Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க அழுத்தத்திற்கு மகிந்தர் பணிந்துள்ளாரா?

Featured Replies

இலங்கை தொடர்பாக அமெரிக்கா மீண்டும் அழுத்தங்களைத் கொடுக்கத் தொடங்கிவிட்டது. இந்தத் தடவை அழுத்தங்கள் ஒரு வழிப்பட்டதாக இருக்கவில்லை. அரசாங்கம் திணறக் கூடிய வகையில் பல வழிப்பட்டதாகவே இருந்தன. வெளிநாட்டமைச்சர் பீரிசை அமெரிக்காவிற்கு அழைத்தல்இ இந்தியாவுடன் இணைந்து கூட்டழுத்தத்தைக் கொடுத்தல்இ பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைக் கொடுத்தல்இ உள்நாட்டில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுதல்இ ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினூடாகவும் ஏனைய மனித உரிமைகள் அமைப்புகளினூடாகவும் அழுத்தங்களைக் கொடுத்தல் எனப் பல வழிகளினாலும் அழுத்தங்கள் தொடர்கின்றன.

மே 18ம் திகதி வெளிநாட்டமைச்சர் பீரிசை சந்திப்பதற்கு அமெரிக்கா அழைத்துள்ளது.

வரும்போது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்துவதற்கான வரைபடத்தை சமர்பிக்கும்படியும் கேட்டுள்ளது. அந்த வரைபடத்தை முதலில் இலங்கையில் வெளியிட்ட பின்னரே தம்மிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளது. வரைபடத்தில் என்னென்ன விடயங்கள் இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் இலங்கை அரசுடன் பேசி வருகின்றனர். அரசாங்கம் சிங்கள மக்களுக்கு வீரவசனங்களைப் பேசினாலும் அமெரிக்காவிற்கு பணிந்து போவது போலவே தெரிகின்றது. வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் புடு. பீரிஸ் உப பத்திரம் ஒன்றினை அமைச்சரவையில் சமர்ப்பித்து அதன் சம்மதத்தினை ஏகமனதாகப் பெற்றிருக்கின்றார். வரைபடத்தை தயாரிப்பதற்கு அதிகாரிகள் கொண்ட குழுவொன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹில்லறி கிளிண்டனின் இந்தியப் பயணம்.

அவரது நிகழ்ச்சி நிரலில் இரண்டு விடயங்கள் முக்கியமாக இருந்தன. ஒன்று ஈரான் விவகாரம். இரண்டாவது இலங்கை விவகாரம். ஈரான் விவகாரத்தில் அங்கிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை இயன்றளவு குறைப்பது அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. இந்தியாவும் அதனை ஏற்றுள்ளது. ஏற்கனவே ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து சவூதி அரேபியாவிடமிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் இந்த நடத்தை இலங்கையையும் பாதிக்கலாம். இலங்கை தனது எண்ணெய்த் தேவைகளுக்கு ஈரானிலேயே அதிகம் தங்கியுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டளவு இறக்குமதியைக் குறைக்கச் சொல்லி அமெரிக்கா இலங்கையைக் கேட்டிருக்கின்றது.

அடுத்தது இலங்கை விவகாரம். இங்கு தான் கொடுக்கும் அழுத்தங்களில் இந்தியா குறைப்பு எதுவும் செய்யக்கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக உள்ளது. இது விடயத்தில் இந்தியாவிற்கு அமெரிக்காவிடமிருந்து மட்டுமல்ல உள்நாட்டு மட்டத்திலிருந்தும் அழுத்தங்கள் இருக்கின்றன. இதனால் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டழுத்தத்தினைக் கொடுப்பதைத் தவிர இந்தியாவிற்கு வேறு தெரிவு இல்லை. இலங்கை அரசிற்கு மிகவும் எரிச்சலைக் கொடுத்த விடயமும் இதுதான். தமிழ் அரசியலைப் பலவீனப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவிற்கும் இருப்பதால் இந்தியா எப்போதும் தன்னுடன் நிற்கும் என்றே இலங்கை எதிர்பார்த்தது. இதனால் தான் இந்தியா அரசியல் தீர்வு தொடர்பான அழுத்தங்களைக் கொடுத்தாலும் இலங்கை பெரியளவிற்கு அவற்றைக் கணக்கெடுக்கவில்லை. இந்தியாவின் ஜெனிவா வைத்தியம் இலங்கைக்கு பேரதிர்ச்சியாகவே இருந்தது. இலங்கை அதனை கனவிலும் கூட எதிர்பார்க்கவில்லை.

