Everything posted by குமாரசாமி
-
கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
நினைவூட்டல்கள் என்றால் அரசர் காலத்து பல சம்பவங்களையும் நினைவூட்டிக்கொண்டிருக்கலாம். எது இன்று தேவையோ அதை செவ்வனே முன்னெடுத்தால் சகலதும் சுபமாக அமையும்.
-
கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
ஆனால் இன்றோ அன்று ஓடி வந்தவர்களினால் தான் அந்த மண்ணுக்கு பலம்.🙂 புலம்பெயர் தமிழர்கள் இல்லையென்றால் அங்கிருப்பவர்களை என்ன பாடு படுத்தியிருப்பார்கள்? 😎
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். உங்கள் ஆதாரத்தை நிரூபியுங்கள்.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
அப்படி முடியாத விடயம் என்றால் ஏன் கருணாநிதி பெட்டி படுக்கை,கூலர் சகிதம் உண்ணாவிரதம் இருந்து இலங்கையில் போர் முடிந்து விட்டது என அறிக்கை விட்டார். அது மட்டுமல்ல ஏன் தமிழக அரசியல் தலைவர்கள் வன்னிக்கு வந்து கீச்சு மூச்சு காட்டி உசுப்பேற்றினர்? முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் கூட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
உண்மைகள் என்றாவது வெளிவரத்தானே போகின்றது.
-
யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
ஆசை தோசை அப்பளம் வடை...... இப்ப இந்த மொடேர்ண் வாழ்க்கையில 95தான் வயோதிப வயசாம். ஆகவே 👈👉👆👇 🙂
-
தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் ; தேசத் திரட்சியே வேண்டும்
சிங்கள இனவாதத்தின் அடிமடியில் கனம் அதிகம்.இன்றல்ல நாளை அல்ல என்றோ ஒரு நாள் இவர்களை எதிர்த்து நிற்க முடியாது என்ற அச்சம் சிங்களத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் இருக்கும். ஈழத்தமிழினத்தின் வலிமையை பார்த்து நன்றாகவே பயப்பிடுகின்றார்கள். அதெல்லாவற்றையும் விட..... ஈழத்தமிழருக்கு தெரியாத உண்மை ஒன்று சிங்கள உள்ளக இராஜதந்திரிகளுக்கு தெரிந்திருக்கலாம். யார் கண்டார்?
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
தமிழ்நாட்டில் வசிக்கும் பிரபல்யங்களும்,அரசியல்வாதிகளும் ஏதாவது ஒரு விடயங்களிலாவது தம்மை தெலுங்கு வம்சாவளியினர் என நேரடியாக அல்லது மறைமுகமாக தெரிவிக்கின்றனர். வீடுகளில் தாம் தெலுங்கு மொழியில் தான் உரையாடுவோம் எனவும் சொல்லியுள்ளனர். அப்படியிருக்கும் போது சீமான் தன்னை மலையாள வம்சம் என தெரிவிக்கவில்லை. சீமானை சுற்றி கடா முடா கேள்விக்கணைகளை கேட்கும் சீமான் நீங்கள் மலையாள இனமா என கேள்வியும் கேட்டதாக எனக்கு தெரியவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததை நீங்கள் பார்த்திருந்தால் அந்த இணைப்பை இங்கே இணைத்து விடுங்கள்.
-
ட்றம்பரின் ஊழித்தாண்டவம்
ட்றம்பரின் ஊழித்தாண்டவம் முதல் நான்கு வருட ஆட்சியின் போதும் இருந்தது.இந்த கட்டுரையாளரப் போல் அன்றைய கட்டுரையாளர்களும் ஊடகவியாளர்களும் ட்றம்பர் மீது சீறிச்சினந்தார்கள்.மூக்கால் அழுதார்கள்.வெடித்தார்கள். இருந்தும் பைடனனுடன் போட்டியிட்ட போதும் மிக இறுக்கமான நிலையிலேயே பைடன் வெற்றி பெற்றார். அதன் பின் பைடனின் நல்லாட்சியில் நடந்த விடயங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இப்போது விடயம் என்னவென்றால் முதல் ஆட்சியில் அவ்வளவு ஊழித்தாண்டவம் ஆடிய ட்றம்பரை ஏன் அமெரிக்க மக்கள் பெரும்பான்மையாக வெற்றியடைய வைத்தார்கள்? அமெரிக்க மக்கள் உதறித்தள்ளுமளவிற்கு பைடனார் என்ன தவறுகளை செய்தார்? அல்லது கமலா அக்காவின் தேர்தல் வீரியம் போதுமானதாக இல்லையா? இல்லை அமெரிக்க மக்களுக்கும் மறதிக்குணம் எக்கச்சக்கமா? 😎
-
ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
தமிழர் சம்பந்தமாக நிறைய விடயங்கள் ஆதாரம் இல்லாமலே அழிந்து போகும்/ மடக்கப்படும் இனம் தமிழினம். தமிழர் விடுதலைக்கூட்டணி முதன் முதலில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாத பிரச்சாரங்களையே முன் வைத்தது.அதன் பின்னராகத்தான் வரலாறுகளை பக்க ஆதாரங்களாக மேடைகளில் பேசி ஆதரவு திரட்டினர்கள். குறிப்பாக சிங்கள மொழியை கூட தரக்குறைவாக பேசி ஆதரவு திரட்டினார்கள்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கச்சதீவு தமிழர் பிரதேசங்களுக்கு நடுவில் தானே இருக்கின்றது.இரு பக்க தமிழர்கள் தானே அங்கு ஒன்று கூடினார்கள். பண்டமாற்று மற்றும் உறவு பரிமாற்றங்களை செய்தார்கள். இதற்கு கருணாநிதி அவர்கள் ஏன் பதை பதைத்தார் துடி துடித்தார்? 😎
