Everything posted by குமாரசாமி
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
சரி நேரடியாக விடயத்திற்கு வருவோம். ஐரோப்பிய ஒன்றியம் டொனால்ட் ரம்பை எதிர்க்கின்றது. அமெரிக்காவை அல்ல. இதன் படி ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனை ரம்பிற்காக கைவிட தாயாரில்லை. எவ்விலை கொடுத்தாவது உக்ரேனை தன் வசம் வைத்திருக்கு ஐரோப்பிய ஒன்றியம் போராடும்.அதற்கு பிரிட்டிஸ் ராச்சியமும் மிண்டு கொடுக்கும். இதை ரம்ப் அவர்கள் நன்றே தெரிந்து வைத்திருப்பார். எனவே உக்ரேனுக்கு பின் பலம் உக்ரமாக இருக்கின்றது. ஈழத்தவர்க்கு பின் பலம் புலம்பெயர்ந்ததவர்களை தவிர ஏதுமில்லை.
-
சவூதி அரேபியாவுக்கு ஏவுகணைகளை விற்பனை செய்யும் அமெரிக்கா!
சீனா ஒரு போதும் தன் பட்டுச்சாலையிலிருந்து விலகாது. சீனாவிவிற்கு மேற்கத்தையவர்களின் நரி விளையாட்டுக்களில் நல்ல பரிட்சயம் உண்டு.
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் என பெருமைப்படலாமே தவிர வேறேதும் இல்லை.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
ஈழ தமிழினத்தின் நியாயமான போராட்டத்திற்கு யார்? எந்த நாடு வெளிப்படையாக உதவியது என்பதை கூற முடியுமா? உதாரணத்திற்கு இந்தியா எமது விடுதலைப்போராட்டத்திற்கு நேரடியாக ஆதரவு/அங்கீகாரம் வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? இந்தியாவின் பரிந்துரையின் படியேதான் இந்தியாவும் அமெரிக்காவும் விடுதலைப்புலிகளை தடை செய்தார்கள்? விடுதலைப்புலிகள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செய்த பாவங்கள் என்ன? இந்த கூட்டு அரசியல் உங்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன். நிற்க.... கோமாளி செலென்ஸ்கி வளைந்து நெளிந்து தம் அரசியல் நலனை முன்னெடுப்பதாக கூறுகின்றீர்கள். இப்படி...எப்படியெல்லாம் உங்களால் சிந்திக்க முடிகின்றது? ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்து இராச்சியங்களும் செலென்ஸ்கியின் பின்னால் நின்று உரம் கொடுப்பது உலகறிந்த விடயமல்லவா? அப்படியிருக்கும் போது ஈழப்பிரச்சனையும் உக்ரேன் பிரச்சனையும் ஒரே தராசில் வைப்பது ஒத்தே வராது.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
தந்தை செல்வா காலம் தொடக்கம் ஈழத்தமிழரின் பிரச்சனையை தீர்க்க யாருமே தயாரில்லை என்பது நிரூபண உண்மை. தந்தை செல்வாவும் அமிர்தலிங்கமும் பெரியார்,எம்ஜிஆர்,நேரு என பலரை சந்தித்து உதவி/உரிமை கோரினர். எதுவுமே நடக்கவில்லை. எல்லாமே ஏமாற்ற கதைகளாகவே இருந்திருக்கின்றது. அரசியல் போராட்டங்கள் தோல்வியில் போக ஆயுத போரட்டம் உதித்தது. ஆயுத போராட்டத்தை தொடங்கியவர்களில் விடுதலைப்புலிகள் செவ்வனே அதை செய்தனர். ஆயுத போராட்டத்தில் தோற்றுப்போன அரசியலை தேடியவர்களுக்காக விடுதலைப்புலிகள் அரசியலையும் சேர்த்து செய்தனர்.அதிலும் புலி எதிர்ப்பாளர்க்கு திருப்தியில்லை. குறை சொல்ல ஆயிரம் காரணங்களை சொல்லலாம் அப்படி சொல்பவர்கள் நிறை சொல்ல காரணங்களை தேட காரணங்களை தேடமாட்டார்கள். குற்ற பத்திரிகையாக நீலன்,சந்திரிக்கா,கதிர்காமர்,ராஜீவ் என பல கதைகளை சொல்லிக்கொண்டே போகின்றனர். சரி யுத்தங்கள் முடிந்து இவ்வளவு காலங்கள் போய் விட்டதே ஏதாவது முன்னேற்றமா என கேட்டால் புலிகள் குற்றங்கள் செய்து விட்டார்கள் என மட்டுமே கூறுகின்றார்கள். ஆனால் சிங்களம் ஏன் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க மறுக்கின்றது என்பதை மட்டும் பேச மறுக்கின்றார்கள். புலிகளுக்கான நிதி/தங்கம் சேகரிப்பில் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல மோசடிகள் உண்டு. இதை தலைவர் நேரடியாக நின்று செய்யவில்லை. இதை செய்தவர்கள் அங்கத்தவர்களும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களும். ஊரில் போராளிகள் ஈடுபட்டாலும் போராட்டம் என வந்து விட்டால்......இன்ப துன்பம் பரிவுகள் இருக்காது என நினைக்கின்றேன்.
