Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. அப்ப கிட்டடியிலை வாண வேடிக்கையள் பாக்கலாம் எண்டுறியள்?😂 அங்கேயும் ரஷ்ய ஆயுதங்கள் தான் காத்திருக்கின்றனவாம்?? 😎 எதிர்பார்த்திருந்த புட்டின் - ரம்ப் இரண்டாவது பேச்சுவார்த்தை/சந்திப்பு தடைப்பட்டதிற்கு இதுவும் காரணமாக இருக்குமோ? 😏
  2. நானும் 6அல்லது 7தடவைகள் உள்ளே போய் வந்திருக்கிறேன்.ஆடாமல் அசையாமல் இருக்கும் போது சவப்பெட்டிக்குள் இருந்த பீலிங் வந்து போகும்.மிசின் உள்ளுக்க இழுக்க ஆரம்பித்ததும் கண்ணை இறுக மூடிக்கொள்வேன்.கெட்ட கெட்ட நினைவுகள்,கவலைகள் வந்து போகும்.🤣 சில நேரம் சந்திரமண்டலத்துக்கு போற மாதிரியும் இருக்கும். 😂 அதுக்குள்ள போயும் நித்திரை வந்திருக்கு எண்டால் நீங்கள் லேசுப்பட்ட ஆளில்லை. மகான்.😀 உங்கடை வீட்டுக்கு பக்கத்தாலை ரயில் அடிக்கடி போய் வருமா? 😎
  3. இலங்கையை யார் ஆட்சி செய்தாலும் அநியாயங்களும் அத்துமீறல்களும் தொடரும் போல் இருக்கின்றது. மணற்காட்டிற்கு அருகில் தான் புகழ்பெற்ற குடத்தனை என்ற ஊரும் உள்ளது என்பதை கூற கடமைப்பட்டுளேன். 😂
  4. AI....... பொய்களை உண்மையாக்காத வரைக்கும் அருமை. சில மாதங்களுக்கு முன் ஒரு AI காணொளி பார்த்தேன். அதுவும் அருமையாக இருந்தது. கவிதை இணைப்பிற்கு நன்றி உடையார்.
  5. உங்கள் உதாரணங்களுக்கு வேறு தெரிவுகளே இல்லையா? பக்கிங்காம் அரண்மனையே நாறி நசிந்து சகதிக்குள் அழிந்து கொண்டிருக்கு. (அண்மைய சம்பவங்கள் கேவலத்திலும் கேவலம்) சகோ! இன்னும் றோயல் நினைப்பிலையே திரியிறியள் போல...😂
  6. ஆள்! பச்சைக் கள்ளன் ஐயா பச்சைக் கள்ளன்.....😎 இடமிருந்தால் தோடம்பழம் அப்பிள் போன்றவற்றை முதுகில் தொங்கும் பையில் லாவகமாக தூக்கி அமுக்குவேன் என்பதை எவ்வளவு நாகரீகமாக சொல்கிறார் பாருங்கள்? முதுகு பையிலை தான் கிலோக்கணக்கிலை களவாய் கொண்டு போகலாம் எண்டது வேறை விசயம் கண்டியளோ....😎
  7. நீங்கள் சொல்வது சரியானதே. இருந்தாலும்... திராவிடத்திற்குள் ஒழிந்திருந்து செய்யும் அரசியல் பாரதூரமானது என்பது என் கருத்து.திராவிடத்தை தூக்கியெறிந்து விட்டு சக மனிதனாக அல்லது தமிழனாக அரசியல் செய்வது அந்த மண்ணுக்கு நலன் தரும் என நான் நினைக்கின்றேன். நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால்.....தமிழ்நாட்டில் திராவிடம் எதையுமே சாதிக்கவில்லை. இது கண்கூடாக தெரியும் ஒரு உண்மை.
  8. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கான எதிரியா அல்லது அவர்களுக்கான வளர்ச்சியா என்ற ஒரு கட்டமைப்பு உலகின் அரசியல் அவதானிகளிடம் உண்டு.இன்றைய நிலையில் அமெரிக்கா,ரம்ப்,புட்டின் உட்பட தமது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முக்கிய காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தை பார்க்கிறார்களோ தெரியவில்லை? எது எப்படி இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு வில்லங்கம். அமெரிக்காவிற்கு எரிச்சலை தரும் ஒன்றியம். உக்ரேன் தலையிடியல்ல உலகிற்கே ஒரு சகுனி.இதில் பெரிய பிரித்தானியா ஒன்றியத்திலிருந்து விலகியதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.
