Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. செல்லையா இராசதுரை அவர்கள் ஒரு வஞ்சிக்கப்பட்ட அரசியல்வாதி. ஆனால் இவர் சேரக்கூடாத இடத்திற்கு தடம் புரண்டது வரலாற்று தவறு. அஞ்சலிகள்.
  2. ஒரு காலத்தில் காலாவதியான மற்றும் வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்ட இறைச்சி வகைகளை சீனாவிற்கும்.வட கொரியாவிற்கும்,ரஷ்யாவிற்கும் ஏற்றி தள்ளிய மேற்குலகை என்னவென்பது? இன்று கூட தங்கள் குப்பைகளை ஆசிய ஆபிரிக்க கடல்களில் கொட்டுவதை கடமையாக கொண்டுள்ளார்கள். கள்ளர் கூட்ட நடவடிக்கைகளுக்கும் ஆதாரம் கேட்கும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நினைக்க பரிதாபமாக இருக்கின்றது.
  3. "Not One Inch" எனும் வார்த்தையை உதிர்த்தவர் ஜேம்ஸ் பாக்கர்.அலுவல் முடிய அந்த வார்த்தையை நிகாரித்தவர் அன்றைய் ஜெனாதிபதி ஜோர்ஜ் புஷ். M. E. Sarotte அவர்கள் எழுதிய புத்தகத்தில் நிறைய விபரங்கள் உள்ளது.
  4. முந்தியெல்லாம் காலாவதி திகதியெல்லாம் பாத்து தான் சாப்பிட்டனீங்களோ எண்டு கேட்டால் என்ன செய்யிறது? சட்டத்துக்கு பயப்பிடுற ஜேர்மனியிலை கூட உள்ள சுத்துமாத்துக்கள் சொல்லி வேலையில்லை. 😄
  5. இன்னும் நாலுவருசம் ஐரோப்பிய யூனியன் பல்லை கடிச்சுக்கொண்டு இருக்கப்போயினம் போல கிடக்கு. ரம்ப் அடுத்த தேர்தலில் ஆட்சியை விட்டு போனால் எல்லாம் சுபம் எண்டு நினைக்கினம் போல...அதுக்கிடையிலை ரம்பர் உக்ரேனை ஒரு வழி பண்ணீட்டுத்தான் போவார் எண்டு நினைக்கிறன்.அடுத்தது புட்டின். புட்டின் போனாலும் இல்லை மண்டையை போட்டாலும் புட்டினை விட பெரிய ரஷ்ய விசுவாசிதான் ஆட்சிக்கு வருவார் என பலர் ஊகம் தெரிவிக்கின்றார்கள். எனக்கு இப்ப உக்ரேனையும் செலென்ஸ்கியையும் நினைக்கத்தான் கண்ணால தண்ணி தண்ணியாய் வருகுது.😋😂🤣😎
  6. இந்த உலகில் பிரச்சனைகளே இல்லை என்றால்.....? நீங்கள் சீனா ரெஸ்ரோரண்டில் வேலை செய்ய வேண்டிய அவசியமும் வந்திருக்காது.நானும் கண்டவன் கிண்டவனுக்கு உழைச்சு குடுக்கவேண்டிய நிலையும் வந்திருக்காது.😁 உலக மேலாதிக்க அரசியல் என்பது ஒரு சீட்டாட்டம் போன்றது.முதலில் அமெரிக்கா ரஷ்யா. இன்று மேற்குலகு பாலூட்டி வளர்த்த கிளி சீனாவும் அந்த சீட்டாட்டத்தில் சேர்ந்து விட்டது. இங்கே மனித உயிர்களுக்கு மதிப்பில்லை. எமது வீட்டில் எப்படி தினசரி கோழி இறைச்சி பன்றி இறைச்சியோ அது போல்தான் அவர்களுக்கு மனித உயிர்களும்.... வெற்றி நிச்சயமில்லை ஆயினும் வீரம் முக்கியம் கந்தையர். அதுதான் இன்றைய உலக அரசியல்.😎 நிற்க... ஐ போனில் எப்படி அடிக்கடி குற்று போடாமல் தமிழில் எழுதுவது பற்றி சொல்லித்தர உவ்விடம் நான் வரவா? வந்தால் 100 செலவாகும் ...ஓகேயா? 🤣
  7. நீங்களோ நானோ புலம் பெயர்ந்த மண்ணில் இருந்துதான் எம் மனதில் உதிப்பவற்றை எழுதுகின்றோம்.அது நேர்மறையாக இருந்தாலும்சரி எதிர்மறையாக இருந்தாலும் சரி. நாம் எந்த மண்ணில் இருக்கின்றோமோ அதே மண்ணில் இருப்பவர்களும் உனக்கு ரஷ்யா பிடிக்கும் என்றால் அங்கே போய் இருந்து கதை என்பது போலவும் அங்கே குடியேறி இருக்கவேண்டியது தானே என்பது போல் எழுதும் போதுதான் நன்றி அரசியலை எதிர்க்க வேண்டி வருகின்றது. இதே நன்றி அரசியலைத்தான் ஒரு சில தமிழர்கள் இலங்கை இனவாத அரசியலுக்கு சார்பாக செய்துகொண்டிருக்கின்றார்கள். அப்படி பார்த்தால் ஜேர்மனி தான் அதிக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாழும் நாடாக இருந்திருக்க வேண்டும் சரி விடுவோம் அதைப்பற்றி அலச வேண்டாம்.😄 போர் வெற்றிக்காக நான் ரஷ்யாவை ஆதரிக்கவில்லை.உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம் எனும் பெயரில் நடக்கும் அரசியலையே நான் எதிர்க்கின்றேன்.
