Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. அவ ஒண்டும் இல்லாததை பொல்லாததை பில்டப்பண்ணி எழுதேல்லையே......உள்ளதை திருப்பி எழுதியிருக்கிறார் அவ்வளவுதான்....😂 பணிச்சுமைகளுக்கு மத்தியில் எழுதுவதை பாராட்டணும்.🙂
  2. தோட்டம் செய்யிற புரோக்கிறாம் கேன்சல் பண்ணியாச்சு...
  3. முதல்வர் .....முதல்வர்......வாறார் எல்லாரும் கை கட்டிக் கொண்டு நில்லுங்கோ...😎 https://youtu.be/cf1cH-32lHw?si=xKmMJ8lXfysNvkYP
  4. காதல் தோல்வியை தழுவியவர்கள் ரசித்து கண்ணீர் மல்கி இரத்தக் கண்ணீர் விட்ட காட்சி. 🙂 https://youtu.be/LOy6iA28XVc?si=McQzU0R77L2_nJpN
  5. வரலாறுகள் சரியாக இருந்தாலும் ஏன் இப்போது விகாரைகளை கட்டி சிங்கள குடியேற்றங்களை செய்கின்றார்கள்? இலங்கையின் கிழக்கு பகுதிகளில் தமிழர் பிரதேசங்களாக இருந்த கந்தளாய் திருகோணமலை பறி போவதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. கோண்டாவில கோண்டாவில் ஆக மாறியது கொக்குவில கொக்குவில் ஆக மாறியது இணுவில இணுவில் ஆக மாறியது யாப்பன யாழ்ப்பாணம் ஆக மாறியது கொடிகாம கொடிகாமம் ஆக மாறியது மிருசுவில மிருசுவில் ஆக மாறியது....இப்பிடியே சொல்லிக்கொண்டு போக வேண்டியதுதான்.🤣 கனக்க வேண்டாம் சும்மா இருந்த கதிர்காமத்தை எப்படி மாற்றி விட்டார்கள் என பாருங்கள்? சிங்களம் ஒரு சேர்ந்து வாழக்கூடிய இனமும் அல்ல. அதன் அரசியல் போக்கும் சேர்ந்து வாழ நினைக்கவில்லை. விட்டுக் கொடுத்த இராமநாதன் குணம் கொண்டவர்கள் இனியும் விட்டுக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கப்போகின்றார்கள்.
  6. இவங்களை நம்பேலாது கண்டியளோ. நேரத்துக்கு நேரம் சட்டங்களை மாத்துவாங்கள்.😂 பென்சன் எடுக்கிற நேரம் வர கடிதம் போடுவாங்கள் தானே எண்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.எண்டாலும் எனக்கு முழங்கால் பிரச்சனை இருக்கிறபடியால முதலே பென்சன் எடுக்க வாய்ப்பிருக்கு......😎 கெதியாய் ஊருக்கு போறன்.....6 ஏக்கர் தோட்டக்காணிய துப்பவராக்கிறன்....ரஜினி மிளகாய்க்கண்டு வைக்கிறன். கோடி கோடியாய் சம்பாதிக்கிறன்.😁
  7. இஸ்ரேல் தார்மீக நாடும் அல்ல. மனித உரிமைகளை மதித்த,மதிக்கும் நாடும் அல்ல. பாவப்பட்ட பலஸ்தீனம். ஆயுத போராட்டமும் ,சமாதானமும் ,அரசியல் பேச்சுவார்தைகளும் என ஏமாற்றப்பட்ட இனம். இன்று கேட்பாரற்று,நாதியற்று அழிவுகளுடன் சிக்கி தவிக்கின்றது. இஸ்ரேல் செய்வதெல்லாம் சரியென வாதிடுபவர்கள்.......சிங்களம் தமிழர்களுக்கு செய்வதும் சரியென வாதிட அதிக நேரம் செல்லாது. கமாஸ் இயக்க தலைவர்களை தேடித்தேடி அழிக்கும் இஸ்ரேலுக்கு தமது மக்களை எங்கு பயணக்கைதிகளாக வைத்திருக்கின்றார்கள் என தெரியாமல் இருப்பது அபூர்வமாக இருக்கின்றது.
  8. தனிக்காட்டு ராஜாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐
  9. வித்தியாசமான கதை,வித்தியாசமான இசை,பாடல்கள். முற்றிலும் புது முகங்கள்நடிப்புக்கும் பஞ்சமில்லை... மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய படம்.காதல் தோல்வியால் துவண்டவர்கள் கண்ணீர் விட்டு பார்த்த படம்.😂 ஒரு தலை ராகம்.🎵
  10. இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்க செய்த முதல் வேலை ஜேர்மனியின் தொழில் நுட்பங்களையும்,விஞ்ஞானிகளையும் திருடியது தான்....கொஞ்சம் பிந்தியிருந்தாலும் ரஷ்யா அதே வேலையை செய்திருக்கும்.....