  9. இதே போல் ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களுக்கும் பிடியாணை அந்த நெதர்லாந்து நீதி மன்றம் விதித்துள்ளதாம். 😜 அதோட இலங்கை போன்ற நாடுகளில் வெட்ட வெளிச்சமாக நடந்த இன படுகொலையாளர்களை கண்டால் இந்த நெதர்லாந்து சர்வதேச நீதி மன்றம் கோமாவிற்கு போய்விடும்.😎
  10. மக்கள் சீரும் சிறப்புமாக,சொந்தங்களுடன் சந்தோசமாக வாழ உருவாக்கப்பட்டதே பண்டிகைகள் என நினைக்கின்றேன். இது ஒவ்வொரு மதங்களிலும் இனங்களிலும் உண்டு. காரணங்கள் தேட ஆரம்பித்தால் மரணச்சடங்கு நிகழ்வு மட்டுமே எமக்கு சொந்தமாக இருக்கும். மனிதனால் உருவாக்கப்பட்ட வருட பிறப்பையும்,நத்தார் பண்டிகையும் மறு கேள்வி ஏதுமில்லாமல் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் எமக்குள் ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டு அதை அடுத்த சந்ததிக்கு கடத்திக்கொண்டிருக்கின்றோம்.. இது இன்றைய அரசியலின் அனுபவம் மட்டுமே. போராடினால் அழித்து விடுவார்கள். "நூறு கிலோ மீட்டர் தள்ளிப்போன கடல்" என்றொரு கதை இருக்கின்றது. அதை வாசித்தால் ஆன்மாவும் அடங்கி போகும். மற்றும் படி உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி ஐயா 🙏 உண்மையான/பொய்யான பண்டிகைகள் இல்லை என்றால் மனிதர்கள் சொந்த பந்தங்கள் கூடிக்குலாவ சந்தர்ப்பங்கள் ஏது?
  11. மக்களுக்கான ஒரு கட்சி என்பது மக்களுடன் அன்னியோன்யமாக இருக்க வேண்டும். அது அந்த கட்சியிடம் அறவே இல்லை. ஏதோ ஒன்லைன் அமேசன் மூலம் சாமான் சக்கடையள் வாங்குவது போல் கட்சி நடவடிக்கைகளையும் கொண்டு போவதாக தெரிகிறது. இன்றுவரை கட்சி சம்பந்தமான மக்கள் சந்திப்பும் இல்லை. ஊடக சந்திப்புகளும் இல்லை. தனியே திரைக்கவர்ச்சி நாட்டை ஆளக்கூடாது என்பது என் கருத்து.திரையுலகினர்க்கு முன்னோடியான திரைக்கவர்ச்சியால் வந்த எம்ஜிஆரால் கூட பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை என்பது நிஜம்.
  12. சீண்டுவார் ஒழுக்க சீலர் சீண்டியவரை கேள்வி கேட்டால் தண்டனைக்குரியவர். பற்கள்
  13. எனக்கு பிடித்த கதையும், கானமும், நடிப்பும், காட்சியும் நிறைந்த காட்சி...............💔 https://www.youtube.com/watch?v=s4MME4U6ScE துரோகத்தாலும் பழிகளாலும் வீழ்ந்த உண்மைகளும் நியாயங்களும் அடுத்த தலைமுறைக்கும்.கடத்தப்படும்.
  14. உங்களை மீண்டும் காண்பதில் சந்தோசம் 🙂 பல் கற்கோட்டை சுற்றி வர இருக்கின்றது எனும் தைரியம்.
  15. அன்று பாட புத்தகங்களில் மாவோ சேதுங்,லெனின்,கார்ல் மார்க்ஸ்,காந்தி போன்றோரின் கொள்கைகளை படிக்க சொல்லி விட்டு...🤣 இன்று அவர்களின் கொள்கைகளை பின்பற்றுபவர்களை தடை செய்கின்றார்கள். கொலையும் செய்கின்றார்கள். 😂 கிட்டத்தட்ட தீபாவளி கதையள் மாதிரித்தான் கன கதையள் உங்கை நடக்குது 😎
  16. நீங்கள் சொன்னத அந்த அமெரிக்கர் வந்து சொல்லட்டும் பாப்பம்.....? 😎
  17. உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.🙏 சரி பிழைகளுக்கு அப்பால் வன்மம் தொடரக்கூடாது என்பது என் நிலைப்பாடு.செய்த தவறுகளுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு முற்றுப்புள்ளி வைத்த விடயத்திற்கு மீண்டும் அடியும்/தடியும் எடுத்து கொடுக்கும் கருத்துக்கள் இனியும் கூடாது என நினைக்கிறேன்.இன்று தமிழ் நிலப்பரப்புகளில் இனவாத சிங்களத்தால் பல தனியார் நில அபகரிப்புகள் நடைபெறும் வேளையில் மீண்டும் மீண்டும் தவறுகளை மட்டும் புனரமைப்பதன் நோக்கங்களை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்களாக.
  18. சிங்கப்பூர் கனவில இருந்த ஸ்ரீலங்கா இப்ப பிரேசில் கிராமங்கள் மாதிரி எதிலும் எங்கும் போதை நாடாக மாறிக்கொண்டிருக்கு...
