Everything posted by குமாரசாமி
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
உலக அரசியலில் ரஷ்யாவும் அமெரிக்காவும் நிறுத்தி நிதானித்து அமைதியாக செயற்படுகின்றார்கள். இடையில் இருப்பவர்கள் தான் பொங்கி எழுகின்றார்கள். எதிரியாக இருந்தாலும் சீன வளர்ச்சி விடயத்தில் ஒருவரை ஒருவர் கட்டியணைக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு..... அமெரிக்க ஆகாயத்தில் பலூன் பறக்க விட்டு அழகு பார்த்தவன் சீனன். அவனுக்கு அமெரிக்க நடவடிக்கைகளை கண்காணிக்க தனி செய்மதி தேவையில்லை.😂
-
சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!
இன்னொருவன் நிலத்தை எப்படி ஆக்கிரமிக்க முடியும் அவன் சொத்துக்களை எப்படி சுரண்ட முடியும் என்பதை உலகிற்கு செய்து காட்டியவன் பிரித்தானியன். அவன் வம்சாவளிகளே இன்றும் அதனை தொடர்கின்றார்கள்.😜 ஆனால்...👆 👇 ரஷ்யன் இன்று வரைக்கும் உலகிலும் சரி....அயல் நாடுகளிலும் சரி பொருளாதார சுரண்டலுக்காக படை எடுத்ததுமில்லை. அந்த அரசியலை செய்ததுமில்லை.😎
-
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஏராளன் சம்மதித்தால் புலர் அமைப்பு ஊடாகவே சுகாதார வசதி திட்டத்தை முன்னெடுக்கலாம் என்பது என் கருத்து. இதனால் தனியார் வங்கி விபரங்கள் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என நினைக்கின்றேன். பே பால் தொடர்புகளும் இணைக்கப்பட்டால் பலருக்கு இன்னும் வசதியாக இருக்கும்.
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
இன்றைய கால சூழ்நிலைகளில் ஏராளன் சிறந்த தேர்வாகவே எனக்கு தெரிகின்றார். வேலைகள்/நிதிகள் சம்பந்தப்பட்ட கண்காணிப்பை அவரிடமே ஒப்படைப்போம். அதற்குரிய ஊதனத்தை நாமே அவருக்கு செலுத்த வேண்டும். இது பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள். தகவலுக்கு நன்றி. 🙏
-
நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
போகேக்க சும்மா பேச்சுத்துணைக்கு தம்பி அர்ச்சுனாவையும் அவர்ர தங்கத்தையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்.🤣
-
சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!
ஒரு காலத்தில் வெவ்வேறு இனங்களை கொண்ட நாடுகளை தம் நலனுக்காக ஆயுத வலிமையுடன் ஒருங்கிணைத்து சொத்து சுகங்களை திருடிய மேற்குலகிற்கு நல்ல பாடம்.
-
டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்?
அவர் செய்ததாக சொல்லப்படும் கொலைகளுக்கு அரச ரீதியான,ஆய்வு கூட ரீதியான ஆதாரங்கள் உள்ளதா?
-
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
"சல்லியர்கள்" ஈழத்தமிழர் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.ஈழத்தமிழர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டிய படைப்பு.
-
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
தமிழர்களுக்கு வரவேண்டிய காணி அதிகார சட்டம் பற்றி நீங்கள் பேசுவதே இல்லை.😎
-
🏥 பாரதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் ) அனுமதிக்கப்பட்டுள்ளார்
எனக்கு பிடித்த திரை இயக்குனர் பாரதிராஜா. முதுமையாகி வாழ்க்கையின் இறுதி படிக்கட்டுகளுக்கு வந்து விட்டவர். இருந்தாலும் தன் மகனினது அவல மரணத்தின் உச்ச சோகம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே தள்ளிவிட்டது.
