Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து இன்றுடன் 100 ஆண்டுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

titanic-100412-150.jpg

உலகை உருக்கிய வரலாற்றுச் சம்பவங்களில், முக்கியமானதாக டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததும் கருதப்படுகிறது. 1912ம் ஆண்டு ஏப். 10ம் தேதி, தனது முதலும் கடைசியுமான பயணத்தை துவக்கிய இந்த கப்பலை நினைவு கூறும் விதமாக, உலகம் முழுவதும் நூறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டைட்டானிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பல் இது. 1909 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் நடந்தன. 882 அடி நீளம், 175 அடி உயரம் 46328 டன் எடை, 9 தளங்களையும் கொண்டது. 2,435 பயணிகள், 892 பணியாட்கள் தங்கலாம். ஆபத்து காலத்தில் உதவும் வகையில், 20 லைப் படகுகள் இருந்தன. இவற்றின் உதவியுடன் 1,178 பேர் உயிர் பிழைக்கலாம்.

1912, ஏப்.12ல் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து, நியூயார்க்கை நோக்கி, கேப்டன் எட்வர்டு ஸ்மித் தலைமையில், 2,224 பயணிகளுடன் தன் பயணத்தை துவக்கிய டைட்டானிக் கப்பல், ஏப்.14ம் தேதி நள்ளிரவு 11.40 மணிக்கு, அட்லாண்டிக் கடல் பனிப்பாறையின் மீது மோதியது. மீட்புப் படையினர் வருவதற்குள் 2 மணி 40 நிமிடங்களில் முற்றிலுமாக மூழ்கியது.

கடலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயல்படாததே விபத்திற்கு காரணம் என கப்பலில் பயணம் செய்த கேப்டனின் பேத்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் பயணம் செய்த 1,514 பேர் இறந்தனர்.மற்றவர்கள் லைப் படகுகள் உதவியுடன் தப்பித்தனர். கடலில் விழுந்தவர்கள் கடும் குளிர் (-2 டிகிரி செல்சியஸ்) காரணமாக உறைந்து இறந்தனர்.

விபத்திற்குள்ளான கப்பலின் பாகங்கள் 12,000 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தன. 1985, செப்.1ல் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு, பிரான்சை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பாகங்களை எடுத்த போட்டோ ஒன்று மட்டுமே பல கோடிக்கு விற்பனையானது.

1997ம் ஆண்டு இச்சம்பவத்தை அடிப்படையாகவும் காதலை மையமாகவும் கொண்டு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமரூன், டைட்டானிக் என்ற படத்தை தயாரித்தார். கப்பலையும், விபத்தையும் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்த படம் ஏற்படுத்தியது. இப்படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. தற்போது, கப்பலின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்த படம் மீண்டும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு, மீண்டும் வசூல் செய்கிறது.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தும் நோக்கில், தி பால்மோரல் என்ற கப்பல், நேற்று சவுத்தாம்டனிலிருந்து புறப்பட்டு டைட்டானிக் கப்பல் சென்ற அதே பாதையிலே பயணித்து ஏப்ரல் 15ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளது.

http://www.seithy.co...&language=tamil

முதலில் இந்தக்கப்பல் நீண்ட காலத்திற்கு தண்ணீருக்கு அடியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய பக்டீரியா கப்பலின் மிச்சத்தை உண்கின்றதாம் அதனால் சில வருடங்களில் முழுக்க முழுக்க இல்லாமல் போய்விடுமாம்.

titanic3d31.jpgவிமானப்பயணங்கள் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருந் தொகை பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பிரபலமாக இருந்தன. ஜக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் அந்தக் காலத்தில் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் அதியுயர் மேம்பாடு அடைந்திருந்தன.

வைற் ஸ்ரார் லைன் (White Star Line) என்ற ஜக்கிய இராச்சியத்தின் தனியாருக்குச் சொந்தமான பயணிகள் கப்பல் நிறுவனம் டைட்டானிக் கப்பலுக்கு உரிமையாளராக இருந்தது. எதுவிதத்திலும் மூழ்காது என்ற உத்தரவாதத்துடன் இந்தக் கப்பல் தனது கன்னிப் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்குத் தொடங்கியது.

