Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சனாத் தாக்கப்பட்டமைக்கு உலகளாவிய தமிழ் இளையோர் அவை கண்டனம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

World-tamil-tyo-asso-150.jpg

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் செயலாளரான பரமலிங்கம் தர்சனாத் வெள்ளி, மே 18 அன்று இரும்புக்கம்பிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் இலங்கை இராணுவ முகாம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்றது.

மே 2009 இல் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழரை நினைவு கொள்ளும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்விற்கு செல்லும் வழியிலே தர்சனாத் தாக்கப்பட்டார். மே 2009 இல் இலங்கை அரசாங்கம் தமிழினத்தையும் தமிழ் அடையாளத்தையும் அழிக்கும் நோக்கோடு ஒருதிட்டமிட்ட இனவழிப்பினை மேற்கொண்டது. ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள், சிறுவர் முதல் முதியோர்வரை, மனிதாபிமானம் இன்றி, கொடூரமாக கொடுமைப்படுத்தப்பட்டனர், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர்.

இலங்கையில் இடம்பெற்றுக்ககொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து 2009 ஆம் ஆண்டில் புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழ் இளையோர் இலங்கையில் அவலப்படும்மக்களுக்காக குரலெழுப்பினர், தம் அரசாங்கத்தை இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினர் ஆனால் எமது அழுகுரல்களுக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

இலங்கை இராணுவத்தின் மிரட்டல்களுக்கு அடிபணியாது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து தர்சனாத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வின் முக்கியத்துவம் பற்றியும் தேவைபற்றியும் குரல் கொடுத்து அந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

இதனாலேயே தர்சனாத் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்பட்டார் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் கூறினர்.

உலகளாவிய தமிழ் இளையோர் அவை இச்செயலை வன்மையாக கண்டிக்கிறது. மாணவரிடையே பயத்தை உருவாக்கும் நோக்கோடே இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதன் மூலம் 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடாத்தப்பட்ட கொடூரங்களையும் நாம் இழந்த சொந்தங்களின் நினைவுகளையும் எம்மனதில் இருந்து அழிக்க முயல்கின்றனர். நினைவுகளின் அழிப்பு இன அழிப்பின் கடைசி கட்டமாகும் என்பதை தமிழ் இளையோர் மறந்து விடக்கூடாது. முள்ளிவாய்க்காலில் நாம் இழந்த எம்மக்களை எப்போதும் மறந்து விடக்கூடாது. இலங்கை அரசாங்கத்தின் இன வெறி செயல்களிற்கு பலியான, பலியாகிக்கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு நீதிகிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

உலகளாவிய தமிழ் இளையோர் அவை தமிழ் இளையோரை ஒன்றிணைத்து அவர்களை எம்நாட்டின் சிறந்ததலைவராக உருவாக்குதல் என்னும் பார்வையைக் கொண்ட பல தமிழ் இளையோர் அமைப்புகளை கொண்டு செயற்படும் ஒரு கூட்டணி ஆகும். உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் உறுப்பினர் பின்வருமாறு:

கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம், கனடா;

தமிழ் இளையோர் கூட்டணி, யேர்மனி;

ஜியோவானி தமிழ், இத்தாலி;

தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே;

தமிழ் இளையோர் அமைப்பு, சுவிஸ்;

தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானியா;

தமிழரின் குரல், ஆஸ்திரேலியா;

தமிழ் இளையோர் அமைப்பு, நியூசீலாந்து;

தமிழ் இளையோர் அமைப்பு, சுவீடன்;

தமிழ் இளையோர் அமைப்பு, அமெரிக்கா.

Media Team Tamil Youth Organisation - United Kingdom

Web: http://www.tyouk.org

Follow us: http://twitter.com/#!/TYOUK

Face Book: http://www.facebook.com/tyouk.media

http://www.seithy.co...&language=tamil

சிங்களப் பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்க தயங்காத சம்பந்தனும், சுமந்திரனும் இன்னும் இதைக் கண்டிக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அராமுதன்,

இதைதான் நானும் சொல்ல நினைத்தேன்...சம்பந்தர் ஐயா என்ன செய்கிறார்...அவர்களுடைய மற்றைய தோழர்கள் என்ன செய்கிறார்கள்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.