Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்பேர்ன் எழுத்தாளர் விழா!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே பிறந்து வளர்ந்த பத்து பிள்ளைகளின் பேச்சோடு ஆரம்பிக்க, சுட சுட கோ`ப்பி நாங்களே ஊற்றிக்குடித்தோம். அப்புறமாக கவியரங்கம் ஆரம்பித்தது. அதுவும் ஒரு பத்து பேர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பேரன் தொட்டு கல்லோடைக்கரன் என்று பலரும் வாசித்தார்கள்! இடைநடுவில் என் பின்னால் இருந்த “மேல்பேர்னின் முக்கிய பத்திரிகையாளர்”, “அடடே சந்தைக்கு சாமான் வாங்க எழுதி வச்ச துண்டை கொண்டு வந்து இருக்கலாமே, நானும் கவிஞர் ஆகியிருப்பேனே” என்று கடி ஜோக் விட, பின் வரிசை முழுவதும் கொல்லென்று சிரித்தது. திடுக்கிட்டு விழித்தேன்! கேதா தப்பினான்!

அடுத்தது நம்ம ஏரியா. “புலம்பெயர்ந்தவர் இலக்கியம் தமிழுக்கு வளம் செர்க்கின்றதா?” என்ற தலைப்பில் வலைப்பூக்கள் பற்றி பேசவேண்டும். என்னளவில் இது ஒரு மொக்கை தலைப்பு! அதிலே நான் வேறு எக்ஸ்ட்ரா மொக்கை போடுவேன் என்பதால் பாலா ஆல்ரெடி பாய் தலையணையுடன் தான் வந்திருந்தான். மாத்தளை சோமு வேறு, “ஊர் எரியும் போது பிடில் வாசிக்கக்கூடாது. ஈழத்தவர் போர் பற்றியே எப்போதும் இலக்கியம் படைக்கவேண்டும்” என்று முழங்கிக்கொண்டிருக்க “கக்கூஸ்” பற்றி எழுதும் எனக்கு கலக்கியது!

எனக்கு முன்னம் பேசின மூன்று பேரு, உள்ளூர் வானொலி அரசியலை பிரிச்சு மேய, தப்பான இடத்தில் மாட்டிவிட்டேன் என்று தோன்றியது. ஆரம்பத்தில் பத்து நிமிஷம் என்று சொன்னவர்கள் இப்போது ஐந்து நிமிஷம் தான் பேசலாம் என்றார்கள். ஐஞ்சு நிமிஷம் பேசக்கூட புலம்பெயர் இலக்கியத்தில் ஒன்றும் இல்லை என்ற முடிவை ஒரு கவியரங்கத்தை மாத்திரமே வைத்துக்கொண்டு முடிவெடுத்தது சர்ப்பரைஸ் தான்!

MAY-201200057_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

சுஜாதாவுக்கும் ஜெயராஜுக்கும் நன்றி செலுத்திகொண்டு ஆய்வுக்கட்டுரையை கவியரங்கம் போல ஆரம்பித்து பைபிளுக்கும் ஷாலினி சிங்கிற்கும் தாவினேன். அவ்வப்போது, உமா வரதராஜன், ஜெயபாலன், முத்துலிங்கம் மானே தேனே போட்டு இன்டர்வெல் சீன் டூயட் முடித்து யூனிகோடுக்குள் போவதற்குக்கு கோடு கீறினார் மாத்தளை சோமு. பத்து நிமிஷம் தாண்டிவிட்டதாம். அப்புறமாக ஆறு பந்திகளை ஸ்கிப் பண்ணி வலைப்பூக்கள் பற்றி சொல்லும்முதலேயே பதினைந்து நிமிஷம் ஆகிவிட்டது. என் பேச்சு தாலாட்டு போல இருந்ததாக பாலா கொட்டாவி விட்டவாறே வந்து சொன்னான்!

அப்புறம் கோகிலா மகேந்திரன் பேசினார். அழுத்தம் திருத்தமான ஆணித்தரமான பேச்சு. சில இடங்களில் என்னையறியாமலேயே கைத்தட்டினேன். பக்கத்தில் இருந்தவன் உடனே சேர்ந்து கைதட்டினான். தக்காளி நிறைய இங்கிலீஷ் படம் பார்க்க தியேட்டர் போயிருப்பான் போல!

இதிலே சோகம் என்னவென்றால், தேர்ந்த பேச்சாளர்கள் கோகிலா மகேந்திரன், திருநந்தகுமார், மாத்தளை சோமு போன்றவர்கள் பேசியது சொற்ப நிமிடங்களே. விழாவில் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று நினைத்து பேசவேண்டியவர்களை பேச வைக்காமல் விட்டதில் சுவாரசியம் மிஸ்ஸிங். தமிழ் வளர்ப்போம் என்று எத்தனை நாளுக்கு தான் கூட்டம் கூடும்? சுவையாக நிகழ்ச்சிகள் படைத்தால் தானே நம்மை தேடிவருவார்கள்? சரி நீயும் செய்யாத! செய்யிறவனுக்கும் ஏதாவது சொல்லு! விளங்கிடுவடா ஜேகே!

பின்னர் “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்று ஒரு நாடகம். வேற யாரு? கோகிலா மகேந்திரன் தான். அருமை! தாயும் மகனும் ஒரே நாடகத்தில் …

morepic_7400935_thumb.jpg?imgmax=800

மப்பன்றிக் கால மழை காணா மண்ணிலே

சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது

ஏர்ஏறாது காளை இழுக்காது,

எனினும் அந்தப்

பாறை பிளந்து பயன் விளைப்பான்

என் ஊரான்

ஆழத்து நீருக் ககழ்வான்

நாற்று

வாழத்தான் ஆவி வழங்குவான்

ஆதலால்

பொங்கி வளர்ந்து பொலிந்தது பார்

நன்னெல்லு.

mahakavi_thumb%25255B6%25255D.jpg?imgmax=800

என்ற மகாகவி உருத்திரமூர்த்தியின் கவிதையை நாடகமாக்கும் துணிச்சலும் திறமையும் கோகிலா மகேந்திரன் ஒருவருக்கே உண்டு. பயிர் நாடுகிறார்கள். இடையில் மழை வந்து பயிர் அழிய, திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து நாற்று நட தொடங்குகிறார்கள். Are you getting it? ஆனால் திரும்பவும் மழை வந்தால்? உருவகத்தில் விடை இல்லை.

“அந்த பையனை சந்திக்கவேண்டும்” என கோகிலா மகேந்திரன் யாருக்கோ சொல்லி எனக்கு வந்து சொல்ல, அடித்து விழுந்து ஓடினேன். சின்னவயதில் எட்ட நின்று ரசித்த ஆளுமை அல்லவா! “வாரும் தம்பி, பேச தொடங்கி அஞ்சு நிமிஷத்திலேயே கண்டு பிடிச்சிட்டன், உமக்குள்ள ஏதோ இருக்கு. உம்மட வாசிப்பு தான் பலம். விட்டிடாதேயும். எப்போதும் தொடர்பில இருக்கோணும், நம்பரை தாரும்” என்று சொல்ல, எனக்கு நடுங்க தொடங்கியது. எவ்வளவு பெரிய அங்கீகாரம் இது! “உங்கள சின்ன வயதில இருந்தே ரசித்துக்கொண்டு வாறன் அம்மா” என்று நடுங்கி நடுங்கி சொன்னேன். ஆனாலும் எனக்குள் இருக்கும் விமர்சகன் விழித்துக்கொள்ள, “ஆனால் திரும்பவும் மழை வந்தால்?” என்ன contingency plan வச்சிருக்கிறீங்க? என்று என்று நாடகத்தில் குறுக்கு கேள்வி கேட்டேன். “அது மகாகவி கவிதை, கருத்தில் தான் கைவைக்கவில்லை” என்றார். மேன்மக்கள் மேன்மக்களே!

220px-Kokila-3_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது மாத்தளை சோமு வந்து இடையில் பேச்சை குறைக்கசொல்லி சொன்னதுக்கு வருத்தம் தெரிவித்தார். நீங்க சிட்னிக்கு வந்து பேசணும் என்றார். குழந்தை போல பரவசத்துடன் பேசினார். “வீரகேசரில உங்கட கதை வந்தால், நான் தான் வீட்டில முதலில வாசிப்பன் அய்யா” என்று சொல்ல சிரித்தார். அரைமணி நேரம் என்னோடு பேசினார் என்றால் பாருங்களேன். ஷோபாசக்தி மீதும் ஜெமோ மீதும் சோமுவுக்கு பயங்கர கடுப்பு. முத்துலிங்கம் எங்கட வாழ்க்கையை இன்னும் எழுதோணும் என்றார். எஸ்போ மீது மரியாதை வைத்திருக்கிறார். முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களில் 40% மலையகத்தவர். அதை வைத்து ஒரு நாவல் எழுதப்போகிறேன் என்றார். அடுத்த வாரம் எழுதப்போகும் “வண்ணாத்தி பூச்சி” என்ற ஒரு அழகான சிறுகதையை சொல்லி, எப்படி இருக்கிறது? என்று கேட்டார். புத்தகங்கள் வாங்குகிறார்கள் இல்லை என்றார். “Facebook, twitter ல வாசகர் வட்டம் கொண்டு வாங்க” என்றேன். “கம்பியூட்டர் என்ற வஸ்து புரியுதில்லை” என்றார்!

