Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43245
  • Joined

  • Days Won

    441

Everything posted by குமாரசாமி

  1. புலி ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே? எதற்கு அவர்கள் உளவாரம் செய்து மினைக்கட வேண்டும்? அதை விட புலி ஆதரவாளர்களை கண்டறிய ஒவ்வொரு மாவீரர் தினங்கள் போதுமே! இதற்கு ஏன் தூசண பிக்குகளையும் தேவதைகளையும் களத்தில் இறக்க வேண்டும்?
  2. 🤣அப்பு! இஞ்சையும் உப்புடி ஊறவைச்ச ஆலிவ் விக்குது கண்டியளோ....அதுவும் பயங்கர உறைப்போடை......😂 😎வெளிநாட்டிலை இருக்கிற நான் ஆலிவ் சாப்பிட சிலோனுக்கு போக மாட்டன்😄
  3. எங்கடை ஊர் நெல்லிக்காய் ஊறுகாய் போல கிடக்கு..... இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை........😂 என்னத்தை சொல்ல....மாய உலகம்.🤣
  4. அப்பிடி போடு அருவாளை..... இன்று வரைக்கும் விடுதலைப்புலிகள் தமது போராட்ட காலங்களில் கேவலமாக நடந்து கொண்டார்கள் என எந்தவொரு ஊடகங்களும் தெரிவிக்கவில்லை. ஒரு சில தமிழ் வக்கிர இணைய தளங்களை தவிர....
  5. எதையுமே சாப்பிடக்கூடாது எண்டத எப்பிடிமாறி மாறி சொல்லுறாங்க பாருங்க.. 😋
  6. பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர். உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான். போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை! கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்! ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. தர்மம் காப்போம் தேசம் காப்போம்.
  7. ஈழ விடுதலை போராட்டத்தையும், மரணித்த மாவீரர்களையும் யாரும் எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் கொச்சைப்படுத்தக்கூடாது. அது ஈழ தமிழினம் சம்பந்தப்பட்டது. மற்றும் படி உங்கள் தனிப்பட்ட டிங் டொங் விளையாட்டுக்களை உங்களுடனே வைத்துக்கொள்ளங்கள். இது கட்டளை அல்ல வேண்டுதல்.
  8. கேள்வி, எதிர்பார்ப்பை விட இனியொரு சந்தர்ப்பம் வராது என நினைக்கின்றேன். ஏனென்றால் உலக அரசியல் வேறு ஒரு புதிய பரிமாணத்தில் பயணிக்கின்றது. மனித உரிமை அரசியல் இன்றில்லை. இணக்க அரசியலும் இன்றில்லை. மாறாக வியாபர அரசியலும் அதிகார அரசியலுமே கண்முன்னே நிற்கின்றது. மனிதாபிமானம் உலக அரசியலில் இல்லை.
  9. இன்றைய தின ஜேர்மன் செய்திகளில் பெரிய பிரச்சனை வெளிநாட்டுக்காரர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாம். கட்டுப்பாடு இல்லாமல் ஆக்களை உள்ளுக்கு வர விட்டால் இன்னும் வரும்...இனியும் வரும்.
  10. @kandiah Thillaivinayagalingam தங்கள் பதிலுக்கு நன்றி ஐயா 🙏🏼
  11. பொதுவாக மசுக்குட்டி பிரச்சனை எண்டால் ஆரம்பத்திலையே முருங்கை மர அடியிலை காய்ஞ்ச தென்னோலையோ இல்லை பன்னாடையோ போட்டு எரிச்சால் மசுக்குட்டி இல்லாமால் போய் விடும். சரி அது சரி வரேல்லை எண்டால் அந்த ஒரு மரத்தை மட்டும் தறிச்சு விடலாம்.ஆனால் மிச்ச மரம் ?!?!?!!?!?
  12. மடியில் கனமுமில்லை பயமும் இல்லை. இவர்களைப் போல் ஈழ தமிழர்கள் சிங்கள மக்களையும் இனவாத அரசியல்வாதிகளை திட்டவுமில்லை. சாபமிடவுமில்லை. ஈழத்தமிழர்கள் கேட்டது சிங்கள மக்களை போல் சகல உரிமைகளுடனும் வாழ வேண்டும் என்பதே. வேறொன்றுமில்லை.