தற்போது அமெரிக்காவிற்கு பணியவேண்டிய கட்டாயம் இருப்பதால் அமெரிக்காவிற்கு பணிந்து இந்தியாவை பழிவாங்க விரும்புகின்றது. ஐ.நா. நீதிபதிப் பதவி விடயத்தில் இந்தியாவிற்கு எதிராக பிலிப்பைன்சுக்கு வாக்களித்தமைஇ சபுஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய மீளுருவாக்கப் பணியினை இந்தியாவிடம் ஒப்படைக்காமல் சீனாவுடன் ஒப்படைக்க முயற்சிக்கின்றமைஇ வாகன இறக்குமதிகளுக்கான வரி விதிப்புகளை உயர்த்தியமை என்பவையெல்லாம் பழிவாங்கல் நடவடிக்கைகளாகவே கருதப்படுகின்றன. இன்னோர் பக்கத்தில் இந்திய மத்திய அரசாங்கம் என்பது மாநிலக் கட்சிகளின் தயவில் இருப்பதால் மாநில அரசுகளை வளைத்துப் போடும் முயற்சியிலும் இலங்கை அரசு இறங்கியுள்ளது. வெளிநாட்டமைச்சர் பீரிஸ் போருக்கு பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றி மாநில முதலமைச்சர்களுக்கு தனித் தனியாக கடிதங்களை எழுதியுள்ளார்.

இந்தியப் பாராளுமன்றக் குழுவினர் வட-கிழக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படல் வேண்டும்இ 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்இ வட-மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடாத்தப்படல் வேண்டும். என இந்தியப் பிரதமரிடம் அறிக்கை கொடுத்ததனால் இதனை முறியடிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இலங்கை அரசிற்கு ஏற்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கமும் தன் பங்கிற்கு இவற்றை முறியடிக்க சர்வகட்சி மாநாடு ஒன்றினைக் கூட்டியுள்ளது. இலங்கை விவகாரத்தில் இந்திய அணுகுமுறை தொடர்பாக பொதுக் கருத்தினை எட்டுவதற்காகத் தான் இம்மாநாடு கூட்டப்படுவதாகக் கூறியுள்ளது. இந்தப் போக்குகள் இதுவரை காலமும் டில்லியிலும்இ சென்னையிலும் மட்டும் பேசுபொருளாக இருந்த தமிழர் விவகாரத்தை இந்திய முழுவதிலும் பேசவைக்கும். தமிழக சக்திகள் சற்று வலுவாக இருந்ததால் இந்தச் செயற்பாடுகள் ஆரோக்கியமான பயன்களை தமிழ்த் தரப்பிற்கு பெற்றுக் கொடுக்கும்.

மூன்றாவது பொருளாதார ரீதியாக அழுத்தங்களைக் கொடுக்க முயல்கின்றமையாகும்.

ஏற்கனவே கூறிய ஈரான் விவகாரம் இதில் முக்கியமானது. எண்ணெயில் ஏற்படும் விலை உயர்வு சகல பொருட்கள் சேவைகளிலும் விலை உயர்வினைக் கொண்டுவரும் என்பது அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரியும். இது தவிர சர்வதேச நாணய நிதியம் ஊடாகவும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கை நாணயத்தினை மீண்டும் மிதக்க விட்டமை இதில் முக்கியமானதாகும் இன்று டொலரின் பெறுமதி 137 ரூபா வரை உயர்ந்துள்ளது. இது மேலும் உயர்வதற்கே வாய்ப்புக்கள் உள்ளன.

நான்காவது எதிர்க்கட்சிகளை பலப்படுத்தும் முயற்சியாகும்.

இதற்கு ரணில் விக்கிரமசிங்கஇ சஜித் பிரேமதாசா இருவரும் பயன்படுத்தப்படுகின்றனர் போலவே தெரிகின்றது. ரணில் விக்கிரமசிங்க தமிழ்இ முஸ்லிம்இ மலையக மக்களை அணி திரட்டப் பயன்படுத்தப்படுகின்றார். சஜித் பிரேமதாசா சிங்களப் பேரினவாதச் சக்திகளை அணிதிரட்டப் பயன்படுத்தப்படுகின்றார்.