  8. ஒரு தடவை இதே யாழ்களத்தில் தமிழ்நாடு முன்னேறவில்லை என்றேன். அதனால் நான் வாங்கிய ஊமைக்குத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல.😂 பணத்தை வைத்து ஒரு நாடு முன்னேறிவிட்டது என்பவர்களால் யார்தான் என்ன செய்ய முடியும்?😎 இந்த உலகில் தாய் மொழி அழிந்து போகும் நாடாக தமிழ்நாட்டை மட்டுமே பார்க்கின்றேன்.தாய் மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதையும்,தனியே ஆங்கிலத்தை பேசுவதையும் பெருமையாக நினைப்பதும் இந்த தமிழினம் மட்டுமே. இந்தியாவிலும் சில இனங்கள் உண்டு. அதை விட பந்தி பந்தியாக தமிழ் கட்டுரைகள் ஆராய்ச்சி விமர்சனங்கள் எழுதிக்கொண்டு இடையிடையே ஆங்கில சொற்களை உபயோகப்படுத்துவதும் ஒரு வித தற்பெருமையே இன்றி வேறொன்றுமுமில்லை. ஏனென்றால் தமிழில் உள்ள சொற்பதங்களை போல் வேறெந்த மொழியிலும் இல்லை. பல நிதர்சனமான தமிழ் ஆக்கங்களில் ஆங்கில சொற்களை பயன்படுத்துபவர்களுக்கு ஒருவித தமிழ் வரட்சி இருக்கின்றது என்பது கருத்து.
  9. அன்பரே! உக்ரேன் விடயத்தில் இன்றைய தினங்களில் நடந்து கொண்டிருப்பது அமைதி பேச்சுவார்த்தை அல்ல. பேரம் பேசும் பேச்சுவார்த்தை. இதில் அடி வாங்கப்போவது டொனால்ட் ரம்பருக்கு பிடிக்காத நாடுகளாகவும் இருக்கலாம். 😂
  10. இன அழிப்பிற்கு மட்டும் தான் சிங்களவன் ஒற்றுமையானவன்.. இதர கொசுறு வேலைகளுக்கெல்லாம் தமிழனுக்கு நிகரானவன்கள்.😂
  11. ஐரோப்பிய ஒன்றியம் என ஒன்று இல்லாதிருந்தால் உக்ரேன் போர் வந்திருக்காது.அப்படி வந்திருந்தாலும் ஓரிரு மாதங்களில் நிறுத்தப்படிருக்கும் என நான் நினைக்கின்றேன்.
  12. சீனன் வருவதற்கு முன் முதல் கதிரையை பிடிக்க முயற்சி செய்கின்றார்கள் போலும்... ஆனாலும் தமிழனை விட சிங்களத்திற்கு நன்கு தெரியும் கிந்தியன் யாரென..... காரியம் முடிய கடந்து விடுவான்.அவன் எப்படியோ இவனும் அப்படியே...
  13. சிங்கள அரசுகள் இது வரைக்கும் இயற்கை/செயற்கையான அழிவுகளை வைத்து உலக நிதி/நிவாரணங்களை வைத்தே ஓடிக்கொண்டிருந்தது. இன்றைய அழிவுகள் இன்னொரு வரப்பிரசாதம். இதை வைத்து இன்னொரு பத்து வருடத்தை ஓட்டி விடுவார்கள். ஆனால் இடத்திற்கிடம் புத்தர் சிலை காவுதல் மட்டும் நிறுத்தப்பட மாட்டாது. புத்தர் சிலை உள் நாட்டு அரசியலுக்கு... இயற்கை அழிவுகள் வெளிநாட்டு அரசியலுக்கு...
  14. ஔவையார் நன்னெறிகளையும் திருவள்ளுவர் குறள்களையும் மனப்பாடம் செய்து பரீட்சையில் வெற்றி பெறுபவன் ஈழத்தமிழன்.அவை இரண்டும் உலகில் அங்கீகரிக்கப்பட்டவை. ஆனால் பொய்யான மகாவம்சத்தை படித்து பட்டதாரிகளாக வேண்டிய அவசியம் ஈழத்தமிழனுக்கு இல்லை.எனவே இலங்கை தமிழனுக்கு சகல தகுதியும் இருக்கு. அது போல் அவன் மண்ணுக்கும் பெறுமதி இருக்கு. மற்றும் படி குறை சொல்லும் பழக்கம் இந்த உலகில் யாருக்குத்தான் இல்லை?
  15. @ரசோதரன் குடிபெயர்ந்து நாடு தேடியோர் ஒரு நிலத்தை ஆக்கிரமித்து அங்குள்ள பூர்வீக குடிகளை அழித்து அமெரிக்கா எனும் பெயரில் உலகையே வல்லாதிக்கம் செய்யும் நாட்டிலிருந்து எழுதுகின்றீர்கள். 😂 இது பரமசிவன் கழுத்திலிருந்து கருடா சௌக்கியமா என்பது போல் இருக்கின்றது.😎 ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்காமைக்கான வெளிப்படையான உண்மையை பேசாமல் வெறுமனே ஒரு தற்போதைய தீர்வு சாத்தியமானது என்கிறீர்கள். அது என்ன குறைந்த /சாத்தியமான தீர்வு? உக்ரேனின் தற்போதைய போக்கு தனக்கு பாதுகாப்பில்லை என ரஷ்யா வெளிப்படையாக சொல்லியது. அதை யாரும் கேட்கவில்லை. அதற்காக கருங்கடல் கரையோரங்களை தன் பாதுகாப்பிற்காக சுவீகரித்துக்கொண்டுள்ளது.சுவீகரிக்கப்பட்ட பகுதி ரஷ்ய மொழி பேசுபவர்கள் உள்ள நிலப்பரப்பு. அதை விட பல தடவைகள் உக்ரேனிய அரசால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலப்பரப்பு. உங்கள் அன்பு அமெரிக்கா 🤣இந்த உலகம் முழுவதும் எத்தனை ஆயிரம் இராணுவ முகாம்களை நிறுவி வைத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகின்றேன்.ஆனால் ரஷ்யா உலகம் முழுவதும் தன் பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்களை அமைக்கவில்லை.எனவே ரஷ்யா தன் பாதுகாப்பிற்காக தனக்கு வேண்டிய பகுதியை தன் அரணாக்கிக்கொண்டுள்ளது. எனக்கு உக்ரேன் விடயத்தில் மேற்கின் மீதான கருத்து விசுவாசமும் நன்றி விசுவாசமும் என்றுமே வரப்போவதில்லை. காரணம் எல்லாம் சுரண்டல் அரசியல்.அதை விட எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்றால் அது வாழ்க்கை அல்ல.நான் பெரும்பாலான ஜேர்மனியர்கள் பக்கம் நிற்கின்றேன். அவர்கள் உக்ரேன் போரை விரும்பவில்லை.அரசியல்வாதிகள் உக்ரேனுக்காக அதிக நிதி ஒதுக்குவதை விரும்பவில்லை.ஏனைய நாட்டு அரசியலில் மூக்கை நுழைப்பதை விரும்பவில்லை.எனவே நானும் அவர்கள் பக்கம் நிற்கின்றேன்.ஜேர்மனியில் பல கட்சிகள் உக்ரேன் போரை எதிர்க்கின்றார்கள்.அந்த கட்சிகளில் நானும் ஒருவன். உக்ரேன் மீதான ரஷ்ய நடவடிக்கையை ஆதரிப்பவன் ஏன் ரஷ்யாவில் குடியேறவில்லை என்ற கேள்வி வரும் போது...... ஸ்ரீலங்காவில் தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்பவர்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேறிநார்கள்? அங்கிருந்து போராடியிருக்க வேண்டும் என்றொரு கேள்வி வரும் இல்லையா? எனவே கருத்துக்கள்/சரி பிழைகள் சொல்ல யாருக்கும் உரிமை உண்டு.சம்பந்தப்பட்ட மண்ணில் நின்றுதான் களமாடவேண்டும் என்ற சிந்தனை ஒருவித பம்மாத்து மட்டுமே.😎
  16. நிவாரண பொருட்களோட இந்திய விமானங்கள் ஏதாவது பலாலி பக்கம் பறந்த சிலமன் ஏதாவது?
