Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உதவத் தயார் – பொதுநலவாய நாடுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

36098-100x100.jpg

இலங்கையின் நல்லிணக்கத்துக்காக உதவ தயார் என்று பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவிததுள்ளது. பொதுநலவாய நாடுகளின் வர்த்தக சபை கூட்டம் அண்மையில் லண்டனில் நடைபெற்றது.எனினும் இதன்போது இடம்பெறவிருந்த இலங்கை ஜனாதிபதியின் உரை ரத்துச்செய்யப்பட்டது. எனினும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் செயலாளர் கமலேஸ் சர்மா ஏற்பாடு செய்திருந்த பிரித்தானிய மகாராணிக்கான விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்றார்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க நடைமுறைகளுக்கு தாம் உதவ தயார் என்று பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் ரிச்சட் உகு, இன்று தெரிவித்துள்ளார்

பொதுநலவாய நாடுகள் அமைப்பு, மனித உரிமைகளின் அடிப்படை அம்சங்களுக்கு மதிப்பளிக்கிறது

இந்தநிலையில், இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு உதவ தமது அமைப்பு தயாராக உள்ளதாக உகு குறிப்பிட்டுள்ளார்

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறையை தமது அமைப்பால் செய்துக்கொடுக்கமுடியும்

அத்துடன் இலங்கை அரசாங்கம் விரும்பினால், தம்மால் அதனை நடைமுறைப்படுத்துதற்கான உதவிகளை மேற்கொள்ளமுடியும் என்றும் ரிச்சட் உகு குறிப்பிட்டுள்ளார்

http://www.saritham.com/?p=61674

  • கருத்துக்கள உறவுகள்

இது கமலேஸ் சர்மாவின் அடுத்த 'அவிட்டு' வாணம்!

இலங்கைக்கு 'அவகாசம்' தேடுகிறார்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இது கமலேஸ் சர்மாவின் அடுத்த 'அவிட்டு' வாணம்!

இலங்கைக்கு 'அவகாசம்' தேடுகிறார்! :wub:

அதைத்தான் நானும் நினைத்தேன்.. :D

பொதுநலவாய நாடுகள் அமைப்பு, மனித உரிமைகளின் அடிப்படை அம்சங்களுக்கு மதிப்பளிக்கிறது.

வசனங்களைச் சரியாக பாவிக்க வேண்டும். அதாவது ஸர்மா விட்ட திருகுதாளத்திற்கு பிறகு பொதுநலவாயம், இலங்கையானது LLRC யின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்கிறது. இந்த புது தொடக்கம் ஆரம்பமானது ஸர்மா காட்டின திரிசங்கு சுவர்க்கத்தாலேதான் என்பது உணமை.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறையை தமது அமைப்பால் செய்துக்கொடுக்கமுடியும்

அத்துடன் இலங்கை அரசாங்கம் விரும்பினால், தம்மால் அதனை நடைமுறைப்படுத்துதற்கான உதவிகளை மேற்கொள்ளமுடியும் என்றும் ரிச்சட் உகு குறிப்பிட்டுள்ளார்

ஐயா ரிச்சாட் உகு! இலங்கை போகும்போது நவநீதம் பிள்ளை அம்மையாரையும் கூட்டிச் செல்ல முடியுமா? அவவும், தங்களை மாதிரியே இலங்கை போக ஆசைப்படுகிறா. வீசா பெற்றுக்கொள்வது கஸ்டமாக இருக்கிறது.

இலங்கையை இப்படி முழங்கையில் பிடித்தவர்கள் பலபேர் .

பொதுநலவாயம் உடனடியாகச் செய்ய வேண்டியது இலங்கையில் நடைபெறவிருக்கும் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்பதே. இல்லையேல் இலங்கை எதையும் நடைமுறைப்படுத்தாது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய நாடுகளின் அடுத்த கூட்டத்தொடரை ஸ்ரீலங்காவில் நடத்துவதற்கான ஆதரவை இப்படி செய்தாவது தேடிக்கொடுப்பது அதற்காக அதுவரைக்கும் காலம் கடத்த இப்படியான அறிக்கைகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.