Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழமே ஒரே நோக்கம்-புல தமிழர்கள்- தமிழகத்தின் ஆதரவுடன் ஈழ நாடு உருவாக்கப்படும் என சிறிதரன் கூறினாராம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழமே தனது ஒரே நோக்கம் எனவும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் ஆதரவுடன் ஈழ நாடு உருவாக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்தியாவில் தெரிவித்துள்ளதாக அரசசார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுக் கூற அரசாங்கம் இடமளிக்கவில்லை. நாங்கள் ஈழ நாட்டை ஆரம்பிப்போம். அது வெற்றியளிக்கும். எமது தனி ஈழ நோக்கத்தை கைவிட மாட்டோம் என அவர் கூறியுள்ளார்.

பிரபாகரன் கியூபாவை மதித்தார். எனினும் கியூபா இலங்கைக்கு உதவியது. ஈழத்தை உருவாக்க முடியாது என நினைக்க வேண்டாம் என தெரிவித்துள்ள சிறிதரன் வடக்கில், இராணுவத்தினர் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளதாக அரசசார்பு இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

அப்ப ஸ்ரீதரன் MP க்கு அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் சீட் இல்லை என்று அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஸ்ரீதரன் MP க்கு அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் சீட் இல்லை என்று அர்த்தம்.

அப்படி ஒரு நிலை வந்தால்.........

வேறு ஒரு நல்ல வழி பிறக்கும்.

புலம்பெயர் மக்கள் மற்றும் தமிழக மக்களுடன் சேர்ந்து “தனித் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம், ஈழமே எங்கள் இறுதி நோக்கம்’’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வீக்கெண்ட் லீடர் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மேலும் தெரிவிக்கையில்:

இலங்கையில் ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தலைவராக இருந்தாலும் சிங்கள அரசியல்வாதிகள் சம மரியாதை கொடுத்து மதிப்பது கிடையாது.

இந்நிலையில், தமிழர்களோடு சிங்களவர்கள் சமாதான பேச்சுவார்த்தைக்கு வருவது எப்படி?. அப்படி வந்தாலும் அது எழுத்து மூலமாகவே இருக்கும். நேரடிப் பேச்சுவார்த்தையாக இருக்கமுடியாது.

சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தை கூட சர்வதேசத்தின அழுத்தம் காரணமாகவே நடந்தது. சர்வதேச சமூகமும் இந்தியாவும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு காணமுடியுமே தவிர, சிங்களவர்களால் தமிழர்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப் போவதில்லை.

நாட்டில் தற்போதைய நிலையில், முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசினால் படுகொலைசெய்யப்பட்ட ஈழ மக்களுக்கான துக்கநாளைக்ககூட அனுஸ்டிக்க சுதந்திரம் இல்லை. தற்போதும் இராணுவத்தினரின் கண்காணிப்பிலேயே யாழ். பல்கலைக்கழகம் காணப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு புத்தகம் கொடுப்பதற்காக பாடசாலைக்காக சென்றபோது, இராணுவத்தினர் சுற்றி நின்று படம் எடுத்தனர். பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு எப்படி இருக்கும். இதை எப்படி சுதந்திரமான நாடு என்று சொல்ல முடியும். எனக்கே இந்த நிலைமை என்றால் மக்களுக்க சுதந்திரம் எங்கே சுதந்திரம் இருக்கப் போகிறது.

சிங்களவர்கள் புத்தரின் கொள்கைகளையும் பாராம்பரியங்களையும் தமிழர்களிடம் திணிக்க நினைக்கின்றனர். இவ்வாறு அரசாங்கம் செய்வதனால் காலப்போக்கில் தமிழர்கள் வெளிநாட்டவர்களாக கருதப்படுவார்கள்.

இதேவேளை, தமிழ் பெண்களை இராணுவத்தினர் திட்டமிட்டு குறி வைத்துள்ளார்கள். 9 வயது குழந்தையைக் கூட துஸ்பிரயோகம் செய்கின்றார்கள். இளவயதில் நிறைய தமிழ் பிள்ளைகள் கர்ப்பம் தரிக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் அப்பா யாரென்னறால் இராணுவத்தினரே. இவ்வாறான நிலையே தமிழர்களுக்கு காணப்படுகிறது.

