-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
கடன் தல்லாம், பழைய பாக்கிய செற்றில் பண்ணுங்கோ எண்டு, இந்தியா போல கடன் கொடுத்த யரோ பப்பாவில ஏத்துறாங்கள் போல. 😁
-
நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
Nathamuni replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
நீங்க இருப்பீங்கய்யா.... உங்களுக்கு என்ன பிரச்சனை? காசை, காசு எண்டு பார்க்காம, உங்களை நம்பி கொட்டின, முதல்வர் அய்யா தான் நிம்மதி இல்லாமல் தவிச்சுக்கிட்டு இருக்காரு... அதுதான் நமக்கு கவலையா இருக்கு... இன்னுமொரு இடைதேர்தல் ஈரோடு கிழக்கில வந்தா, தாங்க மாட்டாரு.... 😰 -
மூன்று மாடி வீட்டையே பண்ணையாக மாற்றி விவசாயம் - லட்சக்கணக்கில் வருமானம்
Nathamuni replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
இதென்ன பிரமாதம்? உங்க லண்டனில, வீட்டுக்குள்ள அருமையான விவசாயம் செய்த பலர் இருக்கினம். போலீஸ் வந்தாப்பிறகு தெரிஞ்சது, அது கஞ்சா செடி விவசாயம் எண்டு 😁🤣 -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
நம்மாளு ஹாலிடே போயிருக்கிறார். வந்தோன்ன, தலைவரை இப்படி நக்கல் அடிப்பது பிழை எண்டு....கடதாசி போடுவார்.... 🤣🤣😁 -
முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல்
Nathamuni replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
அடுத்த ஜனாதிபதி தேர்தல் வாற வருசம். இப்பவே தொடங்கினாத்தான் சரி. இவனும், சரத் வீரசேரவும் இன வாதத்தில் முதலீடு செய்கிறார்கள். கோத்தாவுக்கு 69% போட்டு கை கொடுத்த சிங்களவர் மீது பெரும் நம்பிக்கை! -
முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல்
Nathamuni replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
மச்சான் விமல், ஜின்னா இல்லாமல் போயிருந்தா டெல்லிக்காரன், பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும் வாழும் முஸ்லீக்களுக்கு இப்படித்தான் துண்ணூறு அடிச்சிருப்பான், என்ன? 🤔 -
சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அய்யா தெரியாதைய்யா... தோசை தமிழர்களது.... அநேகமா கிரிபத் ஆ இருக்கும். நான் நினைக்கிறேன், மகனுக்கு அம்மாவும், தம்பிக்கு அக்காவும் கலியாணம் கட்டி வைக்க யோசிச்சு இருக்கலாம்... ஏன் எண்டா, அவர்... வேற ஐடியாவில் இருந்தவர். என்ன ஐடியா எண்டு உடான்ச்சு சாமியார் விபரமா சொல்லுவார்... சிலவேளை ரணிலை கேட்டாலும் சொல்லுவார். 😁 -
சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இவர் அடுத்த நசியல் கள்ளர். இவருக்கும் ஒரு ஆசை. அதென்னவோ, இலங்கையில் மட்டும், உச்ச பதவியை அனுபவித்தவர்கள், மீண்டும், MP ஆகி அரசியல் செய்ய பேராசை கொண்டு திரிவார்கள் ஆக்குறைந்தது அந்த உயர் பதவிக்காவது மீண்டும் போட்டி போட்டால் கூட மரியாதையாக இருக்கலாம். -
முன்னாள் பிரதமர்,முன்னாள் நிதியமைச்சரின் பயணத்தடை நீக்கம்
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
மகிந்தா கனடா வந்தா, ஏர்போட் வந்து இறங்கின நிமிசம் முதல் திரும்பிற நிமிசம் வரை, ஓட்டல், சாப்பாடு, தண்ணி, வெண்ணி, போக்குவரத்து சகல செலவும் தான் பார்ப்பேன் எண்டு, நிழலி தலைல அடித்து சத்தியம் பண்ணியிருக்கிறார். 🤨 -
இல்லை, நான் சொல்லவந்தது, தமிழகத்தில் வாக்காளர்கள் தமக்கிடையே சாதி பார்த்து பிளவு பட்டு, caste neutral ஆன ஆட்களை தெரிவு செய்கிறார்கள். அதேவேளை, ஆந்திராவில், வேட்ப்பாளர்கள் சாதியமாக பிரிந்து நின்றாலும், வாக்காளர்கள் அதனை பொருட்படுத்தாமல், தெலுங்கர்கள் என்று மட்டுமே பார்ப்பதால், நாயுடுகளும், ரெட்டிகளும் முதல்வராக முடிகிறது. அதாவது வாக்காளரிடையே பேதம் இல்லை.
