Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்லையான்கனி ..

Featured Replies

ஏழைகளின் ஆப்பிள்!

13.jpg

மருத்துவ உலகில் நீண்ட நெடுங்காலமாக ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. நரை, திரை, மூப்பு, மரணம் இவற்றைத் தள்ளிப்போட்டு நீண்ட காம் ஆரோக்கியமாக வாழும் வழி என்ன? என்பதே அந்த ஆராய்ச்சியின் நோக்கம்.

தமிழ்நாட்டுச் சித்தர்கள் சுருக்கமாக இந்த ஆராய்ச்சியை காயகல்ப ஆராய்ச்சி என்றனர். காயம் என்றால் உடம்பு; கல்பம் என்றால் உடம்பைக் கல் போன்று இறுக வைத்து நீண்ட காலம் வாழவைத்தல். ஆக, காயகல்பம் என்றால் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் என்று அர்த்தம்.

இந்த காயகல்ப ஆராய்ச்சிக்குப் பிள்ளையார்சுழி போட்டவர்கள் நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் 2500 ஆண்டுகட்கு முன்பே குமரிகண்டத்தில் வாழ்ந்த அறிவர் என்ற சித்தர்கள் (சித் என்றால் அறிவு: சித்தர் என்றால் அறிவர்) 108 வகையான காயகல்ப மூலிகைகளைச் சாப்பிட்டு காயசித்தி அடைந்து நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்ந்தனராம்.

அத்தகைய 108 காயகல்ப மூலிகைகளும் ஒன்றுதான் கருநெல்லிக்கனி. இந்தக் கருநெல்லிக்கனியைத்தான் கொல்லிமலையை ஆண்ட அதியமான், அவ்வையாருக்குப் பரிசாக அளித்து நீண்டகாலம் தமிழ்ப்பணி ஆற்றுமாறு வேண்டினார்.

நெல்லிக்கனி மூன்று வகைப்படும். ஒன்று கருநெல்லிக்கனி. இரண்டு மலைநெல்லி எனப்படும் பெருநெல்லி. மூன்று அருநெல்லி. இதில் அருநெல்லி என்பது ஊறுகாய் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் உண்பதாகும். நெருநெல்லி எனும் மலைநெல்லியைத்தான் ஏழைகளின் ஆப்பிளள் என்று குறிப்பிட்டேன்.

செழிப்பான கறுப்பான தலைமுடியை வளர்த்துக் காப்பதிலிருந்து மூளை, கண், காது, மூக்கு, தோல், பற்கள், ஈறுகள், தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், இதயம், இதயநாளங்கள். கல்லீரல், கணையம், மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், கருப்பை, சிறுநீரகம், மூட்டுக்கள், பாதங்கள் வரை அனைத்து உறுப்புகளின் திசுக்களையும் வளர்த்து அவை சீராகச் செயல்படத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் கொண்டுள்ள ஒரே கனி, நெல்லிக்கனி.

நெல்லியால் நெடும்பகை போகும் என்பது அருமையான பழமொழி ஆகும். நெடும்பகை என்பது உடல் நோய் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மார்க்கெட்டுக்கு வரும் நெல்லிக்கனிகளில் (பெருநெல்லி என்று குறிப்பிடுவர். அருநெல்லி என்பது சிறிய நெல்லி. இதனை மருத்துவத்துக்குப் பயன்படுத்தக்கூடாது)

5 லிட்டர் நெல்லிக்கனிகளை வாங்கி அடிபட்டது, அழுகியது, சொத்தை, கரும்புள்ளி உள்ளவற்றை நீக்கிவிட்டு வெந்நீரில் கழுவி நிழலில் உலர்த்தியபின் நீளமான, சுத்தமான பாயில் இவற்றை உலர விடவும். சூரிய ஒளியின் அனல் மட்டும் பட்டால் போதும். பகல் நேர வெயிலில் 10 முதல் 20 நாள் உலர்த்தவும்.

அளவு மெல்ல மெல்லச் சுருங்கி வற்றல் போல் ஆகிவிடும். அதன் பின் உடைத்து உள்ளிருக்கும் விதைகளை நீக்கி, வற்றல்களை மட்டும் சேகரித்துப் பொடி செய்து 1 கிலோவிற்கு 100 கிராம் மிளகு சேர்த்து பத்திரப்படுத்தவும்.

இதனை ஆண்டு முழுவதும் தினசரி அரை ஸ்பூன் (பெரியவர்களுக்கு) கால் ஸ்பூன் (சிறியவர்களுக்கு) காலையில் தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இப்படிச் சாப்பிட்ட பின் 1 மணிநேரத்திற்குத் தண்ணீர் தவிர வேறெதுவும் சாப்பிட வேண்டாம்.

