Everything posted by குமாரசாமி
-
ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!
நல்ல விடயம்.👍 இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளை தடை செய்வதற்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும்.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இந்தியாவிற்கு அல்ல....சீனாவிற்கு என நினைக்கின்றேன். இந்தியாவினது வல்லமையின் அழகு உலகிற்கே தெரிந்த விடயம்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தொழில் நுட்பங்கள் அனைத்தும் மேற்குலகிற்குரியது. அவர்களால் எதையும் செய்ய முடியும். எனவே மேற்குலகிற்கு எதிராக எதையும் கணணி,கைத்தொலைபேசி மூலம் எழுதி விடாதீர்கள். நித்திரை பாயோடு தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள். 😂
-
` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்
உடல் தானம் என்பது 60 வயதிற்கு மேல் என நினைக்கின்றேன். சட்டபூர்வமாக மருத்துவ ஆராய்ச்சிக்காக உடல் தானம் செய்தவர் அமெரிக்க தூக்குத்தண்டனை கைதி ஒருவர் என வாசித்த ஞாபகம்.
-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
வெனிசுவெலாகாரனை தூக்கின மாதிரி, ஈரான்காரனுக்கு இருந்த இடத்திலேயே "டொட்" வைச்சமாதிரி ....... நம்ம ரஷ்யன்காரனுக்கும் ஏதாவது சம்பவங்கள் செய்ய சாத்தியம் உள்ளதா சார்? 🤭
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
நீங்கள் மேற்கூறிய அனைத்தும் எல்லா இனங்களிலும்,நாடுகளிலும் இருக்கின்றது.நீங்கள் கூறியதை வைத்துக்கொண்டு தான் இன்றைய உலகில் போர்களும், எல்லைச்சண்டைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.அதில் வெற்றி பெறுபவன் தான் வீரனாகவும் பலசாலியாகவும் மதிக்கப்படுகின்றான்.😎 மதவெறி, வரட்டு கௌரவம், வெட்டி வீரம், முட்டாள்தனமான பழமைவாதம் இவை இல்லாத சூழல் வேண்டுமாயின் பூமியை விட்டு அண்ட வெளியில் வேறு ஏதாவது கிரகத்தில் தேடிப்பாருங்கள். 😉
-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு நான் வேலை செய்யும் உணவகத்தில் ஈரானியர்களால் நிரம்பி வழிந்தது.கிட்டத்தட்ட 50,60 பேர் வரும். சிலர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டார்கள். எல்லோரும் ஆட்டு இறைச்சி,கோழி,வாத்து இறைச்சியென ஒரு புடி புடித்தார்கள். சாப்பாட்டின் பின்னர் பழங்கள் கலந்த ஐஸ்,தனி ஐஸ் என ஒரே அமர்க்களப்படுத்தி விட்டார்கள். எங்களுக்கு அந்தமாதிரி வருமானம்.😂 இப்பிடி நாளுக்கொரு அயத்துல்லா போனால்........😎
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் சொல்வது போல் வளர்ச்சியடைந்து என்ன பிரயோசனம்? சாதி கொடுமைகளும் சாதி கொலைகளும் குறைந்தபாடில்லை.தமிழ் மக்களுக்குள் பல இனக்குழுக்கள்.சாதிக்கொரு கட்சி. இனக்குழுக்களுக்கென ஏராளமான கட்சிகள்.பிச்சைகாரர்களும் குறைந்தபாடில்லை. உலகில் ஓரளவிற்கு எல்லா இடங்களும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
-
''சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது - எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்'' - எலான் மஸ்க்
சீனாவின் தொழில் நுட்ப வளர்ச்சி மிக வேகமாக இருக்கின்றது. இதை ஆசிய ஆபிரிக்க நாடுகளில் காணலாம். இலங்கையில் நேரடியாகவே காணலாம். மேம்பாலங்கள் உட்பட அதி வேக சாலைகள்,நவீன வீதிகள்.....வானுயர்ந்த கட்டடங்கள், சுற்றுலா தளம் உட்பட.... எல்லாம் சீனா தயாரிப்புகள். ஈழத்து தமிழ் அரசியல்வாதிகள் விழித்துக்கொள்வார்களாக........ எழுத பென்சிலும் கொப்பியும் தரும் நாட்டை நம்பாதீர்கள்.
-
லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
அந்த 50 கிராமத்து லெபனான் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? துல்லிய தாக்குதல் செய்யும் தொழில் நுட்பம் இருந்தும் அப்பாவி மக்கள் அவலப்படுவதை இந்த உலகம் அனுமதிக்க கூடாது.
-
ரோஜா முள்.
