Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nilmini

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nilmini

  1. எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வாழ்த்திய ஈழப்பிரியன் அண்ணா, ஏராளன்,nunavilan,சிறி, நிலாமதி, பெருமாள், புங்கையூரன், suvy அவர்களுக்கு எனது நன்றிகள். கடந்த பத்து நாட்களாக அம்மா மற்றும் சகோதரங்களுடன் மருமகனின் கல்யாண வீட்டுக்கு கனடா வந்திருப்பதால் யாழ் பக்கம் வந்து பார்க்க பிந்தி விட்டது.
  2. ரெப்ப்டீலியா இனத்தை சேர்ந்த பல மிருகங்கள் ஒரு முட்டை இட்டு அது தாயின் கருப்பையில் பல முட்டைகளாக பிரிந்து அத்தனையும் தாயையே மாதிரி நூற்றுக்கு நூறு வீதம் ஒத்து இருக்கும். மனிதர்கள் உட்பட மற்றைய பறவைகள் பாலூட்டிகள் எல்லாம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்து தாயிடம் இருந்து அம்பது வீதம் DNA களும் தகப்பனிடம் இருந்து அம்பது வீதம் DNA களையும் பெறும்.
  3. வணக்கம் வீரப்பபையன். சிறி எல்லோருக்கும் ஒரு நல்ல சொந்தம், நட்பு. கு சா அண்ணா தாத்தாவாக இருக்குமோ நானும் எண்ணியதுண்டு. அப்படி இப்பவும் நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் இன்றுடன் அவரை வேறு மாதிரி சித்தரித்து பார்ப்பார்கள். சிறியின் மகளின் கல்யாணம் மற்று ஜெர்மனி பற்றி மேலும் விரைவில் எழுதுவேன்
  4. இந்த தபால் முத்திரையின் அசல் என்னிடம் இருக்கிறது. அத்துடன் ஆறுமுகநாவலர் பாடசாலையின் 150 ஆவது நிறைவு விழாவுக்கு ஏன்னை ஒருநாள் தலைமை விருந்தினராக 2006 ஆம் ஆண்டு அழைத்திருந்தனர். அப்போது எல்லா ஆதீனங்கள், இலங்கை இந்து கலாச்சார அமைச்சர், ஆறு திருமுருகன் மற்றும் பலர் அந்த 5 நாள் கொண்டாட்டத்துக்கு வந்திருந்தார்கள்.அப்போது எனக்கு இந்திய தபால் துறை 150 ஆண்டு விழாவை கௌரவித்து வெளியிட்ட முத்திரையும், ஒரு கடிகார கொம்பனி வெளியிட்ட நாவலர் படம் போட்ட கடிகாரமும் பரிசளித்தார்கள்.
  5. நல்ல பதிவு ஏராளன். இறப்பென்றால் என்னவென்று உணர்ந்து அமைதியாக இருப்பவர்களுக்குத்தான் இப்படி நடக்குமோ என்று யோசிக்கிறேன். கவலைப்பட்டுக்கொண்டு போக விருப்பம் இல்லாமல் போவபர்கள், அல்லது உயிர் போகும்போது அழுது, ஆர்ப்பரித்து, கோபமாக கத்திக்கொண்டு போபவர்களுக்கு இப்படி நடக்குமா என்று தெரியவில்லை. மரணம் அடுத்த கட்ட பயணத்தின் ஆரம்பமாக இருக்கலாம். இந்த Neurotransmitter களின் அதி தீவிர செயல்பாட்டை வைத்து அது ஒரு இனிய தருணமாக இருக்கலாம் நம்பலாம். எல்லோரும் அப்படி இல்லையே. எனக்குத்தெரிந்த சில நெருங்கிய உறவுகள் தொன்னூறு வயதாகப்போகுது. போக விருப்பமே இல்லை
  6. வணக்கம் பாஞ் அண்ணா. எனக்கும் உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. உங்களை இதற்கு முன் சந்திக்கவிட்டாலும், சிறி உங்களை கூட்டி வந்து "யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்” என்றபோது, உடனேயே பாஞ் அண்ணா தான் என்று சொல்லிவிட்டேன். நிறைய உறவினர்களை 30, 40 வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். சிலரை முதல்தடவையாக சந்தித்தேன். என்றாலும், பாஞ் அண்ணாதான் இவர் என்று சரியாக கணித்துவிட்டேன். பலகாரப்பகுதியில் சந்தித்தாலும், குசா அண்ணா வராததால் பலகாரத்தால் தலைகள் இந்தத்திரியில் உருளாது. வேற உருட்டல் தான் இந்த திரியில் நடைபெறும் கலியான வீட்டில் ஒரு பொதி, ரிசெப்ஷனில் ஒரு பொதி என்று ஒன்றுக்கு இரண்டாக கிடைத்து. வீடுவரை கொண்டு வந்து சேர்த்துவிட்டேன். தொடர்ந்து எழுதுகிறேன் அண்ணா. சுவாரசியமாக திரி போகிறது.
