Everything posted by alvayan
-
யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்!
இது யாழ் யூரியூப்பர் ஆட்களுக்குத் தெரியாதோ....நல்ல காலம் கனடாக்காரரின் தலை தப்பியிட்டுது.. ஆவ பாவமற்ற செயல்....வறுமையை பயன்படுத்தி...சிறுமியின் வாழ்க்கையைகெடுத்த கயவனுக்கு ...சுடு இரும்பில் வைத்து பச்சை மட்டையால் அடிக்க வேண்டும்..
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நத்தார் ..ஸ்பெசல்...விசேட மலிவு விற்பனை..
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
ஏன் ...அவ்வளவுதூரம் ...போகத்தேவையில்லை ...இந்த யாழ் களத்திலேயே தருவினம்.. இன்று வெள்ளிக்கிழமை மத்தியானம் ஒருமணிக்கு ..ரோட்டெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டிருக்கும்
-
வாழைப்பூ வடை
நன்றாகவே இருக்கிறதி அய்யா உங்கள் வாழைப்பூ வடை ...என்னென்று..சார் அங்கை தொட்டு ...இங்கை தொட்டு சாப்பிடுகிறியள் ... நல்லாத்தான் இருக்கு.... கவலை கடைசி வரிதான்...
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
விரைவில் உங்களிருவருக்கும் விசேட பட்டமளிப்பு ஒன்றிருக்கு... முற்கூட்டிய ..வாழ்த்துக்கள் இருவருக்கும்
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
நிழலாடுகின்றது அனைத்தும் ...நீர்த்தாரை பெருகும் கண்களைத்தவிர ...யாரெமக்கு ஆதரவு...இப்படியே ஒவ்வொருவரும் தனித்தனியே அழுது ஆறுதல் அடைய வேண்டியதுதான் ....உங்கள் ...வேதனை சோதனைளை ..ஆவணப்படுத்துங்கள் ... புத்தகமாக வெளியிடுங்கள் ... எம்மினம் எப்படியான வேதனைகளை சந்தித்தது என்பதை வரும்காலத்தில் யாரேனும் ஒருவராவது அறியட்டும் கண்ணீர் விடட்டும் ..
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
உயிர்ப்புக்கள்.... அழியவிடாதீர்கள் ...ஆவணப்படுத்துங்கள்.... எவ்வளவு கொடூரத்தை அனுபவித்துள்ளீர்கள் ...இப்படிப் பலர் ..... உணர்ந்தவர்கள் .. இதை சொல்லவேண்டும் ....ஏனெனில் ...எமது இனத்தின்வலிகள் ....தொலைபேசிகளின் உதவியினால் திசை திருப்பப்பட்டு ....எங்கோ சென்று கொண்டிருக்கிறது ...தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் வலிகளை...எனக்கும் அனுபவங்கள் பலவுண்டு ...உங்களைப்போல்...எழுதும் ஆற்றல் எனக்கில்லை....
-
பூரணநாயகி
உண்மகளை ...உணர்வு பூர்வமாக ...இலகுநடையில் சொல்கின்றீர்கள்.... அந்த உணர்வுகள் ..இதயத்தை ஆழ்மாக துளைக்கின்றது...இதற்கு நீங்கள் தரும் ஓவியங்கள்...கதையை...நிஜமாக்குகின்றன... தற்கால எழுத்தோட்டத்தில் நிமிர்ந்து நின்று...அனைவரையும் ...கதையை நோக்கி இழுக்கின்றீர்கள்.. எழுத்துப் பிழையை நான் கவனமாகப் பார்த்தபின்பே ..இந்த கருத்தை பதிவு செய்கின்றேன் ...உங்கள் எழுத்துக்களுடன் ..ஒப்பிடும்போது ...நான் கால்தூசிக்கும் சமனாகமாட்டேன் ...தொடருங்கள்...
- அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
-
மாவளி கண் பார்
அய்யா மன்னிச்சுக்கோங்க....கிழுக்கட்டை ...இல்லை கொழுக்கட்டைதான் ...உந்த இந்திய கிரிக்கட்டை விடியப்பறம் மூன்று மணிக்கு பார்க்கும்போது எழுதினது...அதுதான் கொழுக்கட்டை ...கிழுக்கட்டையாகி விட்டது ...சாரி சார்
- அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
-
மாவளி கண் பார்
அடிக்கடி சென்னைக்கும் போட்டுவாறவராம்....இருக்கும் கிழுக்கட்டை என்ற சொல் சுத்தத்தமிழ்...எனவே கொழுக்கட்டைகளுடன் இருந்து எழுதியமையால்...ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் .....தப்பிட்டியள் ரசோ ...ஆனால் இது என்னமோ எனக்கு இன்னமும் விளங்கவில்லை..
- அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
-
போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?
தெரியும்...புது டெக்னிக்...அவசரதேவைக்கு பாகிஸ்கடைக்கு பால் வாங்கப்போனேன் ..அங்கு 2 வீத பால் பக்கட்டுக்கள்... காலாவதி திகதியுடன் கிடந்தன ..கவுண்டரில் நின்ற நானாவிடம் கேட்டேன்...இவை திகதி முடியுது ..வேறு தரமுடியுமா என்று....அவர் சிரித்தபடி சொன்னார் ...இதை கொண்டுபோய் பிறீசரில் போட்டுவிட்டு ஒருமாதம் வரையும் பாவிக்கலாம் என்று....நானும் சிரித்தபடியே ..போனால் போகுதென்று ..4 வீத சிவப்பு பக்கட்டை எடுத்துக் கொண்டு ...வந்துவிட்டேன்.... வீட்டில் அந்த சிவப்புப்பை முடியுமட்டும் வாங்கின பேச்சு ... ரீங்காரம் செய்யுது
- இன்று மாவீரர் தினம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
❤️தமிழ் சிறீ தாத்தாவிற்கும், பேத்திக்கும் இனிய வாழ்த்துகள் தாயும் சேயும் நலமுடன் வாழ அன்போடு வாழ்த்துகின்றேன். 💐
-
ஆயிரங்களில் ஒன்று
மிகவும் நன்று ...இலகு நடை...ஈழத் தமிழர் என்றால் ...இதுதான் விதி.. இந்த அடையாள அட்டை விதி... இந்திராணி (ஊறணி ) ஆஸ்பத்திரியில் பிறந்த எம்மை பிறந்த இடம் பொலிகண்டி .. என்று காட்டியது ... அடையாள அட்டை.... இது நம்ம இருவருக்கும் பிடித்த இடமெல்லாம் பிரித்து மேய்ந்தார்கள் .. அடி அவ்வளவும் பிடிக்காத நாட்டில் இருப்பதை விட பிடித்த நாடு கனடாவில் ...இப்ப.
-
மாவீரர்நாள் ....2025 .... அஞ்சலிப்போம்.. கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை
கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கண்ணீரும் செந்நீரும் கலந்திடும் கார்த்திகை இருபத்தியேழு சொல்லில் அடங்காச் சோகங்கள் சூழக் கண்சிமிடித் தமிழரை கைநீட்டி அழைக்கும் கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கார்த்திகை மைந்தர்கள் காவிய நாயகர் போர்க்களம் கண்டு புனிதர்கள் ஆகியே தூய்தமிழ் அன்னையின் தாய்மடித் தழுவித் தமிழர்தம் மனங்களில் தண்ணொளி வீசினர் கருத்தினில் தலைவன் கொள்கையை ஏற்றவர் கந்தக குப்பியைக் கழுத்தினில் சுமந்தவர் தரைப்படை கடற்படை தரணியில் கண்டவர் வையம் வியந்திட வான்படை அமைத்தவர் வரிப்புலி வடிவாகி வீரத்தில் திளைத்தவர் உணவு உறக்கம் உறைவிடம் மறந்தவர் காடுகள் களனிகள் கூடிடும் காப்பனர் வெடிகள் சுமந்தே வெந்தணல் ஆகினர் அன்னையும் அப்பனும் அன்புச் சகோதரரும் ஆசை மனைவியும் அருமைக் குழந்தையும் ஏக்கம் கொண்டவர் எண்ணத்தில் தவிக்க களப்பலி கண்டுமே கல்லறையில் தூங்குகின்றார்…
