Everything posted by Nathamuni
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதுகேனப்பா அடி விலோனும்? 🤔 புத்தரை கும்பிட வந்த பொம்பிளையை மடக்கி.... அதை.... புரிசன் காரன் கையும், களவுமா பிடிச்சு விட்டானோ? 😯
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
🍺 ?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அய்யா, ராசா..... கட கட எண்டு எரியுது..... கண்ணால பாத்து, ரபீக்கில சிக்கி.... கார் ஏசிக்கு மசியா வெக்கையால் பாதிக்கப்பட்டதால்..... நீங்கள் சொல்வத சரிதான். பஸ் ஒண்டு வேற எரியுது.... சூரியன் பயங்கரவாதம்!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பிழை.... எண்டே நிணைக்கிறேன்.... 😉 ஊரிலை பிளேன் ரீக்கே காசிராது. ஏறினா சைக்கிள் இல்லாட்டி நடை. இங்கை, கார் ஏசி..... இல்லாட்டி வீட்டிலை காத்தாடி.... கையில கூலிங் பியர்.... செறிவை எப்படி உணருவியள்....? 😁
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நான் பப்பிலை இருந்து... கூலீங் பியர் அடிச்சுக் கொண்டு இருக்கிறன்.... வெயிலாவது..... கைக் கோட்டாவது.... ஊரிலை பாக்காத வெயிலே.... 🍻🍺 காரில காட்டின வெக்க 41 செல்சியஸ்...
- Gota.jpg
- VadivelarKural.png
-
கருத்து படங்கள்
எந்த (பௌத்த மத) வழியால் போய், இலங்கை இந்த இடத்தை வந்தடைந்ததோ, அதே வழியில் (இந்து மத) இந்தியா போவதாகவே எனக்கு படுகிறது. தூரம் அதிகமில்லை. 😯
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கெற் ஓபிஸ் இங்க, பக்டரி அங்க..... சிங்களவனை நம்பி முதலிட ஏலாது. அதுவே..... சிறீலங்கன் இன்றைய பிரச்சணைக்கு காரணம். ஆப்பிள், சீனாவில் சம்பளம் அதிகரிப்பால், அங்கிருந்து கிளம்ப முடிவு செய்ய, இந்தியா தனது நாட்டுக்கு வருமாறு சன்னதமாட..... ஆப்பிள் தேர்ந்தெடுத்த நாடு வியற்னாம். இலங்கை..... கோத்தா.... குருந்தாரில விகாரை கட்டிறதில மும்முரம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆச்சி மசாலாவில் இருந்து அம்மா மசாலா வரை, யாழ்ப்பாண மிளகாய்த்தூள் அனுப்புகிறார்கள். ஆனாலும் சட்டத்தின் படி போட வேண்டுமென்பதால், Produce of India என்று இருக்கிறது. இது இலங்கையில் இருந்து வருவதனால், Produce of Sri Lanka என்று இருக்கும். **** http://www.arunceylonspices.com/index.php?route=information/contact Arun Ceylon Spices Malaysia Telephone +604-507 7737 Fax +604-507 7737 Opening Times 24/7
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இங்கே, பிரிட்டனில், இந்த தொல்லை வேண்டாம் என்று, ஓய்வில் போவதை, பாடசாலை விடுமுறை காலத்தில் அமைவதாக வைத்துக்கொள்வார்கள். ஆக மாணவர்களுக்கு, அடுத்த மாசம் தான் ஓய்வு பெறுகிறார் என்று தோன்றும். ஆனால் இன்று பாடசாலை கடைசி நாளாக இருக்கும். பரிசில்கள் கொடுத்து, உணர்வு பூர்வம் இல்லாமல் விடை பெறுவார்கள்.
-
அப்பாவி தமிழர்களே உஷார்..!
