Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிற்கு புதிய அரசியல் தலைமைத்துவத்தை அறிமுகப்படுத்துமாறு கோத்தபாய ஜனாதிபதியிடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gota-mahinda_CI.jpg

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை பதவி விலக செய்து, அந்த இரண்டு நாடாளுமன்ற பிரதிநித்துவங்களை வடக்கை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் இருவருக்கு வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வடபகுதி மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை எனவும் இதனால் வடபகுதி மக்களுக்கு நெருக்கமான தமிழ் அரசியல் தலைவர்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதுடன் இதற்கு பொருத்தமான சில தமிழ் இளைஞர்களை தான் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிற்கு புதிய அரசியல் தலைமைத்துவத்தை அறிமுகப்படுத்தாது, போரில் பெற்ற வெற்றியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியுள்ள பாதுகாப்புச் செயலாளர், எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் போன்றவர்களினால் போதிய பயன் கிடைக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளரின் கருத்துக்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் தற்போது தேசியப்பட்டியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரை பதவி விலக செய்ய தனக்கு தேவையாக இருந்த போதிலும் எவரும் அதற்கு இணங்க வைக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

யார் அந்த இரண்டு நபர்கள்? சம்பந்தரும் சுமந்திரனுமா?

கோடி புண்ணியம்.

பிள்ளையானின் முதலமைச்சர் பதவியைப் பறித்துவிட்டு ஒரு பிரதிநிதி.

அடுத்தது இருக்கவே இருக்கிறது டக்கீசின் தோல்கள் இன்னொரு பிரதிநிதி.

இவர்களிடம் பிரதிநிதிகள் வேண்டுமென யார் கேட்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வடபகுதி மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை எனவும் இதனால் வடபகுதி மக்களுக்கு நெருக்கமான தமிழ் அரசியல் தலைவர்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்பு ஆட்சிக்கு வந்த எவரும் தமிழ்மக்களின் விருப்புக்குறிய பிரதிநிதிகளை அரச பக்கம் வைத்திருக்கவில்லை.....மக்களால் வேறுக்கப்பட்டோரே அரசுடன் சேர்ந்திருந்தனர்செல்லையா குமாரசாமி,தேவநாயகம்,ராசதுரை,கனகரத்தினம்,அல்பிரட்துரையப்பா

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.