இதில் பிரச்சினையாக இருந்தது தமிழ்த் தரப்பினை உள்வாங்குவது தான். தமிழ்த்தரப்பு உள்வாங்கப்படவும் வேண்டும். அதேவேளை பேரினவாதிகள் அதனைப் பயன்படுத்தாமலும் இருக்க வேண்டும். இதற்காக தான் சம்பந்தனைக் கொண்டு தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதற்கான அழுத்தம் இந்தியாவினாலும்இ அமெரிக்காவினாலும் சம்பந்தனுக்கு கொடுக்கப்பட்டது. சம்பந்தன் தமிழ்த் தேசியத்தை விலையாகக் கொடுத்து அமெரிக்காவையும்இ இந்தியாவையும் திருப்திப்படுத்தியிருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி பலமான நிலைக்கு வரும் போது முஸ்லிம் கட்சிகளும்இ மலையகக் கட்சிகளும் அதனை நோக்கி வரும் என்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் நன்றாகவே தெரியும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸினைத் தனியாகக் போட்டியிட வைக்கவும் முயற்சிக்கப்படுகின்றது. தேர்தல் முடிந்த பின் முஸ்லிம் காங்கிரஸும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டாக மாகாண சபை நிர்வாகத்தினை பொறுப்பேற்கவும் பதவிக் காலத்தினை 2 1ஃ2 வருடங்களாக இருதரப்பும் பங்கிட்டுக் கொள்ளவும் இந்தியாவினால் ஆலோசனைகள் கூறப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்த அணிதிரட்டல் மட்டும் போதாது என்பதும் அமெரிக்காவிற்கு நன்கு தெரியும். ஜனாதிபதி மகிந்தரை தற்போதும் உயர்நிலையில் வைத்திருப்பது அவரது போர் வெற்றிதான். எனவே போர் வெற்றியில் பங்கெடுக்கக் கூடிய ஒருவர் தேவை. அந்த ஒருவர் சரத் பொன்சேகாதான். அவரை விடுதலை செய்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக்கும் முயற்சியும் திரை மறைவில் நடைபெறுகின்றது. இதற்காக சரத் பொன்சேகாவினை விடுதலை செய் என்ற அழுத்தம் வலுவாக மகிந்தருக்கு கொடுக்கப்படுகின்றது என்றும் செய்திகள் வருகின்றன.

மகிந்தருக்கு மிகவும் திணறலைக் கொடுக்கும் விடயம் இந்த இருபக்க அழுத்தங்கள் தான். ஒரு பக்கத்தில் பணிய வைப்பதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. மறுபக்கத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. அமெரிக்கா இந்த இரு கதவுகளையும் திறந்து விட்டமைதான் மூச்சு விடக்கூட முடியாத நிலைமையை அரசிற்கு உருவாக்கியுள்ளது. ஆரம்பத்தில் பணிய வைப்பதற்கான முயற்சிகள் மட்டுமே இடம்பெற்றன. அதனை ஒருவகையில் சீனாஇ பாகிஸ்தான்இ ரஸ்யா துணை கொண்டு மகிந்தர் சமாளித்து வந்தார். தற்போது இரு கதவுகளையும் சமனாகத் திறந்து விட்டமை தான் மகிந்தருக்கு மிகப் பெரும் சிக்கலைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் சொல்லும் செய்தி மிகவும் தெளிவானது அதாவது ஒன்றில் பணிந்து போ அல்லது ஆட்சியை விட்டிட்டு போ என்பதே அந்தச் செய்தியாகும்.

தற்போது மகிந்தர் பணிந்து போவதற்கு தயாராகி விட்டதாகவே தகவல். இங்குதான் தமிழ்த் தரப்பிற்கு மிகப் பெரும் ஆபத்து காத்துக் கிடக்கின்றது. மகிந்தர் பணிந்து போனால் தமிழ் மக்களுக்கு கிடைப்பது வெறும் வட மாகாண சபைத் தேர்தல் மட்டும் தான். நீண்டகால அரசியல் அனுபவமுடைய வடபகுதிக் கவிஞர் ஒருவர் கூறினார். 'இலங்கை சீனாவைக் கைவிட்டால் உலகம் தமிழ் மக்களைக் கைவிடும்' இது தான் உண்மையில் நடக்கப் போவது போலத் தெரிகின்றது. இந்த ஆபத்து வருமென முன்கூட்டியே தெரிந்த படியால்தான் அமெரிக்காவினதும்இ இந்தியாவினதும் நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் தமிழ்த் தரப்பு இழுபட்டுச் செல்லக் கூடாது எனக் கடந்த கட்டுரைகள் எச்சரித்திருந்தன.

