Everything posted by குமாரசாமி
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பொன் இராமநாதனை குதிரை வண்டிலில் ஏற்றி தமிழினத்தை கழுத்தறுக்கும் நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால் நாமும் நாடு நாடாக அலைய வேண்டியதில்லை. காணாமல் போனோரை தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நன்றி கெட்ட மாந்தருக்காக அவர்கள் மாவீரர் ஆகியிருக்க வேண்டியதுமில்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஷ்யா கிரிமியாவை சட்டவிரோதமாக தன்னுடன் இணைத்து விட்டது என கதறும் மேற்குலக ஊடகங்களும் அதன் விசுவாசிகளும்..... இஸ்ரேல் பலஸ்தீனத்தின் பெரும் பகுதிகளை கையகப்படுத்துவதை கண்டிப்பதுமில்லை.....கண்டுகொள்வதுமில்லை.....கருத்து எழுதுவதுமில்லை. எவன் உச்சத்தில் இருக்கின்றானோ அவனுக்கு செம்பு பித்தளை பாத்திரங்கள் தூக்க பழகிவிட்டோம். ஈழ விடுதலைப்போராட்டத்தையும் தவறு என விமர்ச்சிப்பதும் இங்கு நடக்கும்......நம்புங்கள் இதுவும் நாளை நடந்தேறும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒரு மண்ணுக்கான போராட்டத்தை இங்கே மதப்போராட்டமாக்கி வைத்திருக்கின்றார்கள். காலில் செருப்பு கூட இல்லாமல் ஐரோப்பிய மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்ட யூதர்களை பாலஸ்தீனர்கள் அரவணைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் பாலஸ்தீனர்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள்.. வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கும்.....
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மை பொய்களுக்கப்பால் உளவு அமைப்புகளும் இப்படியான வேலைகளை செய்வதுண்டு. அதன் மூலம் தாங்கள் நினைத்த காரியங்களை சாதிப்பதும் உண்டு. 5000 ஏவுகணைகளை சேமிக்கும் அளவிற்கு ஹமாஸ் முன்னேறி விட்டதா? அல்லது உலக வல்லமை வாய்ந்த இஸ்ரேலிய உளவுப்படை வலிமையற்று விட்டதா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஓகோ.... நீங்கள் அப்படி வருகின்றீர்களோ? அப்படியென்றால் இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் சர்வதேச நாடுகள் ஏதாவது ஒன்று உள்ளதா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பலஸ்தீன மக்கள் சுதந்திரமாக தங்கள் மண்ணில் வாழவேண்டும் என்பது மனித நேயத்தில் ஒன்று. முஸ்லீம் இனம் என்பது இரண்டாம் பட்சம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆர்? ஆரிட்ட வாங்கிக்கட்டப்போயினம்? விளக்கம் தேவை....
-
தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் -15-09-1987
அகிம்சை பலம் ஆயுத பலம் என இரு முனைகள் ஈழத்தமிழினத்திடம் உண்டு என உலகிற்கு பறை சாற்றியவனே வீர வணக்கம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இரண்டரை மணி நேரம் பார்க்கும் சினிமாவிற்கே போரடிக்காமல் இருக்க வில்லன்கள் தேவைப்படும் போது நீண்ட நெடிய நம் வாழ்க்கைக்கு சில வில்லன்களும் பல துரோகிகளும் இருப்பதில் தவறில்லை..! ❣️
-
நானும் கவிதாயினியும்.....💕
சமருக்கு பியரடி வின்ரருக்கு விஸ்கியடி இரண்டுக்கும் இடையிலை....? வைன் அடி...
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆசை என்று உள்ளே ஒன்று மோசம் செய்யுதே அது பூசை என்று வெளியே உன் மேல் பாசம் செய்யுதே நாளும் உன்னை நேசிப்பதாய் போடும் வேஷமே அது நாளுக்கு நாள் நானே எனக்கு தேடும் நாசமே எல்லோருக்கும் நன்மை செய்தோம் என்று தோணுதே செய்த ஒவ்வொன்றிலும் சுயநலமே என்ன, நாணுதே போதும் போதும் போதும் இந்த போலி நாடகம் உந்தன் பாதம் ஒன்றே ஆக வேண்டும் எந்தன் தாரகம் பேரும் புகழும் வேண்டாம் என்று உள்ளம் சொல்லுதே பலர் புகழ, இன்னும் புகழு என்னும் கள்ளம் வெல்லுதே காமகோபம் வென்றோம் என்று வாயும் சொல்லுதே உள்ளே விருப்பும் வெறுப்பும் தலைவிரித்தே ஆடிச்செல்லுதே பசி ருசியை கடந்தோம் என்று மார் தட்டுதே இந்தா புசி-என்றே-திநம் நாக்கும் வயிறும் காலைக் கட்டுதே போதும் போதும் போதும் இந்த போலி நாடகம் எந்தன் மாமுநிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம் சுகத்தை விட மனசு இல்லை உள்ள நிலை இது ஆனால் ஜகத்தினையே ஜயித்ததாக சொல்லி அலையுது நன்று செய்த நல்லவரை அன்றே மறக்குது இது குன்று போன்ற குறை சுமந்தும் கூசாது இருக்குது வந்தவர்க்கே அறிவுரையை வாரி வழங்குது இது தன் வாழ்க்கையில் தத்தளித்தே வாடி வதங்குது போதும் போதும் போதும் இந்த போலி நாடகம் எந்தன் மாமுநிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம் நினைத்தபடி நடப்பதுவே எந்தன் வாடிக்கை அது உன் நினைவே என்று சொல்வது என்ன வேடிக்கை உனக்காகவே வாழ்ந்திடுவேன் என்று பாரிக்கை பின் எனக்காக இது செய்! என்று என்ன கோரிக்கை? துறவி என்று கூறிக் கொண்டும் எதையும் துறக்கலை இந்த பிறவிக்கேனோ ஞானம் ஏதும் இன்னும் பிறக்கலை போதும் போதும் போதும் இந்த போலி நாடகம் எந்தன் மாமுநிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம் ராமாநுசன் தாளடைந்தோர் தாளின் நேசனே அந்த மாமுனிவன் மனவாசன் வில்லி தாசனே! ஓம் நமசிவாய சிவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
-
நானும் கவிதாயினியும்.....💕
செத்துக் கொண்டிருந்தேன்... எங்கோ ஒரு மூலையில் யாரோ என் தாய் மொழியில் காதோரம் பேச விழித்துக் கொண்டேனடி... அது நீயா?
-
நானும் கவிதாயினியும்.....💕
சத்தமாக சொல்ல முடியாமல் நெஞ்சுக்குள் அடங்கியிருக்கும் வலிகளும் ஏக்கங்களும் அதிகம். கூண்டுக்குள் அடைத்து வாயையும் கை கால்களையும் கட்டி விட்டு நீ பாடி திரியும் கிளி என புகழாரம்...... அதுவொரு இழக்காரம்
-
நானும் கவிதாயினியும்.....💕
முன் பனிக்காலம் தொடங்குதடி... கரு நிலத்தில் விளைந்த... கரும் திராட்சையயை... சுவைக்கும் போது... ஏனோ உன் முன் நினைவுகளும்.. வந்து தொலைக்குதடி... விடி வெள்ளி நட்சத்திரம் போல்... கனவுகள் ஒளிர... ஓடி ஒளிந்து விட்டதடி.. கேடு கெட்ட காமம்... ❣️
-
நானும் கவிதாயினியும்.....💕
என்னருகே இருக்கும் நிலாவடி நீ... அமாவாசை இருட்டிலும் மிளிரும் நிலாவடி நீ... கொப்பர் கரிச்சட்டி கலர் என்றாலும்... கொம்மாவை போல் ஒளிரும் தங்கமடி நீ... சிரித்தால் பல்லில் நிலா வெளிச்சம்... தெரியும் பல்லழகியடி நீ... காய்ஞ்ச சருகும் கால் சலங்கை ஒலியும் சேர்த்தே இசைக்கும் பாவையடி நீ... மழைக்கால இருட்டிலும் மரகத மணியாய் இருப்பவளடி நீ.... 💘
-
நானும் கவிதாயினியும்.....💕
என்னை திமிர் பிடித்தவள் என்று சொல்கிறவர்களிடம் திமிராகவே சொல்கிறேன் திமிர் என்பது அவளவள் தனக்கு போடும் கவசம் அந்த கவசம் இல்லையேல் கூட்டணி அவசியம்..... எனக்கான ராச்சியத்தில் நான் மட்டுமே வாழ்கின்றேன்.
