Everything posted by குமாரசாமி
-
ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
இன்று ரம்பின் அதியுச்ச வரி நடவடடிக்கைக்கு எதிராக வழக்கு போடுபவர்களும்,தீர்ப்பு வழங்குபவர்களும்......இந்த அமெரிக்கா ஏனைய நாடுகள் மீது,அப்பாவிகள் மீது குண்டுகள் வீசி ஆக்கிரமிக்கும் போது ஏன் வாய் மூடிக்கொண்டு இருந்தார்கள்?
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆர்ப்பாட்டம் இல்லாத நடிகர். ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
ரப் பாடகர் வேடன்
இருந்தாலும் வேடனுக்கு இருக்கும் தைரியம் ஏனைய கலைஞர்களுக்கு இல்லை.இலங்கையிலும் இப்படியொரு கலைஞன் வேண்டும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஓ....ராகு கேது பெயர்ச்சியெல்லாம் பார்க்கிறீங்கள் போல.... 😲 புரியவில்லை சொல்லுங்கள். 😁
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சிவன் ஒரு புறம் இருக்க.....63 நாயன்மார்களும் ஒரு புறம் இருக்க.... சைவசமயம் இயற்கையோடு ஒட்டிய மதம். சைவர்கள் இயற்கையையும் வழிபடுபவர்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஒரு சிறிய வீட்டிற்குள் சாமி அறை ஒரு பக்கம். நாலு காலடி தூரத்தில் இருக்கும் சமையலறையில் பறப்பன,ஊர்வன,நீந்துவன என விதம் விதமான சமையல்கள் தூள் கிளப்பும். 😂 வேறு எந்த மதங்களிலும் இல்லாதவாறு சைவசமயத்தில் மட்டும் தான்..... காளி தெய்வத்திற்கும் வைரவர் தெய்வத்திற்கும் மாமிச படையல்கள் இருக்கின்றது.எமது முன்னோர்களின் நினைவு தினங்களுக்கு பிதிர் எனும் நாளில் மச்ச உணவுகள் மிக முக்கியமாக படையலாக படைக்கப்படுகின்றது. இந்து மதத்தில் தான் அதாவது பார்ப்பனர்களால் அவர்கள் பிழைப்பிற்காக கொண்டுவரப்பட்டது தான் ஒரு சில நடைமுறைகள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீண்ட காலத்திற்கு பின்னர் காதுக்கு இனிமையான அமைதியான பாடலை கேட்கின்றேன்.😍 https://youtu.be/QJ-4za89Y6k?si=J7im5V7LmBCF6pfY பெண் : முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் பெண் : சிவம் கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை ஆண் : ………………………………. தீம் தோம் த தீம் தன தோம் தன தோம் பெண் குழு : தீம் தன தோம் தன தீம் தன தோம் இருவர் : தீம் தன தோம் தன தீம் தன தோம் பெண் : காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் மற்றும் குழு : கண் விழித்தேன் அவன் காணவில்லை கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் : என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வழி தீரவில்லை பெண் மற்றும் குழு : கண்ணான கண்ணே என் கண்ணாளா என் உள் மன காதலை கண்டாயா பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா பெண் மற்றும் குழு : போதும் போதும் என சென்றாயா ஆண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண் : முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா உறவும் நீ வேண்டியெங்கும் ஆண் : …………………………….. பெண் : ……………………………….. ஆண் : ஓ….. பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன் ஆண் : மோக பனி போர்வையில் கரம் கோர்கையில் காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன் பெண் : நான் காதலி காதலன் நீ வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன் ஆண் மற்றும் பெண் : வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன் பெண் : காலம் யாவும் நீதானே இந்தக் காலன் வந்தால் வெல்வேனே ஆண் : மறுமொரு சூரியன் பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே மண்ணில் மின்னல் வீழாதே பெண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ சொல் சொல் சொல் சொல் சொல் சொல் பெண் : காதில் விழும் வரும் வரை காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ…. பெண் : இன்னும் ஒரு முறை எந்தன் கதை சொல்லவா பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் பெண் : சிவம் கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நீங்கள் அடிக்கடி தலிபான்ஸ் எனும் சொல்லை பாவிப்பதால் உங்கள் உருட்டல் பிரட்டல்களை வறட்டல்களை வத்திக்கான் நோக்கியும் திசை திருப்ப வேண்டியுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கூட்டி கழித்து பார்த்தால் பெரிய தலிபான்கள் வத்திக்கானில் தான் இருக்கின்றார்கள்.
