படம் - காதல் படுத்தும் பாடு(1966)
பாடியவர் - பி.சுசீலா
வரிகள் - ஆலங்குடி சோமு.
இசை - டி்ஆர்.பாப்பா
வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா
வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா
அது வந்து போன சுவடு
அந்த வானில் இல்லையடா
வானில் இல்லையடா
வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா
கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத்
தென்றல் போகுதடா
ஆ ஆ ஆ ஆ ஆ
கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத்
தென்றல் போகுதடா
அது ஊஞ்சல் போட்ட சுவடு
அந்தக் கொடியில் இல்லையடா
கொடியில் இல்லையடா
வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா
உள்ளத்திலும் காதல் நிலா
வந்து மின்னுதடா
ஆ ஆ ஆ ஆ ஆ
உள்ளத்திலும் காதல் நிலா
வந்து மின்னுதடா
அந்த ஊர்வலத்தின் சுவடு மட்டும் மறைவதில்லையடா
என்றும் மறைவதில்லையடா
வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா