Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குணரட்ணம் கடத்தப்பட்ட சம்பவம்: கிரிபத்கொடவில் நடந்தது என்ன?; வெளிவரும் புதிய தகவல்கள்

Featured Replies

குணரட்ணம் கடத்தப்பட்ட சம்பவம்: கிரிபத்கொடவில் நடந்தது என்ன?; வெளிவரும் புதிய தகவல்கள்

முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவர் பிறேமகுமார் குணரட்ணம், அந்தக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான திமுது ஆட்டிக்கல ஆகியோரை தாம் கைது செய்யவில்லை என்று இலங்கை பாதுகாப்புத் தரப்புகள் கைவிரித்துள்ள நிலையில், இவர்கள் கடத்தப்பட்ட சூழல் பற்றிய பின்னணித் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

ஆயுதம் தாங்கிய நபர்கள் சிலர் நேற்று அதிகாலை குணரட்ணத்தின் வீட்டுக்குச் சென்றதை அயல்வீட்டுக்காரப் பெண் ஒரு வர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளிவந்துள்ள மேலதிக தகவல்கள் வருமாறு:

இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த முற்போக்கு சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடு தொடர்பாக, வெள்ளிக்கிழமை மாலை மடிவெல என்ற இடத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குணரட்ணமும், திமுது ஆட்டிக்கலவும் அதன் பின்னரே இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

குறித்த கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை மாலை 6. 30 மணியளவில் முடிவடைந்தது. அதையடுத்து இருவரும் தத்தம் வீடுகளுக்குப் புறப்பட்டுச்சென்றனர். குணரட்ணம் கட்சிச் செயற்பாட்டாளரான மெய்க்காவலர் ஒருவருடன் தனியான வாகனம் ஒன்றில் புறப்பட்டுச் சென்றார்.

அவர்கள் இருவரும் நேராக கிரிபத்கொட பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்றனர்.

கிரிபத்கொடவில் இலக்கம் 291/1 கெமுனு மாவத்தையில் உள்ள வீட்டில் குணரட்ணம் தனியாகவே வசித்து வந்தார்.

அவரை அங்கு இறக்கி விட்டபின்னர், அவரது மெய்க்காவலர் வேறு இடத்துக்குச் சென்றார்.

இரவு 11 மணியளவில் தனது மெய்க்காவலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட குணரட்ணம், தன்னை அதிகாலை 5 மணியளவில் வந்து ஏற்றிச் செல்லுமாறு கூறியிருந்தார்.

குணரட்ணம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடினார். அதுவே அவருடனான கடைசித் தொடர் பாடலாக இருந்தது. அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

அதிகாலை 5 மணிக்கு குணரட்ணத்தை அழைத்துச் செல்ல அவரது மெய்க்காவலர் வாகனத்துடன் அங்கு வந்தார்.

எனினும் நீண்டநேரமாகியும் குணரட்ணம் வெளியே வரவில்லை. சந்தேகம் கொண்ட மெய்க்காவலர் அந்தப் பகுதியை நோட்டமிட்டபோது வீட்டுக்கு வெளியே நான்கு சக்கர வாகனத்தின், சக்கர அடையாளங்களைக் கண்டார். வீட்டின்பின்புறக் கதவு உடைக்கப் பட்டிருந்தது.

குணரட்ணத்தின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், அங்கு ஒரு போராட்டம் நடந்ததற்குமான தடயங்களை மெய்க்காவலர் கண்ணுற்றார். அவர் ஏனைய உறுப்பினர்களுக்கு இது தொடர்பாக அறிவித்த பின்னரே குணரட்ணம் கடத்தப்பட்ட விடயம் தெரியவந்தது.

இதேவேளை, குணரட்ணத்தின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் பொலிஸாரிடம் பின்வருமாறு சாட்சியம் அளித்துள்ளார்.

"ஆயுதம் தாங்கிய 4, 5 நபர்கள் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் குண ரட்ணம் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தனர். அவர்களில் சிலர் எங்களது வீட்டுக்கு வந்து எரிந்துகொண்டிருந்த மின் விளக்குகளை அணைத்து விட்டு உள்ளே போகுமாறு அச்சு றுத்தும் தொனியில் மிரட்டினர். அதன் பின்னர் வித்தியாசமான சத்தங்களை கேட்க முடிந் தது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடப்பதை உணரமுடிந்தது. ஆனாலும் என்ன செய்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை.