நான்கு புகை போக்கிகளைக் கொண்ட இந்தக் பிரமாண்டமான கப்பலில், கப்பல் விபத்திற்கு உட்பட்டால் “ உயிர்காக்கும் படகுகள்” (Lifeboats) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொண்டு செல்லப்பட்டன.

இதற்கு மேற்கூறிய உத்தரவாதமும் அதிக எண்ணிக்கையில் இந்தப் படகுகளை ஏற்றிச் சென்றால் பயணிகளின் நம்பிக்கை கெட்டு விடும் அத்தோடு கப்பலின் அழகும் பாதிக்கப்பட்டு விடும் என்று காரணம் சொல்லப்படுகிறது.

கப்பல் நிறவனத்தின் உத்தரவாதத்தை மீறிய டைட்டானிக் (Titanic) என்ற பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தில் அத்திலாந்திக் கடலில் மிதக்கும் பனிப் பாறையுடன் (Iceberg) மோதி 1912 ஏப்ரல் 14ம் நாள் இரு பாகங்களாக உடைந்து மூழ்கியது.

titanic81.jpgஇந்தவிபத்தில் 1,517 பேர் உயிரிழந்தனர். உயிர் காக்கும் படகுகள் கூடிய எண்ணிக்கையில் இருந்திருந்தால் இதில் 1,500 உயிர்களாவது காப்பாற்றப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் கப்பலில் அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் தொடக்கம் ஜரோப்பாவின் புதிய வாழ்க்கையைத் தேடும் கிராமப் புற மக்களும் பயணித்தனர்.

மேல் தட்டு முதலாம் வகுப்பில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டு வங்கிகளின் சொந்தக்காரர்கள், பரம்பரைச் செல்வந்தர்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்.

மலிவுப் பயணம் செய்தோர் வசதிகள் குறைந்த கப்பலின் அடிப்பாகத்தில் பயணித்தனர். ஜரோப்பிய மதக் கலவரங்கள், வேலை நிறுத்தம் செய்ததற்காகத் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள், நிலங்களை இழந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்குச் சென்றனர்.

லெபனோன், சீரியா (Lebanon, Syria) போன்ற மத்திய கிழக்கு நாட்டவர்களும் குடும்பங்களோடு இடம்பெயர்ந்து சென்றனர். பெல்ஜியம், பின்லாந்து, சுவீடன், டென்மார்க், குரோசியா, ஜேர்மனி போன்ற நாட்டவர்களும் புதிய வாழ்வைத் தேடிச் சென்றனர்.

பெருமளவு உயிரிழப்பிற்கு உயிர் காக்கும் படகுகளின் தட்டுபாடு மாத்திரமல்ல டைட்டானிக் கப்பலின் வானொலி இயங்காமல் இருந்ததும் காரணமாக இருக்கிறது. வானொலி நல்ல நிலையில் இருந்திருப்பின் பிற கப்பல்களை உதவிக்கு அழைத்திருக்க முடியும்.

அந்த இரவில் மிதக்கும் பனிப் பாறைகள் பற்றிய எச்சரிக்கையை அத்திலாந்திக் கடலில் சென்ற பிற கப்பல்கள் டைட்டானிக் கப்பல்களுக்கு அனுப்பின ஆனால் வானொலி முடங்கிக் கிடந்ததால் எச்சரிக்கைகள் வீணாகின.

பிரமாண்டமான டைட்டானிக் கப்பலில் இன்னொரு தொழில் நுட்பக் கோளாறு இருந்தது. கப்பலைத் திசை திருப்ப உதவும் சுக்கானுக்கும் (Rudder) சுக்கானைத் திருப்பும் பிடிக்கும் (Tiller) இடையிலான தொடர்பில் 37 நொடி (37 Seconds) நேர வித்தியாசம் இருந்தது.

இதனால் இறுதி நேரத்தில் பனிப் பாறையுடன் மோதுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. டைட்டானிக் விபத்திலிருந்து படிக்க வேண்டிய முக்கிய பாடங்கள் இருக்கின்றன நவீன தொழில் நுட்பத்தால் இயற்கையை மோதி வெல்ல முடியாது. எங்கோ ஒரு இடத்தில் மனிதத் தவறு வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

இரு துண்டுகளாக உடைந்த கப்பல் இரண்டு மணிக்கும் சற்றுக் கூடிய நேரத்தில் அத்திலாந்திக் கடலின் 12,600 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. இன்றும் அது அங்கேயே கிடக்கிறது. இந்த விபத்து பற்றி ஆய்வு நூல்கள், மேடை நாடகங்கள், திரைப் படங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.

