Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்தியமான தீர்வுத் திட்டத்தை ஐ.நாவிடம் சமர்ப்பிக்க வேண்டும்

Featured Replies

சாத்தியமான தீர்வுத் திட்டத்தை ஐ.நாவிடம் சமர்ப்பிக்க வேண்டும்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-03 09:49:26| யாழ்ப்பாணம்]

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வுத் திட்ட வரைவு அரசிடம் மட்டுமல்ல; தமிழ்த் தரப்புகளிடமும் இல்லை என்பது ஆச்சரியமான உண்மை. காலத்திற்குக் காலம் தீர்வுத் திட்டங்கள் முன் வைக்கப்பட்ட போதிலும் அவை அரங்கேறவில்லை. 1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை அடிப்படை யாகக் கொண்ட தீர்வுத்திட்டம் முதல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தயாரித்த தீர்வுத்திட்டம் மற்றும் இலங்கை அரசுடன் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில் விடுத லைப்புலிகளால் முன்மொழியப்பட்ட திட்டம் வரை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் காலாவதியாகிவிட்டன என்றோ அல்லது அவற்றை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த நாம் மறந்து விட்டோமென்றோ கூறலாம்.

எதுவாயினும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான மனப்பாங்கு அரசிடம் இல்லாதபோது எழுத்துமூலமான தீர்வுத்திட்ட ங்களை புரட்டிப் பார்ப்பதில் என்ன பயன் என்ற நிலைப்பாட்டிலும் இனப்பிரச்சினைத் தீர்வை மையப்படுத்திய தீர்வுப் பொதிகளை நாம் மறந்து போயிருக்கலாம். எனினும் அத்தகைய நிலைமை இப்போது இல்லையயன்றே கூறவேண் டும். இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியதன் மூலம் இனப்பிரச்சினைக் கான ‘தீர்வு’ சாத்தியமானது என்ற முடிபுக்கு நாம் வருவதில் ஐயங்கொள்ளத் தேவையில்லை.

அதேநேரம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அதன்மூலம் கிடைக்கும் என்ற நினைப்பு -விருப்பு யாருக்கேனும் இருந்தால் அதனை அடியோடு மறந்து விடுவது உத்தமம். இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஐ.நா. சபையின் ஊடாக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து மேற்கொள்வதாகவே அமையும். இவ்வாறான தீர்வு முன்வைக்கப்படும்போது ஏற்கமுடியாது என்று இரு தரப்பும் கூற முடியாது. ஆக, தமிழ்த் தரப்புகள் முழுமையானதும் நிறுத்திட்டமானதுமான தீர்வுத்திட்டம் ஒன்றைத் தயார் செய்து உடனடியாக அதனை ஐ.நாவிடமும் அமெரிக்கா மற்றும் இந்தியாவிடமும் ஒப்படைக்க வேண்டும். இத் தீர்வுத் திட்டத் தில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் ஒப்புதல் பெறப்படின் உத்தமம். ஒப் புதல் பெறுவதில் இடறல் இருக்குமாயின் அதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பிர திபலிக்கும் தீர்வை நாம் முன்வைக்க வேண்டும். அதுவே சாலச் சிறந்ததாகும்.’

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27926

இதை முக்கியமான ஒரு விடயமாக நான் கருதுகின்றேன். இலங்கைத் தீவை பிறப்பிடமாக கொண்ட, தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பேணும் ஒரு சாத்தியமான அரசியல் தீர்வு எது? இதை வெறுமனே அரசியல் வாதிகள் மட்டுமே கண்டறிந்து செயற்படுத்த வேண்டும் என விட்டுவிடுவதும் நாம் செய்யும் ஒரு தவறாகும்.

நாம் ஒவ்வொருவரும் இதை பற்றி நிறையவே அறிந்து கொள்ளவும், விவாதிக்கவும் வேண்டியுள்ளது. காலம் கனிந்து வரும்வரை காத்திருப்பது ஏற்புடையதல்ல. கடந்த காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வுப்பொதிகள், சிக்கல்கள் என்பன பற்றி நீண்ட கருத்துரையாடல்கள் எம்மையும், இதை வாசிக்க கூடிய சாதாரண மக்களையும் நன்கு தெளிவுபெற வைக்கும் என்பது திண்ணம்.

