Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வெளிநாட்டு ஆசை காட்டி பணபோசடி செய்த முஸ்லிம் நபருக்கு விளக்கமறியல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

prinson.jpg

யாழ் இளைஞர் யுவதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பல இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்தவர் என்ற சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டு வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.முகமட் அஸமீ கபூர் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

மட்டக்களப்பின் மாநாகர சபை உறுப்பினராக உள்ள இந்நபர் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் உள்ள இளைஞர், யுவதிகளை பிரித்தானியா, கனடா மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களிடம் தந்திரமாக பல இலட்சங்களை மோசடி செய்துள்ளார்.

ஆனைக்கோட்டை, உரும்பிராய், அச்சுவேலி, திருநல்வேலி, கோப்பாய், சுன்னாகம் ஆகிய பிரதேசங்களைச் சேந்த இளைஞர் யுவதிகளிடம் 50, இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்துள்ளார் என விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நபருக்கு எதிராக 8 பணமோசடி வழங்குகள் யாழ். நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. இவரைக் கைது செய்யுமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச உத்தரவிட்டமைக்கு அமைவாக விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் தேடுதல் மேற்கொண்ட நிலையிலேயே இவர், தனது சட்டத்தரணி ஊடாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

இவரது வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக இவரை எதிர்வரும் ஜுலை மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

http://www.saritham.com/?p=61240

  • Replies 55
  • Views 3k
  • Created
  • Last Reply

எதற்காக இப்படியான இனவாதத் தலைப்புகள்? இங்கே வெளிநாட்டவர்கள் சட்ட விரோத செயல்களை செய்கின்ற போது சில ஊடகங்கள் அவர்களுடைய இனத்தை குறிப்பிட்டு மோசமான தலைப்புக்களை போடும்.

அதே போன்று எமது ஊடகங்கள் முஸ்லீம் சகோதரர்கள் விடயத்தில் நடக்கத் தொடங்குகின்றன.

எத்தனையோ தமிழர்கள் பண மோசடி செய்கிறார்கள். பிள்ளைகளையும் கடத்துகிறார்கள். பாலியல் கொடுமை செய்கிறார்கள்.

அப்பொழுதெல்லாம் "தமிழ் இளைஞர் பண மோசடி", "தமிழர் குழந்தையை கடத்தினார்", "தமிழர் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்தார்" என்று செய்தி போடுவதில்லை.

எமது ஊடகங்கள் தலைப்பிலும் செய்திகளில் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ.. சகோதர்களின் குற்றங்களை ஊடகங்கள் அப்பட்டமா சொல்லுதுகளாமில்ல. அண்ணன் சரியான கவலைப்படுறார். இதே சகோதரங்கள் எங்கள் சகோதரிகளை சிங்கள வெறியர்களோடு நின்று வேட்டையாடிய போது அண்ணன் என்ன ஆய்வுக்கட்டுரையா எழுதிக் கொண்டிருந்தவர்...???!

தலைவருக்கு வழிகாட்டி முடிஞ்சுது.. சித்தார்த்தன்.. முஸ்லீம் காங்கிரஸ்.. மற்றும் ஊடகங்கள்.. திராவிடத்துக்கு வழிகாட்ட வந்திட்டினம். :D:lol:

குற்றவாளி எவனா இருந்தாலும் அவனுக்குரிய அடையாளத்தோடு அது செய்தி ஆவதில் எந்தத் தவறும் இல்லை. அதுபோக.. முஸ்லீம்கள் இனமல்ல. ஒரு சமூகம்...! :lol::icon_idea:

அண்ணனுக்கு பள்ளிவாசல்களில் சொல்லிக் கொடுக்கப்படும் தமிழர் விரோத.. சமூக விரோதக் கருத்துக்கள் தெரியாது போல. அண்ணனை ஒருக்கா பள்ளிவாசலுக்கு அனுப்பி எடுங்கோ.. அப்ப விளங்கும்..! சகோதர பாசத்தின் தாக்கம் என்ன என்று...! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளி எவனா இருந்தாலும் அவனுக்குரிய அடையாளத்தோடு அது செய்தி ஆவதில் எந்தத் தவறும் இல்லை. அதுபோக.. முஸ்லீம்கள் இனமல்ல. ஒரு சமூகம்...! :lol::icon_idea:

அப்பட்டமான இனவாதக் கருத்துக்கள் நெடுக்ஸ்(மன்னிக்கவும் நெடுக்ஸ்...இது உங்கள் குறித்தல்ல உங்கள் கருத்துப் பற்றிய பதில்)....இப்படித்தான் வெளிநாட்டு ஊடகங்கள் எம்மவர் சிலரால் புலிகள் /தமிழர்கள் கடனட்டை மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்றபோது எங்களுக்கு வலித்தது....