  7. சிறியின் அப்பம்மா தையல்முத்து (எனது அப்பப்பாவின் சகோதரி) திருமணம். அவரின் தகப்பன் சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவை வான அம்பலவாண நாவலர். இந்த புகைப்படங்கள் 1900 ஆம் ஆண்டுக்கும் 1902 ஆம் ஆண்டுக்கும் இடையில் எடுக்கப்பட்டது.
  8. ஒரு காலத்தில் காங்கேசன்துறை, பருத்தித்துறை துறைமுகங்கள் பிரசித்தி பெற்று இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எத்தனயோ வெற்றிகரமான பயணங்கள், வியாபாரங்கள் நடை பெற்றிருந்தாலும் இப்படியான துயர சம்பவங்களும் நடந்திருக்கு. அதன் பின்பு எனதும் சிறியினதும், பூட்டி வேறு ஒரு குடும்பத்தவரையும் எத்தனயோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கடல் தாண்டி பயணிக்க விடவில்லை.
  9. சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவை வாண அம்பலவாண நாவலரின் தகப்பன் தாவடியில் மிகவும் புகழ் பெற்ற கச்சேரி சக்கடத்தார் தாவை சண்முகம் சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவைவாண அம்பலவாண நாவலர்- இவர்தான் சிறியின் பாட்டியினதும், எனது பாட்டனிதனும் தகப்பன். நாவலரின் மதிப்புக்குரிய மாணவராதலால் இவருக்கு நாவலர் பெயர் சூட்டப்பட்டது. எனது அப்பம்மாவின் பூட்டன் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். ஆக, எனக்கும், சிறியிக்கும் ஆறுமுகநாவலரும், அவரது முதன்மை மாணவரும் நேரடி சொந்தம்.
  10. தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள். அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார், அறுமுகநாவலரின் மூத்த சகோதரன். சிறியின் அப்பம்மாவையும், எனது அப்பாப்பாவையும் தவிர மற்றைய நான்கு சகோதரர்களும் 1880 அளவில் கப்பல் மூலம் மலேஷியா சென்றுள்ளார்கள். அதில் ஒருவர் மட்டும் அங்கேயே தங்கிவிட மற்ற மூன்று சகோதரர்களும் பணம் மற்றும் பொருள்களுடன் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பும்போது கடல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள். மலேசியாவில் தங்கிவிட்ட சகோதரனின் வம்சம் தற்போது அங்கு வாழ்கிறார்கள். சிறியின் குடும்பம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலும், எனது குடும்பம் மாத்தளை, நுவெரேலியா மற்றும் கொழும்பில் வாழ்ந்தததாலும் எனது அப்பாவின் சொந்தங்களுடன் கொண்டாட எனக்கு சந்தர்ப்பம் குறைவாகவே இருந்து. நீண்ட காலத்துக்கு பிறகு யாழ் களத்தில் சிறியுடன் மீண்டும்சொந்தம் கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் குடும்பத்துடன் ஜேர்மனியில் இருப்பது தெரியும் என்றாலும் தொடர்பு இருக்கவில்லை. சிறியின் சகோதரியுடனும் எப்படியாவது மீண்டும் பழகவேணும் என்றும் ஆர்வமாக இருந்தேன். எல்லாவற்றுக்கும் உதவும் விதமாக சிறியின் மகளின் கலியாணம் அமைந்தது. சிறியின் சகோதரி ஒருநாள் மெசேஜ் ஒன்று அனுப்பி இருந்தார். அதில், சிறியின் மகளின் கலியாணம் நடக்க இருப்பதாகவும் அப்பாவின் குடும்ப உறவினர் அனைவரும் ஜெர்மனி செல்வதாகவும் நான் வந்தால் எனது விருப்பத்தின்படி எல்லாரையும் சந்திக்க நல்ல சந்தர்ப்பம் என்றும் எழுதியிருந்தார். அத்துடன் சிறி யிற்கு எனக்கு அழைப்பு விடுக்க விருப்பம் இருந்தாலும் சிரமமாக இருக்குமோ என்று யோசிப்பார் என்றும் சொல்லியிருந்தார். மெஸேஜை