எனினும் அதிகாலை 5.15 மணிக்கு வெளியே பார்த்தபோது வழக்கத்துக்கு மாறாக எதுவும் தெரியவில்லை. எல்லாமே இயல்பாக இருப்பது போல இருந்தது.'' என்றனர்.

நேற்றுமுன்தினம் அதிகாலை குணரட் ணம் கடத்தப்பட்டபோதும் காலை 8 மணி வரை, அவரது 0713519722 என்ற இலக்கக் கைபேசி இயங்குநிலையில் இருந்தது.

ஆனால் தொடர்பு கொண்டபோது பதில் இல்லை. தற்போது அதன் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. அல்லது அழைப்பு பெறமுடியாத நிலையில் உள்ளது.

நேற்றுமுன்தினம் காலை 8 மணி வரை அந்தக் கைபேசி கிரிபத்கொட பகுதியிலேயே இருப்பதை ஜிபிஎஸ் கணிப்புகள் உறுதிப்படுத்தின என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மேலதிகமான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.

அதேநேரம் கலந்துரையாடலை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு திமுது ஆட்டிக்கல பஸ் ஒன்றில் தலவத்துகொடவில் உள்ள தனது வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

காணாமற்போயுள்ள திமுது ஆட்டிக்கலவை கடைசியாக பார்த்தவர் கட்சியின் மற்றொரு தலைவரான துமிந்த நாகமுவ.

கொஸ்வத்த பேருந்து நிலையத்தில் அவர் மாலை 6 மணியளவில் திமுது ஆட்டிக்கலவை இறக்கி விட்டார்.

32/14/7 ஹைலெவல் வீதி, ஹெனவத்த, மீகொடவில் உள்ள வீட்டுக்கு திமுது புறப்பட்டுச் சென்றதை நாகமுவ உறுதி செய்துள்ளார்.

ஆனால் மறுநாள் காலையில் அவரது 0770325567 என்ற இலக்க கைபேசிக்கு அழைத்தபோது பதில் கிடைக்கவில்லை.

நேற்றுமுன்தினம் காலை 11 மணிவரை அந்தக் கைபேசி இயங்கிக் கொண்டிருந்தது. அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பவில்லை என்பதும் உறுதி யாகியுள்ளது.

குணரட்ணம் காணாமற் போனதையடுத்து பொலிஸ் மா அதிபரிடமும்,கிரிபத்கொட, பிலியந்தல பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்யப்பட்டது. "இந்தக் கடத்தல் அரசியல் நோக்கம் கொண்டது. எமது இன்றைய மாநாட்டை நிறுத்துவதற்கான முயற்சியே இது''என்று தெரிவித்துள்ளார் முற்போக்கு சோ\லி\க் கட்சியின் செயற்பாட்டாளர் சேனாதீர குணதிலக.

அண்மையில் விடுமுறைக்காக இலங்கை வந்த குணரட்ணத்தின் மனைவி ஆஸ்திரேலியா திரும்பும்போது விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அதேவேளை, இந்தக் கடத்தல் பற்றிய எந்தவொரு முறைப்பாடும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவினராலோ அல்லது வேறு எந்தக்பொலிஸ் பிரிவினராலோ குணரட்ணம் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸ் திணைக்களப் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவரான குணரட்ணம் காணாமற்போன விடயம் குறித்து கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகத்திடமும் முறையிடப்பட்டுள்ளது. குணரட்ணத்தை இலங்கை அரச கடுமையாகக் கண்காணித்து வந்ததாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர். இவர்கள் இருவரையும் அரச படையினரே கடத்தியுள்ளனர் என்று கட்சி உறுப்பினர்கள் நம்புகின்றனர்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, குறிப்பாக வடக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தக் கட்சி பரப்புரைகளை மேற்கொள்ளத் தொடங்கியதன் விளைவாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சியினர் கருதுகிறார்கள்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=79298963310156376

  • தொடங்கியவர்

பிறேம்குமார் குணரட்ணத்தை தாம் கடத்தவில்லையென இலங்கை அரசு மறுத்தது.