Edited by சுபேஸ்

<p>சிங்கள படையினரோடு தமிழர்களும்தான் நின்று எங்கள் சகோதரிகளை வேட்டை ஆடினார்கள். இதை வைத்துக் கொண்டு அனைத்துத் தமிழர்களையும் எடை போடக் கூடாது.

சமூகங்களையோ, இனங்களையோ குறிப்பிட்டு தலையங்கம் போடுகின்ற பொழுது கவனமாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தையும், வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தையும் வேண்டி நிற்பவர்கள் அதற்குள் வாழ்கின்ற ஒரு குறிப்பிட்ட தொகையை கொண்ட ஒரு இனத்தை அல்லது சமூகத்தை குற்றம் சாட்டக் கூடிய தலைப்புக்களையும் செய்திகளையும் போடுவது கண்டிக்கத்தக்கது.

இது இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையீனத்தையும் வெறுப்பையும் வளர்க்கும்.

தமிழ் தேசியத்துக்கு முரணான யாழ்ப்பாணிய குறுந்தேசியவாதிகளே இப்படியான தலைப்புக்களை ஆதரிப்பார்கள்

Edited by சபேசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் தாம் தமிழர்கள் என்று கூறுவது இல்லை, முஸ்லிம் செய்த தவறை எப்படி எழுதுவது ?

யாழில் வெளிநாட்டு ஆசை காட்டி பணபோசடி செய்த நபருக்கு விளக்கமறியல்

இப்படி எழுதினால் போதும். செய்தியில் வேண்டும் என்றால் அவருடைய இடத்தையும் பெயரையும் போடலாம். ஆனால் இனக் குறியீட்டுடன் ஒரு செய்தியை போடுவது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பட்டமான இனவாதக் கருத்துக்கள் நெடுக்ஸ்(மன்னிக்கவும் நெடுக்ஸ்...இது உங்கள் குறித்தல்ல உங்கள் கருத்துப் பற்றிய பதில்)....இப்படித்தான் வெளிநாட்டு ஊடகங்கள் எம்மவர் சிலரால் புலிகள் /தமிழர்கள் கடனட்டை மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்றபோது எங்களுக்கு வலித்தது....

அதென்ன.. கடனட்டை களவெடுத்தது தமிழன் என்று போட்டால் இனவாதம்... அதேவேளை கனடியத் தமிழன் என்று உலகிற்கு பறைசாற்றும் போது அந்த இனவாதம் எங்கே ஒளிந்து கொள்கிறது. பொத்தாம் பொதுவா கனேடியர்கள் என்று போட்டால்.. செய்திகளிலும் கனேடியர் கடனட்டை மோசடி என்று வரும் தானே. ஆக.. எங்களுக்கு கனடிய தேசியத்துள்.. தமிழர் என்ற அடையாளம் தேவைப்படுகின்ற அதேவேளை அந்தத் தமிழர்கள் குற்றவாளிகளாக நின்றால்.. அந்த அடையாளம் மறைக்கப்பட வேண்டும். இது எந்த வகையில் நியாயம்..???! :icon_idea::o

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வெளிநாட்டு ஆசை காட்டி பணபோசடி செய்த நபருக்கு விளக்கமறியல்

இப்படி எழுதினால் போதும். செய்தியில் வேண்டும் என்றால் அவருடைய இடத்தையும் பெயரையும் போடலாம். ஆனால் இனக் குறியீட்டுடன் ஒரு செய்தியை போடுவது தவறு.

ஏன் இடத்தையும் பெயரையும் போடவேண்டும்?

