படம் : சொன்னது நீதானா (1978)
இசை : இளையராஜா
வரிகள் : புலமைபித்தன்
பாடியோர் : மலேசியா & சென்சி
அலங்கார பொன் ஊஞ்சலே
அழகாடும் பூஞ்சோலையே
இளமாதுளை மலைத்தேன் சுவை
முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே (அலங்கார)
வானில் உலவும் ஊர்வசி
வனத்தில் தவழும் மாங்கனி
எனை மயக்க வந்தவள்
மாலை பூத்த மல்லிகை
மயக்கம் சேர்த்த மெல்லிசை
எனை தழுவி நின்றவள்
அழகு கலைகள் நிலவும் எந்தன் (அலங்கார)
ஏட்டில் பாடும் நாயகி
எழுத்தில் கூடும் காரிகை
புது எண்ணம் கண்டவள்
கூட்டில் வாழும் பைங்கிளி
கூடச் சொல்லும் மான் விழி
மது கிண்ணம் கொண்டவள்
இளமை குலுங்க இனிமை வழங்கும் (அலங்கார)
காதல் ராணி குங்குமம்
காளை மனதில் சங்கமம்
புது இன்பம் துவங்கலாம்
கோவில் காணும் பூசைகள்
தேவன் கொண்ட ஆசைகள்
இனி என்றும் நிலைக்கலாம்
புதிய வழியை எடுத்து சொல்லும் (அலங்கார)