-
ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்
இனி வரும் காலங்களில் ஈழத்தமிழர்கள் மதத்தையும் பேசு பொருளாக எடுக்க வேண்டும்.
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
பிரித்து வழங்கப்பட வேண்டியது புலம்பெயர் நாடுகளில் நாட்டிற்கான நிதி என சேகரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணங்கள். 👈 அங்கு செய்திகளுக்காக சோடிக்கப்படும் பணங்களோ நகைகளோ அல்ல.👎
-
ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்
வியட்நாமியர்கள் சுய நம்பிக்கை உடையவர்கள். தம் உழைப்பை நம்புபவர்கள்.சுறுசுறுப்பானவர்கள். அநேகமான சுயதேவை பொருட்களை தாங்களே உற்பத்தி செய்பவர்கள். அப்படியிருக்கும் போது பல்லுக்குத்தும் ஊசியை கூட இறக்குமதி செய்யும் சிங்கள ஸ்ரீலங்காவிற்கு அங்கு என்ன வேலை? ஓ....ஒரு வேளை பௌத்த கம்யூனிச கொள்கை வரவேற்கின்றதோ?
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
சீனா இருக்கும் வரைக்கும் பாக்கிஸ்தானும் பயப்பிடாது.சிறிலங்காவும் பயப்பிடாது. ஈரானும் பயப்பிடாது. 😎
-
யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் அமெரிக்கா கைச்சாத்து!
கனிம வளத்தை மட்டுமல்ல..... ஜேர்மனி மில்லியன் செலவில் உக்ரேன் விவசாய நிலங்களை ஒப்பந்த அடிப்படையில் கைவசப்படுத்தியிருந்தது. கனரக வாகனங்கள் விவசாய தொழில்நுட்பங்களையெல்லாம் உக்ரேன் மண்ணில் வாரி இறைத்து முதலீடு செய்திருந்தது. பாழாய்ப்போன புட்டினால் எல்லா திட்டங்களும் நாசமாகி விட்டது.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
எல்லாம் முதலாம் ,இரண்டாம் உலகப்போரினாலை புலம்பெயர்ந்த ஜேர்மனியர்கள். அப்பிடி புலம் பெயர்ந்த சந்ததியிலை வந்தவராலை தான் இப்ப ஜேர்மனிக்கு தலையிடி. 🤣 கடுவன் பூனை தனக்கு பிறந்த பூனைக்குட்டியளையே கடிச்சு கொல்லுமாம். 😂
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
மக்கள் தான் புலிகள் புலிகள் தான் மக்கள் என்ற சம்பவங்கள் இருக்க..... விடுதலைப்புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள் என உரிமை கோர வெளிக்கிடும் போது.... இன்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெறும் வாயை அசை போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அவலும் பஞ்சாமிர்தமும் தானாக வாயில் விழுந்த மாதிரி இருக்கும்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
எப்பிடித்தான் சுத்தி சுத்தி போனாலும் கனடா,அமெரிக்கா,அவுஸ் எல்லாம் பெரிய பிரித்தானியா எண்ட ஒரு தாய் வீட்டு பிள்ளையள் தானே 🤭
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
திரைப்படம் எடுக்க நல்ல கதை கிடைச்சிருக்கு.....🤣
-
இந்தியாவின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காசிநாத் செந்தில் மன்னாருக்கு விஜயம்!
இலங்கை விடயத்தில் கிந்திய பெரிய கட்சி(பாரதீய ஜனதா,காங்கிரஸ்) இரண்டும் ஒரு வண்டிலில் பூட்டிய மாடுகள் தானே 😎
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
மேடை வீராவேச பேச்சுக்களில் இன்னும் 70,80களில் இருந்த மாதிரி அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டிருக்கிறார் நம்ம சுமந்திரன். இவருக்கு பாடம் எடுத்த வாத்தியார் அந்த மாதிரியான ஆள் தானே 😁
-
யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் அமெரிக்கா கைச்சாத்து!
