படம்: பொன்னித் திருநாள் (1960)
பாடியவர் : P B ஸ்ரீனிவாஸ்
வரிகள்: முத்துசாமி
இசை: K V மகாதேவன்
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து..
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து..
விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா
விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே..
விளையாடும் வெண்மதி நீதானா
எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்..
எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்
பயின்றதெல்லாம் உன்னிடம்தானா..
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து..
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து..
சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா..
சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா..
கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கவரி மான் என்பதும் உன் இனம்தான..
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து..