-
நானும் கவிதாயினியும்.....💕
உங்களை மதியாதார்... சபையிலிருந்து விலகிவிடுங்கள்... உங்களை ஏளனமாக பார்க்கும் ... நபர்களிடமிருந்து எட்டத்தே நில்லுங்கள்... குறை குற்றம் காண்பவர்களிடம் ... மௌனமாக இருங்கள்... வஞ்சகத்துடன் பழகுபவர்களுடன் ... பணிந்து போகாதீர்கள்... துஷ்டர்கள் வருவார்கள் போவார்கள்... அவர்களின் பாமர வார்த்தைகளால்... கண்ணீரை தாங்கிக்கொண்டு... திரியாதே. ...
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
புட்டின் ரஷ்ய கொள்கையின் அடிப்படைவாதி.எனவே அவர் நாட்டில் அவரை எதிர்த்தவர் உயிரோடு இலார்.
-
நடனங்கள்.
- நானும் கவிதாயினியும்.....💕
நான் பெற்றெடுத்த செல்வம் நான் சீராட்டி வளர்த்த செல்வம் நெற்றியில் கரும் பொட்டு வைத்து அழகு பார்த்த செல்வம் கண்ணூறு படக்கூடாதென சொக்கில் கரும்புள்ளி வைத்து பாதுகாத்த செல்வம் அழகழகாய் பட்டு வண்ண உடைகள் உடுத்தி அழகு பார்த்த செல்வம் இரட்டை பின்னல் பின்னி அழகு பார்த்த செல்வம் பருவ மூர்ப்பின் தாமரை மொட்டுக்கள் போல் மலர்ந்த என் செல்வம் பருவத்தே விழா செய்து விதம் விதமாய் வர்ண ஆடைகள் உடுத்தி நான் அழகு பார்த்த என் செல்வம் நீ..... பொத்தி பொத்தி வளர்த்த உன்னை தெரிவில் நிற்கும் ஒருவன் உன்னை பார்த்து சொல்கிறான் அங்கே பார் என் ஆள் போகிறாள் என.... பெற்ற வயிறு பற்றி எரியுதடி.....- நானும் கவிதாயினியும்.....💕
நான் இளமையில் ஓடி ஓடி உழைத்து பணம் பொருள் தேடி ஓய்ந்த பிறகுதான் தெரிகிறது தவற விட்ட ஆரோக்கியம் தான் உண்மையான செல்வம் என......- நானும் கவிதாயினியும்.....💕
நானும் கவிதாயினியும்.....💖- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வேறு வழிகள் எதுவுமே இல்லையா விசுகர்? எமது நியாயபூர்வமான விடுதலை விடயத்திலும் வழிக்கு கொண்டு வர பல வாக்குறுதிகளை கொடுத்து அழித்தொழித்தார்களே.... வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்பட்டதா? ஏன் ஒட்டு மொத்த இலங்கைக்கு ஆவது ஏதும் நல்லது நடந்ததா?பஞ்சத்தால் ஒரு பிரயளமே நடந்தது அல்லவா? அப்போது கூடபோரை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய நாடுகள் சோறு போடவில்லையே. நெருப்பு சுடும் என தெரிந்த பின்னும்......- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அமெரிக்காவும் இதை செய்திருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.- விமர்சனம் என்பதன் பொருள் என்ன?
ஒரு மனிதன் பொது வெளிக்கு வந்து விட்டால் எந்தவொரு விமர்சனங்களையும் எதிர் கொள்ளும்/தாங்கும் சக்தியை கொண்டிருக்க வேண்டும்.தனியே நல்லதையே கேட்கும் சக்தி எதையும் வளர விடாது. - நானும் கவிதாயினியும்.....💕
Important Information
By using this site, you agree to our Terms of Use.