இதை விளங்க முடியவில்லை. பண மோசடி செய்தவர் கைது இப்படி போட்டாலே போதுமானதுதானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் அப்படி எங்கள் மீது அக்கறை கொள்வது கிடையாது, நாங்கள்தான் அவர்களை சகோதரர்களாக பார்க்கின்றோம் ! அவர்கள் அப்படி பார்த்திருந்தால் வன்னியில் யுத்தம் உச்சக்கட்டம் அடைந்தபோது இந்த முஸ்லிம்கள் மௌனம் காத்து சிங்களவன் செய்த கொலைக்கு உடந்தையாக இருந்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன.. கடனட்டை களவெடுத்தது தமிழன் என்று போட்டால் இனவாதம்... அதேவேளை கனடியத் தமிழன் என்று உலகிற்கு பறைசாற்றும் போது அந்த இனவாதம் எங்கே ஒளிந்து கொள்கிறது.

ஒன்று பாராட்டுதல்..ஒருவன் சார்பாக பாராட்டினாலும் ஒட்ட்டு மொத்த சமூகத்துக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை..மாறாக சமூகத்தின் மதிப்பு உயரும்...ஏற்றுக்கொள்ளக்கூடியது..மற்றது தூற்றல்..ஒருவன் செய்யும் செயலால் ஒட்டுமொத்த சமூகமே குற்றவாளி ஆக்கப் படுவது..எற்றுக்கொள்ள முடியாதது...

தமிழர் என்ற அடையாளம் தேவைப்படுகின்ற அதேவேளை அந்தத் தமிழர்கள் குற்றவாளிகளாக நின்றால்.. அந்த அடையாளம் மறைக்கப்பட வேண்டும். இது எந்த வகையில் நியாயம்..???! :icon_idea::o

சமப்படுத்தமுடியாதவர்களை சமப்ப்டுத்த முனைகிறது உங்கள் வாதம்...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள படையினரோடு தமிழர்களும்தான் நின்று எங்கள் சகோதரிகளை வேட்டை ஆடினார்கள். இதை வைத்துக் கொண்டு அனைத்துத் தமிழர்களையும் எடை போடக் கூடாது.

சமூகங்களையோ, இனங்களையோ குறிப்பிட்டு தலையங்கம் போடுகின்ற பொழுது கவனமாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தையும், வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தையும் வேண்டி நிற்பவர்கள் அதற்குள் வாழ்கின்ற ஒரு குறிப்பிட்ட தொகையை கொண்ட ஒரு இனத்தை அல்லது சமூகத்தை குற்றம் சாட்டக் கூடிய தலைப்புக்களையும் செய்திகளையும் போடுவது கண்டிக்கத்தக்கது.

இது இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையீனத்தையும் வெறுப்பையும் வளர்க்கும்.

தமிழ் தேசியத்துக்கு முரணான யாழ்ப்பாணிய குறுந்தேசியவாதிகளே இப்படியான தலைப்புக்களை ஆதரிப்பார்கள்

முஸ்லீம் நபரை முஸ்லீம் நபர் என்று செய்தியில் இடுவதால் என்ன தப்பு இருக்கிறது.அதனை சமூகப் பாகுபாட்டுக் கண்ணோட்டத்தில்.. கண்டு.. அதனை பெரிய விடயமாக்கும்.. உங்களைப் போன்ற பிற்போக்கு பகுப்புவாதிகள் தான்.. யாழ்ப்பாண குளக்கரை (மன்னிக்கவும் அதென்ன குறுந்தேசியம்.. நெடுந்தேசியம்.. காலத்துக்கு காலம்.. இப்படி ஒவ்வொரு சொற்றொடர்களோடு உள்நுழைந்து.. பேரழிவுகளோடு அவற்றைக் கைவிட்டுவிட்டு.. பிறகு இன்னொரு சொற்றொடரோடு.. மீள நுழைவதையே செய்து வருகிறீர்கள்.. ஏன். தாலி கட்டமாட்டன் என்று நெடும் வாதம் செய்த தாங்கள்.. பின்னர்... மாமிக்காக மனைவிக்கு தாலி கட்டி அதனை குறும்வாதம் ஆக்கியவர்.. என்பதையும் இந்த உலகம் அறியும்..!) வாதங்களை அடிக்கடி.. சொற்களை.. சொற்றொடர்களை மாற்றி முன்வைக்கிறார்கள்.

