Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. பாக்க நல்லாய்த்தான் இருக்கு .சுகாதாரமாயும் இருக்கும். ஆனால் மினைக்கெட்ட வேலை 😁
  2. இதென்ன புதுக்கதையாய் கிடக்கு.....? இஞ்சை யாழ்களத்திலை பொம்புளை ராச்சியம் தானே நடக்குது?😁 அப்பிடியெண்டால் எங்கடை செல்லம் நியாயினி பொம்புளை இல்லையே?😜
  3. சிறித்தம்பியோவ்! வெள்ளிக்கிழமை பாத்து இணையவன்ரை பேர்த்டே வந்ததாலை ஒரே சைவ சாப்பாடாய்த்தான் இருக்கும். சனிக்கிழமை நாளைக்கு வந்திருந்தால் ஒரே எரியல் பொரியல் பிரட்டல் வதக்கல் எண்டு எண்டு களை கட்டியிருக்கும். oder nicht oder doch..😎
  4. இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. யோவ் புரட்சியர்! உது ஆகலும் ஓவர் யா...😁
  6. அண்ணா அறிவாலயம் நல்லதொரு நினைவூட்டல். நான் தான் இப்பிடியெண்டு பாத்தால் என்னோடை வந்து சேர்ந்ததுகள் என்னை விட மோசமாய் கிடக்கு.... பள்ளிக்கூடத்தை கட் அடிச்சு தியேட்டர் ,கடைச்சாப்பாடு,வீட்டிலை காசு களவெடுப்பு......இன்னும் இரண்டு விசயங்கள் வெளியிலை வரவேணுமே????????
  7. புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள். புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அழித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள். புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள். புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள். புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள். புத்தியில்லாதவள் பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். நிதானம் இவர்களின் அடையாளம். புத்தியுள்ள பெண் பகைவரை சம்பாதிக்க விரும்ப மாட்டாள். புத்தியில்லாதவளுக்கோ அண்டை வீட்டுக் காரரும் எதிராளிகளே. புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள். புத்தியில்லாத பெண் வேலைக்காரியாகவே வாழ்ந்து முடித்து விடுவாள். புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள். புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை. புத்தியுள்ள பெண் தனக்கானதை எடுத்துக் கொள்கிறாள். புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள். புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை. புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள். புத்தியுள்ள பெண் உருவாக்குகிறாள். புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள். புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள். புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள். புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவார். புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள். புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள். புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான். புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள். சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம். புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே. புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள். புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள். புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள். புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள். புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள். புத்தியில்லாதவள் எல்லாரையும் தன் முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள். புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள். புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள். புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும். புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி. புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக தான் இருப்பாள். புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள். புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள். புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள். புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு. புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் கனப்படுத்துவாள், உயர்வாக எண்ணுவாள். புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள். புத்தியுள்ள பெண் மீதம் எடுக்க சமைப்பாள். புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள். புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள். தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள். புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள். புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை… புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும். புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது…
  8. 👍👍👍👍👍👍👍👍 இந்த கேள்வி பிரபல தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேசத்தை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. ஐநா சபையில் எதிரொலிக்க வேண்டிய கேள்வி. உந்த மாற்றுக்கருத்து மாணிக்க மன்னர்களை நினைக்கத்தான் வயிறு பத்தியெரியுது. உலக அரசியல் தெரியேல்லையாம்.சரி மற்றவனுக்கு உலக அரசியல் தெரியேல்லை எண்டால் நீங்கள் செய்ய வேண்டியது தானே? கண்ணன்மாரே! பத்து வருசமாய் என்ன செய்யிறியள்? சிங்களவனை சாந்தப்படுத்தி வெல்ல வேணும் எண்டு நினைக்கினம் போல.... ஆனால் அதுவும்....????????????? பழைய கதை அப்பன். 😎
  9. போராட்டம் நடந்த போது திட்டினார்கள். முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது சொன்னோம் பலித்து விட்டது என்றார்கள். பத்து வருடங்கள் கழிந்து விட்டது. அவர்கள் இதுவரை எதுவுமே செய்ததில்லை.வெளிநாடுகளில் நலமே வாழ்கின்றார்கள். புலிகளால் தொல்லை ஆபத்து என்றவர்கள் பத்து வருடங்களாகியும் ஊர் திரும்பி வாழ எத்தனிக்கவில்லை. மாறாக இன்று மனித உரிமைபோராட்டம் செய்பவர்களை பார்த்து உலக அரசியல் தெரியாதவர்கள் என ஏளனம் மட்டும் செய்கின்றார்கள். கொடுத்த தொழிலை செவ்வனே செய்கின்றார்கள்.
  10. பகலவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  11. மனிதம் பற்றிய உளவியல் தகவல் -------------------------------------------------------------- (1) ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம். (2) அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம். (3) எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ "மிஸ்" பண்றீங்களாம். (4) குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர். (5) நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம். (6) உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம். (7) சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம். (8) மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம். (9) முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை. (10) இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம். (11) ஒருவர் ஒரு விடயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால் அதை அவர் செய்திருக்கலாம் என்று உளவியல் கூறுகிறது. (12) ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம். (13) ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும். (14) ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விடயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விடயங்களும் காத்திருக்கும். (15) ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். (16) ஒருவர் அடிக்கடி Mobile phone யை பார்த்துக் கொண்டிருப்பது or Mobile சத்தம் *(Notification tones) கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார். என்று அர்த்தம். (17) ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது. (18) ஒருவர் அதிகமாக Negative Thoughts ( முடியாது/கிடைக்காது/இயலாது) கதைப்பவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் Negative Thoughts கதைப்பவராக இருப்பார்.👆👆👆 வாட்ஸ் அப்பிலை இப்பதான் வந்தது.
  12. இவருக்கு எங்கை போனாலும் ஆமை நினைப்புத்தான். 😷 முயல் எல்லாம் நினைப்புக்கு வராது...
  13. தொடருங்கள் விசுகர்! நல்லது கெட்டதெல்லாம் நால்வருக்கும் தெரிய வேண்டும்.
  14. காலங்கள் மாறினாலும் அழியாத நினைவுகள்.. பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிலகம். தமிழீழம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.