Everything posted by குமாரசாமி
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
ஆசிரியர்கள் மாணவிகள் மீது இப்படியான பாலியல் துஷ்பிரயோக நடத்தைகள் காலம் காலமாகவே நடந்து வருகின்றது. இதை இத்துடன் முடிவுக்கு கொண்டுவர அரசு அதற்குரிய கடுமையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். கொஞ்சம் அமெரிக்காவை எட்டிப்பாருங்கள். இப்படியான சேட்டைகளுக்கு.... தண்டனைக்குரியவர் வாழ்நாளில் வெளியுலக வாழ்க்கையை மறந்துவிட வேண்டியதுதான்.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
புதிய பாப்பரசரால் உலகிற்கு ஏதும் மாற்றங்கள் வருமா என தெரியவில்லை?ஆக குறைந்த பட்சம் உலகம் சமாதானமாக சுற்றட்டும் என வேண்டுகின்றேன்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உலகமே பார்த்து சிரிக்குது 😀
-
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
எப்படியான பிரச்சனைகள் வராது?
-
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
ஜேர்மனியில் நான் பார்த்த அளவில் சொத்துக்கள் வைத்திருப்பவர்களை விட சொத்துக்கள் இல்லாத நடுத்தர மக்கள் மிக சந்தோசமாக வாழ்கின்றார்கள்.
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
பாணத்தாருக்கு எப்பவும் ரோஷம் மானம் கோபத்துக்கு ஒரு குறைச்சலும் இல்லை. இந்த முறை சனாதிபதி தேர்தலுக்கு அனுர புதிசாய் கிடக்கு. எதுக்கும் நூல் விட்டுப் பாப்பம் எண்டு பார்த்திருக்கினம்.அவ்வளவுதான்....🙂
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அப்பவும் நான் சொன்னனாலெல்லே....சீனா இருக்கும் மட்டும் பாக்கிஸ்தான் ஸ்ரீலங்கா ஈரான் எல்லாம் ஒரு குஞ்சு குருமனுக்கும் பயப்பிடாது எண்டு..🤣
-
தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிக்கு நிதி உதவி நிறுத்தம் -டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு
நல்ல விடயம். உலக அழிவிற்கான ஆராய்ச்சிகளை ஊக்கிவிக்கக்கூடாது.
-
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
தொங்குபொறியில் இருந்தவர் இரண்டாவது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டார்.இப்படி நடப்பது ஜேர்மனிய பாராளுமன்ற வரலாற்றில் இதுதான் முதல் தடவை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜேர்மனிய எல்லைகளின் பாதுகாப்பு பரிசோதனைகளை தீவிரமாக்கியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த அகதிகள் வருகையை நிறுத்துகின்றனர். ஜேர்மனியில் வசிக்கும் உள்நாட்டு/வெளிநாட்டு தீவிரவாதிகளை ஒரு கைபார்க்கப்போகின்றார்கள்.குறிப்பாக முஸ்லீம் தீவிரவாதிகள் மீது என அழுத்தி சொல்லப்படுகின்றது. Afd எனும் கட்சி எதை காரணம் காட்டி உச்சத்திற்கு முன்னேறினார்களோ அதே காரணங்களை சட்டங்கள் மூலம் தீர்ப்பார்கள் போல் இருக்கின்றது. அத்துடன் Afd கட்சியை இனவாத, தீவிர கட்சியாக காரணம் காட்டி தடைசெய்யவும் போகின்றார்கள்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
என்ரை ஆசை என்னெண்டால் லண்டனிலை குவிஞ்சு போய் கிடக்கிற கிந்தியளும் பாக்கியளும் ஒண்டுக்கு ஒண்டு குத்துப்படவேணுமெண்டு.....நடக்குமா நடக்காதா சார்? 😁
-
விடுதலை புலிகளின் மகளீர் படையணி தளபதி குமுதினி உயிரிழப்பு!
கண்ணீர் அஞ்சலிகள்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ரஷ்யா எனும் உலக வல்லரசு இருக்கும் வரை இந்தியாவை யாரும் நகத்தால் கீறிப்பார்க்க கூட முடியாது. இதில் உங்கள் செங்குத்து கனவுகளை புராண காலத்துடன் வைத்துக்கொள்ளுங்கள். 😂
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியா முழுக்க பாக்கிஸ்தான் செல்வாக்கு இருக்கு எண்டதை மோடி அரசு அறியாமல் இருக்குமா என்ன? 😎
-
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
உவர் நாய் பூனைகளுக்கெண்டு விக்கிற நெத்தலி கருவாட்டை கத்தரிக்காயோட சேர்த்து சமைச்ச கதைய சொல்ல வாறார்....... உந்த கதைய வளர விடக்கூடாது.
-
பிரியாணி சுவையில்லை; யாழ் மனைவியிடம் விவாகரத்து கோரும் ஐரோப்பிய வாழ் கணவர்
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் 2- 3 வயது வித்தியாசம் இருந்தால் இப்படியான பிரியாணி பிரச்சனைகள் வராது என நினக்கிறன்.
-
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
சீனாக்காரன் இருக்கும் வரைக்கும் பாக்கிஸ்தான் காரனும் பயப்பிடமாட்டான். சிங்களவனும் பயப்பிட மாட்டான். ஏன் ஜேர்மன்காரனும் பயப்பிட மாட்டான்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
கொலைகள் தான் ஈழத்தமிழினத்தின் விதிகளை மாற்றியது என்றால் ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்கும் அனைத்தையும் மீள அலச வேண்டும் அல்லவா?