அமெரிக்கா தன்னுடைய நலன்களை அடைவதற்கு தமிழர் விவகாரத்தைத்தான் கருவியாகப் பயன்படுத்துகின்றது. இந்நிலையில் தமிழ்த் தரப்பு தன்னுடைய நிலைப்பாட்டினை உறுதியாக முன்வைத்திருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது விடயத்தில் சிறிது கூட பொறுப்புடன் செயற்படவில்லை. அது விலை போய்விட்டது என்ற தமிழ்த் தரப்பினர் சிலரின் கருத்துக்களையும் இலகுவாகப் புறந்தள்ளி விட முடியாது. விக்கிலீஸ் கூட இது பற்றி செய்திகளை வெளியிட்டிருந்தது. தன்னுடைய நலன்களுக்கு தமிழ் அரசியல் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதற்காகவே அமெரிக்காவும்இ இந்தியாவும் தேசியம்இ சுயநிர்ணயம் என்பவற்றைக் கைவிடும்படியும்இ தேசியக் கொடியை ஏற்றும்படியும் கூட்டமைப்பினை நிர்ப்பந்தித்தன. கூட்டமைப்பும் அதற்கும் இணங்கிப் போனது.

தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவினைப் பெற்ற அமைப்பு என்ற வகையில் சர்வதேச விழுமியங்களின்படி அமெரிக்கஇ இந்திய அழுத்தங்களை நிராகரிக்கும் இயலுமை கூட்டமைப்பிடம் இருந்தது. ஆனால் கூட்டமைப்பு அதற்கு தயாராக இருக்கவில்லை.

இலங்கை விவகாரத்தில் அமெரிக்க- இந்திய கூட்டு அணுகு முறை மூன்று கட்டங்களாக நகர்த்த திட்டமிட்டிருந்தது. முதலாவது கட்டத்தில் மகிந்தர் அரசினை பணிய வைப்பது. அது சரிவராத போது இரண்டாவது கட்டத்தில் ஆட்சி மாற்றத்திற்கு முயலுவதுஇ அதுவும் சரிவராத போது மூன்றாவது கட்டத்தில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பது. இது விடயத்தில் பிரிவினை மட்டம் பற்றிக் கூட சிந்திக்க முனையலாம் என ஆய்வாளர்களினால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருந்திருந்தால் சுயநிர்ணய உரிமை வரை நிலைமையைக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரம்பரிய தமிழரசுக் கட்சியின் நிலையிலிருந்தே கீழிறங்கியுள்ளது. தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியம்இ சமஸ்டி ஆட்சி முறை என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தது. பண்டா- செல்வா ஒப்பந்தம்இ டட்லி- செல்வா ஒப்பந்தம் எனக் கீழிறங்கி வந்தாலும் அடிப்படைக் கொள்கைகளை அது ஒருபோதும் கைவிட்டிருக்கவில்லை. தற்போதைய கூட்டமைப்பு அவற்றையெல்லாம் கைவிட்டுள்ளது. தேசியம்இ சுயநிர்ணயம் என்பதைக் கைவிட்டு 13வது திருத்தத்திற்கு கீழிறங்கி அதுவும் வட மாகாண சபையாக சுருங்கியுள்ளது. சிங்கக் கொடியேற்றத்துடன் கட்டியிருந்த கோவணத்தையும் சம்பந்தன் கழட்டிக் கொடுத்திருக்கின்றார்.

புலிகள் இராணுவ ரீதியாக தோல்வியடைந்தாலும் அரசியல் ரீதியாக தோல்வியடைய விரும்பவில்லை. அவர்கள் அதற்கும் தயாராக இருப்பின் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டவுடனேயே சரணடைந்து சிங்கக் கொடியினை ஏந்தியிருப்பர். அவர்கள் தங்களையும் அழித்து மக்களையும் அழிய விட்டமை அரசியல் ரீதியாக தோல்வியடையக் கூடாது என்பதற்காகவே. புலிகளுக்கு பின்னர் இன விவகாரத்தின் சர்வதேசப் பரிமாணத்தை முதலீடாகக் கொண்டு கூட்டமைப்பு அரசியல் ரீதியாக முன்னேறியிருக்க முடியும். சம்பந்தன் அனைத்தையுமே கவிழ்த்து கொட்டியிருக்கின்றார்.

தற்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது சரியான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியத் தணலைத் தக்க வைப்பது அவசியம். தனித்துவ அரசியலைக் கைவிட்டால் தணலை எவ்வாறு தக்க வைக்க முடியும். சுவரிருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். தனித்துவ அரசியலைக் கைவிட்டு தென்னிலங்கைக் கட்சிகளோடு இணைந்த அரசியலைத் தானே டக்ளஸ் தேவானந்தாவும்இ பிள்ளையானும்இ கருணாவும்இ விஜயகலா மகேஸ்வரனும் செய்கின்றனர். அந்த அரசியலைத் தான் கூட்டமைப்பும் செய்வதென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தனியான கட்சி ஏன்? அவர்களே போதும் தானே!