வாசித்த கணமே, கல்யாணத்துக்கு போவது என்று தீர்மானித்தது விட்டேன். நான் இருக்கும் மெம்பிஸ் இலிருந்து தம்பி வீட்டுக்கு வெர்ஜினியா சென்று, அங்கு தங்கி விட்டு, வாஷிங்க்டன் மற்றும் போஸ்டன் வழியாக பிரான்க்பெர்ட் சென்றடைந்தேன். கல்யாண வேலைகளில் மத்தியிலும், சிறியின் மகன் (எனது மருமகன்) விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்திருந்தார். ஜெர்மனியிலேயே பிறந்து வளர்ந்து, மிகச்சிறிய வயதில் எலும்பு முறிவு அதிலும் முதுகெலும்பு சத்திரசிகிச்சை மருத்துவராக பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாக இருந்து. அதைவிட ரெட்டிப்பு சந்தோசம் அவரது பணிவையும், சுத்தமான யாழ்பாணத்தமிழையும் கேட்டு. ஜெர்மனியில் இறங்கிய முதல் மணி நேரத்தில் இருந்தே எனது சந்தோஷமும், பிரமிப்பும், ஈர்ப்பும் தொடங்கிவிட்டது . உறவினர்கள் அநேகமானோர் ஒரே ஹோட்டலில் தான் தங்கினோம். எல்லோரும் பக்கத்த்து பக்க அறைகள். ஒன்றாக சாப்பிட்டு, வெளியில் சுற்றிப்பார்த்து மிகவும் சந்தோசமான நாலு நாட்கள். பாஞ் அண்ணாவையும் குசா அண்ணாவையும் சந்தித்து ஒரு யாழ்கள Gettogether வைப்பம் என்று பிளான் போட்டிருந்தேன். குசா அண்ணாவால் வேலை நிமித்தம் வரமுடியவில்லை. பாஞ் அண்ணாவை சந்தித்தது மிகுந்த. சந்தோசம். படத்தையும் இணைத்துள்ளேன். நீட்டுக்கு எழுதினால் வாசிக்க களைப்பாக இருக்கும், மிகுதி அடுத்த முறை தொடரும்.
  11. ஒகே Lol 😂. நன்றி 🙏. இம்முறை நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன். இது சத்தியம்
  12. வேலை மாற்றம் ஊர் மாற்றம் என்று பல பிராக்கினால் என்னென்ன நிலுவைகள் இருக்கென்று மறந்துவிட்டேன் யாயினி. என்னென்று ஞாபகப்படுத்த முடியுமா? இப்ப விடுமுறை தொடங்கப்போகுது . அதனால் எழுதலாம். மடகஸ்கார் பற்றி எழுதி வந்தேன். ஒருவரும் வாசிப்பதாக தெரியவில்லை என்று அதைப்பற்றி தொடர்ந்து எழுதுவதை நிப்பாட்டிவிட்டேன். clear சனிக்கிழமை நிச்சயம் பதிவிடுவேன் சிறி. எனது அனுபவத்தை பகிர மிகவும் ஆவலாக இருக்கிறேன்
  13. மிகவும் அரிய இனிமையான சந்திப்பு. நான் சிறியின் மகளின் கலியான வீட்டுக்கு இந்தமாதம் Germnay போகும்போது குசா அண்ணாவையும் பாஞ் அண்ணாவையும் சந்திக்கலாம் என்று இருந்தேன். பாஞ் அண்ணா வந்திருந்தார் குசா அண்ணாவுக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியவில்லை. யாழில் கலியான வீடு மற்றும் எனது பார்வையில் ஜேர்மன் மற்றும் யூரோப் தமிழ் மக்கள் பற்றி இந்தக்கிழமை முடிவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
  14. சிறியின் மகளின் கலியாணத்துக்கு இந்த மாதம் ஜெர்மனி சென்று இருந்தபோது குசா அண்ணாவை எப்படியாவது சந்தித்து விடவேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். அவரது வெளிப்படையான, நகைச்சுவையான பதிவுகள், பதில்களை தாண்டி நல்ல உள்ளம் கொண்ட ஆளுமையான மனிதர் என்று நான் கணித்ததால் கட்டாயம் ஒருமுறையாவது சந்தித்து பேச வேண்டும் என்று இருந்தேன். ஏமாற்றம் என்றாலும், இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் என்று நம்புகிறேன். கு சா அண்ணா, நாங்கள் நாலு யாழ் களத்து உறுப்பினர்கள் ஒரு get together வைக்கலாம் என்று இருந்தோம். முடிந்தால் நிச்சயம் வந்திருப்பீர்கள்தானே?