அப்புறம் என்ன நடந்தது? மிச்சம் எப்ப வரும்? முள்ளு குத்தின இடம் இப்ப என்ன மாதிரி? பிலா மரத்திலை ஏறி சறுக்குப்பட்டு விழுந்த காரணத்த கண்டு பிடிச்சாச்சு...😎
-
ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு
காத்தான்குடியைலையும் பயங்கர எதிர்ப்பு எண்டு கேள்விப்பட்டன் 😂
-
ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு
மேற்கத்தைய நாடுகள் தங்கள் அரசியலுக்கு பாதமான செய்திகளையும், மக்களுக்கு உண்மை தரும் செய்திகளையும் தடை செய்பவர்கள் என்பதை தெரியாத பாலகனா நீங்கள்?🙂 இதே போல் மாற்றுக்கருத்து நாடுகளிலும் அதே நிலைதான்....எனவே..... எனவே இரண்டு பக்கமும் நாயடி....பேயடி....சணலடி.எல்லா இடமும் பிரேக்கிங் நியூஸ். உண்மை நிலவரம் யாருக்கும் தெரியாது.😎
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
மேற்குலகின் ஈரான் மீதான 40 வருடங்களுக்கு மேலான அரசியல்,பொருளாதார தடைகளின் பின்னர் வந்த முறுகளும் தான் இன்றைய போர் நிலை.... அதே தடைகள் தான் ரஷ்யா மீதும் போட்டது இந்த மேற்குலகு. அது சரி அறப்படித்த மேற்குலகு சமாதானம்,அணுகி போதல் எனும் வரையறைக்குள் வர மாட்டார்களா? 😎 அவர்கள் கற்கால மனிதர்கள் என்றால் மற்றவர்களும் கற்கால நிலைக்கு வர வேண்டுமா?😄
-
ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
இவர்கள் தான் தங்களை உலக நாடுகள் என முத்திரையிட்டால்.......🌟 இவர்களை விட பெரிய எதிர் அணி உருவாகி விட்டதாகவே தெரிகின்றது. அரவணைத்து செல்வதால் ஆதாயத்தை தவிர அழிவுகள் இல்லை.🙌
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.....👍 எல்லாம் சினிமா அரசியலாக போகின்றது. இதை இப்படியே விட்டால் அடுத்தது பிக்பாஸ் அரசியல்தான் தமிழ்நாட்டிற்கு வரும் போல் தெரிகின்றது. சினிமா அரசியலையும் பிக்பாஸ் அரசியலையும் உள் வாங்க பெரும் அரசியல் கட்டமைப்பு தமிழ்நாட்டில் உள்ளது என்பது வேறு விடயம். பொழுது போக்குகள் மக்கள் வாழ்வாதாரத்தையும்,மக்கள் பிரச்சனைகளையும் தீர்ப்பவர்களாக வருவது தமிழ்நாட்டிற்கான அவலத்தில் ஒன்று. தமிழ்நாட்டு பாமர மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 😧
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
ஆருக்கு எங்கை அடிச்சால் பெற்றோல் விலை குறையுமெண்டு எந்த சாத்திரியிட்ட சாத்திரம் கேக்கலாம்? 🤣 பிளீஸ் கெல்ப் மீ.......இனியும் பெற்றோல் விலை கூடுமெண்டால் மாட்டு வண்டில் தான் தஞ்சம் கண்டியளோ. 😂
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
அவர் தன்ரை ஆதங்கத்தை மறைமுகமாக கிலோ கணக்கில கொட்டுறார்.நீங்கள் வேற வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சுற மாதிரி......😂
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இந்த உலகில் அடிமைப்பட்ட,சுதந்திரமில்லாத இனங்கள் எப்படி,யாருடன் சார்ந்து வாழ வேண்டும் என பரிந்துரைக்கின்றீர்கள்.?
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா
கவலைப்படாதீர்கள் ஏராளன் தம்பி! வரும் அடுத்த 20 வருடங்களுக்குள் கச்சதீவு புனித தலத்துடன் கூடிய உல்லாச தீவாக மாறும். ஐரோப்பாவில் இருக்கும் ஹொட்டல்கள் போல் கச்சதீவை சுற்றி ஆடம்பர ஹொட்டல்கள் அமையும். அங்கே பல அமைப்புகள் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்வார்கள். அப்போது மலசல கூடங்களும்,தண்ணீர் வசதியும் தங்கு தடையின்றி இருக்கும்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எங்கும் எதிலும் களை புடுங்க நினைக்கின்றீர்கள். நாளை நிலைமைகள் மாறலாம். மாறும். அல்லது மாற்றப்படும். எனவே குனிந்து, தொடர்ந்து புடுங்க நினைக்காதீர்கள். முதுகெலும்பு தாக்கு பிடிக்காது.🤣 ஏனென்றால் இந்த உலகு நீதி நியாயமற்ற உலகு👈. சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. பலம் எங்கிருக்கின்றதோ அங்கேதான் நீதியும் நியாயங்களும் இருக்கும்.😎
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
நான் அவனைப்போல் இருந்தால் அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என பல கேள்விகள் வரும். உக்ரேன் பிரச்சனைகளை இதற்குள்ளும் திணிக்காத வரைக்கும் சந்தோசம்.🙏 ஐ மீன் ஆக்கிரமிப்பு.😎
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள்தான் தளபதி விஜய் அண்ணாவின் ஆதரவளாராச்சே!? 🤣 இன்னும் நல்ல கருத்துக்கள் வளர்ந்து வரட்டும். 😂
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஒரு அப்பழுக்கற்ற மாமனிதர்களை கொண்ட விடுததை வேட்கை கொண்ட கொண்டவர்களாலும்.... எதிரிகளாலும் போற்றும் விடுதலை இயக்கத்தின் வரலாற்று நிகழ்வுகளையும் சின்னங்களாகவும் வரலாறுகளாவும் பதிவிடும் நீங்கள் இப்படியான கருத்துக்களை இடுவது நியானமானது அல்ல.உங்கள் பல கருத்துக்கள் இனவாதத்தை தூக்குவதாகவே எனக்கு தெரிகின்றது. விடுதலைப்புலிகள் நானறிய என்றுமே இனவாதத்தை முன்னினைப் படுத்தியதில்லை இனவாதம் வேறு. இன வெறி வேறு.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தமிழ்நாட்டின் பிரச்சனைகள் எப்படியெல்லாமோ இருக்க......😎 இது புதிய பிரச்சனையாக இருக்கும் போல் உள்ளது....😂 தமிழ் நாட்டின் பிரச்சனைகள் பெரும் பிரச்சனைகள்.🤣