படம் : வரபிரசாதம்(1976)
இசை: R.கோவர்த்தன்
இசை (உதவி) : இளையராஜா
வரிகள்: புலமைப்பித்தன்;
பாடியவர்கள்:வாணிஜெயராம், K.J.ஜேசுதாஸ்;
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்....
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்....
கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல,
விதி என்னும் காற்றில் பறிபோகவல்ல,
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்....
மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்,
உள்ளம் நெகிழ்ந்தான்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
மாணிக்கப் பாவை நீ வந்த வேளை,
நினையாததெல்லாம் நினைவேற கண்டேன்,
மாணிக்கப் பாவை நீ வந்த வேளை,
நினையாததெல்லாம் நினைவேற கண்டேன்,
அன்பான தெய்வம், அழியாத செல்வம்,
பெண் என்று வந்தால் என்என்று சொல்வேன்???....
மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்,
உள்ளம் நெகிழ்ந்தான்,
மணியோசை கேட்டு மணமாலை சூட்டி
உறவான வாழ்கை நலமாக வேண்டும்,
நடமாடும் கோவில், மணவாளன் பாதம்,
வழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்,
திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்,
ஆனந்த பூஜை ஆரம்ப வேளை...
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்
ஆஹாஹஹஹா.....