-
எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
எம் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71 வணிகமும் வீரமும் வான்நோக்கும் கடலலையும் மணி ஓசையும் மனைகளும் உயர்ந்து அணிகலனாய்க் கொண்ட அழகிய வல்வெட்டித்துறையில் தணியாத தாகமும் தமிழீழ மண்மீட்பும் பணியாகக் கொண்டே பகலவன் உதித்தனன்! கார்த்திகை இருபத்தாறு கார்மேகம் சூழ ஆர்ப்பரிக்கும் அலைநடுவே ஆதவன் வடிவான பார்வதியின் மைந்தன் பிரபாகரன் என்னும் கீர்த்திகொள் நாமத்தைக் கிரீடமாய்க் கொண்டு தீர்க்கதரசி திருவுளம்கொண்டு தாய்மடியில் தவழ்ந்ததன்று! மேதகு என்றே மேதினியார் போற்றும் மாதவ மைந்தன் மண்ணில் மலர்ந்து பாதகம் செய்தோரின் படையணி அழித்து வேதனை தீர்க்கும் வீர காவியத்தில் சாதனைகள் கண்ட சரித்திர நாயகன்! பாசத்தில் தந்தை பழக்கத்தில் அண்ணன் நேசக் கரம்நீட்டும் நேர்மையின் வடிவம் ரோசப் பரம்பரையில் ராசியாய் வந்துதித்து வாசம் வீசிய வண்ணமலர் மூன்றை மோசத் துரோகத்தில் முழுமையாய் தொலைத்தவர்! அன்னைத் தமிழின் அழகு தெரிந்தவர் முன்னைத் தமிழன் முரசொலி அறிந்தவர் வன்னி மண்ணின் வரலாறாய் வாழ்கின்றார் தன்னுள் நிறைந்த தம்பி தங்கையரை வின்மீன் வடிவில் விண்ணெங்கும் காண்கின்றார்! தேசவிடுதலைக்காய் தியாகங்கள் செய்தீர் வாழி! தேசமக்களின் தெய்வம் ஆனீர் வாழி! தேசக்காற்றின் சிந்தையில் நிறைந்தீர் வாழி! தேசியத்தை உயிராக நினைத்தீர் வாழி! தேசியத்தலைவராகத் திக்கெட்டும் திகழ்கின்றீர் வாழி! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
-
எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
தலைவன் மேதகு பிரபாகரனுக்கு தேசவிடுதலைக்காய் தியாகங்கள் செய்தீர் வாழி! தேசமக்களின் தெய்வம் ஆனீர் வாழி! தேசக்காற்றின் சிந்தையில் நிறைந்தீர் வாழி! தேசியத்தை உயிராக நினைத்தீர் வாழி! தேசியத்தலைவராகத் திக்கெட்டும் திகழ்கின்றீர் வாழி! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!🎂"
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
இது நல்ல கற்பனைதான்...இது ரொம்ப பழையது...கொஞ்சம் புதிசாக எழுதினால்தான் ...பதில் எழுதமுடியும் ...கற்பனையில் வாழாமல் கொஞ்சம் நியத்தில் வாழவும் .. நான் இந்த திரியில் குறிப்பிட்ட விசயம் ..கொடி ஏற்றியவர்களுக்கு வாழ்த்து தெர்வித்ததே ...அதையே விளங்க்காமல் எங்க்கெங்கோ போவதில்...இங்கு நான் என்ன எழுதக்கிடக்கு....அமைதியாக படுத்து ஆறுதலாக புதுவிடையத்துடன் வரலாம்
-
இந்தியா எப்படி தோற்றது?
அதாவது இந்தியாவுக்கு ..பங்களதேசு அடித்த லூட்டியை ...பங்களாதேசு ...பாகிஸ்தானிடம் வாங்கிக் கட்டியது ...
