Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு புதிய தடைகளை விதிக்க பராக் ஒபாமா அங்கீகாரம்

Featured Replies

ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு புதிய தடைகளை விதிக்க பராக் ஒபாமா அங்கீகாரம்

ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு புதிய தடைகளை விதிப்பதற்கான திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று அங்கீகாரம் அளித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு வங்கிகளுக்கு தடைகள் விதிக்கப்படும். ஈரானிய எண்ணெய் விற்பனையை கையாளும் ஈரானிய மத்திய வங்கியை உலக பொருளாதாரத்திலிருந்து தனிமை படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படும் என அமெரிக்கா கருதுகிறது.

சீனா, தென்கொரியா, இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெய்ன், கிறீஸ், இத்தாலி என்பன ஈரானியலிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளாக கடந்த காலத்தில் விளங்கின.

ஈரானிலிருந்தே இலங்கை தனது தேவைக்கான எண்ணெயின் அதிகளவை இறக்குமதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் போதிய எரிபொருள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் இத்தடையை முன்னெடுத்துச் செல்ல பராக் ஒபாமா அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/38617-2012-03-30-18-59-40.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் சைக்கிள் ரிக்சா ஒழிச்சிட்டாராம் கருணா நிதி.. .. மனிதனை மனிதனே சுமந்து செல்லும் முறையை ஒழித்துவிட்டார்களாம் கொல்கொத்தாவில்( விஜயகாந்து கூலிக்காரன் படம் பார்க்கவும்)

டிஸ்கி:

எனக்கு கியுமன் லைப் சைக்கிள் புரியாம இருந்தது.. இப்போ லைட்டா புரிய ஆரம்பித்து இருக்கு.. இந்த மாறி மறுபடியும் ஆரம்பித்து விடுவார்களா தோழர் ..? :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்

இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே சிக்கலில் உள்ளது. இந்த அறிவிப்பு :

- இலங்கைக்கு தேவையான மசகில் எண்பது வீதம் அளவில் ஈரானில் இருந்தே வருகின்றது

- சப்புகஸ்கந்த மசகு எண்ணெய் நிலையத்தை முடக்கலாம். இங்கே ஈரான் நாட்டு மசகு எண்ணெய் மட்டுமே சுத்திகரிக்க முடியும்

- ஏற்கனவே உலக சந்தையில் மசகு எண்ணெய் முதலீட்டாளர்கள் விளையாட்டால் உயர்ந்து வருகின்றது. இலங்கையின் ரூபாவோ குறைந்து வருகின்றது. இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும்.

மொத்தத்தில் இலங்கை பொருளாதாரம் ஒரு பெரிய தலையிடியாக மகிந்த கூட்டத்திற்கு வரும் நாட்களில் அமையும்.

இதைவிட தேயிலை ஏற்றுமதியில் ஒருபகுதி ஈரானுக்கு செல்லுகிறது. அதுவும் பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றது.

Edited by akootha

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

ஒபாமாவின் அறிவிப்பு சிறீலங்காவிற்கு விழுந்த பெரிய பொருளாதார அடி

ஈரானின் ஓயிலை இறக்குமதி செய்வது தொடர்பாக உலக நாடுகள் இரு வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த முரண்பாட்டுக்கு பராக் ஒபாமா இன்று முற்றுப்புள்ளி வைத்தார். தமக்குக் கிடைத்துள்ள பொருளியல் ஆய்வு அறிக்கைகளின்படி ஈரானின் ஓயில் இல்லாமலே உலக வர்த்தகத்தை நடாத்த முடியும். ஆகவே அனைத்து நாடுகளும் ஈரானின் ஓயிலை இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை ஈரான் ஓயில் இல்லாமல் உலகத்தின் வர்த்தகத்தை நடாத்துவது சிரமம் என்ற ஆசிய நாடுகளின் கருத்தையும் அவர் முற்றாக நிராகரித்தார். ஈரானின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதன் மூலம் ஈரானுக்கு எதிரான ஐ.நாவின் தடைக்கு வலு கொடுக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். இந்தியா, இலங்கை, சீனா போன்ற நாடுகள் ஈரானின் மலிவு விலை மசகு எண்ணெயில் தமது காலத்தை ஓட்டி வருகின்றன. அமெரிக்காவின் இந்த உறுதியான நிலைப்பாடு அமெரிக்கா வேண்டுமா? இல்லை ஈரான் வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள் என்ற இடத்திற்கு உலகை தள்ளியுள்ளது. 21ம் நூற்றாண்டு உலகம் இப்படியாக வைத்தால் குடுமி வழித்தால் மொட்டை என்ற அவலமான அரசியலுக்குள் நுழைவது முற்றிலும் எதிர்பாராத வியூகமாகும்.