ஆம்.. எம் சகோதரிகளை எதிரியோடு நின்று.. வேட்டையாடிவர்களை தெளிவாகவே தான் தமிழ் தேச விரோத சக்திகள் என்று வரையறுக்கிறமே.. பிறகென்ன..! அப்படி இவர்களையும் வரையறுக்கவா சொல்கிறீர்கள்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் அப்படி எங்கள் மீது அக்கறை கொள்வது கிடையாது, நாங்கள்தான் அவர்களை சகோதரர்களாக பார்க்கின்றோம் ! அவர்கள் அப்படி பார்த்திருந்தால் வன்னியில் யுத்தம் உச்சக்கட்டம் அடைந்தபோது இந்த முஸ்லிம்கள் மௌனம் காத்து சிங்களவன் செய்த கொலைக்கு உடந்தையாக இருந்தார்கள் .

நீங்கள் யாழில் இருந்து சகோதரர்களை விரட்டியதால்தான் அவர்கள் அப்படி செய்தார்கள்.

நீங்கள் சகோதரர்களாக ஏற்று வீட்டு அழைத்து விருந்து வைத்து பாருங்கள்.

(உங்கள் மனைவியை இழுத்து வன்புணர்வு செய்தால் நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல......... நாங்கள் ஏற்கனவே சகோதர்களுடன் கூடி குலாவி இழக்க கூடியவற்றை இழந்துவிட்டோம். இனி உங்களுடைய முறை)

தலைப்பில் பண மோசடி செய்தவர் கைது என்று போட்டால் போதும். உள்ளே செய்தியில் வேண்டும் என்றால் அவருடைய பெயரையும் சொந்த இடத்தையும் போடலாம் என்று சொன்னேன். ஆனால் அதையும் கூட தவிர்த்துக் கொள்ளலாம்.

இங்கே ஐரோப்பாவில் ஊடகங்கள் இப்படித்தான் எழுதுகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவரின் முழுப் பெயரை எழுதுவதைக் கூட பல ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ளும்.

காவல்துறையால் தேடப்படுகின்ற ஒரு குற்றவாளியை பற்றி எழுதுகின்ற பொழுதுதான், மக்களுடைய உதவியைப் பெறும் பொருட்டு அவருடைய அடையாளங்கள், தேவை ஏற்பட்டால் எந்த நாட்டை சேர்ந்தவர் போன்ற விபரங்களைக் குறிப்பிடுவார்கள்.

நாங்களும் கொஞ்சம் நாகரீகம் மிக்க மனிதர்களாக மாற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று பாராட்டுதல்..ஒருவன் சார்பாக பாராட்டினாலும் ஒட்ட்டு மொத்த சமூகத்துக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை..மாறாக சமூகத்தின் மதிப்பு உயரும்...ஏற்றுக்கொள்ளக்கூடியது..மற்றது தூற்றல்..ஒருவன் செய்யும் செயலால் ஒட்டுமொத்த சமூகமே குற்றவாளி ஆக்கப் படுவது..எற்றுக்கொள்ள முடியாதது...

சமப்படுத்தமுடியாதவர்களை சமப்ப்டுத்த முனைகிறது உங்கள் வாதம்...

இப்படியெல்லாம் யார் கணிக்கச் சொன்னா. பாராட்டு மட்டும் ஒருவன் செய்தால் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெருமை. அதேவேளை.. அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தீமை செய்தால்.. அதில் அவருக்கு மட்டுமே பங்கு. சமூகத்திற்கு இல்லை.. இது நாங்கள் எங்களை ஏமாற்றிக் கொள்ள செய்கின்ற வாதம்.

எப்படி ஒரு பாராட்டு முழுச் சமூகத்திற்கு பெருமையோ.. அதேபோல் தான்.. ஒரு குற்றம் அந்தச் சமூகத்திற்கு தலைகுனிவு. அதனை அந்தச் சமூகம் உணர்ந்து அதன் உறுப்பினர்களை சீரிய வழியில் நடக்க வழி நடத்த வேண்டுமே தவிர.. குற்றத்துக்கும் நமக்குப் பொறுப்பில்லை என்று தட்டிக்கழித்து.. குற்றங்கள் பெருக வாழ முடியாது. அப்படி வாழ எமது குற்றவாளிகளால் பாதிக்கப்படும்.. கூட வாழும் மற்றைய சமூகங்கள் அனுமதிக்கவும் மாட்டா..!