பாவம் ஐரோப்பிய யூனியன் (ஜேர்மனி) 🤣
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
நீங்கள் சொல்வது உண்மைதான். இளையராஜாவிற்கு மேடையில் எப்படி பேச வேண்டும் என தெரியாது.ஆனால் மேடையில்லாத அவர் வாழ்க்கை மிக மிக நாகரீகமானது. தமிழ்நாட்டு திரையுலகை பொறுத்தவரையில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவர்கள் மேடையில் நாகரீகமாக இருந்து விட்டு மேடை பின் நடக்கும் இருட்டு வாழ்க்கையும் அசிங்க வாழ்க்கையும் எவ்வளவு அசிங்கமானது என்பதை என்பதை இந்த ஊர் உலகமும் அறியும் தாங்களும் அறிவீர்கள் என நம்புகின்றேன். எந்த வாழ்க்கை சிறந்தது என நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள். அதை நீதிமன்றங்கள் தான் சட்ட ரீதியாக தீர்மானிக்க வேண்டும். ஏனைய இசை அமைப்பாளர்களுக்கு சட்டரீதியாக இசையுரிமை பணம் போகின்றது. இளையராஜா முன்னரெல்லாம் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மற்றவர்கள் தனது பாடல்களுக்கு உரிமம் கோரும் போது இளையராஜா ஏன் வாய் மூடிக்கொண்டிருக்க வேண்டும்? அதை அவர் மேடைகளிலேயே நேரடியாக சொல்லியுள்ளார். அதற்கான காரணங்களையும் மிக தெளிவாக சொல்லியுள்ளார். ஏனைய இசையமைப்பாளர்கள் அப்படி பொது வெளியில் சொல்லியதாக தெரியவில்லை.
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
இளையராஜாவை வறுத்தெடுக்கும் ரகுமான் ரசிகர்கள் இனி என்ன சொல்லப்போகின்றார்கள்? https://youtu.be/TeOBakLZI_k?si=bXPieV8cBqHE1YI_
-
நீங்கள் உப்பில் பார்ப்பது பெயரையா அல்லது ருசியையா?
நீங்கள் யாழ்ப்பாணத்தானை பனங்கொட்டை தமிழன் எண்டு நக்கலடிக்கலாம்.ஆனால் நாங்கள் எங்கட உப்பை ஆனையிறவு உப்பெண்டு சொல்லக்கூடாதாக்கும் 🧐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜெற்றிய ஜட்டி எண்டு மாறிச்சொல்லிப்போட்டன் தங்கச்சி.....அதுக்கு வரிசை கட்டி மாறி மாறி அடிக்கிறானுவள் தங்கச்சி......😂
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
வாக்கு லஞ்சத்திற்கும், கொள்கையற்ற வாக்களிப்புகளுக்கும் உங்கள் ஆதரவு உண்டு என ஒத்துக்கொள்வதாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஒருவர் சீமான் கட்சியை எதிர்க்கின்றார் என்றால் அவர் மாற்றுக்கட்சியை ஆதரிக்கின்றார் என்பதே பொருள் படும். சீமான் கட்சி ஆரம்பித்த காலங்களிலிருந்து வளர்ச்சியே தவிர வீழ்ச்சி இல்லை என்பதை யாவரும் அறிவர்.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
மன்னிக்கவும். இதை நான் கேவலமாக நினைக்கவில்லை.நடத்தை கெட்டதாகவும் நினைக்கவில்லை.இப்படியான சம்பவங்கள் எல்லா நாடுகளிலும் பார்க்கக்கூடியதகவே உள்ளது.
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
உங்கள் நீண்ட கருத்திற்கு மிக்க நன்றி. சாதிகள் இல்லை என்பது என் வாதமாக நீண்டகாலமாகவே இருந்துள்ளது. இதை யாழ்களத்திலும் பலமுறை எழுதியுளேன்.வலியுறுத்தியுள்ளேன். எனது கேள்வி? இலங்கையில் சாதி ஒழிப்பு ஏன் வெள்ளாளரை நோக்கி மட்டும் இருக்கின்றது? பிராமணர்களை குறி வைத்து எதுவும் பிரச்சனையாக்குவதில்லை? எனது கருத்து:- ஒரு இனத்தை ஒருங்கிணைக்க இன எழுச்சி அவசியம். அது மொழி சார்ந்து மட்டுமே இருக்க முடியும். இங்கே சாதி சமயங்கள் எடுபடாது. மொழி அது தன் வலியது.வலுமை மிக்கது.அங்கே சாதி அது சார்ந்த கட்சிகளுக்கு இடமேயில்லை. இந்த விடயத்தில் இலங்கை தமிழர்கள் இன்று வரைக்கும் புத்திசாலிகள். அப்படி சாதி சார்பு கட்சிகளை உருவாக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். சாதிகள் சம்பந்தமாக இயக்கங்கள் உருவாகியதென அறிந்தேன். அது உண்மையன நான் நம்பவில்லை. தமிழ் பேசி தமிழராய் ஒன்றிணைவோம்.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
மூலக்கருத்து முதலே சொல்லப்பட்டு விட்டது. லஞ்சங்களையும் வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதையும் நிறுத்துங்கள். அதன் பின் நிதர்சன அரசியலைப்பற்றி பேசலாம்.