ஜே.வி.பியிலிருந்து பிரிந்து முற்போக்கு சோசலிச குழுவை ஆரம்பித்த பிரேம்குமார் குணரட்ணத்தினைத் தாம் கடத்தவில்லையென இலங்கை அரசு மறுத்தது.

ஓஸ்ரேலிய குடியுரிமை பெற்ற பிறேம்குமார் குணரட்ணம், மற்றும் அவரது கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி திமுது ஆட்டிகல ஆகியோர் சனிக்கிழமை அதிகாலை காணாமற்போனார்கள்.

பிறேம்குமார் குணரட்ணத்தை இலங்கை இரகசிய காவல்துறையினர் கடத்திச் சென்றுள்ளதாக அவரது மனைவி தெரிவித்தார். தமது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாமென அவரது மனைவி அச்சம் வெளியிட்டார்.

இந்த நிலையில், ஒஸ்ரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் திசர சமரசிங்க, அந்தக் கடத்தலில் இலங்கை தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதை முற்றாக நிராகரித்தார்.

பிறேம்குமார் குணரட்ணம் என்பவர் அண்மைக் காலத்தில் இலங்கைக்குள் பிரவேசித்தமைக்கான ஆவணங்கள் இல்லையெனவும், அவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்தாரா என்றும் திசர சமரசிங்க கேள்வி எழுப்பினார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11643

  • தொடங்கியவர்

பிரேமகுமாரை விடுவிக்குமாறு ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சுக்கு கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் பசுமைக் கட்சியின் செனட்டரான லீ ரெய்னன் அவர்கள், இலங்கையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணத்தை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பொப் கார் அவர்களைக் கேட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலிய பிரஜையான பிரேமகுமார் குணரட்ணத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கருதும் நிலையில் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் இந்த விவகாரத்தை நேரடியாக இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

''இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதனால்தான் ஆஸ்திரேலிய செனட் சபையின் உறுப்பினர் என்ற வகையில் எமது வெளியுறவு அமைச்சரிடமும், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரிடமும் நான் இதனை எடுத்துச் சென்றிருக்கிறேன்'' என்று லீ ரெய்னன் கூறியுள்ளார்.

கடத்தப்பட்ட பிரேமகுமாரின் மனைவியான டாக்டர் சம்பா சோமரட்ணவை தான் தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசியதாகக் கூறியுள்ள செனட்டர் லீ, இந்த விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிரேமகுமாரை கைது செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவே உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியிருப்பது குறித்து தான் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் லீ அவர்கள் கூறியுள்ளார்.

இதற்கிடையே பிரேமகுமார் குணரட்ணத்தை தாம் தேடிக் கண்டுபிடிப்பதாயின் அவர் எப்போது இலங்கை வந்தார் என்பதை ஆஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் கூறியதாக இலங்கை செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியான பெயருடன் எவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்ததாக அந்தச் செய்தி கூறியுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய செனட்டர் லீ ரெய்னன் அவர்களிடம் கேட்டபோது, ''இலங்கை அரசாங்கம் இப்படிக் கூறுவது குறித்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் பிரேமகுமார் குணரட்ணத்தின் மனைவியுடன் இன்று பேசினேன். அவர் இந்தச் சம்பவம் குறித்து மிகுந்த கவலையில் இருக்கிறார். அத்துடன்,தனது கணவர் இலங்கையில்தான் இருக்கிறார் என்பதிலும், ஏப்ரல் 6 ஆம் திகதி கடத்தப்பட்டார் என்பதிலும் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அதனால், இந்த விடயத்தை மிகவும் உயர் மட்டத்துக்கு எடுத்துச் செல்லுமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துவேன்'' என்று செனட்டர் லீ ரெய்னன் கூறினார்.