-
கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
உலகில் இல்லாத பொல்லாத காப்புறுதிகளை வைத்துக்கொண்டு பணம் பறிக்கும் கும்பல்களை நம்பி நீதி நேர்மை நியாய கருத்துக்கள் எழுதவே கூடாது. ஊடகங்களில் உண்மையான குற்றவாளிக்கு தண்டனை கிடைக்காமல் நியாவாதிகளுக்கு தண்டனை கொடுப்பதுதான் இன்றைய உலக நியதி.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
வெனிசுலா எந்த விதத்திலும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லாத நாடு. இருந்தும் அந்த நாடு மீது அமெரிக்கா ஆக்கிரமித்தது கண்டிக்க வேண்டிய செயல். கேவலம்.....அமெரிக்கர்கள் வீட்டுக்கு 5 வாகனங்கள் வைத்திருப்பவர்களின் எரிபொருள் தேவைக்காக......எண்ணை வளம் மிக்க வலிமை இல்லாத நாட்டை ஆக்கிரமிப்பது கேவலத்திலும் கேவலம். உக்ரேன் போரை இலங்கை ஒப்பிட்டது முடிந்து.....இனி வெனிசுலா பிரச்சனையையும் ஈழ பிரச்சனையோடு ஒப்பிடாத வரைக்கும் சந்தோசம்.
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
இந்த திட்டம் பற்றி கருத்தாடும் போதே ஏராளனை என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். யாழ்களம் மூலமாக தினசரி எம்முடன் இணைத்திருக்கும் நம்பிக்கைக்குரிய ஒரு முக்கிய உறவு. அவர் ஏற்றுக்கொண்டால் அவர் தலைமையில் இந்த திட்டத்தை முன்னெடுக்க எனது சம்மதமும் என்றும் உண்டு.
-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - 2026
உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
-
'சோமாலிலாந்துக்கு தனி நாடு அங்கீகாரம்' - இஸ்ரேல் வியூகமும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பும்
என்ன ப்ரோ!? தெரிந்தும் தெரியாமலும் எழுதுகின்றீர்கள்.ஈழ அரசியலில் அன்றைய காலகட்டத்தில் அதி வலதுசாரி போக்கை எடுத்திருந்தால் அயல் நாட்டவனான பாரத தேசத்தான் அன்றே ஒரு முள்ளிவாக்கால் நிகழ்வை நிகழ்த்தியிருக்க மாட்டானா? இன்றும் பங்களா தேசம்,நேபாளம்,பூட்டான்,பர்மா போன்ற தேசங்கள் படும் அவலங்களை பார்க்கவில்லையா? ஏன் கனக்க.... ஈழத்தமிழர் படும் அவலங்களுக்கும் விடிவில்லாமைக்கும் யார் காரணம்?
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நம்பிகையானவர்களை,நம்பிக்கையான நிறுவனங்களை யாராவது பரிந்துரை செய்தால் மாதாந்த அல்லது குறிப்பிட்ட தொகையை கொடுக்கலாம். 2009க்கு பின்னர் பட்ட அனுபவங்களால் தான் மேற்குறிப்பிட்ட கருத்தை எழுதினேன். பொது பண விடயத்தில் என் சொந்தங்களைக் கூட நம்ப நான் தயாரில்லை.
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நீங்கள் தான் பல மக்கள் நலன்புரி அமைப்புகள் வட பகுதிகளில் வெற்றிகரமாக இயங்குவதாக எழுதினீர்களே. அந்த அமைப்புகளுக்கு தாங்கள் கடிதம் எழுத முடியாதா? இல்லையேல் தந்தியாவது அடிக்க முடியாதா? கோபுரம்,சுற்றுமதில் கட்டும் புலம்பெயர்ந்தவனுக்கு தங்கள் உடன் பிறந்தவர்களுக்கு கக்கூஸ் கட்டிக்கொடுப்பதில் எவ்வித பிரச்சனையும் இருக்கப்போவதில்லை. இதற்கென ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.....இல்லையேல் இருக்கும் அமைப்பின் விலாசத்தை தாருங்கள். 100 குடும்பத்திற்கு மலசலம் கட்டும் நிதியை நான் திரட்டி தருகின்றேன்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
கதை சொல்லிக்கொண்டிருக்கும் போது குறுக்கு கேள்விகள் கேட்பவர்கள் மீது தான் அதிக சந்தேகம் வருகின்றது.😂
-
டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்
ஆஹா.......குட்டைக்குள் இருந்து இன்னொரு தலை வெளியே காட்டுகின்றது.😂
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அங்கெலா மேர்க்கலை விட Merz உலக பொருளாதார கொள்கையில் திறமை கொண்டவர். எதிர்பார்த்த யுத்தம் ஒன்று எல்லாவற்றையும் புரட்டிப்போடும் என ஐரோப்பியர்கள் இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை என நினைக்கின்றேன். ஐரோப்பாவிற்கு ரஷ்யா அரசியல் ரீதியாக இல்லாவிட்டாலும் பொருளாதார ரீதியாக மிக மிக முக்கியமான நாடு. அதை உக்ரேனுக்காக தகர்த்தெறிந்து விட்டு...... அல்லல்படுவது ஐரோப்பா மட்டுமல்ல இந்த உலகம் முழுவதுமே. உலக பொருளாதார ரீதியாக அமெரிக்காவிற்கான முதல் எதிரி ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே. அமெரிக்காவின் டொலர் விம்பத்தை உடைத்தவர்கள் யூரோ நாணயத்தை உருவாக்கியவர்கள் தான். இந்த யூரோ நாணையத்தை கையில் எடுத்த அரேபிய நாட்டு தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஓட ஓட ஓடி இப்போது அந்த இருவரும்(அமெரிக்கா- ஐரோப்பிய ஒன்றியம்) உக்ரேனுக்குள் புதைந்துள்ளார்கள். இதில் அறுவடை செய்து பலன் அனுபவிப்பது ரஷ்யா எனும் பெரும் கரடி.