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
ரொக்கட் விஞ்ஞானம் படித்தவன் ..செவ்வாய் கிரகத்துக்கே போய்விட்டான் ...செல்வநாயகம் காலத்தில் இருந்து ..அமைதிவழி காத்த நம் தமிழினத்தை ..அழித்த சிங்களவன் ...இப்ப 80 வீதம்வரை அழித்திருக்கின்றான் ...இதனை சாதாரண பத்திரிகை படிப்பவனே அறிவான் ...இதை விளங்கப் படுத்த ரொக்கட் ..புத்தகம் நீங்கள் படித்திருக்கத் ..தேவையில்லை ..நடைமுறையில் உள்ளதை பார்த்தாலே விளங்கும்.. அமெரிக்க தமிழீழிழப் பிரகடனம்தான் ..காரணம் என்பதை என்ன ஆதாரத்துடன் கூறுகின்றீர்கள்.. சிங்களவனின் அடிப்படைக் குணம் அறியாது கதைப்பது நகைப்புக்கிடம் ...அவர்களிடம் மதி மயங்கிக் கிடப்பவர்களுக்கு ...தமிழன் என்ன செய்தாலும் பிழையாகத்தான் இருக்கும்...நீங்கள் உட்பட..உங்கடை புரிதல் என்பதன் அர்த்தம் ...இப்ப 60 வருடகாலமாக .....கழுவி அரசியல் ..செய்தவையிடம்...கேட்டால் விளங்கப் படுத்துவினமே....ஏன் அதன நீங்கள் செய்யவில்லை ...இந்த கொடியேற்றலும் ..கொடித்தினமும்... அழிந்து கொண்டிருக்கும் ...எம் இனத்தின் இனவழிப்பை உலகின் ஒருபகுதியினருக்காவது ..உணர்த்த எடுக்கப்பட்ட முயற்சி ...இதனை செய்யாவிட்டால் சிங்களவன் .. தங்கத் தாம்பாளத்தில் வைத்து ..எமது உரிமையை தருவானென்பது ...உங்களைப்போல சிலரின் நப்பாசை .... 5 hours ago,island said: அநுரா மட்டுமல்ல எந்த ஜனாதிபதியாலும் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனவாதத்தை ஒரு mouse click ல் delete பண்ணகூடிய நிலையில் அது இல்லை. அதற்கான செயல்முறை (Process) என்பது நீண்டது. அதன் முன்னேற்றம் என்பது இலங்கையில் வாழும் மக்கள், அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள் தான் தங்கியுள்ளது. இது விளங்கினால் சரி ...எவ்வளவுகாலம் ...இப்பவே ஒவ்வொருநாளூம் ...இனப்பரம்பலை மடை மாற்றும் நிகழ்வு நடக்கிறது ... இன்னும் ஒரு 20 வருசம்...மிச்சம் ...அப்புரம் நீங்கள் விரும்பியவருடன் கொண்டாட்டமாக இருக்கலாம்....ஏனெனில் தழினமே இருக்காது..அதுவும் அனுர அரசில் இன்னும் வேகமாகும் .. 5 hours ago,island said: இனவாதம் என்பது இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் மண்டைக்குள் திணிக்கப்பட்ட ஒன்று . அது உங்களுக்குள் கூட உள்ளது இனவாதத்துக்கு எதிராக பொங்கும் நீங்கள் முஸலீம்களுக்கு எதிராக பல இனவாத பதிவுகளை இங்கேயே செய்துள்ளீர்கள். கனடாவில் ..டொரொன்டோவில் பலஸ்தீனகொடி ஏற்றப்பட்டது...பிரம்டனில் ..தமிழ்ழீழக்கொடி எற்றப்பட்டது... .முதலாவதை முசுலீமும் ..சிங்களவனும் வரவேற்கினம் ...இரண்டாவதை ஏன் எதிற்பான் ...இரண்டிலும் நடந்தது இனஅழிப்பே ... இந்த இடத்தில் முசுலிம் செய்கின்ற அட்டகாசங்களை ...தட்டிக்கேட்பது உங்களைப்போன்றவர்களுக்கு ...அது இனவாதக் கருத்தாகவே தெரியும் ...ஏனெனில் இலங்கை முசுலிம்கள் எம்மை அழித்து ..தம்மை நிலைநாட்ட துணியும் ஒரு இனம் என்பது ...நடுநிலையளன் என்று சொல்லிக்கொள்ளும் உங்களுக்கு விளங்காதுதானே.. 