Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜபக்ச ஒரு போதும் தீர்வுத்திட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடமாட்டார்!- திஸ்ஸ விதாரண

Featured Replies

மஹிந்த ராஜபக்ச ஒரு போதும் தீர்வுத்திட்ட ஒப்பந்தங்களில் தமிழ் கூட்டமைப்புடன் கைச்சாத்திடமாட்டார்.

ஏனென்றால், பெரும்பான்மை இன மக்களின் ஆதரவுகளை இழக்க நேரிடும் என்ற அச்சமே பிரதான காரணமாகும்.என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுகையில்,

இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் என்பது முக்கியமானதொரு விடயமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நற்செய்தி யொன்றை நாட்டிற்கும் உலகிற்கும் வழங்கியுள்ளார்.

எனவே, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நிபந்தனையற்ற பேச்சுக்களை அரசாங்கம் கூட்டமைப்புடன் முன்னெடுப்பதே சிறந்தது என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு போதும் தீர்வுத்திட்ட ஒப்பந்தங்களில் கூட்டமைப்புடன் கைச்சாத்திடமாட்டார். ஏனென்றால், பெரும்பான்மை இன மக்களின் ஆதரவுகளை இழக்க நேரிடும் என்ற அச்சமே பிரதான காரணமாகும்.

இதனை தாம் சம்பந்தன் எம்.பி.யிடம் விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சகல கட்சிகளும் காலம் கடத்தாது ஒன்றிணைந்து செயற்படுவதனால் மாத்திரமே நிலையான தீர்வுத் திட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

அண்மையில் யாழ். மேதினக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சிறந்த செய்தியொன்றை வெளிப்படுத்தியிருந்தார்.

அதாவது பிரிவினைவாதத்தை புறந்தள்ளி விட்டு, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை ஏற்படுத்துவதே ஆகும். இந்த செய்தியினை அரசாங்கம் உட்பட அனைத்து தரப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்து செயற்படமாட்டார். ஆரம்பக் காலங்களில் பண்டா - செல்வா மற்றும் டட்லி - செல்வா போன்ற ஒப்பந்தங்களின் மூலம் அச் சிங்கள தலைவர்கள் பெரும் பான்மை இன மக்களின் ஆதரவுகளை இழந்தனர்.

இந்நிலை தனக்கு ஏற்படக் கூடாது என்பதில் தற்போதைய ஜனாதிபதியும் உள்ளார் என்பதே உண்மை. இது தொடர்பில் சம்பந்தன் எம்.பி.யிடம் பல முறை கூறியுள்ளேன்.

எனவே, பாராளுமன்ற தெரிவுக் குழுவை அரசியல் தீர்விற்கான களமாக பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது. இதில் அனைத்து தரப்புகளும் உள்வாங்கப்படுவதால் விமர்சனங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

எவ்வாறாயினும் அரசாங்கம் கூட்டமைப்பை தெரிவுக்குழுவிற்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இதற்கான நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

http://nilavaram.com/index.php?option=com_content&view=article&id=9836%3A2012-05-08-11-34-27&catid=3%3Asri-lanka&Itemid=459

ஒப்பந்தம் எழுதிக் கிழித்த அரசுகளுடன் ஒப்பந்தம் இல்லாத தீர்வாம். அதாவது அரசு தீர்வு ஒன்றை அளித்தால் தான் செல்வாகை இழக்க நேரிடும் என்கிறது. இதை ஏற்க மறுத்து சம்பந்தர் அறிக்கை விட வேண்டும். 4ம் பங்குதாற்றர் ஒருவரை பேச்சு வார்த்தைக்குள் இணைக்க வேண்டும். இதில் இந்தியாவின் உடன் படிக்கை மூலம் வந்த 13ம் திருத்தம் இனி இல்லை BJPக்கு இதை விளங்க வைக்க வேண்டும்.

இந்த நிலைப்பாட்டுடன்தான் பீரிசு கில்லாரி கிளினரை சந்திக்க போகிறார். கிளிரன் கேட்ட மாதிரி பீரிசு எடுத்து செல்லும் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் இல்லை. எனவே பீரிசு திஸ்ச விதாரணவின் அறிக்கையையும் மறுக்கவில்லை என்பதையும் கிளிரனின் கவனத்திற்கு கொண்டுவர புலம் பெயர் அமைப்புக்கள் முயல வேண்டும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102251&#entry759082

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.