  19. உதவியாளர் தன் பிறவிப் பலனை உணர்ந்த தருணம்...😂 கலியாணமாவது கத்தரிக்காயாவது 😃
  20. அந்த கோடிக்கணக்கான உயிரிழப்புகளால் தான் சீனா இன்று கட்டுக்கோப்புடன் இயங்குகின்றது. அதே போல் மேற்குலக நாடுகளிலும் கோடிக்கணக்கான உயிரிழப்புகளால் தான் சட்டங்களும் நியாய, நேர்மைகளும் அமுலுக்கு வந்தன. தண்டனைகள் உண்டு. அதற்கு மக்கள் பயப்பிடுகின்றார்கள். அதனால் சட்டங்களை பின்பற்றுகின்றார்கள். எல்லா உயிரின கூட்டங்களிற்கும் ஒரு தலைமை இருக்கும். அதற்கு கட்டுப்பட்டு நடப்பது இயற்கையின் நியதி.
  21. இவ்வளவு நாளும் ஒழிச்சிருந்த பூனைக்குட்டி வெளியில வந்துட்டுதடோய்.....எப்ப பார்த்தாலும் இடம் வலம் நேர காலமில்லாமல் கட்டிக்கொண்டுபோற ஊத்தைப்பழக்கம்..😂
  22. கரையாத மனமும் உண்டோ 💘 ஆ...கரையாத மனமும் உண்டோ ❤ தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு 💘 கரையாத மனமும் உண்டோ ❤
  23. சரி... இன்று என்ன நடக்கின்றது? சிங்களம் தான் தமிழர் பிரச்சனையில் முரண்டு பிடிக்கின்றது என்றால் சர்வதேசமும் சிங்களம் சார்பாகத்தானே நிற்கின்றது. ஒரு காலத்தில் சமாதானம் பேச வந்த நாடுகள் கூட தமிழர்கள் ஆரம்பகாலங்களில் கேட்ட உரிமைகளையே வாங்கிக்குடுக்க வக்கில்லாமல் நிற்கின்றார்கள். ஆனால் நீங்களோ அரைத்த மாவையே அரைப்பது போல் தமிழருக்குள்ளேயே குற்றங்களை தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்.
  24. நடிகர் யோசப் விஜய் அவர்களின் ரசிகர்மன்றங்களை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரிக்க எல்லா உண்மைகளும் வெளியில வருமாம். இதை எனக்கு தெரிந்த தெலுங்குகாரர்கள் கூறினார்கள்.
  25. நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு சரியாகவே தெரிகின்றது. ஏனெனில் நானும் நீங்கள் கூறும் நடைமுறையைத்தான் நானும் பின்பற்றுகின்றேன். என்னதொரு ஒற்றுமை பார்த்தீர்களா? 😂 எனக்கு இன்னும் சுகர் வருத்தம் வரவில்லை. ஆனால் மூன்று மாதத்திற்கொரு முறை வைத்திய அம்மா என்னை சுகர் போடர்ல நிக்குது என பயமுறுத்துவார். ஆனால் நான் பயப்பிடுவதில்லை.காரணம் உணவு விடயங்களில் நான் விட்டுப்பிடிப்பதுதான். இனிப்பு சாப்பாடுகள் சாப்பிடும் போது ஒரேயடியாக காய்ஞ்ச மாடு கம்பில் விழுந்த மாதிரி சாப்பிடுவதில்லை.உதாரணத்திற்கு சோறு போன்ற மாச்சாப்பாடுகள் சாப்பிட்டால் ஏனைய சீனி எந்த சாப்பாடுகளும் சாப்பிடுவதில்லை.தற்சமயம் அப்படி சாப்பிட்டாலும் நீண்ட நேர நடராசா நடைப்பயணம் நிச்சயம் உண்டு. மேலே ஒரு பெரியவர் எழுதியது போல் ஆசைகள் வரும் போது இரண்டு பேரீச்சம் பழங்களுடன் வெறும் தேனீர் குடிப்பதுண்டு. அந்த நாளில் நான் வேறு எந்த மா உணவுகளையும்.இனிப்பு சாப்பாடுகளையும் அறவே சாப்பிடுவதில்லை. அதை விட.... இரவு வேளைகளில் கவுனி அரிசியில் காய்ச்சிய கஞ்சி குடிப்பதுண்டு. என்ன இருந்தாலும் சுகருக்கான மருந்து மாத்திரைகள் எடுக்கக்கூடாது என்ற பிடிவாதம் என்னிடம் உள்ளது.போராடி பார்க்கலாம் என்றுறிருக்கிறேன்.பிரசருக்கு மாத்திரைகள் எடுப்பவர்களுக்கு சுகர் வரும்/வரலாம் என்ற தத்துவங்களும் பரவலாக உலாவுகின்றது. பார்க்கலாம். உங்கள் எழுத்துக்களுக்கு மிக்க நன்றி.🙏 இதெல்லாம் என் சொந்த அனுபவம் மட்டுமே. ஆதாரங்கள் கேட்டு அலுப்பு குடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.