சென்றது, ஹோட்டல் அறையில் ரத்த கறை இருந்தது போன்ற காரணங்களால் அவர் மீது சந்தேகம் வலுக்க, நடந்தது என்னவென அறிய விரும்பிய கோவா போலீஸார் அதற்காக சுசனா பயணித்த டாக்ஸி டிரைவரை தொடர்புகொண்டு விவரத்தை எடுத்துச் சொல்லியுள்ளனர். சுசனா கைது செய்யப்படும் வரை போலீஸாருக்கு உறுதுணையாக இருந்தது டாக்ஸி டிரைவர்தான். போலீஸார் பலமுறை போன் செய்தபோதும் பதற்றமடையால் இருந்து சுசனாவின் நார்மலாக பேசி விஷயங்களை பெற்று அவரை கைது செய்வதற்கு துணையாக இருந்துள்ளார். டாக்ஸி டிரைவர் பேசுவதை பார்த்து சுசனா சந்தேகம் அடைந்துவிட கூடாது என்பதற்காக போலீஸார் டிரைவரிடம் கொங்கனி மொழியில் பேசியுள்ளனர். இந்த மொழி சுசனாவுக்கு புரியாததால் அவரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்கின்றனர். இறுதியில் டிரைவரை கொண்டே சுசனா சேத்தை அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லவைத்து கைது செய்துள்ளனர். ரத்தக் கறை, டாக்ஸி டிரைவர் சாதுர்யம்... - 4 வயது மகனைக் கொன்ற பெண் சிஇஓ கைதானதன் பின்புலம் | How CEO Accused Of Son's Murder Was Caught in goa - hindutamil.in
  21. ஆதவன். நாடளாவிய ரீதியில் டெங்குத்தொற்று தீவிர நிலையை 'அடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் தரப்படுத்தப்பட்டுள்ளது. இதை 'அதிதீவிர நோய் நிலை' என்று தேசிய டெங்குக் கட்டடுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினரின் தகவல்களின் அடிப்படையில், கடந்த முதலாம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரையான எட்டு நாள்களில் யாழ்ப்பாணத்தில் 448 பேர் டெங்குத் தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கை யில் இவ்வருடம் மாவட்ட அடிப்படையில் அதிக டெங்குத் தொற்றாளர்கள் பதிவான மாவட்டமாக யாழ்ப்பாணமே காணப்படுகின்றது. கடந்த வருடம் அதிதீவிர தொற்று நிலையைக் கொண்டிருந்த கொழும்பில் இவ்வருடம் 284 டெங்குத் தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 258 பேரும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 93 பேரும், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் 35 பேரும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 33 பேரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 29 பேருமாக குறித்த எட்டு நாள்களில் டெங்கு நோய்ப்பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள் ளவர்களது எண்ணிக்கை 448ஆக உள்ளது. அனைவரும் தத்தம் வீட்டுச் சூழல் மற்றும் சுற்றுச்சூழலில் மழை நீர் தேங்காது பார்த்துக் கொள்வதன் ஊடாகவும், மழை நீர் தேங்கும் பொருள்களை அகற்றியும் புற்கள் பற்றைகளை துப்புரவு செய்வதன் ஊடாகவும் டெங்கு நோய் பரவும் ஏதுநிலையினை ஆரம்பத்திலேயே இல்லாது செய்து உங்களையும், சமூகத்தையும் டெங்கு அபாயத்தில் இருந்து பாதுகாக்க முடியும் என சுகாதாரத்தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். (ச) யாழ்ப்பாணத்திலேயே டெங்கு அதிதீவிரம். (newuthayan.com)
  22. யாழ்ப்பாணம் 23 மணி நேரம் முன் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம். (இனியபாரதி) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (09) அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது, பண்டிதரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தலில் பண்டிதரின் குடும்பத்தினர், யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அச்சுவேலியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமை படையினர் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட சமரில் கப்டன் பண்டிதர் உட்பட பல போராளிகள் வீர மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம். (newuthayan.com)
  23. 10 JAN, 2024 | 03:27 PM யாழ். குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் ஆய்வுத் தொடர்ச்சி 2009 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கரையோர வளங்களின் வரலாற்றுப் பயன்பாடு மற்றும் குறிப்பாக கடல் ஓடுகள் தொடர்பான பயன்பாட்டுப் போக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ் அகழ்வாய்வில் வேட்டையாடி உணவாக உட்கொள்ளப்பட்ட விலங்குகளின் எச்சங்கள், கருவிகள் மற்றும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டதற்கான சான்றுகள் மற்றும் ஏராளமான தொல்பொருட்கள் காணப்படுகின்றன. இத்தகைய எச்சங்கள் இலங்கையில் தெற்கு கடற்கரையிலும் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய மிக அண்மித்த சான்று மாந்தையில் கி.மு.1600க்கு முற்பட்டவை கிடைக்கப்பெற்றிருந்தது. தற்போது நடைபெற்று முடிந்த இவ் அகழ்வாராய்ச்சியில் இருந்து கிடைத்த தொல்பொருள் சான்றுகளின் காலப் பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தை இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்நோக்கி நகர்த்தியுள்ளது. இவ்வகழ்வாய்வினை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் மற்றும் பாரம்பரிய முகாமைத்துவத் துறையின் மூத்த விரிவுரையாளர் திலங்க சிறிவர்தன அவர்களுடன் இணைந்து Groningen Institute of Archaeology of the University of Groningen in the Netherlands நிறுவனத்துடன் இணைந்து இந்திகா ஜெயசேகர, ஜனினா நோனிஸ் அத்துடன் தொல்லியல் மற்றும் பாரம்பரிய கற்கைகள் நிறுவகத்தின் நதீரா திஸாநாயக்க மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொல்லியல் துறை மாணவர்களான டக்சினி, கனுஸ்டன், சுசாந்தி ஆகியோர் இவ் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். 3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் கண்டுபிடிப்பு | Virakesari.lk
  24. Published By: DIGITAL DESK 3 10 JAN, 2024 | 03:20 PM மட்டக்களப்பு ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது ; ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்தப் பாதை ஊடான ரயில்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்புக்கான இரவு தபால் ரயில் சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது ; ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டது | Virakesari.lk
  25. யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் உரும்பிராய் பிரதேசத்தில் 80 கிலோகிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்துள்ளனர். இன்று புதன்கிழமை (10) யாழ்ப்பாண இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இவர் கைது செய்யப்பட்டார் . இந்த கேரள கஞ்சா தொகையானது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த வேளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. யாழ். உரும்பிராயில் 80 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகபர் கைது! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.