Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43268
  • Joined

  • Days Won

    441

Everything posted by குமாரசாமி

  1. ஜேர்மனியில் இந்த முறை இருக்கின்றது. கட்டாயமா என தெரியவில்லை? வேதனையான தருணங்கள். போதுமடா என்பது போல் இருக்கும்.நீண்ட நேர பிரசவ வலி என்றால் கூட இருப்பவர் சிக்கல் சிதம்பரம் தான் 🙂
  2. கிட்டத்தட்ட 1950 முதல் இலங்கையில் இவ்வளவு இனக்கலவரங்கள், சிங்கள அத்துமீறல்கள்,அடாத்தான குடியேற்றங்கள், உரிமை பகிர்வில்லா வாழ்க்கை, புலம்பெயர்ந்த வாழ்க்கை,போர்காலத்தில் உள்ள பக்குவங்கள்,முள்ளிவாய்க்கால் அழிவு என பல அனுபவங்களை பார்த்த இனம் ஈழத்தமிழினம். இப்படியிருந்தும்......இதுவரை யாருமே நிரந்தர முடிவு சொல்லவுமில்லை. தீர்வு தரவுமில்லை. எனது கேள்வி என்னவென்றால்....? இன்னும் ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடன் நடக்க வேண்டுமா?
  3. சம்பந்தப்பட்டவர்கள் அந்த பெண்ணை உணர்ச்சி மிகுதியால் தாக்கிவிட்டதாகவே தெரிகின்றது. ஆனால் பல காணொளிகளில் போரட்டங்களை கொச்சப்படுத்தி தூசனங்களால் அந்த பெண் பேசும் போது பல இடங்களில் அப்படி பேச வேண்டாம் என மன்றாட்டமாக கேட்டதையும் உன்னிப்பாக கவனித்தவர்கள் அவதானித்திருக்கலாம். அந்த சிறிய தாக்குதல் சரியென நினைப்பவர்களுக்கு அது சரியாகத்தான் இருக்கும். பிழையென நினைப்பவர்களுக்கு அது பிழையாகத்தான் இருக்கும். ஈழத்தமிழர்கள் அரசியல் போராட்டத்திலும் சரி ஆயுத போராட்டத்திலும் சரி இதுவரைகாலமும் புனிதர்களாக இருந்து எதை சாதித்தார்கள். உலக அரசியல் என்று பார்த்தால் ஈழத்தமிழர்கள் வேற்றுநாட்டு கொடியைக்கூட ஆர்ப்பாட்டங்களில் எரித்து கேவலப்படுத்தியவர்கள் இல்லை என நினைக்கின்றேன். அந்தை காணொளிய வெளியே விடாமல் தவிர்த்திருக்கலாம். ஈழத்தமிழர் வரலாற்றில் இப்படியான சம்பவங்கள் முன்னர் நடந்ததுண்டா?
  4. ஆகா இவருக்கு சுகர் வருத்தம் ....சுகர் வருத்தம்.....சுகர் வருத்தம் எனக்கு இண்டையான் பொழுது ஆகா ஓகோ 🤣🤣
  5. கள்ள பெண்ணே... என் கண்ணை கேட்கும் கண்ணே... என் கற்பை திருடும் முன்னே... நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்... மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்... என் நெஞ்சை கொத்தி தின்றாய்... எனக்கு உன்னை நினைவில்லையே... பூங்காவில் மழை வந்ததும்... புதர் ஒன்று குடை ஆனதும்... மழை வந்து நனைக்காமலே... மடி மட்டும் நனைந்தாய்.... மறந்தது என்ன கதை?
  6. தவறுகள் அதிகமாகும் போது இயற்கை உடனடியாக தீர்ப்பு எழுதி விடும்..
  7. அப்படியில்லை....😎 ரிக்கற் பயங்கர விலையிலும் அடிக்கடி போய்......🤣 பாங்க் சிஷ்ரம் வேறை எண்டு நினைக்கிறன்...😂
  8. எப்படியிருந்தாலும் இந்தியாவின் கால் பதிப்புள்ள பிரதேசங்களில் தான் வாழப்போகின்றார்கள் கரணம் தப்பினால் மரணம் என்பது அவர்களுக்கு உறுதிப்படுத்திய பின்னரே வெளியே வர விட்டுருப்பார்கள். இனி வரும் காலங்கள் தான் பதில் சொல்லும்.