5 hours ago,island said: இதற்கு இனவாதிகளிடம் இருந்து தடைகள் வந்தால் அதை வைத்து உணர்ச்சி அரசியல் செய்யாமல் அதை தந்திரோபாயரீதியில் வெல்லும் செயற்பாடுகளே இலங்கை என்ற நாட்டிற்குள் தமிழருக்கு பலம் சேர்ககும் ஒரு அரசியல் தீர்வை உருவாக்க மெதுவாக வென்னும் உந்திதித்தள்ளும். ஏற்கனவே தமிழ் மொழிப்பயன்பாடு முன்னரை விட இலங்கையில் மேலோங்கி வருவதை அங்கு சென்று வந்தவர்கள் உணர்ந்திருப்பர். உங்கடை அழகான கற்பனையில் எவ்வளவு காலம் இன்புறுவீர்கள்.... நிஜமாகவா...பிரியன்சார்....என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
முதல் STF ல இருந்தவராம் மஹிந்தவுக்காக உயிரையும் குடுப்பாராம் @ island ஒரு சின்ன உதாரணம்...நாமலின் நுகேகொட ஊர்வலத்தில்
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
அய்யா ..இந்த இரண்டிலும் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் .. அதாவது புலம்பெயர்ந்தவர்கள் ..பொத்திக்கொண்டு இருந்தால் சமாதானம் தன்னுடையபாட்டில் வரும் ...இதையும் நீங்கள் 16 வருசமா எழுதிறியள்..உங்கடை நம்பிக்கைக்குரிய சிங்கள சனாதிபதிகள் .. மகிந்த ,மைத்திரி ,ரணில், கோட்டா ...இப்ப .அனுர ..இவர்களில் யாராவது ஒருதர் ...இனப்பாகுபாட்டை ஒழிக்க ஏதாவது முயற்சி எடுத்தார்களா.... இல்லை ..அப்ப உள்ள உங்கடை சனாதிபதி அனுரவின் ...கடந்த 2 நாள் ...செயல்பாட்டை எடுப்பம் ...தூக்கின புத்த சிலையை ..ஒருநாளில் நவதுவாரங்களை பொத்தியபடி பழையைடத்தில் வைத்துவிட்டு போகிறார்...தையிட்டியில் ..கட்டிடம் கட்டுகிறார்..குருந்தூர் மலையில் காணி பிடிக்கிறார்...மட்டக்கிளப்பு முருகன் கோவிலில் புத்த சிலைவைக்கிறார் ...நாமலின் ஊர்வலத்தில் பட்டவர்த்தனமாக தமிழனை கொல்லுவோம் ..வெட்டுவோம் என்று கோசமிடுகின்றார்கள் ...இதற்கானகாணொலிகள் .. இருந்தும் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா....இப்படி ஆயிரம் என்னால் சொல்லமுடியும் ...நீங்கள் .. இங்கு கருத்திடுவதும் ..அர்ச்சனா பார்லிமெண்டில் சத்தம் போடுவதும் ஒன்று...அதாவது அர்ச்சனா புலிபோல நடித்து ...புலிகளை விற்கிறார் ...நீங்கள் தமிழர் மேல் அனுதாபம் கொள்வதுபோல.. தழருக்கு விடிவு ஏற்படுத்தவோ...அல்லது ..பிரச்சினை பிரச்சாரப் படுத்துவதை ...நரித்தனமாக தடுப்பதுபோல்தான் இருக்கிறது உங்கள் கருத்துக்கள் ... கனடாவில் நினைவுத்தூபி...இப்பகொடி ..இது அவர்களால் முடிந்தது ...அதாவது எமது பிரச்சினைகளை உலகறியச் செய்ய சின்ன உதவி....இதன செய்யாமல்விட்டால் ..நம்மினம் நாட்டில் நின்மதியாக இருக்கும் என்றால் செய்யாமல் விடலாம் ...அதுதான் இல்லையே ...ஏன் அதை செய்யக்கூடாது ..என்பதை இலங்கையில் கடந்த 2 நாளில் நடந்த சம்பவத்துடன் ..விளக்க முடியுமா ...அது முடியாது...நான் ஒரு பத்தி எழுத்தளானோ..பத்திரிகை காரனோ அல்ல ..சாதாரண .. பத்திரிகை படிப்பவன் ...அதிகம் எழுதத் தெரியாதவன் ...இந்த கருத்துக்கு .. உங்களுடன் பல ஜம்பாவான்கள் களத்தில் குதிப்பர் ... என்பது தெரியும் ...என்னுடைய நியாயம் இது.....அவ்வளவுதான்...