-
விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
பப்பிளிக்கிலையே உந்த சாத்து எண்டால்.....வீட்டில உலக்கையாலதான் சாத்துப்படி போல... 🤣
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
உந்த வெட்டொண்டு துண்டு இரண்டு கதையெல்லாம் அரபுநாடுகளிலை சரிவராது. பன்றி படத்தையே கண்ணிலை காட்டக்கூடாதாம்.😂
-
சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும்
இடுப்பு கொழுப்பும் தொந்தி கொழுப்பும் ஒரு பிரச்சனையா?🤨
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
டொனால்ட் ரம்புக்கு கடிதம் எழுதுவமா? 😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நாங்கள் எல்லா விடயங்களையும் சீரியஸ்சாக கதைக்க முடியாது. மத விடயங்களில் ஆதாரம் என்று பார்த்தால் எதுவுமே மெய்யானது இல்லை.வாதம் விதண்டாவாதம் செய்யலாமே தவிர நிறுவப்போவது யாருமில்லை. கலிகை கந்தனுக்கு ஒரு நக்கல் கதை இருக்கும். கதிர்காம கந்தனுக்கு இன்னொரு நக்கல் கதை இருக்கும். செல்வசந்நிதியானுக்கு இன்னொரு பட்டப்பெயர் இருக்கும். பணக்கார கந்தன் நல்லூரானுக்கு இன்னொரு நக்கல் இருக்கும். மத விடயத்தில் அவரவர் நம்பிக்கையை தவிர வேறெதும் இல்லை.மத நூல்களும் மத வரலாறுகளும் பொய்யானவை என்பது என் கருத்து.மற்றும் படி அந்த இயற்கையை நோக்கி அரோகரா சொல்வதில் எந்த தவறுமில்லை. இயற்கை வலிமையானது.
-
உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப்
இதைத்தானே உக்ரேன் போர் தொடங்கின நாளிலை இருந்தே சொல்லிக்கொண்டு வாறம்.செலென்ஸ்கி பிள்ளையருக்கு வாய் சரியில்லை எண்டு....எதுக்கெடுத்தாலும் சண்டித்தன கதையும்,புட்டின் மீதான நக்கல் கதைகளும்.... எல்லாம் ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் பெரிய பிரித்தானியாவும் தனக்கு பின்னாலை நிக்கிது எண்ட தைரியம் தான்
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கலிகை கந்தனுக்கும்.... சந்நிதி கந்தனுக்கும்.... நல்லூர் கந்தனுக்கும்.... இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளது.
-
ரப் பாடகர் வேடன்
விதைகள் எங்கு முளைத்தாலும் அதற்கான வீரியத்தை காட்ட தவறுவதில்லை.