அதேவேளை முன்னதாக பிரேமகுமார் குணரட்ணத்தின் மனைவியான டாக்டர் சம்பா சோமரட்ண அவர்கள், இது குறித்து ஐநாவின் மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தனது கணவரான பிரேமகுமார குணரட்ணம் என்று அழைக்கப்படும் ரட்ணாயக்க முதியன்சலாகே தயாலால் கடத்தப்பட்டதாக தெளிவாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடிதத்தில் தனது கணவரின் கடத்தல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் மீதே குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, இலங்கையில் மாற்று கருத்துக்கொண்டவர்கள் கடத்தப்படும் சூழ்நிலை தொடர்வதால், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கையர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது என்று கோரி ஆஸ்திரேலியாவில் ஒரு ஆர்ப்பாட்டம் இன்று நடந்துள்ளது.

இதுவரை கடந்த இரு மாதங்களில் இலங்கையில் 29 பேர்வரை கடத்தப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள செனட்டர் லீ ரெய்னன், தமது சொந்த அரசியல் கருத்துக்களுக்காக ஒரு ஆஸ்திரேலியப் பிரஜை இலங்கையில் ஆபத்துக்குள்ளாவது இது முதல் தடவை அல்ல என்றும் கூறியுள்ளார்.

http://www.bbc.co.uk...easekumar.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தனது கணவரான பிரேமகுமார குணரட்ணம் என்று அழைக்கப்படும் ரட்ணாயக்க முதியன்சலாகே தயாலால்

ஒன்றுமே புரியல்ல ....சோசலிசம் என்றால் இதுதானோ?

அதேவேளை பிரேமகுமாரை கைது செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவே உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியிருப்பது குறித்து தான் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் லீ அவர்கள் கூறியுள்ளார்.http://www.bbc.co.uk...easekumar.shtml

கோத்தபாயாவின் பேச்சு அதையேதான் சொன்னது இந்த திரியில்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100692

அதையேதான் மனோகனேசனும் "அரசின் குழந்தை பிள்ளை" கதை என்பதின் மூலம் சொல்கிறார். கோபத்தபயாவின் "அப்பா நெல்லு மூட்டை சாக்குள் இல்லை".

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100736

கோபத்தபயா "குணரத்தினம் அறிந்த பெயரை விட வேறு பெயரில் பயணம் செய்திருக்கிறார். என்வே நமது கடமை அவரைக்கடத்துவதாகும்" என்று வாதாடப்பார்க்கிறார். இது தெட்ட தெளிவாக காட்டுகிறது இவர்கள் குணரத்தினத்தை கனகாலம் தொடர்ந்து கொலைக்கு தேவையான நியாங்கள் எல்லவற்றையும் நேரத்திற்கே கூறுவதற்கு தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது.

  • தொடங்கியவர்

கடத்தப்பட்ட சிங்களவர்கள் விவகாரம் சர்வதேசமயப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் ..

- தமிழர் தரப்பு எவ்வாறான இடத்தை எடுக்கவேண்டும்?

- ஆதரவு குரல் கொடுக்கவேண்டுமா? அது எமது மக்களின் விடிவுக்கு உதவுமா?

- இல்லை இதனால் எமக்கு எந்தப்பயனும் இல்லை என விட்டுவிடவேண்டுமா ?

எப்போதுமே இலகுவில் பாதிக்கப்படுபவர்கள் தமிழர். கதிர்காமர் இலங்கைக்கு செய்த சேவைக்கு இறக்க வேண்டியிருந்தது தமிழன் என்பதால்.(நடந்த இரு சம்பவங்களில் - யாழ்பாணத்திலும், இதிலும்- தமிழர் தான் கொல்லப்பட்டிருக்கிறாகள்). இதில் யார் பாதிக்கப்பட்டவராகவும் இருக்கலாம். செய்வித்தது கோபத்தபயா. செய்ய உத்தரவிட்டது மகிந்தா. இது சர்வதேச நாடுகளின் மக்கள் பிரதிநிதிகளின் கூற்று. நாம் இந்த பிரதிநிதிகளுக்கு உதவி, இவர்கள் இருவரும் கேடித்தனமான குற்றவாளிகள் என்ப்தை நிரூபிக்க உதவவேண்டும். அது இவர்கள் போர்க்குற்றவாளிகள் என்பதை நிரூபிக்க உதவும். அது ஒருநாள் இவர்கள் இனவழிப்பு குற்றவாளிகள் என்பதை நிரூபிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.