நெல்லிப் பொடியை இப்படிச் சாப்பிட்டு வருபவர்களுக்கு வளமான தலைமுடி; துல்லியமான பார்வை; வழவழப்பான சருமம், கல்போன்ற இறுகிய தசைநார்கள்; படபடப்பற்ற இதயம்; சுறுசுறுப்பான மூளை; சளியற்ற நுரையீரல்; விறுவிறுப்பான நடை கல்லையும் கரைக்கும் கல்லீரல்; வலியற்ற மூட்டுக்கள்; அயராது உழைக்கும் கரங்கள் ஆகியவற்றுடன் சுருங்கக் கூறின் வளமான உடல் நலம் பெறலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக 50ல் முதுமை என்ற நிலையைக் குறைந்தபட்சம் 60ல் முதுமை என்ற அளவிற்குத் தள்ளிப் போடலாம்.

நெல்லிக்கனி என்பது "நல்வாழ்வுக்கனி' என்ற உண்மை. அனுபவத்திலும் அறிவியலிலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உறுதியாகியுள்ளது. இதுவே உன்னத காயகல்பம்! இதனைத் தினசரி உண்பவர்கள், கடைகளில் காயகல்ப மருந்து தேடி அலைய வேண்டாம்!

''An apple per day, keeps the doctor away'' என்பது ஆங்கிலப் பழமொழி. "தினம் ஒரு நெல்லிக்கனி, தீர்க்காயுளை அள்ளித்தரும்' என்பது அனுபவமொழி ஆகும்.

------------------------------------------------------------------------------------------------

நெகிழவைக்கும் நெல்லிக்காயின் பயன்? (Gooseberry)

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி’யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். இதைவிட நெல்லிக்காய் சாப்பிடுங்க அப்படின்னு நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேறெதாவது காரணம் தேவைப்படுமா? இன்னொரு அற்புதமான விஷயம் என்னவென்றால், மற்ற இயற்கை உணவுகளைப்போல் இல்லாமல் நெல்லிக்காயை சமைத்து உண்டாலும் அதனுடைய சத்து சமைப்பதனால் குறைவதே கிடையாது.

கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. மனிதனுடைய ஈரல் இந்த கொழுப்புச் சத்திற்கு அடிப்படையாக அமைவது. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் ‘சி’ இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்துவிடும். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

நெல்லிப்பொடி + சர்க்கரைத் தூள் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீரில் கரைத்துப் பருகி வர, உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள் நெல்லிப்பொடி + சர்க்கரை + பாகற்காய் பொடி 2 அல்லது 3 முறை ஒரு நாளைக்கு சாப்பிட்டு வர முன்னேற்றம் தெரியும்.

அசிடிடி உள்ளவர்களுக்கும் நெல்லி ஒரு சிறந்த நிவாரணி. ஏன் முடி வெள்ளையாக மாறி வருகிறது என்று கவலைப்படுபவர்கள், நெல்லிப்பொடியை ஒரு இரும்புக் கின்னத்தில் போட்டு தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்தால் ஷாம்பு + கண்டிஷனர் + ஹேர்டை தயார்!

-----------------------------------------------------------------------------------------------

நெல்லிக்கனியின் மகத்துவம் பற்றி எடுத்துக் கூறுவதில் நான் "கொள்கை பரப்புச் செயலாளரா'கவே மாறி விட்டேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நான் நெல்லிக்காய் சாப்பிட்டு வருகிறேன். நல்லது என்ற ஒரே காரணத்தால்; மருத்துவ பலன்களை முழுவதும் அறியாமல்!

அலர்ஜி தொல்லையால் எனக்கு மூச்சிரைப்பு, அடிக்கடி பலவீனமாதல் என்று சின்ன, சின்ன தொல்லைகள் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். இதுவெல்லாம் உங்கள் கட்டுரையைப் படித்த அனைவருக்கும் தெரியும். இது போக, பெண்ணானதால் என்னால் "ஓப்பனாகச்' சொல்ல முடியாத பலன் ஒன்றும் இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ள அனைவரும் கட்டாயம் ஏதேனும் ஒரு வழியில் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவது மிக, மிக நல்லது - குறிப்பாக ஆண்கள்!

நெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு ஜூஸ் செய்து (இரண்டு நெல்லிக்காய்) இருவர் சாப்பிடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், இனிப்பு சேர்க்காமல் சாப்பிடலாம் அல்லது நீராவியில் வேக வைத்து, மிகவும் பொடியாக நறுக்கி, நாட்டுச் சர்க்கரையில் சுக்கு, ஏலம் சேர்த்து நன்கு கிளறி, சுருள பதம் வந்தவுடன் இறக்கி, பிரிட்ஜில் ஆறு மாதம் வரை வைத்திருந்தாலும் கெட்டுப் போகாது. தினமும் ஒன்று அல்லது இரண்டு மேஜைக்கரண்டி அளவு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.