  9. மற்றவனின் வாழ்க்கை உதாரணங்களை காரணம் காட்டி எமது அவலங்களை சமப்படுத்துவது சரியல்ல என நினைக்கின்றேன். எமது நிலம் போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள். ஆனால் சிங்கள பிரதேசங்கள் அப்படியல்ல. போர் தூசிகள் கூட அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாதவர்கள். அதே போல் பக்கிங்ஹாம் உதாரணத்தை இங்கேயும் கொண்டு வந்து புகுத்தினீர்கள் பாருங்கள்..பிரமாதம்.....மிக மிக பிரமாதம். இனிவரும் காலங்களில் பாண் இல்லையென்றால் கேக் சாப்பிடுங்கள் என சொல்லும் மனப்பான்மையை இப்போதே கண்கூடாக பார்க்கின்றேன். வர்க்க ஏற்ற தாழ்வுகள் எங்கும் உண்டுதான். இன போர் நடந்த இடத்திலுமா என்பது கொஞ்சம் அடி வயிற்றை நோக வைக்கின்றது.
  10. நீங்கள் சொல்வது சரிதான் விசுகர்! இன அடக்குமுறை பெரும்பாலும் அரசுகளால் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் சாதி அடக்குமுறை ஒவ்வொரு தனிமனிதனாலும் கொடூரமாக முன்னெடுக்கப்படுகின்றது என நான் நினைக்கின்றேன். இன்று கூட இனவாத சிங்களம் தமிழர்களிடம் சாதி அடக்குமுறை இருக்கின்றது என்பதை சொல்கின்றதே... அதனால் தான் எதையுமே சாதிக்காத திராவிடம் தமிழர்களுக்கு தேவையில்லை என.... சாதி ஒழிப்பை சட்டங்கள் மூலமே சாதிக்க முடியும். நான் சொல்வதில் ஏதும் பிழை இருந்தால் சொல்லுங்கள் விசுகர். திருத்திக்கொள்கிறேன்.
  11. தமிழினம் சிங்கள இனம் என்று சொல்கிறார்களா? அல்லது தமிழ்ச்சாதி சிங்களச்சாதி என்று சொல்கிறார்களா?
  12. கந்தஷ்டி காலங்களிலை விளாம்பழமும் முக்கிய இடத்திற்கு வரும்.விளாம்பழம் என்றவுடன் எனக்கு செல்வச்சன்நிதியானும் அடியார்மடமும் ஞாபகத்திற்கு வந்து போனது.
  13. பனைமரத்த வெட்டினால் கோபம் வராது கண்டியளோ! ஏனெண்டால் அது ஒரு கற்பகதரு.தமிழனை மாதிரி வெட்ட வெட்ட தளைக்கும் கொள்கை கொண்டது.ஊரிலை பனங்கொட்டையை எங்கையெண்டாலும் தாட்டு பாருங்கோ தன்னிச்சையாய் வளரும்.தண்ணியும் ஊற்றி வளர்க்க தேவையில்லை. பராமரிக்கவும் தேவையில்லை. மரம் வளர்ந்தா பிறகு அதின்ர பலனை அனுபவிக்க மட்டும் அதுக்கு கிட்ட போனால் போதும். மற்ற மரங்கள் அப்பிடியில்லை. கண்ணும் கருத்துமாய் வளர்க்கணும்.
  14. உங்கள் அறிவிப்பிற்கு மிக்க நன்றி. இனிவரும் காலங்களில் யாழ்களத்தில் உருவாக்கப்படும் ஆக்கபூர்வமான திரிகளுக்குள் எக்காரணம் கொண்டும் உள் நுளையமாட்டேன் என உறுதியளிக்கின்றேன். இங்கனம் குமாரசாமி
  15. திராவிடம் என ஒன்று இருந்தால் ஏன் எப்படி சாதி, சாதி ஒதுக்கீடு வர முடியும்? திராவிடத்தின் மூலமே எல்லோரும் சமம் என்ற கொள்கை கோட்பாடு அல்லவா? அங்கே எப்படி சாதி பிரிவினைகள் வரும்? ஈழத்தமிழர்கள் சிங்கள மக்களை விட விசேட சலுகைகள் கேட்கின்றனரா? இதென்ன கோதாரியாய் கிடக்கு? அப்படி என்ன விசேட சலுகை கேட்டார்கள் என இங்கே சொல்லமுடியுமா?