அங்கே தானே சிக்கலே.... நம்ம கிட்ட வசதி இருந்தால், விசா எடுத்து வந்து, அகதியாக பதிந்தால், வெளியே இருக்கலாம். பிரச்சனை கிடையாது. அப்படி அகதியாக இருந்து, வெளியே exit விசா எடுத்து வந்தாலும், மீண்டும் எந்த காலத்திலும் உள்ளே வர முடியாது, வேறு நாட்டு கடவு சீட்டு எடுத்தால் கூட. அப்படி ஒரு கெடு பிடி. வசதி இல்லாவிடில், இப்படி படகில் கிளம்பி வந்தால், முகாமில் வருட கணக்கில் தங்க வேண்டியது தான். சரி நாட்டு நிலைமை பரவாயில்லை, திரும்புவோம் என்றால், சிக்கல், இலங்கை சிங்கள அரசின் தூதரகமும் கண்டு கொள்ளாது. வந்த வழியில் வெளியேற முனைந்து கைதாகி சிறப்பு முகாமில் வழக்கே இல்லாமல் வருடக்கணக்கில் வாடி இருந்து பெரும் போராட்டத்தின் பின்னர் இப்போது தான் 16 பேர் வெளியே வந்துள்ளனர். ஆக, உள்ளே வந்தால், ஒரு சிறைக்குள் புகும் நிலைதான். இலங்கை அரசும் கடவு சீட்டும் தராது. வந்த வழியே வெளியே போகவும் முடியாது. இந்திய கடவுசீட்டு... குடியுரிமை....? உஸ்.... மூச். 🤫 1.3 பில்லியன் மக்கள் உள்ள நாட்டில்... குடியுரிமை சும்மா தர முடியாது என்றாலும், வடக்கே, வேறு நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படுவதும் நடக்கிறது. ஆகவே, உயிரை கையில் பிடித்து, வேறு நாடு போனால், பிழைத்துக்கொள்ளலாம் என்ற ஒரு நப்பாசை தான். பனைமரக் காடே, பறவைகள் கூடே.... பிழைத்தால் வருகிறோம் என்று கிளம்புகிறார்கள். 🙏 இன்னோரு விடயம் என்னெவென்றால், இந்த பயணிகள், கிளம்பிப் போவது, நியூஸிலண்ட் நோக்கி. அந்த நாடு, அகதிகளை எடுக்கும். நடுவே நந்தி போல இருந்து, தங்கள் நாட்டுக்கு தான் வருகிறார்கள் என்று பிடித்து, திருப்பி அனுப்பி விடுகிறார்கள் Australians. அதுவே சிக்கல் தான்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவர், மனிசனுக்கு சமைச்சு போடுவதை பெருமையா நிணைப்பவர். 👌 மண்ணுக்குள்ள புதைந்திருந்து, மண்ணையும், பெண்ணையும்.... என்னத்தை..... போங்கோ...😁
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
என்ன கேள்வி எண்டால்.... அந்த நூலுக்கு என்ன நடந்தது.? 🤭 கழட்டி எறிஞ்சவவோ அல்லது அப்படியே சாப்பிட சொல்லுறாவே. 🤔
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓய்வில்லாமல் வேலை செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது... மிக்க நன்றி...