மேலும் ஈரானின் ஒயிலை நிறுத்தினால் சிறீலங்காவின் தேயிலையையும் ஏற்றுமதி செய்ய முடியாது. சிறீலங்காவின் பிரதான தேயிலை இறக்குமதி நாடான ஈரானை அமெரிக்காவுக்காக சிறீலங்கா இழக்குமா இதுதான் இப்போதய சிக்கல். போர்க்குற்ற நாடு என்று நேரடியாக பொருளியல் தடை விதிக்காமல் மறைமுகமாக நகர்த்தப்பட்டுள்ள இன்னொரு காய் இதுவாகும்.

இது இவ்விதமிருக்க தெற்கு தாய்லாந்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் ஏழு பேர் பரிதாப மரணமடைந்தனர். அத்தோடு 70 பேர் படுகாயமடைந்தனர். இப்பகுதியில் அதிகாரம் செலுத்த நீண்ட காலமாக முயன்றுவரும் இஸ்லாமிய தீவிரவாத குழு செய்த வேலை இதுவென்று போலீசார் கூறுகிறார்கள். யாலா நகரத்தின் மத்தியில் ஒரு காரிலும், மோட்டார் சைக்கிளிலும் இருந்து இந்தக் குண்டுகள் வெடித்;தன.

மறுபுறம் ஆப்கானின் போலீஸ் காவல் கடவையில் தூக்கத்தில் கிடந்த ஒன்பது போலீஸ் ஊழியர்களை இன்னொரு போலீஸ்காரர் சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றார். இந்த நபர் தலபான் தீவிரவாதி என்று கூறப்பட்டுள்ளது. ஆப்கானை நிர்வகிக்கும் இராணுவம், போலீஸ் இரண்டிற்குள்ளும் எவ்வளவு தலபான்கள் நுழைந்துள்ளனர் என்பதை அறிய முடியவில்லை. மேலை நாட்டு படைகளைத் திருப்பியனுப்பினால் ஆப்கான் இராணுவம் போலீஸ் இரண்டுமே அரசுக்கு எதிராக அந்தர் பல்டியடித்துவிடும் பரிதாப நிலை தெரிகிறது.

பர்மீய இராணுவ ஜிந்தாக்கள் திருந்திவிட்டார்கள், அவர்கள் பொதுத் தேர்தலை நடாத்துகிறார்கள் என்று மேலை நாடுகள் அறிவித்து வருகின்றன. ஆனால் அங்கு நடைபெறும் தேர்தல் முற்றிலும் முறை கேடானது என்று ஆங் சாங் சுகி அம்மையார் தொவித்துள்ளார். அம்மையார் வெளியில் வந்து தேர்தலில் குதித்தாலும் மக்கள் அவர் எதிர் பார்த்தது போல அவருக்கு வெற்றியை தரும் நிலையில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. வெளிநாடுகளில் ஆங் சாங் சுகி குறித்து ஏற்படுத்தப்பட்ட மாயை உள்நாட்டில் இல்லை. ஏறத்தாழ அவர் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதை தேர்தலால் நிறுவும் நிலையை இழந்துள்ளதாலேயே இவ்வாறு தெரிவிக்கிறார் என்றும் கருத இடமுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.