Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. எல்லாம் கட்டுப்பாடில்லா ஊடக வளர்ச்சியால் வந்த வினை. எண்டாலும் எம்ஜிஆர் பட பாடல்களை கேட்டால் இன்றையவர்கள் நேரடியாக பாடுவதை அன்று மறைமுகமாக பாடியிருப்பார்கள். அதிலையும் வைரமுத்துவும் லேசுப்பட்ட ஆளில்லை.🤣 https://youtu.be/Vi7xbHxW0SU?si=Wxgi72w-dph-t_LN
  2. ரசிக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் இளையராஜா ஒன்றும் எழுந்தமானத்திற்கு இசையமைக்கவில்லை.சிறுவர் முதல் வயோதிபர் வரை தன் இசையால் மயக்கியவர்.மாகதேவன்,விஸ்வநாதன் காலத்தவரும் அவர் இசையை ரசித்தனர். இன்றைய அனிருத் காலத்தவரும் அவர் இசையை ரசிக்கின்றனர்.இளையராஜா வருகைக்கு பின்னர் எத்தனையோ இசையமைப்பாளர்கள் தோன்றினர்.ஆனால் அவர்களால் நிலைத்து நிற்கமுடியவில்லை.இளையராஜா ஏனோ தானோ என இசையமைக்கவில்லை.எல்லோரும் ரசிக்கும் படியாக இசையமைத்தார்.அதனால்தான் நீங்களோ நானோ அவர் இசையமைப்புகளை இசித்தோம்.கேட்டோம். அவர் ஒன்றும் பொதுமக்களை நோக்கி வற்புறுத்தவில்லையே! இளையராஜாவோ இன்றும் தன் இசையால் கம்பீரமாகத்தான் நிற்கின்றார். அவரின் அலப்பறை, நான் என் இசை என்ற அகங்காரம் படைத்தவனுக்கு வருவது இயல்பு. அதை அவர் நேருக்கு நேரே காட்டுகின்றார்.அதில் தவறில்லை. வாடிக்கையாளார் முகம் சுளித்தாலும் நல்ல இசை வேண்டும் என்பவர்கள் இளையராயாவை தேடித்தான் போகின்றார்கள்.இன்றும் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்.💪 கேள்வி கேக்கிறவன்(ஊடகவியாளர்கள்) சம்பந்தமில்லாமல் தாறுமாறாய் கேள்விகள் கேட்டால் அலப்பறை மட்டுமல்ல கோபமும் வரத்தான் செய்யும். 😁
  3. அதாவது ஐரோப்பிய ஒன்றியம் இனிமேலும் உக்ரேன் எனும் குண்டுச்சட்டிக்குள் வண்டியை ஓட்டாமல் பரந்துபட்டு சிந்தித்து தம் அரசியலை செய்ய வேண்டும். அயல் நாடு ரஷ்யாவுடன் நல்லுறவை பேண வேண்டும்.🤣 உக்ரேன் போர் ஆரம்பித்த வேளையிலையே ஐரோப்பாவிற்கு ரஷ்யாவின் முக்கியத்துவம் பற்றி எழுதியிருந்தேன்.நகைப்பிடமாக்கியதுதான் மிச்சம். 👈😎
  4. குறை சொல்ல வெளிக்கிட்டால் உலகில் உள்ள எல்லா மனிதரையும் குறை சொல்ல முடியும்.இசை அமைப்பது இளையராஜாவின் தொழில். அதை அவர் செவ்வனே செய்கின்றார்.அத்துடன் இளையராஜாவையும் ரகுமானையும் ஒரே பார்வையில் பார்க்க நினைப்பது தவறு. உங்களைப்போல ஆக்களுக்கு அனிருத் தான் சரியான ஆள்....அரிசி மில்லுக்க நிண்ட பீலிங் வரும். 🤣
  5. அனுராதபுரம் வைத்தியசாலையில் பணிபுரிந்த தமிழ் வைத்தியரை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த முன்னாள் ராணுவ வீரர்,முன்னாள் பௌத்த பிக்கு இவர் தானாம்.
  6. எனக்கென்ன குறைச்சல்? ஜாம் ஜாம் எண்டு இருக்கிறன் 😎 சிவகார்திகேயனும் கொழும்பிலை தான் நிக்கிறாராம் 🧐
  7. இதே பிரச்சனைதான் ஜேர்மனிக்கும்.நிலத்தடியில் கை வைத்தால் நிலம் சுடுகாடாகி விடும் என்ற அச்சம் இவர்களுக்கு உண்டு. உதாரணத்திற்கு அமெரிக்காவில் மீதேன் வாயுக்களை உறிஞ்சு எடுக்க அந்த நிலங்களே பாலைவனமாகி விட்டது. அது அமெரிக்காவை பாதிக்காது. பெரிய நிலப்பரப்பு. ஆனால் அமெரிக்காவின் ஒரு மாநில அளவிலான ஐரோப்பாவிற்கு இது சாத்தியமில்லை. 😂
  8. பல உதவிக்கரங்கள் சட்டபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டும் அரசியல் தலையீடுகளால் அடக்கி வைக்கப்பட்ட சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லை என நினைக்கின்றேன். இனவாத அரசு தமிழர் பகுதிகளுக்கான புலம்பெயர் உதவிகளை கரவுக்கண்ணோடுதான் பார்க்கின்றது. சட்டபூர்வமான புலம்பெயர் உதவி எனில் பென்சில்,கொப்பி,புத்தகம்,உடுப்பு வகைகளுக்கு உதவி செய்யலாம். அதை மீறி சட்ட பூர்வமாக ஒரு செங்கல் கூட வாங்க முடியாது. வாங்கினால்....? இலங்கை இனவாத அரசு இன்னும் இருந்த இடத்திலேயேதான் இருக்கின்றது என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம்.