  11. கனக்க நினைச்சு துள்ளிக்குதிக்க வேண்டாம்.🤸 நான் பிறந்து நாலு வருசத்துக்கு பிறகுதான் பதிஞ்சதாம்
  12. முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவார்களாம் 😂
  13. சம்பளத்துக்கு ஆக்களை வைச்சு தோட்டம் செய்யிற பிளான் ஒண்டு இருக்கு....
  14. கிஸ்றீரியா நோய் உள்ளவர்களாக இருக்கக்கூடும் என நான் நினைக்கின்றேன்.
  15. டொனால்ட் ரம்பிற்கு வாக்களித்தவர்கள் மறதிக்குணமுள்ள ஆசிய ஆபிரிக்கர்கள் அல்ல... உலக வல்லரசின் மக்கள் . உலகம் முழுவதிலுமிருந்து அமெரிக்காவை நோக்கி மக்கள் படையெடுக்க காரணம் என்ன மிஸ்டர் கந்தையர்? 😎 உண்மையும் அது தானே? அமெரிக்கா இல்லாமல் கனடா எப்போது தனியாக இயங்கியுள்ளது?😁 எல்லா நாடுகளும் வருமான வரி / உள் நாட்டு வரிகளில் தான் தம் நாட்டின் தேவைகளை நிவர்த்தி செய்கின்றார்கள்.👈 முன்னைய ஆட்சியாளர்களால் தீ மூட்டப்பட்டதை அணைக்க காலங்கள் தேவை.😥 சொத்துக்களை எரிப்பது தவறு. எனினும் எலான் மஸ்க் உலகின் கதாநாயகன்.அவர் தயாரிப்புகள் இன்றைய உலகின் பேசு பொருள். 😎 auf Wiedersehen 😎
  16. புட்டின் :- ஹலோ! குட் ஈவினிங் மிஸ்டர் பிரசிடன்ட் ரம்ப்.🙂 ரம்ப் :- ஹாய் ஹலோ மச்சான் புட்டின்...😎 புட்டின் :-கண்டு கனகாலம் எப்பிடி சுகம்? ரம்ப் :- என்ரை சுகத்தை சீச்சி என் என் டெய்லி சொல்லிக்கொண்டு தானே இருக்குது...பாக்கேல்லையோ. புட்டின் :-நான் அந்தப்பக்கம் போறதுமில்லை...போய் விளங்கப்போறதுமில்லை ரம்ப் :- அது கிடக்கட்டும் உவன் செலென்ஸ்கிய என்ன செய்யலாம்.. புட்டின் :- அது நீ முதலே விட்ட பிழை மச்சான். ரம்ப் :- என்னப்பா சொல்லுறாய்.அவனை உன்ரை பொறுப்பிலையெல்லே விட்டனான் புட்டின் :- அவனை என்ர பொறுப்பிலை விட்டாய் மச்சான்.... ஆனால் உவங்கள் அதுதான் உன்ரை ஆக்கள் ஐரோப்பிய ஒன்றியம் எண்ட கூத்தாடியள் பெரிய கரைச்சல் குடுத்துக்கொண்டெல்லே இருக்கிறாங்கள். ரம்ப் :- அவங்கள விடு....அவங்கள அடக்க எனக்கு ஒரு செக்கண்ட் காணும் கண்டியோ புட்டின் :- மச்சான் அவங்கள அடக்க ஒரு செக்கண்ட்....எனக்கு அதுவே கூட.. ரம்ப் :- எனக்கு தெரியும் எனக்கு தெரியும் எங்கை வாறாய் எண்டு புட்டின் :- இப்ப நான் சொல்ல வாறது என்னெண்டால்... ரம்ப் :- செலென்ஸ்கி...அவன் ரொம்ப தொல்லை குடுக்கிறான்.ரெஞ்சன் ஆக்குறான்....கெப்பர் காட்டுறான் அவ்வளவு தானே...? புட்டின் :- சீச்சீ செலென்ஸ்கி எனக்கு பிள்ளையார்ர எலி மாதிரி.... ரம்ப் :- அப்ப பிள்ளையார் ஆரப்பா? புட்டின் :-ஜேர்மனி....ஜெர்மானியா ரம்ப் :- மச்சான் புட்டின் உந்த ஜேர்மனி விசயத்திலை நீயும் நானும் ஒண்டுக்கை ஒண்டு புட்டின் :- அவங்கள் என்ரை அடி மடியிலை கை வைச்சிட்டாங்கள் ரம்ப் :- ஓமோம் தெரியும்....தெரியும் புட்டின் :- மச்சான் ரம்ப் நீயும் அதுக்கு ஒரு குற்றவாளி....அதை நினைச்சு எனக்கு சரியான கவலை கண்டியோ.. ரம்ப் :- அது...அது... நீயும் அந்த ரைம்மில கொஞ்சம் ஓவராய் போனாய்.....