நான் இதை இத்தனை அக்கறையோடு சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், நம் நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் ஹீமோகுளோபின் 10 மி.கி.,க்கும் குறைவு. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரே மாதத்தில் 3-4 மி.கி., வரை கூடுவது கண் கூடாக நான் கண்ட உண்மை!

மருத்துவமனையில் எங்கள் குடும்ப நண்பரின் மகன் உயிருக்குப் போராடி, எமனை பார்த்து விட்டுத் திரும்பி வந்தான் என்றே கூறலாம். வரும்போது ஹீமோகுளோபின் 6 மி.கி., தான். வழக்கம்போல் மருந்து, மாத்திரைகள் மூலம் ஹீமோகுளோபினைக் கூட்ட மிகவும் முயற்சி செய்தனர். பார்க்க வந்தவர்கள் எல்லாம் ஆர்லிக்ஸ், பழங்கள் கொண்டு வர, நான் மட்டும் நெல்லிக்காய் ஜாம் கொண்டு சென்றேன்; மகிமையையும் கூறினேன்.

பதினைந்து நாட்கள் கழித்து தொலைபேசியில் என்னை அழைத்து நன்றி கூறி, "இன்னும் நெல்லிக்காய் ஜாம் செய்து தர முடியுமா? கணிசமான முன்னேற்றம் என் மகனின் உடல்நிலையில்...' என்று கூறினார் நண்பர். ஒரு மாதத்தில் ஹீமோகுளோபின் 11 மி.கி., ஆக கூடி விட்டது. குடும்பமே எனக்கு நன்றி தெரிவித்தது.

அமிர்தத்திற்கும் மேலானது நெல்லிக்கனி என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.

சர்க்கரை வியாதி உள்ள ஆண்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால், "இல்வாழ்க்கை' மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்பது தான் இக்கடிதத்தின் மிகவும் முக்கியக் குறிப்பு!

-சர்க்கரை நோயுள்ள ஆண்களின் தாம்பத்திய வாழ்வில் மீண்டும் உற்சாகத்தை அளிக்கவல்லது நெல்லிக்காய் என்பதை குறிப்பால் உணர்த்தி விட்டார் அந்த வாசகி.

***************************************************************************************

மிகவும் பழமையானதும் புராணங்கள் இலக்கியங்கள் போன்றவற்றில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுமான சிறந்த கனி நெல்லிக்கனி.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், கை மருத்துவம், யுனானி போன்ற அனைத்து வகையான மருத்துவ முறைகளிலும் பிரதான இடம் வகிப்பது இந்த நெல்லிக்கனியாகும். சத்துக்களிலும் சரி, நோய் தீர்க்கும் குணங்களிலும் சரி நெல்லியை மிஞ்ச வேறேதும் இல்லை. முற்காலத்தவர்கள் நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி உண்டு உடலையும், மனத்தையும் என்றும் இளமையாக வைத்திருந்தார்களாம். எனவேதான், இதைக் ‘காயகல்பம்’ என்று அழைத்தனர். இன்று இதன் பெருமை உணர்ந்து உலக மக்களனைவரும் பல்வேறு வகையில் நெல்லியைப் பயன்படுத்துகின்றனர்.

இது தென்னிந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் தென்மேற்கு ஆசியப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டதாகும். நெல்லியில் இருவகை உண்டு. அரிநெல்லி மற்றும் பெருநெல்லி என்பனவாகும். அரிநெல்லி சிறிதாக வளரும். வீடுகளில் காணப்படும். பெருநெல்லி பெரிய மரமாக வளரும். சிறிய இலைகளைக் கொண்டதாகும்.

பல்வேறு பயன்கள்

நெல்லிக்கனியைப் பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம். நெல்லிச்சாறு, சர்பத், நெல்லிபர்பி, நெல்லிமுரப்பா, உலர்நெல்லி, நெல்லிப்பொடி, லேகியம், விதைப்பொடி, நெல்லித்தைலம், நெல்லிநீர், திரிபலா, ஊறுகாய் போன்று பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம்.