-
பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!
நான் இருக்கும் இடம் என்றும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் சினோவால் நிறைந்திருக்கும் பூமி. ஆனால் இன்றைய காலங்கள் அதாவது பத்து வருடங்களாக சினோ கொட்டவேயில்லை.அப்படி கொட்டினாலும் ஒரு நாள் இரண்டு நாட்களுடன் கரைந்தோடி விடும். உள்ளூர்வாசிகளின் வியாபாரங்களும் முடங்கிக்கொண்டு போகின்றது. காலநிலை மாநாடுகளில் தேவையில்லாத குண்டு வீசல்களையும், தேவையில்லாத ஏவுகணை வீசல்களையும்,தேவையில்லாத விண்வெளி ஆய்வுகளுக்கான செய்மதி கோள்களை ஏவுவதை நிறுத்த கோரிக்கை வைக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு கார் என்ற சட்டம் உலகளாவிய ரீதியில் உருவாக்கப்பட வேண்டும். வீட்டுக்கு முன்னாலை மூண்டு கார்...வீட்டுக்கு பின்னாலை மூண்டு கார் வைச்சிருக்கிற புலம்பெயர் சிறிலங்கன் டமில்ஸ் கவனிக்க.😛
-
அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம்
நல்லதொரு திட்டமும் செயற்பாடுகளும்..... வியாபாரமும் விளம்பரமும் ஊர் முன்னேற்றமும் நிறைந்தது. ஊருக்கு ஊர் இப்படியான நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும்.
-
'சோமாலிலாந்துக்கு தனி நாடு அங்கீகாரம்' - இஸ்ரேல் வியூகமும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பும்
உலக அரசியல் நீதி நியாயங்கள் எப்படியெல்லாம் விளையாடுகின்றது?! இஸ்ரேல் நாட்டையும் அவர்கள் செயலையும் ஈழத்தமிழர்களும் ஆதரிக்க வேண்டும். அழிவார்களுக்கு ஆதரவழித்தால் நாமும் நலமுடன் வாழலாம் போல் இருக்கின்றது. 😂
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
அனுர ஆட்சியில் பிள்ளையான் மற்றும் ரனில் கைதாகும் போது வராத சவுண்ட் மற்றும் சலசலப்புகள் டக்ளஸ் கைதாகும் போது வருகின்றது எனும் போது....எங்கையோ யாருக்கோ குத்துது குடையுது என்றுதானே அர்த்தம். டக்ளஸ் கும்பல் செய்த அட்டூழியங்கள் ஆதாரங்களாக பெரிய யூனிகளான ஒக்ஸ்வோர்ட்,ஹவார்ட் போன்ற யூனிகளில் ஆதாரமாக திரட்ட முடியாது.சிசி என் என் பி பிசி ஊடகங்களும் சொல்லாது. ஆனால் ஊரில் உள்ளவர்களை கேட்டால் கண்ணீர் மல்க உடல் நடுக்கத்துடன் சொல்வார்கள்.
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
சிலோன் மருமோனும் உலக நடிகருமான விஜய் அவர்களின் அதீர வளர்ச்சியையும், அவரது நற்பணி சேவைகளையும் கண்டு எரிச்சலும் பொறாமையும் கொண்டவர்களின் செயலாகத்தான் இது இருக்குமென நான் நினைக்கின்றேன். என் வன்மையான கண்டனங்கள். தள்ளி விடுறதெல்லாம் என்ன பழக்கம்?