நண்பர்கள் நாரதர், குறுக்ஸ் போன்றவர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஐ.நா. சபையின் ஊடாக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து மேற்கொள்வதாகவே அமையும். இவ்வாறான தீர்வு முன்வைக்கப்படும்போது ஏற்கமுடியாது என்று இரு தரப்பும் கூற முடியாது.

நல்லாவே கற்பனை பண்ணுறாங்க..

ஐநா சில நாடுகளின் விடயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தேவையான அல்லது சாதகமான தீர்வுகளைத் திணிக்க முயன்றும் உள்ளது. அப்படி முயன்று அது தோற்ற சம்பவங்களும் வரலாறுகளும் உண்டு. சோமாலியா... சியராலியோன்.. கெயிட்டி.. என்று பல உதாரணங்களைச் சொல்லலாம்..!

எனவே.. ஐநா.. எமக்குச் செய்ய வேண்டியது.. ஒரு காத்திரமான மத்தியஸ்தர் பணி தான்..! தமிழ் மக்களின் உரிமைகளை அது தீர்மானிக்க முடியாது.. அதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..! அதற்கு தமிழ் மக்களிடம் பிரிவினை குறித்த பொதுசன வாக்கெடுப்பை நடத்தலாம். தமிழ் மக்கள் விரும்பும் பட்சத்தில் அவர்கள் பிரிந்து செல்லவும் விரும்பாத பட்சத்தில் அதற்குரிய வகையில்.. அவர்கள் விரும்பும் அதிகாரப் பகிர்வும் அளிக்கப்பட வேண்டும்..!

இது அகூதாவின் இணைப்பில் மேற்படி மேற்கோளுக்கு வழங்கப்படும் கருத்தாகும். :icon_idea:

  • தொடங்கியவர்

நெடுக்ஸ்,

மேலே ஈழத்திருமகன் கூறிய கருத்தும் தாயகத்தில் இருந்து வரும் வலம்புரியின் கருத்தும் நியாயமானது. அதாவது நாளைக்கு ஐ.நா. இல்லை அமெரிக்கா என்ன தீர்வை நீங்கள் விரும்புகிறீர்கள்? எனக்கேட்டால் ( அப்படி எதுவும் நடக்காது என இருப்பது தவறு) அவ்வாறான ஒரு தீர்வு கூட்டமைப்பிடம் உள்ளதா? அதற்கு மக்கள் பங்களிப்பு தேவையா? இல்லையா?

முன்னர் தேசத்தின் குரல் பாலா அண்ணை (விடுதலைப்புலிகள்) முன்வைத்த 'உள்ளடக்கப்பட சுயநிர்ணய உரிமை' ( Internal Right to Self-Determination) வரைபு ஒன்றை கூட்டமைப்பு தயாரித்து சமர்ப்பிப்பதில் நட்டமில்லை.

தமக்கான தீர்வு என்ன என்பதை தாயக மக்களே தீர்மானிக்க முடியும்.ஆனால் வெறும் நோக்கர்கள் அல்லது அரசியல் அவதானிகள் என்னும் வகையில் சில கருத்துக்களைச் சொல்லலாம்.

சிறிலங்கா அரசென்பது சிங்களப் பவுத்த பேரினவாத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப் பட்ட யாப்பையும் அனைத்து அதிகாரம் படைத்த பெரும்பான்மை சிங்கள மேலாதிக்க ஜனாதிபதி முறைமையையும் கொண்ட ஒரு நாடு.இத் தகைய நிலமையில் தமிழ்த் தேசிய இனத்தின் ஜன நாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் , சிறிலங்கா அல்லது இலங்க்கை மறு சீரமைக்கப்பட வேண்டும்.

