குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  28,124
 • Joined

 • Days Won

  150

Everything posted by குமாரசாமி

 1. தமிழ் மொழியும்,கலையும்,கலாச்சாரமும் வளர சைவசமயம் எனும் மதமும் அவசியம். பகிர்வுக்கு நன்றி சுவியர்.
 2. அது சரி......உந்த ரம்பின்ரை ஆட்சிக்கு கீழை எங்கடை தமிழ்ச்சனம் அமெரிக்காவிலை என்னெண்டுதான் குடியும் குடித்தனமுமாய் சீவியத்தை நடத்தினம் எண்டு எனக்கு விளங்கேல்லை....நானெண்டால் மதில் பாய்ஞ்சு மெக்ஸிக்கோவுக்கு ஓடியிருப்பன்.
 3. கொட்டியா எண்டு சத்தம் போட்டாலே வெளிக்கிட்டு ஓடின கூட்டம் இப்ப????? சம்பந்தன்,சுமந்திரன்,மாவை எண்டு உதுகள் எல்லாம் ஒழுங்காய் இருந்தால் பிக்கு ஏன் உந்த வசனத்தை பயமில்லாமல் சொல்லப்போகுது?
 4. இரண்டாயிரம் அடி ஆழத்தில் இருந்து நாட்டின் வளத்தை சுரண்ட (ஹைட்ரோ கார்பன்)ஆயுதங்கள் இருக்கும் அந்த நாட்டில்... 70 அடி ஆழத்தில் விழுந்த பச்சை பாலகனை மீட்க எதும் இல்லை அந்த நாட்டில் ???????? ஏழைமக்களை புறந்தள்ளிவிட்டு கனவிலையும் வல்லரசு நினைப்பு. பாலகன் சுகமாக காப்பாற்றப்படவேண்டும் என இறைவனை வேண்டுகின்றேன்.
 5. மெல்லமாய் கதையுங்கோ புங்கையர்! சைவ/இந்து சமயத்துக்கு யாழ்களத்திலை தடை வந்தாலும் வரும்.
 6. வாதவூரனுக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
 7. மூடின கதவுக்கை நடந்த சமாச்சாரங்களை என்னெண்டு வெளியிலை சொல்லுறதெண்டுட்டு.....சொல்லாமல் இருக்கினம் போலை....
 8. அதில்லை.....இந்தா புடி வெட்டுறன் புடுங்கிறன் எண்டு ஒருத்தர் வந்தார்......அவராலையும் எலாமல் கிடக்கு....வாற வரியம் தானாம் எல்லாம் சரிவரும் எண்டு ஒரு பிரிட்டிஷ் அரசியல் ஆய்வாளர் சொல்லுறாராம்.. அது சரி நீங்கள் எதுக்கு சப்போர்ட்? பிரியுறதுக்கொ இல்லை ஒண்டாய் இருந்து புடுங்குப்படுறதுக்கோ?
 9. இஞ்சை கேட்டியளே மருதங்கேணியர்! நீங்கள் வந்த நேரம் தொடக்கம் மூச்சு விடாமல் வெட்டி விளாசுறியள்.கொஞ்ச நேரம் உதிலை இருங்கோவன். அடுப்பு மூட்டித்தான் கிடக்கு.தேத்தண்ணி ஒண்டு ஊத்தட்டே? இனம்,மதம்,சாதி,நிறம்,உயரம்,கட்டை,ஏழையின் வயிற்றில் பிறத்தல்,பணக்காரரின் வயிற்றில் பிறத்தல்,ஆண்,பெண் எல்லாமே பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டது.மதத்தை வைத்து குத்தி முறிந்து ஒரு பிரயோசனமும் இல்லை.
 10. என்னப்பா பிலாக்காய்ப்பால் மாதிரி இழுபட்டுக்கொண்டே போகுது........
 11. அப்ப நானும் சம்பந்தன்,மாவை,சுமந்தி ஐயாக்கள் மாதிரி நல்லாட்சிக்கு மிண்டு குடுத்து சொத்து சொகங்கள் வெளிநாட்டிலை வீடுவளவு எண்டு ஜாலியாய் இருக்கலாம் எண்டுறியள். குருபெயர்ச்சியிலையும் இருந்தது நான்தான் நம்பேல்லை..
 12. நான் ஜேர்மனிக்கு வந்த புதிதில் என்னுடன் கூட இருந்த கிறிஸ்தவ நண்பர்களுக்கு படிப்பதற்கு ஒரு சபை உதவி செய்தது.எனக்கும் என்னை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டும் கை விரித்து விட்டார்கள்.ஆனால் நத்தார் தினத்திற்கு பாகுபாடில்லாமல் தோடம்பழமும் இனிப்பு வகையளும் தந்தார்கள்.
 13. ஐயனே! சைவ/இந்து மதத்தில் இல்லாத கொள்கைகளை இதர மதத்தில் இருந்து வேறுபடுத்தி காட்டமுடியுமா?
 14. நீங்கள் மீண்டும் மீண்டும் விளக்கம் குறைந்து தவறு தவறாக எழுதுவதால் நல்லதொரு வைத்தியரை நாடுவது நல்லது.
 15. வாழ்த்துக்கள் Justin Trudeau. உலக மக்களால் விரும்பப்படும் அரசியல் தலைவர் ஒபாமாவைப் போல் நீங்களும் ஒருவர்.
 16. ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் ஏன் மதம் மாறிய பின்னர் உதவ வேண்டும்? இது சம்பந்தமாக எனக்கு ஜேர்மனி வந்த புதிதில் ஒரு சில அனுபவங்கள் உண்டு.
 17. பாஞ்சருக்கு ஆரோ புட்டிலை செய்வினை செய்து போட்டாங்கள் எண்டு நினைக்கிறன்.