படம்: கலைவாணன் (1959)
வரிகள்: கம்பதாசன்
இசை : பெண்டியாலா
பாடியவர் : கண்டசாலா
ஆடும் மயில் நீ வா
நடம் ஆடும் மயில் நீ வா
ஆகாயத் தெரு நாடி வந்தது வெண்ணிலா
ஆசையின் புன்னகை அலை அலையாடுதே (ஆடும்)
அணிமலர்ச் சோலையில் பண்பாடும் பூங்குயில்
அடிக்கடி அழைக்கும் மோகினி நீயே
நினைவை கனவை நிறவான வில்போல்
புனைந்தனன் உனக்கெ சித்ரீகன் நானே
சித்ரீகன் நானே விசித்திரம் நீதானே......(ஆடும்)
பொன்னொளியாய் பூத்திடும்
மாலைத் தென்றலின் காற்றிலே
சிறு மல்லிகை அரும்பே தரும் பரிமளம் நீதானே
சிரிக்கும் சிங்காரமான கன்னித் தாரகை விண்ணின்மீதே
செந்தமிழ்தனில் பண்போடு சொல்லிடும்
உயிர்க்கவியே நானே..உணர்ச்சியும் நீதானே...
வாராய்.....மாமயிலே...வந்தது....கார்முகிலே...
நிழல் நோக்கி நீயென்றெண்ணி மனது மகிழுவேன்
அளவில்லாத பிரியத்தினால் பிதற்றலாகினேன்
உனக்காகவே இவ்வேதனை உன் ரூபமே ஆராதனை
எனதாருயிர் துடிப்பினிலே
உந்தன் தண்டை ஓசை
விண் முத்தெனவே சிந்தும் பனி
எந்தனின் கண்ணீர் பூசை
வாராய்.....மாமயிலே...வந்தது....கார்முகிலே...