பெரும்பான்மை, சிறு பான்மை என்னும் ஒன்றுபட்ட அரச அலகின் கீழ் இது என்றுமே சாத்தியப்படப் போவதில்லை.அப்படியாயின் இது இரு சமமான அதிகாரங்களைக் கொண்ட அரசுகளின் கீழேயே சாத்தியமானது. இரண்டு அரசுகள், ஒரு நாடு என்னும் போது, அரசு என்பதற்க்கு எத்தகைய அதிகாரங்கள் இருக்க வேண்டும்? ஒரு நாடு என்னும் போது அது இரு சமமான அரசுகளின் ஒரு கூட்டிணைவாகவே இருக்க முடியும். இதில் நாட்டின் அதிகாரம் என்பது இரண்டு அரசுகளின் கூட்டான செயற்பாடுகள் மூலமே சாத்தியப்படும்.

ஒரு நாட்டுக்குள் , இரு வேறு அரசுகளுக்கு இருக்கும் உள்ளக சுய நிர்ணய உரிமையா உள்ளக சுய நிர்ணய உரிமை எனப்படுகிறது.அல்லது ஒரு அரசுக்குள் இன்னொரு அரசின் சுய நிர்னய உரிமையா உள்ளக சுய நிர்ணய உரிமை எனப்படுகிறது என்பது தெளிவில்லாத ஒரு கோட்பாடு.ஏனெனில் ஒரு அரசிற்க்குள் இன்னொரு அரசு சுயமாக இயங்க முடியாது.அது சுய நிர்ணய உரிமை அல்ல, அது வெறும் அதிகாரப் பரவலாக்கம். 13 ஆவது திருத்தம் என்று இந்தியா முன் மொழிவதும் , தமிழத் தேசியக் கூட்டமைப்பு இன்று பேசும் தீர்வும் இத்தகையதே. இது என்றுமே தீர்வாக அமையப் போவதில்லை.

கஜேந்திர குமார் கூறுவது போல சுயனிர்னய உரிமை என்பதைப் பாதுகாக்கக் கூடிய தீர்வாக ஒரு நாடு இரு அரசுகள் என்னும் கோட்பாடே உண்மையான சுயனிர்ணய ஜன நாயக அரசாகவும் தமிழ் சிங்கள் மொழி பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வாகவும் அமையக் கூடியது.இதனை இந்தியாவோ சிறிலங்காவோ தரப் போவதில்லை.

கூட்டமைப்பில் இருகும் சுமந்திரன் போன்றோர் எதாவது தீர்வு வந்தால் சரி என்னும் நிலையில் இருகிறார்கள்.போரினால் கடும் இன்னலுக்குள்ளான மக்கள் தாங்கள் சூவாசிக்க இதாவது போதும் என்னும் நிலையில் இருகிறார்கள்.வெற்றி கொண்ட சிங்களப் பேரின்வாதமோ ,உங்களுக்கு ஒரு தீர்வும் இல்லை என்று சொல்கிறது.இதில் இந்தியாவினதும், அதன் உள் ஊர் முகவரான சம்பந்தன் சுமந்திரன் கூட்டினதும் நிலை இதில் தர்மசங்கடமானது.

சிங்களப் பேரினவாதாம் புலி வருகுது புலி வருகுது என்று சொல்லி சிங்கள மக்களை மேலும் இனவாதச் சேற்றுக்குள் இழுக்கும்.ஏனெனில் அதன் மூலமே வருகின்ற பொருளாதாரச் சிக்கலில் இருந்து மக்களைத் திசை திருப்பி தொரந்தும் ஆட்ச்சி செலுத்த முடியும்.இதன் மூலம் அது மேலும் மேலும் சீனச் சார்பு நிலை எடுக்கும்.

ஈற்றில் வெளினாட்டுப் படைகள் சிறிலங்காவில் கால் பதிப்பதற்கான நிக்ழவுகள் நடந்தேறி, இரு வேறு அரசுகள் என்னும் தீர்வே ஏற்படுத்தப்படலாம்.இதில் இந்தியா என்ன நிலை எடுக்கும் என்பது முக்கியமானது.இந்திய அரசில் மானிலக் கட்ச்சிகளின் கை ஓங்குவதும், காங்கிரசின் பலம் வட மானிலங்களில் நீர்த்துப் போவதும், தமிழ் நாட்டில் ஒன்று பட்ட தமிழரின் எழுச்சியும் ,மத்திய அரசில் அதன் பங்கும் எமக்குச் சாதகாமான நிலமைகளை உருவாக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.