-
பிரியாணி சுவையில்லை; யாழ் மனைவியிடம் விவாகரத்து கோரும் ஐரோப்பிய வாழ் கணவர்
ஆடத்தெரியாதவன் மேடை கோணலும் சொத்தியும் எண்டானாம். 😂
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
சரி நேரடியாக விடயத்திற்கு வருவோம். ஐரோப்பிய ஒன்றியம் டொனால்ட் ரம்பை எதிர்க்கின்றது. அமெரிக்காவை அல்ல. இதன் படி ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனை ரம்பிற்காக கைவிட தாயாரில்லை. எவ்விலை கொடுத்தாவது உக்ரேனை தன் வசம் வைத்திருக்கு ஐரோப்பிய ஒன்றியம் போராடும்.அதற்கு பிரிட்டிஸ் ராச்சியமும் மிண்டு கொடுக்கும். இதை ரம்ப் அவர்கள் நன்றே தெரிந்து வைத்திருப்பார். எனவே உக்ரேனுக்கு பின் பலம் உக்ரமாக இருக்கின்றது. ஈழத்தவர்க்கு பின் பலம் புலம்பெயர்ந்ததவர்களை தவிர ஏதுமில்லை.
-
சவூதி அரேபியாவுக்கு ஏவுகணைகளை விற்பனை செய்யும் அமெரிக்கா!
சீனா ஒரு போதும் தன் பட்டுச்சாலையிலிருந்து விலகாது. சீனாவிவிற்கு மேற்கத்தையவர்களின் நரி விளையாட்டுக்களில் நல்ல பரிட்சயம் உண்டு.
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் என பெருமைப்படலாமே தவிர வேறேதும் இல்லை.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
ஈழ தமிழினத்தின் நியாயமான போராட்டத்திற்கு யார்? எந்த நாடு வெளிப்படையாக உதவியது என்பதை கூற முடியுமா? உதாரணத்திற்கு இந்தியா எமது விடுதலைப்போராட்டத்திற்கு நேரடியாக ஆதரவு/அங்கீகாரம் வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? இந்தியாவின் பரிந்துரையின் படியேதான் இந்தியாவும் அமெரிக்காவும் விடுதலைப்புலிகளை தடை செய்தார்கள்? விடுதலைப்புலிகள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செய்த பாவங்கள் என்ன? இந்த கூட்டு அரசியல் உங்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன். நிற்க.... கோமாளி செலென்ஸ்கி வளைந்து நெளிந்து தம் அரசியல் நலனை முன்னெடுப்பதாக கூறுகின்றீர்கள். இப்படி...எப்படியெல்லாம் உங்களால் சிந்திக்க முடிகின்றது? ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்து இராச்சியங்களும் செலென்ஸ்கியின் பின்னால் நின்று உரம் கொடுப்பது உலகறிந்த விடயமல்லவா? அப்படியிருக்கும் போது ஈழப்பிரச்சனையும் உக்ரேன் பிரச்சனையும் ஒரே தராசில் வைப்பது ஒத்தே வராது.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
தந்தை செல்வா காலம் தொடக்கம் ஈழத்தமிழரின் பிரச்சனையை தீர்க்க யாருமே தயாரில்லை என்பது நிரூபண உண்மை. தந்தை செல்வாவும் அமிர்தலிங்கமும் பெரியார்,எம்ஜிஆர்,நேரு என பலரை சந்தித்து உதவி/உரிமை கோரினர். எதுவுமே நடக்கவில்லை. எல்லாமே ஏமாற்ற கதைகளாகவே இருந்திருக்கின்றது. அரசியல் போராட்டங்கள் தோல்வியில் போக ஆயுத போரட்டம் உதித்தது. ஆயுத போராட்டத்தை தொடங்கியவர்களில் விடுதலைப்புலிகள் செவ்வனே அதை செய்தனர். ஆயுத போராட்டத்தில் தோற்றுப்போன அரசியலை தேடியவர்களுக்காக விடுதலைப்புலிகள் அரசியலையும் சேர்த்து செய்தனர்.அதிலும் புலி எதிர்ப்பாளர்க்கு திருப்தியில்லை. குறை சொல்ல ஆயிரம் காரணங்களை சொல்லலாம் அப்படி சொல்பவர்கள் நிறை சொல்ல காரணங்களை தேட காரணங்களை தேடமாட்டார்கள். குற்ற பத்திரிகையாக நீலன்,சந்திரிக்கா,கதிர்காமர்,ராஜீவ் என பல கதைகளை சொல்லிக்கொண்டே போகின்றனர். சரி யுத்தங்கள் முடிந்து இவ்வளவு காலங்கள் போய் விட்டதே ஏதாவது முன்னேற்றமா என கேட்டால் புலிகள் குற்றங்கள் செய்து விட்டார்கள் என மட்டுமே கூறுகின்றார்கள். ஆனால் சிங்களம் ஏன் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க மறுக்கின்றது என்பதை மட்டும் பேச மறுக்கின்றார்கள். புலிகளுக்கான நிதி/தங்கம் சேகரிப்பில் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல மோசடிகள் உண்டு. இதை தலைவர் நேரடியாக நின்று செய்யவில்லை. இதை செய்தவர்கள் அங்கத்தவர்களும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களும். ஊரில் போராளிகள் ஈடுபட்டாலும் போராட்டம் என வந்து விட்டால்......இன்ப துன்பம் பரிவுகள் இருக்காது என நினைக்கின்றேன்.
-
ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்
இனி வரும் காலங்களில் ஈழத்தமிழர்கள் மதத்தையும் பேசு பொருளாக எடுக்க வேண்டும்.
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
பிரித்து வழங்கப்பட வேண்டியது புலம்பெயர் நாடுகளில் நாட்டிற்கான நிதி என சேகரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணங்கள். 👈 அங்கு செய்திகளுக்காக சோடிக்கப்படும் பணங்களோ நகைகளோ அல்ல.👎