சிங்களவர்கள் தமிழர்களின் கலாசாரத்தையும் மூலதனத்தையும் அடியோடு இல்லாமல் செய்வதற்கு திட்டமிட்டு இவ்வாறான செயல்கள் செய்யப்படுகின்றது.

இராணுவ முகாமெல்லாம் தற்போது பாடசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால் எவ்வாறு பாடசாலை இயங்கும். அடிமை உணர்வு மிகவும் பயங்கரமாக நடத்தப்படுகின்றது. இவ்வாறு நடந்து கொண்டிருந்தால், இன்னும் மூன்று வருட இறுதியில், தமழிர்கள், தமது கனவு, அமைதி, கலாசாரம் எல்லாவற்றையும் இழந்து ஒரு அனாதையைப் போல தாய் நாட்டில் இருப்பார்கள்.

அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சிங்களக் கொடியை ஏந்தியமைக்கு சர்ச்சைகள் எழுந்தன.

1987 – 2002 வரை விடுதலைப்புலிகள் அரசாங்கத்திடம் பகிரங்கமாக சவால் விடுத்தார்கள். ஆனால் நாம் அமைதியான சூழலையே எதிர்பார்க்கிறோம். ஏனெனில், தற்போது இருக்கும் எந்த மக்களையும் இழக்க விரும்பவில்லை. எமது கட்சியில் பாகுபாடு இருந்தாலும், தனி ஈழத்தை உருவாக்கும்வரை இணைந்தே வேலை செய்வோம்.

நாட்டில் தற்போது நடைபெறும் செயற்பாடுகளை நோக்கும் போது, நம்மை பலப்படுத்தவேண்டிய தேவை உள்ளது.

ஏனெனில் மூன்று லட்சம் பேர் போரில் தியாகம் செய்துள்ளனர். 90ஆயிரம் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். 25ஆயிரம் அநாதையாக உள்ளனர். இதில் 40 ஆயிரம் போராளிகளை இழந்துள்ளோம்.

ஆனால், சிஙகள அரசாங்கம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படியே போனால் இந்த நாடு சிங்கள அரசாங்கத்தின் கையிலேயே போகும். நமது கௌரவத்தையெல்லாம் விட்டு அவர்களோடு போக வேண்டும். அல்லது நமது வழியில் நாம் செல்ல வேண்டும்.

ஐ.நா பிரேரனை மற்றும் அதற்கான இந்தியாவின் ஆதரவு பற்றி உங்கள் வெளிப்பாடு யாது?இது தொடர்பாக இலங்கை எவ்வாறானதொரு பதிலை அளிக்கும்? என செய்தியாளார் கேட்டவேளை,

கிழக்கு தீமோரில் 1000 மக்கள் கொல்லப்பட்டவுடன் புதிய நாடு உருவாகியது. 2000 மக்கள் கொல்லப்பட்டவுடன் தென் சூடானிலும் அவ்வாறே நடந்தது ஆயினும் 146000 மக்கள் ஈழத்தில் இறந்த போன பின்னரே சர்வதேசம் விழித்தது.

தமிழ் நாட்டில் எழுந்த எதிர்ப்பு காரணமாக இந்தியா ஐ.நா பிரேரனையிற்கு வாக்களித்தது. இதற்காக ஜெயலலித்தா அம்மையாரிற்கும் செந்தமிழன் சீமானிற்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். இவர்கள் சாலைகளில் போராட்டங்களில் ஈடுப்பட்டதுடன் கருணாநிதியின் ஆதரவினையும் பெற்றனர்.

அன்னை இந்திராகாந்தி எ.ம்.ஜி.ஆர் ஜி. பார்த்தசாரதி ஆட்சி காலம் போன்று இந்தியா தொடர் அழுத்தத்தை இலங்கைக்கெதிராக பிரயோகிக்க வேண்டும். இத்தலைவர்களின் இழப்பே முள்ளிவாய்க்கால் பேரவலமாகும் என்றார் சி.சிறிதரன் எம் பி.

மனித உரிமை காப்பாளர்கள் மீதும் விசேடமாக மன்னார் ஆயர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை எவ்வாறு நோக்குகிறீர்கள் என்றார் குறித்த செய்தியாளர்,

கடந்த வாரம் மன்னாரில் முஸ்லீம் செய்தியாளரும் யாழ்பாணத்தில் மற்றுமொறு செய்தியாளரும் தாக்குதலிற்கு உள்ளாகினர். சிங்கள ஆட்சியளர்களிடம் ஜனநாயகம் இல்லை. அவர்கள் சிங்கபாகு வம்சாவழியினரென பெருமை கொள்கின்றனர். இந்நிலையில் இவர்கள் எவ்வாறு மனித உரிமைகளிற்கு மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிப்பார்கள்.