  13. ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். இது தமிழினத்தின் நடவடிக்கையுமல்ல. தமிழின அரசியல் நடவடிக்கையுமல்ல. பல கேடு கெட்ட நடவடிக்கைகள் நடைபெறும் ஒரு இணைய தளம். அங்கு எது நடந்ததோ அதன் வழியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் மனிதாபிமானமாக..... பதில் நடவடிக்கை எடுத்தவர்கள் யாரென தெரியவில்லை. இருந்தாலும் தலைவர் படத்தை எடு என அந்த கணத்திலும் மன்றாடிய அந்த உறவை பாராட்டுகின்றேன். தமிழினத்தின் உச்சம் அவர்.
  14. உள்ளதை சொல்ல வேணுமெண்டால் ஊரிலையெல்லாம் மருத்துவம் பாத்து முருக்கம் இலையோ இல்லை வேலியிலை படர்ந்த செடி கொடிகளையோ மக்கள் தேடித்தேடி சாப்பிடவில்லை. எல்லாம் அன்றைய வாழ்க்கை நிலையும்,பொருளாதார நிலையும் ஆகுமே தவிர வேறொரு காரணமுமில்லை. 😂 பத்து மரங்கள் வளர்க்க சொல்லுங்கள். 😎
  15. உண்மைதான்... மாணவர்களுக்கு அடிக்கக்கூடாது என்ற சட்டம் உள்ள ஜேர்மனியில் கூட ஆசிரியர் தொழில் கத்தி மேல் நடப்பது போன்றதுதான்..... ஆசிரியர் மாணவரை பார்த்து ஏய் என்று அதட்டினாலே.....ஆசிரியர் கதை கந்தல்.....🤣
  16. சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை சுடச்சுட செய்து விடவேண்டும் விசுகர். இல்லையேல் எம் இனத்திற்கு நடந்த அனுபவங்கள் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எதிரி எப்படி முன்னேறினான் என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. அந்த பெண்ணிற்கு நடந்த சிறு தாக்குதல் சம்பந்தமாக பெரும்பாலான ஊடகங்களில் இணையத்தளங்களில் சரியனவே 99 வீதமானோர் கருத்திட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் தமிழினத்திற்கு பாதிப்புகள் வரப்போவதில்லை என்பது என் கருத்து. இன்னொரு சில்லறை தலையெடுக்காமல் இருக்க சில்லறைத்தனங்களும் தேவை.
  17. ஈழத்து போர்க்காலங்களில் முருங்கை மர பயன்கள் இன்றியமையாதது. இந்த மரத்தின் சிறப்பம்சம் எந்த மண்ணில் நட்டாலும் செல்வச்செழிப்பாக வளரும். கொத்துக்கொத்தாக பலன்கள் தரும். அவர்கள் விவேகமாகத்தான் இருக்கின்றார்கள் ✔️ ஆனால் நம்மவர்கள்.....? இன்னும் முருங்கை இலை/காய் என்றால் நக்கல் நளினம் 😎
  18. வணக்கம் ஐயா! நான் அதிக தூரம் போக விரும்பவில்லை. என் இனத்திற்குள்ளேயே நிற்கின்றேன். தமிழைனம் யாம் என்ன பாவம் செய்தோம்? யாரை வருத்தி, நாட்டை, ஊரை, வீட்டை, வாழ வைக்கின்றோம்? தன் கையே தனக்கு உதவி என சுய முயற்சியில் தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பெயரளவில் தமிழர்கள் சாதுவானவர்கள் என்ற நற்பெயரும் உலகளவில் உண்டு. இருந்தாலும் ஈழத்தமிழர் அவலங்கள் சொல்லி மாளாது. இந்த அவலங்களுக்கு விதைத்த விதை சரியில்லையா? அல்லது நியூட்டனின் விதி கிட்டும் வரை காத்திருக்க வேண்டுமா?
  19. கோசான் ஜனரஞ்சகம் என்றால் என்னென்று தெரிந்தவர் என நினைக்கின்றேன். ஒரு விடயத்தில் எல்லா விடயங்களும் இருக்கவேண்டும் என நினைக்கின்றார். ஒரு மனிதனுக்குரிய சகல அம்சங்களும் தான் இணைக்கும் திரியிலும் இருக்கவேண்டும் என நினைக்கின்றார் போலும்...அதுவும் சரிதான்....🤣 சிரிக்காமல் வந்து சிரிக்காமல் கருத்தெழுதி தண்டனை மாதிரி கருத்து எழுதி சுவாரசிய எழுதக்கூடாது என்று நினைக்கிறார்...... இப்பவெல்லாம் செத்தவீட்டிலையே சிரிக்காமல் இருக்காமல் இருக்கிறார்கள் இல்லை😂
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.