-
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி
உக்ரேனில் மனிதாபிமானத்தை தேடும் மேற்குலகும் அதன் விசுவாசிகளும் காசா அழிவில் மட்டும் காணாமல் போய் விடுவார்கள். அக்கிரம போர்களில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் குறைந்த பட்சம் மேலைத்தேய நாடுகளில் நாயாக ஆவது பிறந்து தொலையுங்கள்.வசதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வீர்கள்.☹️
-
1958ம் ஆண்டு தமிழர் இனக்கலவரத்தை நினைவுகூருதல்
சிங்கள இனவாதிகளால் சந்ததிக்கு சந்ததியாக, போகத்திற்கு போகம் நடத்தப்பட்ட ஒவ்வொரு இனக்கலவரத்திற்கும்/இன அழிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நினவுத்தூபிகள் அமைக்கப்பட வேண்டும்.இப்படியான நெருக்கடிகளும் உலக அரங்கில் சிங்களத்தை தலை குனிய வைக்கும் என நினைக்கின்றேன்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வருடாவருடம் ஊரில் நடக்கும் இரண்டு கோவில் திருவிழாக்களுக்கு பழனியின் மேளக்கூட்டு கட்டாயம் இருக்கும்.அதில் விசேசம் என்னவெண்டால் அந்த இரண்டு திருவிழாக்களுக்கும் வாற பழனி மேளக்கூட்டுக்கு எங்கள் வீட்டில் தான் சாப்பாடு.இரவு 9,10 மணியளவில் பாய் விரித்து பந்தி நடக்கும். ஆட்டுறைச்சிக்கறி வாயில் வைக்கேலாத அளவுக்கு உறைப்பாய் இருக்கணும். 😎
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
ஏனுங்கோ! உவர் பசில் சிறிலங்காவுக்கு வரி கட்டாமல் உங்கை வந்து ஒளிச்சிருக்கிறார் எண்டு சிங்கன் டொனால்ட் ரம்புக்கு பெட்டீசம் எழுதினால் எப்பிடியிருக்கும்?
-
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
ஏன் கனதூரம் போவான்? கோயில் வீதிகளில நினைவுத்தூபி வைக்கட்டும் பார்ப்பம். மறந்தும் வைக்க மாட்டார்கள்.
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
ஏதோ நாடகம் போட எடுத்த படம் மாதிரியே தெரிகின்றது. வைத்தியசாலை கட்டில். சாதாரண உடை. வைத்தியசாலை கட்டிலில் படுத்திருந்தால் உப்படி உடை அணியலாமா தெரியவில்லை. இனவாதிகள் கையில் எடுக்கும் பொருளான புத்தர் சிலை!!!!! எங்கையோ இடிக்குது..
-
ஐரோப்பாவில் முதன்முறையாக ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தியது டென்மார்க்
அநேகமான பழமொழிகளும்,பழைய அறிவுரைகளும் அன்றைய காலத்திற்கு உரியவை என நினைக்கின்றேன். அது இன்றைய சமுதாயத்திற்கு ஏதுவாக அமையாது. அதுக்காக நல்லூர் கந்தசுவாமியார் கோயில் வாசல்லை ஹாஜியார் கொத்துரொட்டி கடை போடுறதை ஏற்க முடியாது கண்டியளோ 🤣
-
ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்!
உண்மையில் ஜேர்மனியின் காவல்துறைனர்க்கு போதுமான அதிகாரங்கள் இல்லை.கூடுதலான வெளிநாட்டவர்கள் ஜேர்மன் பொலிசாரை நாய்க்கும் மதிக்க மாட்டார்கள். கெட்ட வார்த்தைகளில் கூட திட்டுவார்கள்.அவர்கள் பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.பார்க்கவே பாவமாக இருக்கும். Afd கட்சியினர் எதை தேர்தல் விஞ்ஞாபனமாக முன் வைத்து பெரு வெற்றி பெற்றார்களோ அவற்றை சட்டமாக்க இன்றைய அரசு முயற்சி செய்கின்றது.
-
ஜேர்மனியின் நான்காவது சாம்ராஜ்ய ஆரம்பம்?
உக்ரேன் போர் ஆரம்பிக்கும் போது யாழ்களத்தில் நான் இந்த கருத்தை தெரிவித்திருந்தேன்.ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனியின் ராட்சியம் மிகப்பெரியது. அடுத்தது நேட்டோவில் முதன்மை வகிக்கப்போகின்றார்கள்.உள ரீதியாக ரஷ்யாவை ஆக்கிரமிக்காமல் விட்டாலும் இவர்களின் செயற்பாடு அதை ஒத்ததாகவே இருக்கின்றது. தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பது போல.... உண்மை நிலவரங்களை இணைத்தமைக்கு நன்றி.