  17. மேற்குலகால் உடைக்கப்பட்டதே சோவியத் ஒன்றியம். அதன் மூலம் லாபம் அடைந்தது மேற்குலகம் மட்டுமே. ஆசைக்கு மேல் ஆசை என்றால் அழிவுதான் என்பதற்கு உக்ரேன் போர் மட்டுமே சாட்சி. உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்🙏 இருப்பினும்.... உக்ரேன் போர் அவசியமா என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்களுக்குள் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தி பார்க்கட்டுமேன்?😎 கிட்லர் யுத்தம் முடிய ரஷ்யாவுடன் பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் பல....அதில் ஜேர்மனிக்கு முக்கிய பங்கு. ஆனால் இன்று ரஷ்யா வேறு சந்தைகளை உருவாக்கி விட்டது. இதில் யாருக்கு நஷ்டம் கஷ்டம் என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள். ஐரோப்பிய........இல்லை இல்லை. ஜேர்மனிக்கான எரிபொருள் சந்தைக்கு உகந்த இடம் ரஷ்யாவா? அமெரிக்காவா? அரபு நாடுகளா? ரஷ்யாவிடமிருந்து நேரடியாக வாங்கினால்த்தானே நிறுத்த முடியும்? 😜
  18. அறிவார்ந்தவர்களும்,அறிஞர்களும், எல்லாம் தெரிந்தவர்களும்,விஞ்ஞானிகளும் ஒழுங்காக இருந்திருந்தால் உலகில் பிரிவினைகளும்,சண்டைகளும்,யுத்தங்களும் வந்திருக்கவே கூடாது அல்லவா? மனிதன் மனிதனை மதித்து நடந்திருந்தால் பாபாக்களும் கடவுளும் தோன்றியிருக்க மாட்டார்கள். அப்படி தோன்றியிருந்தாலும் மனித பாபாக்களையும் கடவுள்களையும் நம்பியிருக்க மாட்டார்கள். உள்ள நரக வேலைகளை செய்வது மனிதம். இதில் குறை சொல்வது இயற்கையை.....😎
  19. உங்களுக்கு குடிக்கிற ஆக்களை கண்ணிலை காட்டக்கூடாது போல கிடக்கு....😂
  20. இன்றும் புட்டின் அவர்கள் உலகை ஆளும் சக்தி கொண்டவர்தான். மேற்குலக ஊடகங்கள் தான் அதை மூடி மறைக்கின்றன.
  21. தாத்தா அவதாரம் எடுத்திருக்கும் சிறித்தம்பிக்கு என் வாழ்த்துகள்.☘ தாயும் சேயும் நலமுடன் வாழ அன்போடு வாழ்த்துகின்றேன். 💐
  22. எதிரியும் போற்றும் தலைவன் மேதகு பிரபாகரனுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துகள்.
  23. இளையராஜா பாடல்களை யாரும் கேட்பதற்கு தடையில்லை என நினைக்கின்றேன். அவர் புகைப்படத்தை வைத்து தேவையில்லாமல் கதை கட்டுரைகள் கூடாத விமர்சனங்கள் எழுதி பிழைப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். அவர் இசையமைத்த பாடல்களை வைத்து பிழைப்பவர்களும் அதிகமாகி விட்டார்கள். அதாவது இலவச பொது ஊடகங்கள் மூலம் இளையராஜாவை விமர்சனம் பண்ணி பிழைப்பவர்கள் அதிகம். இளையராஜாவை பிடிக்கவில்லை என்பவர்கள் ஏன் அவர் இசையமைத்த பாடல்களை உங்கள் நிகழ்ச்சி நிரல்களுக்கு பயன்படுத்துகின்றீர்கள்? ஒலிபரப்புகின்றீர்கள்? குத்தி முறிகின்றீர்கள்? வேறு இசையமைப்பாளர்களின் தாராளமாகவே இருக்கின்றது அல்லவா? பயன்படுத்துங்கள். பாடலுக்கு வரிகள் மட்டும் முக்கியமென்றால்.....கவிஞர்களே மெட்டமைத்து பாடிக்காட்டட்டும் பார்க்கலாம். இளையராஜாவால் அதுவும் முடியும். ஏனைய இசையமைப்பாளர்களால்....?????

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.