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
பொதுவாக இந்தியா,பங்களாதேஷ்,பாக்கிஸ்தான்,இலங்கை போன்ற நாடுகளில் உள்ள மக்கள் வெள்ளைக்காரன் என்றால் ஆங்கிலேயரைத்தான் நினைவுக்கு கொண்டு வருவார்கள். அதே போல் தமிழரை பிரித்து பார்க்க மாட்டார்கள். திராவிடத்துக்குள் அடக்கி தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,தமிழ் என எல்லாவற்றையும் சாம்பாராக்கி திராவிட முடி சூட்டி விடுவர். ஆனால்..... மலையாளியும்,கன்னடரும்,தெலுங்கரும் மொழிவாரியாக, இன வாரியாக தம் இனத்தை போற்றி பாதுகாப்பர்.தம் நாடு என்பர்.தமக்கு உரியது என்பர்.வேற்று மொழியாருக்கு இடமில்லை என்பர். அதைப்பற்றி யாரும் தூக்கி பிடிக்க மாட்டார்கள்.குறையும் கூற மாட்டார்கள். இப்படியான கூத்துக்கள் போக..... நான் தமிழ்.எனது நாடு என் மக்களுக்கே முதலிடம்.எம்மை நாமே ஆள வேண்டும் என்றால் முதலில் கொதித்தெழுவவது யாரென்று பார்த்தால் அவர்கள் தமிழர்கள் தாம் 😂
-
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். 🤝
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கட்சியின் கோட்பாடாக கருணாநிதி கச்சதீவு சீதனத்துக்கு ஆதரவு தந்தார். இன்று கருணாநிதியின் மகனும் பேரனாரும் கச்ச தீவு வேண்டும் என்கிறார்கள். அதுதான் பெரிய பகிடி.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
விசுகர்! அவர்கள் விரும்புவது,வேண்டுவது கருத்து வெற்றியே ஒழிய....இன வெற்றிக்காக எதுவும் இல்லை. கவலை வேண்டாம். காலம் பதிலளிக்கும்.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
இல்லை... நான் கூற வரும் கருத்து நீங்கள் கருதும் பொருள் பட வராது.
-
நம்ம பரிமளம்
ஓமோம் ...பொல்லாதவங்கள்....மிக மிக கொடூரமானவங்கள். சபையில சரி சமமாய் உட்கார தகுதி இல்லாதவங்கள்.🤣 பொம்புளை கள்ளர் 😂
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
நான் எங்கேயாவது சீமான் சொக்கத்தங்கம் என எழுதியதற்கான ஆதாரங்களை காட்டவும். சீமான் ஒரு அரசியல்வாதி. அதிலும் இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர் விடயத்தில் அதிக கரிசனை காட்டுபவர். மற்றும் படி சீமானுக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள். ஈழ தமிழர்கள் அல்ல.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கச்சதீவை பரிமாறியது யார் அதிகாரத்துக்குள் வரும்?
-
ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
ஈழ தமிழர்கள் இனக்கலவரங்களை உருவாக்கியதாக சரித்திரங்கள் இல்லை. இதை சிங்கள சமுதாயங்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் ஈழத்தமிழர்களின் அத்தியாவசிய நடவடிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் எம்மால் ஆன அடுத்த கட்ட நடவடிக்கை.
-
நம்ம பரிமளம்
என்னத்த சொல்ல....வீட்டுக்கு வீடு வாசற்படி எண்டது போல.. வீட்டுக்கு வீடுகளில பரிமளங்கள் இருக்கத்தான் செய்யுது 🤣
-
'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானதன் பின்னணி!
நயினாவுக்கு வாழ்த்துக்கள் சொல்வோமாக.... 🤣 வாழ்த்துக்கள்.
-
மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு
ரணில் விக்கிரமசிங்கவில் கை வைக்கின்றார்கள் என்றால்... ஒரு பேச்சுக்காக இருந்தாலும். பின்னணியில் ஏதோ புகைய ஆரம்பிக்கின்றது என நினைக்கின்றேன். சிங்களத்தின் அவியல்கள் இனியும் சர்வதேசங்களில் அவியாது. ஏனென்றால் மேற்குலகு தங்கள் பழைய அரசியல் போக்குகளை மாற்றிக்கொண்டு வருகின்றார்கள்.
-
நானும் ஊர்க் காணியும்
அங்கு வேறு ஒருவர் பெயரில் இருக்கும் காணிகளை என் பெயருக்கு அல்லது என் பிள்ளைகளுக்கு மாற்றுவது பற்றி கேட்கின்றேன்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கிராம பக்கங்களுக்கு போனால் வளர்ச்சி தெரியும்.😃 இந்த செய்தியை வாசிக்கும் போது பிரமாண்ட இயக்குனர் சங்கரின் திரைப்படம் பார்த்த பீலிங் வருவது எனக்கு மட்டும் தானா? அதை விட இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக இயற்கை வளம் உள்ளதாக கூறுகின்றார்கள். ஒரு ஆங்கில அறிஞர் தமிழ்நாடு தனித்து ஆட்சி செய்து ஆளக்கூடிய வளங்கள் எல்லாம் உள்ளது என எழுதியதாக வாசித்த ஞாபகம்.