இது தமிழர்களுக்கும் பொருந்தும்.. முஸ்லீம்களுக்கும் பொருந்தும்.. சீனர்களுக்கும் பொருந்தும்.. எல்லாருக்கும் பொருந்தும்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று பாராட்டுதல்..ஒருவன் சார்பாக பாராட்டினாலும் ஒட்ட்டு மொத்த சமூகத்துக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை..மாறாக சமூகத்தின் மதிப்பு உயரும்...ஏற்றுக்கொள்ளக்கூடியது..மற்றது தூற்றல்..ஒருவன் செய்யும் செயலால் ஒட்டுமொத்த சமூகமே குற்றவாளி ஆக்கப் படுவது..எற்றுக்கொள்ள முடியாதது...

சமப்படுத்தமுடியாதவர்களை சமப்ப்டுத்த முனைகிறது உங்கள் வாதம்...

ஒருவன் தனது சொந்த கடின உழைப்பில் பரிசு பெற்றால் ஒட்டுமொத்த சமூகமும் அதில் குளிர் காயவேண்டும்?

ஒருவன் தவறுளைத்தால் அவனுக்கும் சமூகத்திற்கும் தொடர்பில்லை. அவர் வானத்தில் இருந்து குதித்தவர் என்று விட வேண்டும் என்பது எப்படி நியாஜம் ஆகும்?

தற்போது யாழ் இளைஞர்கள் மீது அடிமைத்தனத்தை பிரயோகித்து அதில் இருந்து விடுதலை வேண்டி தருவதாக கூறி பெரும்பாலான முஸ்லிம்கள் பண மோசடி செய்கிறார்கள். இது பற்றி குறித்த சமூகம் விழிப்படைய வேண்டும் என்பதட்குதானே நாளும் செய்தி வாசிக்கிறோம்.

நேற்று வெடித்த குண்டை பற்றி ஏன் என்று செய்தி போடுகிறார்கள் என்றால் ???

நாளை அது வெடிக்காது இருக்க முடிந்தவற்றை சமூகம் செய்யவேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில் பண மோசடி செய்தவர் கைது என்று போட்டால் போதும். உள்ளே செய்தியில் வேண்டும் என்றால் அவருடைய பெயரையும் சொந்த இடத்தையும் போடலாம் என்று சொன்னேன். ஆனால் அதையும் கூட தவிர்த்துக் கொள்ளலாம்.

இங்கே ஐரோப்பாவில் ஊடகங்கள் இப்படித்தான் எழுதுகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவரின் முழுப் பெயரை எழுதுவதைக் கூட பல ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ளும்.

காவல்துறையால் தேடப்படுகின்ற ஒரு குற்றவாளியை பற்றி எழுதுகின்ற பொழுதுதான், மக்களுடைய உதவியைப் பெறும் பொருட்டு அவருடைய அடையாளங்கள், தேவை ஏற்பட்டால் எந்த நாட்டை சேர்ந்தவர் போன்ற விபரங்களைக் குறிப்பிடுவார்கள்.

நாங்களும் கொஞ்சம் நாகரீகம் மிக்க மனிதர்களாக மாற வேண்டும்.

இது அப்பட்டமான பொய். அண்மையில் பிரான்சில் நடந்த தொடர் கொலைகளோடு சம்பந்தப்பட்ட ஒருவர் தொடர்பில் ஊடகங்கள்.. அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை சொல்லாமலோ.. செய்தி வெளியிட்டன.... இல்லையே..!

அதேபோல்.. லண்டன் குண்டுவெடிப்பில் சம்பந்தபட்டவர்கள்.. யார் எந்த பின்னணி கொண்டவர்கள் என்பதை ஊடகங்கள் சொல்லாமலா விட்டன.. இல்லையே..???!