தென்னிலங்கைக் கட்சிகளோடு இணைந்தமையினால் தமது தனித்துவத்தை தொலைத்தவர்களாக முஸ்லீம் அரசியலும்இ மலையக அரசியலும் நிற்கின்றன. அந்த அரசியலுக்கு தமிழ் அரசியலும் செல்ல வேண்டுமா? கூட்டமைப்பு கீழிறங்கக் கூடியளவிற்கு கீழிறங்கி விட்டது. அதன் உச்சநிலைதான் சிங்கக் கொடியேற்றம். முழு அம்மணமாக இருக்கும் கூட்டமைப்பிடம் தமிழ் மக்கள் எதிர்ப்பார்ப்பதற்கு இனிமேல் எதுவுமில்லை.

தற்போது அகிம்ஸைப் போராட்டம் நடாத்தப் போவதாக மாவை சேனாதிராஜா பாராளுமன்றத்தில் முழக்கமிடுகின்றார். கடந்த 3 வருடத்தில் எத்தனை போராட்டத்தை அவர் நடாத்தி இருக்கின்றார். ஒரு மே தினத்தையே நடாத்த வக்கில்லாதவர்கள் போராட்டத்தை நடாத்துவார்களென எப்படி நம்ப முடியும்?

தினக்குரல் இணைந்த மே தினத்தையும்இ சிங்கக் கொடியேற்றத்தையும் நியாயப்படுத்தி ஆசிரியர் தலையங்கத்தை எழுதியுள்ளது. அதன் ஆசிரியர் தமிழ் மக்கள் ஒரு கட்டுறுதியான அரசியல் சமூகமாக வளர வேண்டும் என தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர். தனித்துவ அரசியலைக் கைவிட்டு விட்டு எவ்வாறு தான் கட்டுறுதியான அரசியல் சமூகத்தை உருவாக்குவது. இது அவருக்குத் தான் வெளிச்சம்.

இந்தத் தடவை கிடைக்க விருந்த சர்வதேசச் சந்தர்ப்பத்தினை கூட்டமைப்பு ஒழுங்காகப் பயன்படுத்தவில்லை. அது நிகழ்வுகளுக்கு பின்னால் இழுபட்டுச் செல்வதற்கே விரும்புகின்றது. அதற்கு ஒரு தலைமை தேவையில்லை. நிகழ்வுகளை சவாலாக ஏற்று தன்வயமாக்கிச் செயற்படுத்துவதற்குத் தான் தலைமை தேவை. சிங்கக் கொடியேற்றத்தின் பின்னர் கூட்டமைப்பு அழிந்து போகட்டும் என மூத்த சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டமை நிகழ்வின் பாராதூர தன்மையைக் காட்டுவதற்கான ஒரு குறிகாட்டி.

சர்வதேச அரசியல் எப்போதும் மாறிக் கொண்டேயிருக்கும். மாறாமல் இருப்பதற்கு அது பைபிள் அல்ல. எதிர்காலத்தில் வரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்துவதற்காகவாவது தனித்துவ அரசியலைப் பாதுகாக்க வேண்டும். கூட்டமைப்பினால் அது ஒரு போதும் முடியாது.

இன்று அவசியமானது மாற்று அரசியல் இயக்கமே? அது மரபு ரீதியான கட்சி அரசியலிருந்து விலகி தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் கையாளக் கூடிய தேசிய இயக்கமாக மிளிர வேண்டும்.

கூட்டமைப்பினால் ஏற்பட்ட அரசியல் தோல்வியை முழுச் சமூகம் மத்தியிலும் பரவவிடாமல் தடுப்பதற்கு எஞ்சியுள்ள ஒரே வழி மாற்று அரசியல் இயக்கத்தை கட்டி வளர்ப்பதே!

கட்டுரையாளர் முத்துக்குமார்

மூலம் பொங்குதமிழ்

சனிக்கிழமைஇ 12 மே 2012

http://www.lankasri.com/ta/link-3Oc3Y2SaeEe608odW3v4.html

மாற்று அரசியல் இயக்கமா அப்பாடா ஒரே ஆளுங்கள திருப்பி திருப்பி திட்டி போர் அடிக்குது நம்ம புலம்பெயர் புள்ளிகளுக்கு . சீக்கிரம் புது கட்சிய சட்டு புட்டுன்னு ஆரம்பிச்சி திட்டு வாங்க யாழ் களத்தில் வரிசையா நில்லுங்க . ரெடி ஒன் டூ திரீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.