  15. நன்றி Goshan . வரகுணனும் நானும் ஒரே நாளில் பிறந்தவர்கள். குடும்ப நண்பர்கள். சுமந்திரனுடன் தாயார் இறந்தபோது கதைத்தேன்.
  16. கனடா மற்றும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையானவை. நான் 2001 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தபோது இங்குள்ள சட்டதிட்டங்கள் மிகவும் கடினமானவையாக தெரிந்தது. என்ன செய்தாலும் களவு களவுதான். பிழை பிழைதான். எனது மகனின் பாடசாலை அதிபர்இ மிகவும் பணக்காரி. Best Buy (Opelika) என்னும் கடையில் பெறுமதியான வயரை எடுத்து CCTV இல் பார்த்ததோடு Security Guard உம் பிடித்து விட்டான். உடனே போலீஸ் வந்து கைது விட்டார்கள். பத்திரிகை இணையதளம் எல்லாம் கைது செய்த படத்தை (Mugshot) போட்டுவிட்டார்கள். வேலையும் இல்லாமல் போயிவிட்டது. ஆனால் அவ வெள்ளைக்காரி. அத்துடன் மிகவும் செல்வாக்கு உள்ள குடும்பம். அதனால் எதோ ஒரு விதமாக மன்னிப்பு கிடைத்து இப்ப அதே ஊரில் நான் படித்த யுனிவர்சிட்டியில் இல் வேலை செய்கிறா. அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் கடுமையானவை என்றாலும்இ இப்படியான சலுகைகளும் பணக்கார மற்றும் செல்வாக்கு உள்ள ஆக்களுக்கு வேறுவிதமான சலுகைகள் கிடைக்கும். சில வருடங்களுக்கு முன்பு கனடாவில் ஒரு தமிழ் போலீஸ் ஒரு கறுப்பின இளைஞன் நேர்முகத்தேர்வுக்கு போவதற்காக உடுப்பு திருடியதை மன்னித்து அதற்கான பணத்தை அவரே செலுத்தி இளைஞனை கைது செய்யாமல் விட்டார். அப்போதுதான் எனக்கு தெரியும் போலீஸ் காரர்களுக்கு இப்படி செய்ய அதிகாரம் இருக்கு என்று.
  17. வைகோ வர வர கருணாநிதி மாதிரி வெளிக்கிட தொடங்கிட்டார் போல. இப்ப கறுத்த மாதிரி இருக்கு. முந்தி மனுசன் நல்ல வெள்ளை. நேரில் பார்த்திருக்கிறேன். மருமகள் என்னுடன் படித்தவ. தெலுங்கு ஆக்கள்.
  18. வைகோ இப்ப இப்படி இருக்கிறார் என்று கன நாளா ஒரு பேப்பர்லயும் பார்க்காதபடியால் கருணாநிதியென்று நினைத்தேன். இப்ப பார்க்க, வயசுபோன வைகோ போலத்தான் இருக்கு.
  19. 😂 இதைத்தான் பேக்காட்டிறது எண்டு சொல்லறது.
  20. ஹனிபா நல்ல ஒரு மனிதரும் கூட உடையார்.
  21. ஏசியன் கடையில் பிரெஷ் கிழங்கு வேண்டி சமைத்துப்பார்க்கிறேன் சிறி. அந்தநேரத்துக்கு பெலனாகத்தான் இருந்திச்சு🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.