  16. முருகன்,ஜெயக்குமார்,பயஸ் நாளை இலங்கை பயணமாகின்றார்களாம்.
  17. உண்மை. இருந்தாலும் ஒரு கேள்வி. இந்த பூகோளத்தை தவிர்த்து அனைத்தையும் மனிதனே உருவாக்கினான். நேரகாலங்களை உருவாக்கியது முதல் ஒவ்வொன்றுக்கும் பெயர் சூட்டியது வரைக்கும் மனிதனின் செயல்கள் தான்.அப்படியிருப்பினும் மனிதனை மீறிய சக்தி ஒன்று இருக்கலாம் என நம்புகின்றீர்களா அல்லது அது பற்றி ஏதாவது ஊகிக்கின்றீர்களா? இடையூறு செய்தால் மன்னிக்கவும்.
  18. சுவியரைப்போல் உங்களுக்கும் நல்ல எழுத்துக்கொடை நன்றாகவே இருக்கின்றது. 💪🏽 புகுந்து விளையாடுறியள். தொடர வாழ்த்துகள். 👍🏼
  19. சாதி வேறு இனம் வேறு இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டுகின்றேன் 👈🏽 🙏🏼 குமாரசாமி ஆகிய நான் தமிழன் பொன்சேகா என்பவர் சிங்களவன் இது இனம் அவர் சிகையலங்காரம் செய்பவர் ஆகையால் அவர் அந்த சாதி என அழைக்கப்படுகின்றார். இவர் மேளம் அடிப்பவர் அதனால் அவர் இந்த சாதி என அழக்கப்படுகின்றார்.ஆனால் இருவரும் தமிழினத்திற்குள் அடங்குவர். கறுப்பர் வெள்ளையர் இவை இனத்தவர்கள். சாதியினர் அல்ல. தமிழினத்துக்குள் சாதி பிரிவுகள் இருக்கின்றது. இப்போது புரிகின்றதா? அல்லது மேலதிக விளக்கங்கள் தேவையா? வெட்கப்படாமல் கேளுங்கள். பூரண விளக்கம் தர காத்திருக்கின்றேன். 😎
  20. இனப்பிரச்சனையையும் சாதிப்பிரச்சனையையும் ஒன்றாக்கி சாம்பாராக்கினால் ஒன்றோடு ஒன்று ஒட்டாத கருத்துக்களை எழுதி ஆட்டுக்குள் மாட்டை ஓட்டுவது போல் இருக்கும். 😎
  21. அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே. என்பது திராவிட கொள்கைகளில் ஒன்று. அப்படியிருக்க சாதி அடையாள அரசியல் எதற்கு என்றுதான் கேட்கின்றேன். சாதி கதைத்தால் தண்டனை என தடா சட்டத்தினை கொண்டுவரலாமே? 😂
  22. ஈழத்தமிழர்கள் எது நடந்தாலும் இப்போதும் தமிழ்நாட்டு உறவுகளை தொப்புள்கொடி உறவுகள் என்றுதானே சொந்தம் கொண்டாடுகின்றார்கள். தீர்ப்பு வழங்கவில்லை. மாறாக நாங்கள் தமிழர் என்றுதானே சொல்கிறோம். தற்காலத்திற்கு அனுமான் சிலை,திருப்பதி சிலை சரியாக இருக்குமா? எம்மால் இந்தியாவை எதிர்த்து எதுவும் செய்யமுடியாதுதான். ஆனால் எமது கருத்துக்களை சொல்ல முடியும். சொல்ல வேண்டும். சொல்லவேண்டிய கட்டாயம். கந்தையர் உது பொது அறிவுக்கை வராது. வேணுமெண்டால் யூனிவசிற்றி அறிவுக்கை வரலாம் 😛
  23. நீங்கள் சொல்வது சரிதான். இதை சீமான் சம்பந்தப்பட்ட செய்திகளிலும் கடைப்பிடித்திருக்கலாமே? ஆமைக்கறியை வைச்சு ஒரு புடி புடிக்கேல்லை? 🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.