-
பொருளாதாரம் வளர்ச்சி மாறுதலை கொண்டுவரும். பிரிட்டனில் கூட, ஒருகாலத்தில் தொழில் சார்ந்த வர்க்க பேதம் இருந்திருக்கிறது. இன்றும் கூட, waterman, ironsmith, goldsmith, miller ,carter, milkman, hunter, savage, dobbie, barber, என்று பண்டைய தொழில் சார் பெயர்களை வைத்துக்கொண்டு தொடர்கிறார்கள். ஆனால் வகுப்புவாதம் இல்லை. நான் வேலை செய்த வங்கி ஒன்றில், ஒரு தமிழக இளைஞர், இஸ்லாமியர், இங்கே வேலை செய்ய வந்த இந்து தமிழ் பெண்ணை, காதலித்து மணந்து கொண்டார். இரு வீட்டாருக்கும் தெரியாது. இவர்களுக்கும் ஊருக்கு திரும்பும் ஐடியா இல்லை. இருவருமே கை நிறைய சம்பளம் பெரும் வேலை. ஆகவே, குடும்பம் குறித்த கவலை இல்லை. அதுசரி, ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி என்ற இருபெரும் சாதியில் இருப்பவர்கள் எப்படி முதல்வர் ஆகின்றனர் என்று பார்த்தால், அவர்கள் தெலுங்கர்கள் என்று மட்டுமே பார்க்கிறார்களாம். தமிழகத்தில், வாக்காளர்கள் மட்டும் சாதியாக பார்க்க சொல்லபட்டிருப்பதால், தமிழர் அல்லாதோர் ஆள்கின்றனர். இப்போது கல்வி, பொருளாதார உயர்வால், இளையோர் சிந்திக்கின்றார்கள். கேரளாவில், கம்யூனிச வரவால், கல்வி அறிவு கூடி, நம்பூதிரி, நாயர்களிடம் இல்லாமல், பின்தங்கிய சாதியாக கருதப்பட்ட, ஈழவர் சாதியில் இருந்து, முதல்வர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
-
இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்
Nathamuni replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
இந்த முறை, முதலில் வரும் இறாலை எப்படி விழுங்குகினம் எண்டு பார்த்து தான், சுறா வரும். சிங்கள சுத்துமாத்துக்கள் எல்லாம், அவர்களுக்கு தெரியும். இராணுவ குறைப்பு, அனாவசிய அரசு ஊழியர் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களில் உள்ள, அனாவசிய அலுவலகர் குறைப்பு, கல்வி, மருத்துவ சேவையினை இலவசம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மக்கள் பங்களிப்பு கோருதல் போன்ற பல திட்டங்கள் வெளியே சொல்லாமல் ஒப்பந்தமாகி உள்ளன. இப்போ அரசு நியமித்த ஆட்கள் வந்து பெறுமதியை தீர்மானிப்பார்கள் அதன் அடிப்படையில்தான் வரி கட்ட வேண்டும். லஞ்சம் இருக்கும் வரை கவலைப்பட தேவையில்லை. Inheritance Tax: அப்படித்தான் தெரிகிறது -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
மீதமுள்ள ஒரு நாள்... அவர் விசர் ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியதுதான். 🤣 தீர்ப்பு பிழை பாருங்கோ ஏராளன்.... ஆள் சும்மா இரார், மீதமுள்ள ஞாயிறு அன்று அவர் பாட்டுக்கு மூன்றாவது தேட வெளிக்கிட்டு விடுவார். எண்ட படியால், ஒரு கிழமை, முதல் மனையிடமும், அடுத்த கிழமை இரண்டாவது மனைவி என்று இருக்க வேண்டும் என்று தீர்ப்பு போடவேணும். நாட்டாமை தீர்ப்பு பிழை. -