சிங்கள தலைமைத்துவம் உண்மை பேசுவோர் சிங்கள தமிழ் முஸ்லீம் வேறுபாடின்றி தாக்குதல் மேற்கொள்வர். மன்னார்ஆயர் மனித உரிமைகளின் தளபதி என்பதுடன் சிறந்த இறை சேவகன்.

புரட்டாதி 2008 முதல் வைகாசி2009 வரை 146679 பேர் வரையிலான மக்கள் தொகை பற்றிய புள்ளி விபரங்கள் இல்லை என்பதனை இவர்கள் எவ்வாறு ஏற்பர்?. ஆயரை பாதுகாப்பது எங்கள் கடமை. மன்னார்ஆயர் சிறந்தஇறை சேவகன் மட்டுமல்லாது சிறந்த மனித உரிமைகளின் மற்றும் தமிழ் மக்களினதும் தலைவராவார்.

வட- கிழக்கு பகுதிகள் தமிழரின் தாயகம் அல்ல என்ற கோத்தாபய ராஜபகசவின் கருத்து தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்றார் செய்தியாளர்

வரலாற்று ரீதியாகவே வட- கிழக்கு பகுதிகள் தமிழரின் தாயகம் ஆகும். 1616 வரை நாம் தனிநாடாக இருந்தோம்.1833ம் ஆண்டு பிரித்தானியரே சிலோன் முழுவதையும் ஒன்றாக இணைத்தனர்.

அப்போது தான் நாம் சிங்களவருடன் இணைய ஆரம்பித்தோம். ஆயினும் பிரித்தானியர் வெளியேறும் பொழுது சிங்கள அரசியல் தலைவர்களை மட்டுமே நாடளவிட்டனர்.

இலங்கை முழுவதையும் ஆட்சி புரிந்த ராவணன் அரசரும் ஒரு தமிழனே. இவ்வாறான கருத்துக்களை வெளியிட முன்னர் கோத்தாபய ராஜபகச தமிழரின் வரலாற்றை நன்மு அறிந்திருக்க வேண்டும். சிங்களவரும் விஜய அரசருடன் ஒரிசாவிலிருந்து அகதிகளாக இலங்கைக்கு வந்தனர் என எம்மால் கூற இயலும். சிங்களவர்கள் வட- கிழக்கு பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதற்கு வரலாற்றுரீதியான சான்றுகள் இல்லை என்றார் பா.உறுப்பினர் சி.சிறிதரன்

உங்களது எதிர்கால திட்டங்கள் என்ன என வினாவினார் செய்தியாளர்,

கடந்த முப்பது ஆண்டுகளாக ஆசிரியர் சேவையின் மூலம் என் வாழ்வு கழிந்தது. எனது மாணவர்கள் தீவிரவாதிகளாவதை ஒரு போதும் விரும்பவில்லையாயினும் அவர்கம் அநீதியிற்கு தலை குனிவதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை. நாம் அதற்கெதிராகவே போராடினோம் அதனையே புலிகளும் செய்தனர்.

இன்று எம் போராட்டத்தில் தலைவர் சம்பந்தனின் தலைமையில் ஜனநாயக ரீதியிலான புதிய அப்பியாசத்தில் கால் பதித்துள்ளோம்.

நாம் எம் போராட்டத்தை தொடர்வோம். சுயநிர்ணய கேள்விக்கு மீண்டும் செல்லமாட்டோம். தனிப்பட்டவர்களின் கருத்து கூட்டமைப்பின் கருத்தல்ல என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

http://thaaitamil.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/

  • கருத்துக்கள உறவுகள்

இவரு நல்ல மனிதனாக தெரிகிறார் ..சிறிதரன் அவர்களை அடுத்த கூட்டமைப்பு தலைவராக சிபாரிசு செய்யுங்கோ.. :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிதரன் ஒரு உண்மைமனிதன்.

உண்மைமனிதர்கள்/தியாகிகள் ஒருபோதும்

தம் நலனுக்காய் இனத்தை/போராட்டத்தை

காட்டிக்கொடுக்கமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.