Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிகா – மன்மோகன்சிங் டில்லியில் சந்திப்பு.

Featured Replies

முன்னாள் அதிபர் சந்திரிகாவிற்கும் – இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே திடீர் சந்திப்பு ஒன்று டில்லியில் இடம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பினால் மஹிந்த இராஜபக்‌ஷ குடும்பம் அதிர்ச்சியில் உள்ளது.

மஹிந்த இராஜபக்‌ஷ குடும்பம் இந்தியாவுடனான உறவினை சரியாகப் பேணவில்லை என்பதாலேயே இந்தியா சிறிலங்காவிற்கு எதிராக நடவடிகை எடுக்க துணிந்தது என்ற கருத்து சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள்ளும் வெளியேயும் புகைந்து வருகின்றது. இதே வேளை சந்திரிகா இருந்திருந்தால் இவ்வாறான ஒரு விபரீதம் நடந்திருக்க மாட்டாது எனவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலிலேயே இந்தச் சந்திப்பு சந்துள்ளது.

இந்தச் சந்திப்பில் ஈழத்தமிழர்களின் பிரச்சினை உட்பட இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 13ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்திரிகாவின் விருப்பத்தைக் கேட்டதாகவும் அதற்கு அவர் பச்சைக் கொடி காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பின்போது இலங்கை அரசியல் விவகாரங்கள் உட்பட முக்கிய பல விடயங்கள் குறித்து இந்தியப் பிரதமருக்குச் சந்திரிகா விரிவான விளக்க மொன்றை வழங்கியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

அத்துடன், இந்தியப் பிரதமரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியிடம் முக்கிய பல விடயங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் அவசரப் பேச்சில் ஈடுபட்டமை கொழும்பு அரசியில் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராப்போசன விருந்துடன் இந்த முக்கியச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அரசியல் தீர்வு குறித்து, இலங்கை அரசின் பிரதானக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு இந்தியா உள்ளூரத் தயாராகி வருகிறது எனத் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இந்தப் பேச்சு இடம்பெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சந்திரிக்கா இருந்திருந்தால் இந்தி உறவு மட்டுமல்ல சர்வதேச உறவும் நல்ல முறையில் இருந்திருக்கும் அதே வேளை தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளும் தொடந்திருக்கும். இதுவே சிங்களவர்களின் கருத்தாக இப்போது இருக்கின்றது.

http://thaaitamil.com/?p=16177

  • கருத்துக்கள உறவுகள்

It shows the bankruptcy of Indian diplomacy.

சந்திரிக்காவின் அறுந்த செருப்பை மன்மோகன் தைத்துக் கொடுத்திருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.