நாங்கள் மேற்குலகை விட இந்த விடயத்தில் அதிகம் நாகரிகம் காத்துத்தான்... இறுதியில்.. குற்றவாளிகளால் இரு சமூகங்களும் பாதிக்கப்படாமல் இருக்க கேட்கப்பட்ட வெளியேற்றம்.. துரத்தி அடிப்பாக வெளி உலகிற்கு காட்டப்பட்டது. அன்றே புலிகள்.. இன்னென்ன குற்றங்களை முஸ்லீம்கள் செய்கிறார்கள் என்று பகிரங்கப்படுத்தி.. ஒரு உலக நியாயத்தை வரவழைத்துக் கொண்டு அமெரிக்கா போல குண்டாக் கொட்டி இருந்தால் கூட யாரும் என்னென்று கேட்டிருக்கமாட்டார்கள். நாங்கள் விட்ட தவறே.. ஒளிப்பு மறைப்பு செய்தி இட்டு சகோதரத்துவம் என்பதை ஒற்றைத்தரப்பா நின்று கடைப்பிடிக்க ஆசைப்பட்டது தான்..! அது பின்னர் நிராசையானது வரலாறு..!

அது எனியும் தேவை இல்லையே. இவன் தான் குற்றவாளி என்பதை உள்ளபடிக்கு சொல்வது.. குற்றவாளிகளின் சமூகப் பின்னணி.. அந்த சமூகத்தின் கூடி வாழ்வுக்கான தகவு இவற்றை எல்லாம் உலகம் எடைபோட உதவும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி ஒரு பாராட்டு முழுச் சமூகத்திற்கு பெருமையோ.. அதேபோல் தான்.. ஒரு குற்றம் அந்தச் சமூகத்திற்கு தலைகுனிவு. அதனை அந்தச் சமூகம் உணர்ந்து அதன் உறுப்பினர்களை சீரிய வழியில் நடக்க வழி நடத்த வேண்டுமே தவிர.. குற்றத்துக்கும் நமக்குப் பொறுப்பில்லை என்று தட்டிக்கழித்து.. குற்றங்கள் பெருக வாழ முடியாது. அப்படி வாழ எமது குற்றவாளிகளால் பாதிக்கப்படும்.. கூட வாழும் மற்றைய சமூகங்கள் அனுமதிக்கவும் மாட்டா..!

இது தமிழர்களுக்கும் பொருந்தும்.. முஸ்லீம்களுக்கும் பொருந்தும்.. சீனர்களுக்கும் பொருந்தும்.. எல்லாருக்கும் பொருந்தும்..! :):icon_idea:

அவை அந்தந்த சமூகங்களுக்குள்ளே செய்யப்படவேண்டியவை....மற்றைய சமூகங்கள்(இங்கு நாம் முஸ்லீம்களைப் பற்றி தலைப்பிட்டதுபோல்)அவற்றைப் பற்றி பேச வெளிக்கிட்டால் இனமுரண்பாடே மிச்சமாகும்....இது இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையை மேலும் மேலும் மோசமாக்கும்......

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில் பண மோசடி செய்தவர் கைது என்று போட்டால் போதும். உள்ளே செய்தியில் வேண்டும் என்றால் அவருடைய பெயரையும் சொந்த இடத்தையும் போடலாம் என்று சொன்னேன். ஆனால் அதையும் கூட தவிர்த்துக் கொள்ளலாம்.

இங்கே ஐரோப்பாவில் ஊடகங்கள் இப்படித்தான் எழுதுகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவரின் முழுப் பெயரை எழுதுவதைக் கூட பல ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ளும்.

காவல்துறையால் தேடப்படுகின்ற ஒரு குற்றவாளியை பற்றி எழுதுகின்ற பொழுதுதான், மக்களுடைய உதவியைப் பெறும் பொருட்டு அவருடைய அடையாளங்கள், தேவை ஏற்பட்டால் எந்த நாட்டை சேர்ந்தவர் போன்ற விபரங்களைக் குறிப்பிடுவார்கள்.

நாங்களும் கொஞ்சம் நாகரீகம் மிக்க மனிதர்களாக மாற வேண்டும்.

அப்படி பட்ட செய்திகளால் யாருக்கு என்ன இலாபம்?

யார் என்று அடையாள படுத்தபட்டால்தானே அவரால் பாதிக்கபட்டவர்கள் அதை அறிய முடியும்?

அதே நபரால் இனி அடுத்தவர்கள் பாதிப்பு அடையாது தவிர்க்க முடியும்?