நானும் என்ர சனத்துக்கு பில்டப் காட்டேணுமெல்லோ? புட்டின் :- சரி இப்ப விடு...இதைப்பற்றி பிறகு கதைப்பம்.. ரம்ப் :- அது சரி இப்ப என்ன கோதாரிக்கு ரெலிபோன் எடுத்தனி? புட்டின் :- ஜேர்மனி எண்டால் எனக்கு ரத்தம் கொதிக்குது ரம்ப் : என்ர உடம்பிலை ஜேர்மன் இரத்தம் தான் ஓடுது....எனக்கும் கொதிக்குது புட்டின் :எனக்கு ஆதரவாய் அங்கை அஞ்சாறு சனமாவது இருக்குது...உனக்கு? ரம்ப் : எனக்கும் இருக்குது பேரை சொல்லவா மிஸ்டர் புடின்? தொடரவோ தொந்தரவோ? 😂
  17. இருவரும் இரண்டாம் தாரக்காரர். 🙃 இதில்.. ஆண்சிங்கம் மேல் மட்டும் கடுப்பு ஏன்? ☹️
  18. பிந்திய கருத்தரிப்பும் ஆரோக்கியமானதில்லை தானே? 20- 30 வயதிற்குள் பெற்றெடுக்க வேண்டிய பிள்ளைகளை பெற்றெடுத்து விட்டால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஆரோக்கியம் என்பது என் கருத்து.
  19. யூரியுப்பர்கள் யூரியூப்பர்களாகவே இருக்கட்டும்.😎 இதற்குள் ஈழமக்களுக்கான உதவிகளுக்கும்,அவர்களுக்கான மறுமலர்ச்சி உதவிகளாகட்டும் யூரியூப்பர்களை சம்பந்தப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.🙂 அந்த யூரியூப்பர்கள் வழமை போல் சுற்றுலா இடங்களை காட்டுவதும்,உணவு விடுதிகளில் வயிறு புடைக்க உண்வதையும், தங்கள் தனிப்பட்ட விடயங்களை காணொளியாக பகிர்வதையும் தொடர்ந்து செய்யட்டும்.🤣
  20. கமலா அக்கா கொம்பனி நல்லாட்சி தந்ததிற்கு நல்ல உதாரணங்களை சொல்ல முடியுமா?👈 தேவையில்லாத உக்ரேன் யுத்தத்திற்கான சீண்டல்கள் செய்தது அக்கா சார்ந்த அரசுதான்... உலகமே அஞ்சி நடுங்கும் காஷா அழிவுகளுக்கு உடந்தையாக,உதவிகள் செய்ததும் அக்கா சார்பு அரசுதான். பல நாடுகளில் அவசியமில்லா போராட்டங்கள் உருவாக காரணமானர்களும் அக்கா சார்பு அரசியல்வாதிகள் தான்....
  21. நல்லகாலம் எனக்கு பிரக்கடிக்கேல்லை 😄
  22. தான் பட்ட கஷ்டங்கள் பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாது என நினைப்பவர் அப்பா. வலி மிகுந்த பாதைகள்.... நன்றி விசுகர்🙏
  23. இரத்த உறவு சொந்தங்களினால்த்தான் எப்பவும் பிரச்சனை. எனக்கு சொந்தமாக இருக்கும் வீடு காணிகளைக்கூட நாங்கள் உனக்கு சொந்தக்காரர் எல்லோ. அந்த வீடு காணிகளை எங்களுக்கு எழுதி தாருங்கோவன். நீங்கள் வெளிநாட்டிலைதானே இருக்கிறியள். திரும்பி வரப்போறியளே இல்லைத்தானே எண்டு அவையளே கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லீனம். இவ்வளவத்துக்கும் அவை தூரத்து சொந்தம் மட்டுமில்லை நான் அவையள இன்னும் சந்திக்கவே இல்லை. உப்புடியான சனத்துக்கு மத்தியிலை திருப்பி போய் குடியிருக்கவும் பயமாய் கிடக்கு... ஆனால் நான் பெஞ்சன் எடுத்ததும் ஊரில் போய் இருக்கிற பிளான் போட்டாச்சு.இன்னும் இரண்டு வருசம் பல்லை கடிச்சுக்கொண்டு இஞ்சை இருப்பம். 🙂
  24. ஏனப்பா வேற ஆரும் கிடைக்கேல்லையே? நான் மற்றப்பக்கம் பார்க்க......நீங்கள் இந்தப்பக்கம் பார்க்க🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.