ஓகே.... மதிப்பபுக்குரிய, பங்ளாகளாதேஸ் நிதியமைச்சருக்கு, உடனடியாக கட்டு சோறோட, அடுத்த பிளேனைப் பிடித்து கொழும்பு வந்து, அழுது, குளறி உங்க காசை வாங்கிக் கொண்டு ஓடுங்கோ. இரண்டு நாள் பொறுத்துப் போவம் எண்டால், கதை கந்தல். பசில், மகிந்தா கம்பனி, ரணிலுக்கு ஆப்படிக்க முன்னம், விரைந்து வரவும். அப்படியே, இந்த கடதாசி எழுத உதவின, பெற்றோல் கான் காரருக்கு, புல்லா பெற்றோல் நிரப்பி விடவும். இப்படிக்கு பச்சைக்கிளி
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
Nathamuni replied to குமாரசாமி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
Nathamuni replied to குமாரசாமி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
மா, மிளகாய்த்தூள் போன்றவைகளை நமது பிராண்ட் சொந்தக்காரர்கள், தமிழக, ஆந்திர, கேரள வியாபாரிகளுக்கு சப் - காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். அதனால் தரம் நன்றாக இராது. முக்கியமாக, மிளகாய், அரசி, கழுவி, காயவைத்து அரைத்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. London Times பத்திரிக்கையில், ஆந்திர மாநிலத்தில் கடல் போல பரவி காய வைத்திருக்கும் மிளகாய் படம் போட்டிருந்தார்கள். மிளகாய் செடியை புடுங்கி, அதிலிருக்கும், மிளகாயை அப்படியே பரவி விடப்பட்ட அதே நிலத்தில் போட்டு காய விடுகிறார்கள். அதனை கழுவி சுத்தம் செய்வார்கள் என்று தோன்றவில்லை. வாங்குவோர் தான் செய்ய வேண்டும். வாங்குபவர்கள் இந்த சப் - காண்ட்ராக்ட் காரர்கள் என்றால், காசை மிச்சம் பிடிக்கத்தானே செய்வார்கள். இப்போது, ஊரில் இருந்து, நேரடியாக உறவினர்களுக்கு சொல்லி, dhl மூலம் எடுக்கிறார்கள். காசு அவ்வளவு இல்லை. காரணம். 10kg வரை ஒரு நிர்ணய கட்டணம் என்று வைத்துள்ளார்கள். ஒருமுறை முயன்று பாருங்கள். -
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
Nathamuni replied to குமாரசாமி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
நானும் தமிழ்நாட்டில், கேரளாவில் பிட்டு துன்னு இருக்கிறேன் வன்னியர்.... காததூரம் ஓடித்தான் இருக்கிறேன். நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால், தேங்காய் பூ சேர்த்த மூங்கில் குழலில் அவித்த பிட்டும், இடிச்ச சம்பலும், முட்டை பொரியலும் சாப்பிட்டு பார்த்தால், அடிமையாகி விடுவீர்கள். ஊருக்கு, ஊரு ஒரு விசேட சாப்பாடு.... யாழ்ப்பாணத்தில் இது ஒரு ஸ்பெஷல். 👍 இன்னோரு விதமாக, குழல் பிட்டு முக்கனிகளுடன் சாப்பிட அருமையோ, அருமை. அட, நீங்கள் மதுரைக்காரர் தானே. நம்ம சொக்கரே, பிட்டடித்து, கிரங்கிப் போய், பெண்டாண்டி, பிள்ளைகளை மறந்து, வைகை ஆத்தம் கரையில் மரத்தடியில் படுத்து தூங்கினாரே.... -
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
Nathamuni replied to குமாரசாமி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
ஆட்டக்காரி என்பது புதிய ரகமல்ல. அந்த நெற்பயிர் வீசும் காத்துக்கு நெளிந்து ஆடுவது, ஒரு தேர்ந்த ஆட்டக்காரி போல இருந்ததால், அப்படி பெயர் வந்து என்று ஒரு விவசாயி சொன்னார். IR8 போன்ற புரியாத பெயர்களுக்கு,இது பரவாயில்லை என்றார்.