இந்த விமர்சனத்தை ஒரு வித அங்கதத்துடன் எழுதியமைக்கு யாரையும் நோகடிக்கும் நோக்கம் இல்லை(தக்காளி அடுத்த மேடைக்கு கூப்பிடமாட்டாங்க அப்புறம்). ஆனால் தமிழ் விழாக்களை ஒரு வித stereotype உடன் எல்லோரையும் திருப்திபடுத்த மேடையேற்றினால், சிறப்பு விருந்தினராக வரும் வெள்ளைக்காரி மாத்திரமே மிஞ்சுவார்! கம்பன் விழாக்கள் போன்று நிகழ்ச்சி பார்க்கவென்றே கூட்டம் வரவேண்டும். இந்த “புலம்பெயர்”, “அம்மாவா அப்பாவா”, “தமிழ் இருக்குமா சாகுமா” என்ற டப்பா விஷயங்களை விடுத்து அரங்க நிகழ்ச்சிகளில் கொஞ்சம் பின்நவீனத்துவம் கொண்டுவரவேண்டும். “வைரமுத்து கவிதைகளில் கம்பன் பாடல்கள்”. “சமையலறையில் சங்க இலக்கியம்”. "இது பெண்ணானால்” என்ற கவியரங்கத்தில் “கம்பியூட்டர், கோடாலி, அணு குண்டு, என்ற பல பாடுபொருட்களுடன் கடைசியில் ஒருத்தன் “பெண் பெண்ணானால்” என்றும் கவிதை பாடினால் அது பின்நவீனத்துவம். செய்ய ஆசை தான். சாவி எங்கள் கைக்கு வரவேண்டும். தாருங்கள் ப்ளீஸ்!

சொன்னாப்ல, என்னுடைய “கனகரத்தனம் மாஸ்டர்” சிறுகதை இந்த விழாவில் வெளியிடப்பட்ட ஜீவநதி இதழில் வெளியாகி இருக்கிறது!

மூல பதிவு :http://www.padalay.com/2012/05/17-05-2012.html

Edited by jkpadalai

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகே...பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற கவிதை புத்தகம் இங்கு வெளியிட்டவர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் புத்தன் .. வெளியிட்டார்கள் ... பெண் போராளிகளின் கவிதைத்தொகுப்பு ..

இணுவில் திருநந்தகுமாரா? எப்படி இருக்கின்றார் ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் விழாக்களை ஒரு வித stereotype உடன் எல்லோரையும் திருப்திபடுத்த மேடையேற்றினால், சிறப்பு விருந்தினராக வரும் வெள்ளைக்காரி மாத்திரமே மிஞ்சுவார்! கம்பன் விழாக்கள் போன்று நிகழ்ச்சி பார்க்கவென்றே கூட்டம் வரவேண்டும். இந்த “புலம்பெயர்”, “அம்மாவா அப்பாவா”, “தமிழ் இருக்குமா சாகுமா” என்ற டப்பா விஷயங்களை விடுத்து அரங்க நிகழ்ச்சிகளில் கொஞ்சம் பின்நவீனத்துவம் கொண்டுவரவேண்டும். “வைரமுத்து கவிதைகளில் கம்பன் பாடல்கள்”. “சமையலறையில் சங்க இலக்கியம்”. "இது பெண்ணானால்” என்ற கவியரங்கத்தில் “கம்பியூட்டர், கோடாலி, அணு குண்டு, என்ற பல பாடுபொருட்களுடன் கடைசியில் ஒருத்தன் “பெண் பெண்ணானால்” என்றும் கவிதை பாடினால் அது பின்நவீனத்துவம். செய்ய ஆசை தான். சாவி எங்கள் கைக்கு வரவேண்டும். தாருங்கள் ப்ளீஸ்!

சொன்னாப்ல, என்னுடைய “கனகரத்தனம் மாஸ்டர்” சிறுகதை இந்த விழாவில் வெளியிடப்பட்ட ஜீவநதி இதழில் வெளியாகி இருக்கிறது!

மூல பதிவு :http://www.padalay.c...17-05-2012.html

உண்மை ஜெ.கே....படைப்பாளிகள் மட்டுமே இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும் நிலைமாறி வாசகர்களால் நிகழ்வுகள் நிறைய வேண்டும்...இலக்கிய விழாக்களை ஜனரஞ்ஞகமாக மாற்றவேண்டும்...ஆதற்க்கு சாவி இளையவர்கள் கைகளுக்கு போகவேண்டும்... இது நடக்குமா..?

  • கருத்துக்கள உறவுகள்

இணுவில் திருநந்தகுமாரா? எப்படி இருக்கின்றார் ?

அவரேதான் அவர் சிட்னியில் இருக்கின்றார்...கம்பன் புகழ் நந்தகுமார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகமாக இருக்கிறார் .. சிட்னியில் ஒரு தமிழ் பள்ளியும் நடத்தி வருகிறார் .. கம்பன் கழகமும் இயங்குகிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.