Titanic2-300x232.jpgகப்பல் மூழ்கிய 29 நாட்களில் ஒரு பத்து நிமிடப் படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் பிரதம பாகத்தில் நடித்தவர் 22 வயது நடிகை டொறித்தி கிப்சன் ( Dorothy Gibson) இவர் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து காப்பாற்றப்பட்டவர்.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது “முதலாவதாகப் பெண்களும் சிறுவர்களும்” (Women and Children) என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டது. உயிர் காக்கும் படகுகளில் இவர்கள் தான் முதலில் ஏற்றப்பட்டனர். ஆனால் மலிவுப் பயணம் செய்த பல பெண்களும் சிறுவர்களும் காப்பாற்றப் படவில்லை.

சில ஆண்கள் பெண்களையும் சிறுவர்களையும் முந்திக் கொண்டு படகுகளில் ஏறித் தப்பிச் சென்றனர். சில உயர் குடிப் பிறந்த பெண்கள் தங்கள் கணவர்களைப் பிரிய மறுத்து அவர்களோடு கடலில் மூழ்கினர். பலவிதமான மனித இயல்புகள் அந்த நள்ளிரவில் வெளிப்பட்டன.

டைட்டானிக் மூழ்கிச் சரியாக ஒரு நூற்றாண்டாகிறது. அத்திலாந்திக் கடலில் மிதக்கும் பனிப்பாறை ஆபத்தைப் போக்கும் தொழில் நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. அவை ஒரே இடத்தில் நிற்காமல் மிதக்கின்றன அவற்றின் பெரும் பகுதி நீர் மட்டத்திற்குக் கீழே இருக்கின்றன.

பனிப்பறைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு வர்ணம் பூசப்படுகின்றன. அவற்றின் மீது குண்டு வீசித் தகர்க்கப் பட்டுள்ளன. றாடர் திரை மூலமாகவும் செய்மதி மூலமாகவும் பனிப் பாறைகள் அவதானிக்கப் படுகின்றன.

ஆனால் வருடமொன்றுக்குச் சராசரி இரண்டு மோதல்கள் நடக்கின்றன. பெப்ரவரி – யூலை மாதங்களில் ஆபத்துக்கள் கூடுதலாக இருக்கின்றன. ஜனவரி 1959ல் 95 பயணிகளோடு ஒரு கப்பல் மூழ்கியது. ஆனால் அந்தப் பக்கத்தில் சென்ற இன்னொரு கப்பல் அவர்களைக் காப்பாற்றியது.

மூழ்கடிக்க முடியாத கப்பல் இன்னும் கட்டப்படவில்லை. வீழ்ந்து நொருங்காத விமானம் இன்னும் உருவாக்கப் படவில்லை. வெடித்துச் சிதறாத அணு உலை இன்னும் நிறுவப்படவில்லை. பனிப் பாறை ஆபத்தும் இன்னும் நீங்கவில்லை.

www.Tamilkathir.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்தக்கப்பல் நீண்ட காலத்திற்கு தண்ணீருக்கு அடியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய பக்டீரியா கப்பலின் மிச்சத்தை உண்கின்றதாம் அதனால் சில வருடங்களில் முழுக்க முழுக்க இல்லாமல் போய்விடுமாம்.

நூறு ஆண்டுகளுக்கு இருந்ததே பெரிய விடயம் அல்லவா

இந்தக்கப்பலில் இருந்த பல பொருட்கள் கனடாவின் ஒரு பெரிய துறைமுகமான ஹலிபாக்ஸில் (Halifax) உள்ள நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு இருந்ததே பெரிய விடயம் அல்லவா

முன்னராக ஆயிரம் வருடங்கள் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டது.

தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது. கப்பல் மூழ்கிய திகதி ஏப்ரல் 15, 1912. டைடானிக் படம் பார்த்தால் தெரியும், அதிலும் ஏப்ரல் 15, 1912 இல் மூழ்கியதாக கூறுகின்றார்கள். 

 http://en.wikipedia.org/wiki/RMS_Titanic

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.