நான் இந்தத் தலைப்பு முஸ்லீம்கள் மத்தியில் ஏற்படும் தாக்கம் பற்றிப் பேசவில்லை.

தமிழர்களில் எப்படி குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் இருக்கின்றார்களோ அப்படி முஸ்லீம்கள் மத்தியிலும் நிச்சயம் இருக்கிறார்கள். அவர்கள் நாளைக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

ஒவ்வொரு முறையும் "முஸ்லீம் திருடினான்", "முஸ்லீம் கடத்தினான்", "முஸ்லீம் கொலை செய்தான்", "முஸ்லீம் வல்லுறவு செய்தான்" என்று செய்தி போட்டுக் கொண்டிருந்தால், அதைப் படிக்கின்ற தமிழர்கள் மத்தியில் முஸ்லீம் மக்களை பற்றிய எவ்வகையான எண்ணம் ஏற்படும் என்பதே இங்கே உள்ள பிரச்சனை.

ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு தமிழர்கள் முஸ்லீம்கள் மீது வெறுப்பை வளர்த்து வைத்திருக்கின்றார்கள். இரண்டு இனங்களும் ஐக்கியப்பட வேண்டிய ஒரு நேரத்தில் இப்படியான தலைப்புகள் அதை கெடுப்பதாகவே அமையும்.

தமிழ் ஊடகங்கள் தங்கள் கடமையை சரியாக உணர்ந்து செயற்பட வேண்டும்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. இது தவறான வாதம். நான் இந்தத் தலைப்பு முஸ்லீம்கள் மத்தியில் ஏற்படும் தாக்கம் பற்றிப் பேசவில்லை.

தமிழர்களில் எப்படி குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் இருக்கின்றார்களோ அப்படி முஸ்லீம்கள் மத்தியிலும் நிச்சயம் இருக்கிறார்கள். அவர்கள் நாளைக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

ஒவ்வொரு முறையும் "முஸ்லீம் திருடினான்", "முஸ்லீம் கடத்தினான்", "முஸ்லீம் கொலை செய்தான்", "முஸ்லீம் வல்லுறவு செய்தான்" என்று செய்தி போட்டுக் கொண்டிருந்தால், அதைப் படிக்கின்ற தமிழர்கள் மத்தியில் முஸ்லீம் மக்களை பற்றிய எவ்வகையான எண்ணம் ஏற்படும் என்பதே இங்கே உள்ள பிரச்சனை.

ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு தமிழர்கள் முஸ்லீம்கள் மீது வெறுப்பை வளர்த்து வைத்திருக்கின்றார்கள். இரண்டு இனங்களும் ஐக்கியப்பட வேண்டிய ஒரு நேரத்தில் இப்படியான தலைப்புகள் அதை கெடுப்பதாகவே அமையும்.

தமிழ் ஊடகங்கள் தங்கள் கடமையை சரியாக உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஒவ்வரு முறையும் ............. முஸ்லிம்கள் அப்படி செய்தால்.

முஸ்லிம்கள் பற்றி கவனம் கொள்ளவேண்டியது தமிழர்கள் உடைய பொறுப்புணர்வு இல்லையா?

அதை பற்றிய விழிப்புணர்வை ஒரு ஊடகம் செய்வதை எப்படி தவறு என்று சொல்கிறீர்கள்?

அது முஸ்லிம்களுக்கும் ஒரு விழிப்புணர்வை கொடுக்கும் தமது சமூகத்தில் எதோ தவறு உள்ளது என்று அவர்கள் அதை திருத்தி கொள்ளுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் தனது சொந்த கடின உழைப்பில் பரிசு பெற்றால் ஒட்டுமொத்த சமூகமும் அதில் குளிர் காயவேண்டும்?

ஒருவன் தவறுளைத்தால் அவனுக்கும் சமூகத்திற்கும் தொடர்பில்லை. அவர் வானத்தில் இருந்து குதித்தவர் என்று விட வேண்டும் என்பது எப்படி நியாஜம் ஆகும்?

குளிர்காய்வதும் விடுவதும் எந்தப் பிரச்சினையையும் தரப்போவதில்லை..ஆனால் தேவையே இன்றி ஒருவனின் தனிப்பட்ட நடத்தையைக் காட்டி அவனது அக்கா,தங்கச்சியின் நடத்தையை எடைபோடுவது போலத்தான் ஒரு குற்றவாளியை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சமூகம் பற்றியும் செய்தி போடுவது....