- Gaz.PNG
- Some Images.PNG
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இங்கை தெரிஞ்ச ஒரு ஆண்ட்டி, டிமென்ஷியா வருத்தம், அதாவது தமிழிலை அறளை பெயர்ந்துவிட்டது. ஆரம்பத்தில், நல்லா பேசுவா.... பொழுது போகவில்லை என்று, yupp டிவி எடுத்துக் கொடுத்தார் மகன். நாடகம் பார்த்து, அழுது, இரவிரவா யோசித்து, அறளை பெயர்ந்து விட்டது என்று மருமகள் சொல்லுறா. இந்தியாவில் தனிமை இல்லை. வேறு பொழுது போக்கு இருக்கும். இப்படி இங்கு இல்லை என்பதால், இந்த நாடக கோதாரி யாருக்குமே வேண்டாம். இது, ஒருவர், இருவர் இல்லை. பலரிடம் அவதானிக்க கூடியதாக உள்ளது.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
https://youtu.be/3wWDTA5vW1A
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
அத பார்த்த படியால தான்.... 😁
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
வேறு ஒண்டும் இல்லை.... நம்ம பங்கோட, டீல் போட்டு.... இயற்கை வெவசாயம் செய்யலாம் எண்டு ஊர் பக்கம் போனால்..... பங்கு ஓடியாந்துட்டார்... நான் வெட்டியாடிக் கொண்டு வந்துட்டேன்.... இயற்கை வெவசாயம் செய்யிறது, பிழையே.... 😰 கோத்தா தானே செய்யச் சொன்னவர் எண்டு போனம்..... கனடாவுக்கு, எக்போற் பண்ணுறது தான் ஒரிஜினல் ஜடியா... 🤔 பங்கு எப்படி சுகங்கள்.... இப்ப, படுத்துக் கிடந்த கத்திக்காரர்கள்.... எழும்பி கத்திய தீட்டப் போகினம் எண்டு நிணைக்கப் படாது... வந்தமா, டபக்கெண்டு போனமா எண்டு இருக்கோணும்... ஓகே.. 😁
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
ஆனாலும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்..... வெளிநாட்டு ராணுவம், அது ஜநாவிலிருந்தாவது வந்தேதீரும். தனது வீட்டின் முன் நிகழ்ந்த ஆர்பாட்டத்தை, அமைச்சர் வீரசேகர மறுத்த போதும், அதை, இனவாத ரீதியில் முடிச்சுப்போட முணைந்த, கோத்தாவின் சிந்தனை இதை உறுதி செய்கிறது. ராசபக்சேகள், பிரச்சணையை இனவாதமாக்குவார்கள்..... இஸ்லாமியர்களோ, தமிழர்களோ போராடவில்லை. சிங்களவர் மட்டுமே.... ஆகவே, அவர்கள், நாட்டு மக்கள் பணத்தை, பொருளை பதுக்கி வைத்துள்ளர்கள் என்றால் போதும்.... அவர்கள் தொடர்ந்து ஆளலாம்.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
ஒவ்வொரு வருசமும், சிங்கன், ஏப்பிரல் பூல் செய்தியில் மினக்கெடுவார்.... உடனே.. பிடித்து விடுவார்கள், உறவுகள்.... இந்த முறை..... உந்தக் கட்டிலில படுத்துக் கிடந்து..... அட்டகாசம் பண்ணியிருக்கிறார். தேர்ந்து எடுத்த விடயம், நாட்டு நிலைமையுடன் அச்சொட்டாக, பொருந்தியதால்.... சிங்களவரையே கதிகலங்க வைத்துள்ளது. கவலைப்பட்ட, வேலையிட சிங்கள நண்பரிடம், இம்முறை பிரபாகரன் இல்லையே..... எப்படி அனுப்புறது என்றவுடன்.... வெள்ளி பார்த்து, யோசிக்க தொடங்கி விட்டார். வாழ்த்துக்கள்.... 👌
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பெரிய பஞ்சாயத்து சும்மா எல்லாம் கத்தி சுழட்டுற ஆளில்லை.... ஆகவே... நீங்கள், மருந்து மயக்கத்திலே கொஞ்சம் கூடுதலா அதகளம் பண்ணி இருக்கிறியள் என்று அவருக்கு தெரியும். 😬 அதாலை தான் ஒரு செல்ல குட்டு... 🤗 அவர் சொன்ன மாதிரி, தனிமடலை போட்டு, அலுவலை முடிக்கட்டும்... நம்ம சாமியார்... 😁
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கதைச்சு மினக்கடாம, டபக்கெண்டு கடிதத்தை போட்டு, அலுவலை முடியுங்கோ.... உங்கை, ஒருத்தர், ஆஸ்பத்திரில இருந்து கொண்டு, வேண்டுகோள் வைத்து கத்தி வெட்டு வாங்கி இருக்கிறார்... 😁 அதால..... ஆறப் போடாமல் அலுவல் பாருங்கோ....