  9. நானே கிட்னி இன்னும் இருக்கா இல்லையா எடுத்துட்டாங்களோ எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். இதுக்குள்ள மாலினியாவது மாதவியாவது....😂
  10. வுடு ராசா.... எல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும். பாவம் மனிசன்.🤣
  11. விசுகர்! என்ன இது? லவ் ஸ்டோரியா? 🙂 எழுதுங்கோ 👍
  12. நமக்கு எக்கச்சக்கமாய் சோலிகள் இருக்கெண்டு தெரிஞ்சும்..... 😎
  13. ஜேர்மனி எப்படித்தான் நெளிவு சுழிவுகளுடன் ஓடினாலும் அமெரிக்கா இல்லையேல் தள்ளாடி விடுவார்கள்.😎
  14. உள்ளதையும் கெடுத்தான் ஆண்டி இந்த கிருஷ்ணா. சாதாரண பாமர மக்களுக்கு கிடைத்த புலம்பெயர் உதவிகளையும் சின்னாபின்னமாக்கி விட்டுள்ளார். சட்டபிரகாரம் புலம்பெயர் மக்களின் உதவிகள் எல்லா மக்களையும் போய் சேராது என்பது நான் கண்டறிந்த அனுபவம்.
  15. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. வீரப்பெண்கள் என மார்தட்டுவது தமிழ் சமூகத்தின் ஓர் அங்கம். ஒரு விடயம் அவசியமாகும் போது ஆண் பெண் பாகுபாடு பார்க்கப்பட மாட்டாது.முக்கியமாக போர் சம்பந்தப்பட்ட விடயங்களில்... ஆனால் சாதாரண நிலைமை நிலவும் நாட்டில் போர் பயிற்சிக்காக வலிந்து பெண்களை அழைக்க மாட்டார்கள். பெண்மைக்குரிய பலத்துடன் பயிற்சிகளை நிறுத்தி விடுவார்கள்.
  16. வேறை வழி????? 🙃 தங்களுக்கு எவ்வளவு எரிச்சல் இருந்தாலும்...... உங்கள் சபை நாகரீகத்தை பாராட்டுகின்றேன்.😎 அப்பன் நீ எங்க இருக்காய் ஓவர்...ஓவர்.
  17. யாழ் மாவட்டத்தில் "செம்பாடு" எனும் ஊர் உள்ளது. நீங்கள் அந்த ஊரை சேர்ந்தவரா? 🙂
  18. இந்த நபரின் ஆரம்ப யூரியூப் காலங்களிலையே ஒரு முகநூலில் இவரின் சுத்துமாத்துகள் விமர்சிக்கப்பட்டது.இவர் சகோதரி,குடும்பம் என கண்ணீர் விட்ட போலி சம்பவங்களும் விமர்சிக்கப்பட்டது. எனினும் ஒரு சில காரணுங்களுக்காக அந்த முகநூல் முகவரி முடக்கப்பட்டு விட்டது. அந்த நபரை போல் இன்னும் பல முகநூல்/யூரியூப் கொள்ளையர்கள் இருக்கின்றார்கள். கவனமாக இருங்கள்.
  19. ஐரோப்பாவில் பொதுவாக ஆண்கள் எல்லோருக்கும் இராணுவ பயிற்சி கட்டாயமாக இருந்தது.அந்த கட்டாய பயிற்சியை அண்மைக்காலங்களில் நாடுகளுக்கேற்ப நீக்கியிருந்தார்கள்.அதே நேரத்தில் பெண்களுக்கு கட்டாய மருத்துவ பயிற்சிகளும் இருந்தது. மற்றும்படி இயற்கை ரீதியாக என்றுமே பெண்கள் ஆண்களுக்கு சமமாக வாழ முடியாது.சம உரிமைகளுடன் யாவரும் வாழலாம். இயற்கையில் சமம். அது நடைபெறாது.
  20. கஞ்சியோ கூளோ,கத்தியோ கடப்பாரையோ,கறுப்போ வெள்ளையோ.... குமாரசாமி ஆகிய நான் நான்காம் இடத்தில் நின்று கர்ஜிப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.🤣 20 ம் இடத்தில் நிற்கும் மர்ம ஆசாமி அடுத்த போட்டியில் பங்குபற்றுவதையிட்டு ஆழ்ந்து சிந்திக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.😎 24ம் இடம் நோ கொமன்ஸ்...😂
  21. நன்றி ஐயா! காலத்திற்கேற்ற மாற்றங்கள் தெரிகின்றது. தேடல்கள் இலகுவாக இருக்கின்றது.சில தொழில் நுட்பங்கள் மறுக்கப்பட்டாலும் முன்னோக்கிய பயணத்திற்கு நன்றிகள்.🙏
  22. பிரச்சனைகளை பூசி மெழுகி மூடி வைத்திருக்கின்றீர்களே ஒழிய...... முன்னேற்ற செயல்கள் ஏதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியவில்லை. தமிழர்கள் உங்களை நம்பி தந்த ஆதரவிற்கு துரோகம் செய்ய முற்படாதீர்கள்.
  23. தமிழ் பிபிசிக்கும், மெயின் பிபிசிக்கும் செய்திகள் வேண்டும் என்பதற்காக கண்டபடி செய்திகள் எனும் பெயரில் எழுதி தொலைக்கின்றார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.