  • கருத்துக்கள உறவுகள்

அவை அந்தந்த சமூகங்களுக்குள்ளே செய்யப்படவேண்டியவை....மற்றைய சமூகங்கள்(இங்கு நாம் முஸ்லீம்களைப் பற்றி தலைப்பிட்டதுபோல்)அவற்றைப் பற்றி பேச வெளிக்கிட்டால் இனமுரண்பாடே மிச்சமாகும்....இது இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையை மேலும் மேலும் மோசமாக்கும்......

ஒரே நிலத்தை பகிர்ந்து வாழும் மக்கள் குழுமங்கள்.. ஒன்றில் மற்றது தங்கி வாழும் நிலையில்.. இப்படியான குற்றச் செயல்களின் பின்னணி குறித்து சரியான செய்தி இடல் அவசியம். இன்றேல் குழப்பங்களே விளையும். குற்றவாளிகள் தப்பிக்கவும் வழி பிறக்கலாம்.

அந்த வகையில்.. இன முரண்பாடாக இது பார்க்கப்படுவதிலும்... முஸ்லீம் குற்றவாளிகள் தொடர்பில் கூட வாழும் சமூகம் நல்ல அபிப்பிராயம் கொள்ளவில்லை என்பதை இது முஸ்லீம்களுக்குச் சொல்லும்.

இதன் மூலம் அவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டு நடந்தால்.. அதன் விளைவே.. இன நெருக்கத்தை அதிகரிக்கும். சகோதரத்துவத்தை கூட்டும். அதைவிடுத்து.. முரண்பாடுகளை ஒளித்து மறைத்து வைச்சுக் கொண்டு வளர்க்கும் சகோதரத்துவம் போலியானது.. நீடிக்காததது...! இதுதான் கடந்த கால நிஜமும் கூட. அது எனியும் தொடர்வதிலும்.. உண்மையான புரிந்துணர்வு எட்டப்படுதலுக்கு இந்த வகையான செய்திகள் அவசியமே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்காய்வதும் விடுவதும் எந்தப் பிரச்சினையையும் தரப்போவதில்லை..ஆனால் தேவையே இன்றி ஒருவனின் தனிப்பட்ட நடத்தையைக் காட்டி அவனது அக்கா,தங்கச்சியின் நடத்தையை எடைபோடுவது போலத்தான் ஒரு குற்றவாளியை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சமூகம் பற்றியும் செய்தி போடுவது....

யாழில் உள்ள முஸ்லிம்கள் பண மோசடி என்று போடவில்லை தானே?

யாழில் ஒரு முஸ்லிம் நபர் பண மோசடி என்றுதானே போட்டுள்ளார்கள்.

இதில் எங்கே முஸ்லிம் சமூகம் தண்டிக்கபடுள்ளது? அப்படி அதை அவர்கள் குறைவாக எண்ணினால் குறித்த நபருக்கு குரான் பற்றி அவர்கள் தெளிவாக சொல்லி கொடுத்து அடுத்தவனிடம் திருடாதே என்று சொல்லி வளர்த்திருக்க வேண்டும்.

இது பள்ளியிலேயே தமிழனை எப்படி வெட்டுவது என்று பாடம் கொடுத்தால்?

அங்க பிழை இல்லை.

செய்தி போட்டவநில்தான் பிழை என்கிறீர்கள்?????

ஒவ்வொரு முறையும் முஸ்லீம்கள் மட்டும் அல்ல, தமிழர்களும் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். உலகம் முழுவதும் உள்ள அனைத்து இனங்களில் உள்ளவர்களும் இது போன்ற சமூக, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஆனால் நாம் ஒவ்வொரு முறையும் இன அடையாளத்தை விளித்து அந்தக் குற்றச் செயல்களை குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் அது அந்தக் குறிப்பிட்ட இனம் முழுவதையும் பற்றிய தவறான எண்ணத்தை வளர்க்கும். இது தவறான செயல்.

குறிப்பிட்ட செய்திகளும் தலைப்புகளும் முஸ்லீம் விரோத சிந்தனையை தமிழர்கள் மத்தியில் வளர்க்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.