Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிரான அச்சுறுத்தல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

RuthtirakumaranTGTE150news.jpg

மதங்களைக் கடந்து மனிதநேயத்தின்பால், மக்களின் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது, சிறிலங்கா அரசாங்கத்தினால் மறைமுகமாகவும், வெளிப்படையாகுவும் ஏற்படுத்தப்பட்டு வரும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ளது.

ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களது பாதுகாபப்பினை உறுதிப்படுத்த கோரியும், அவர் மீதான அச்சுறுத்தல்களுக்கு கண்டித்தும் மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் கண்ட ஒன்றுகூடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது.

இந்த ஒன்றுகூடலுக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தமிழீழத் தாயக உறவுகளுக்கு, சிற்றலையூடான வானோசை ஒலிபரப்பின் ஊடாக செய்தியொன்றினைத் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவிலும், தமிழர் தாயகத்திலும், இராணுவ மேலாதிக்க ஆட்சி அதிகாரத்தின் கீழ், சுதந்திரமாக கருத்துக்களை கூறுவதற்கும் ,உண்மைகளினை வெளிப்படுத்துவதற்கும், அரசியல் அபிலாசைகளை கொண்டிழுப்பதற்கும் ,அரசியல் அகற்றப்பட்டுள்ள இன்றைய சூழலில், மன்னாரில் முன்னெடுக்கப்பட்டும் சாத்தவீக வழிப்போராட்டங்களுக்கு ,உலகெங்கும் சிதறிவாழும் தமிழர்கள் யாவரும், தங்கள் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றனர் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

போர் இடம்பெற்ற காலங்களிலும், தொடர்ந்து மனித நேய நெருக்கடி மிகுந்த கட்டங்களிலும் , மிகுந்த துணிச்சலுடன் கிறிஸ்தவ மத விழுமியங்களுடன், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள்.

சிறிலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக, அப்பாவித் தமிழ் மக்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நீதிவேண் சாட்சியம் அளித்தவர்.

அந்த ஒரே காரணத்தினை முன்வைத்து ,அவரின் தனித்துவத்தினையும் ,நன்மதிப்பினையும் புறந்தள்ளி ,சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்துவதிலும், பாராளுமன்றத்தில்பொறுப்பற்று விமர்சிப்பதும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் திட்டமிட்ட செயற்பாடுகளாகும்.

இத்தகைய செயல்கள் யாவற்றினையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.

சிறிலங்காவிலும், தமிழர் தாயகத்திலும், இராணுவ மேலாதிக்க ஆட்சி அதிகாரத்தின் கீழ், சுதந்திரமாக கருத்துக்களை கூறுவதற்கும் ,உண்மைகளினை வெளிப்படுத்துவதற்கும், அரசியல் அபிலாசைகளை கொண்டிழுப்பதற்கும் ,அரசியல் அகற்றப்பட்டுள்ள இன்றைய சூழலில், மன்னாரில் முன்னெடுக்கப்பட்டும் சாத்தவீக வழிப்போராட்டங்களுக்கு ,உலகெங்கும் சிதறிவாழும் தமிழர்கள் யாவரும், தங்கள் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

தாயக மக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டம், புலத்தில் வாழும் எமக்கு புது உத்வேகத்தினைத் தருகின்றது.

தமிழர் தாயகத்தினுள்ளும் ,சிறிலங்காவிலும் இந்து ,இஸ்லாமிய மத சுதந்திரத்துக்கும், வழிபாட்டு உரிமைக்கு எதிராகவும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சிங்கள பௌத்த இனவாதிகளின் செயல்களுக்கு எதிராக , நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், எமது புதிய போர்களம் ,தமிழர் வாழும் தேசங்கள் என்ற அடிப்படையில் , உலகலாவிய ரீதியில் விழிப்புணர்வுப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வி.உருத்திரமாரன் அவர்கள் தமிழீழத் தாயக மக்களுக்கு தெரிவித்த கருத்தினை முழுமையாக கேட்க :

நாதம் ஊடகசேவை

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்கள் தான்... மன்னார் ஆயருக்கு எதிராக மிரட்டல் விடுவித்துள்ளார்கள்.

இவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் என்று... தமிழர்கள் மீது விடும் அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

1990 காலப் பகுதியில் பிரேமதாசாவின் சிங்கள பேரினவாத அரசின் முஸ்லீம் கைக்கூலிகளே தமிழ் - முஸ்லீம் விரோதத்தை வளர்த்துவிட்டனர். அதன் பிரதிபலிப்பு முஸ்லீம்களின் பாதுகாப்பான வெளியேற்றம். பின்னர் அதையே தமிழர்களின் போராட்டத்திற்கு எதிரான காரணியாகவும் சிங்களம் பயன்படுத்திக் கொண்டது.

இன்றும் சிங்கள அரசில் அங்கம் வகிக்கும் (முஸ்லீம் காங்கிரஸ் காலத்துக்கு காலம் பேரினவாத சிங்களக் கட்சிகளுக்கு முண்டு கொடுத்தே அதன் மதப் பயங்கரவாத அரசியலை முன்னெடுத்து வருகிறது) முஸ்லீம்களே தமிழ் மக்களுக்கு எதிரான செயலைச் செய்கின்றனர். சிங்கள அரசோடு சேர்ந்து நிற்கும் தமிழர்களும் சரி முஸ்லீம்களும் சரி சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு சேவை செய்யாமல் அந்தப் பதவிகளை அலங்கரிக்க முடியாது. அந்த வகையில் தான்... இனத்தைக் காட்டிக் கொடுத்து டக்கிளஸ்.. கருணா... சங்கரி... சித்தார்த்தன்.. வரதராஜப்பெருமாள்.. என்று பலர்.. சிங்கள அரசின் சலுகை பெற்று வாழ்கின்றனர். அதே நிலையில் இருக்கும் முஸ்லீம் அருவடிகளால் தான் தமிழ் - முஸ்லீம் பிளவு ஆழப்படுத்தப்படுகிறது என்பது எனது கருத்து.

இதில் சிங்களக் கட்சிகளிடையே எந்த வித பிளவும் இல்லை. அவர்கள்.. தமிழ் மக்களை சகல வழியிலும் பலவீனப்படுத்தி.. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதமாகக் காட்டி.. முழு இலங்கைத் தீவையும் சிங்கள பெளத்த தேசமான இந்த உலகிற்கு காட்டவே பாடுபடுகின்றனர். அதுவே அவர்களின் இலச்சியமும் ஆகும்.

இதனை கோத்த பாயவின் அண்மையை பிபிசிக்கான செவ்வியும் தெளிவான இனங்காட்டியுள்ளது. :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.