பல்வேறு மொழிப்பெயர்கள்

ஆங்கிலம் - கூஸ்பெர்ரி

சமஸ்கிருதம் - அம்ரபாலம் அமலாகம்

குஜராத் - அம்லா

அஸ்ஸாம் - அம்லிக்

மராத்தி -அவ்ளா

கன்னடம் - நெல்லிக்காயி

பிரஞ்ச் - பிலாந்தா எம்ப்லிக

ஜெர்மன் -கெப்ரசலிசெர்

வங்காளம் - அம்லாகி

இந்தி - அம்லா, ஆரா

காஷ்மீர் - அன்போ

பஞ்சாப் - அம்பலி

தெலுங்கு - உளிரிக்காய்

மலையாளம் - நெல்லிக்க

பெர்ஸியன் - அமலா

அரபு - அம்லாஜ்

இதன் தாவரவியல் பெயர் ‘எம்ப்லிகா அஃபிஸினாலிஸ்’ என்பதாகும். இது யூபோர்பியேசியே என்ற தாவரக் குடும்பத்தின்கீழ் வருகிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்

ஈரப்பதம் - 81.2%

புரதம் -0.5%

கொழுப்பு - 0.1%

தாது உப்புக்கள் - 0.7%

நார்ச்சத்து - 3.4%

மாவுச்சத்து -14.0%

சுண்ணாம்பு - 0.05%

பாஸ்பரஸ்- 0.02%

இரும்பு - 1.2%

வைட்டமின் ‘பி’ - 30 மி.கி

நிகோடினிக் அமிலம் - 0.2 மி.கி

வைட்டமின் ‘சி’ - 600 மி.கி

மற்ற பழங்களை விட நெல்லிக்கனியில் தான் அதிகளவு வைட்டமின் ‘சி’ உள்ளது. நெல்லியை வேகவைத்தாலோ, ஊறுகாய் போட்டாலோ, உலர வைத்தாலோ இதிலுள்ள வைட்டமின் ‘சி’ அழிவதில்லை. மேலும் கூந்தல் தைலங்கள் தயாரிக்கலாம். நெல்லிக்கட்டையைக் கிணற்றில் போட்டால் நீரிலுள்ள உப்புக்களை நீக்கி தண்ணீரைச் சுத்திகரிக்கும்.

மருத்துவப் பண்புகள்

குளிரூட்டி, மலமிளக்கி, விஷம்போக்கி போன்ற தன்மைகளைக் கொண்டது. மேலும் நுரையீரல் பெருக்கத்தைக் குணப்படுத்தும். புழுக்களைக் கொல்லும். கண்நோய், வயிற்று நோய்களைக் குணப்படுத்தும். இராஜ மருந்து எனப்படும் ‘திரிபலா’ மருந்துக் கலவையில் நெல்லி முதன்மையாக இதில் இடம்பெறுகிறது. இடம்பெறும் மற்ற இரண்டு மருந்துகள் கடுக்காய், தான்றிக்காயாகும். நெல்லிப் பழங்களைக் கொண்டு ‘ச்யவனப்பிராசம்’ மருந்து தயாரிக்கப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும்.

உலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.

நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும்.

நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.

நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும்.

நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.

பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.

நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.

உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.

நெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.

நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை (ஆரம்பக்கட்ட நரை) முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.

நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும்.

நெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும்.

பாலில் நெல்லிப்பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும்.

நெல்லிக்காயைத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும்.

நெல்லிச்சாறில் சந்தனம் உரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.

நெல்லி விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும்.

நெல்லி லேகியம் உண்டு வந்தால் இதயம் வலிமை பெறும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும்.

நெல்லிச் சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும்.

நெல்லிப்பொடி, நெல்லி லேகியம் இவைகள் மதுவால் புண்ணாகிப்போன உள்ளுறுப்புகளைச் சீராக்கும்.

.... சுட்டதில் ...

  • கருத்துக்கள உறவுகள்

பயன் உள்ள தகவல்களுக்கு

நன்றி சகோதரா ! :)

ம் ..... நெல்லிக்காயை பார்க்க நா ஊறுது

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை சுட்டா..சாகவேணும் என்று சனியன் மாதிரி சொல்ல மாட்டேன்..... :lol:

சுட்டா சுட்ட இடத்தையும் இங்கு இணையுங்கள்...நாங்கள் ஆதிமூலத்தில் உள்ள பல்வகை தகவல்களை அறிந்து விடுவோம் என்று பொறாமைப்படக்கூடாது :lol::icon_mrgreen:

நெல்லிக்காயில் நல்ல மருத்துவ குணங்கள் உண்டென்று சொல்கிறார்கள். அதிலும் கசப்பான பெரிய நெல்லிக்காய் நல்லதாம். நன்றி இணைப்பிற்கு.

முதலில் 'நெல்லையனின் கன்னி' என்று தவறாக வாசித்து விட்டு பயத்தில் இங்கு எட்டிப் பார்க்கவில்லை. :D

  • தொடங்கியவர்

முதலில் 'நெல்லையனின் கன்னி' என்று தவறாக வாசித்து விட்டு பயத்தில் இங்கு எட்டிப் பார்க்கவில்லை. :D

... அதப்பற்றி எழுதுவதானால் பன்மையில் அல்லாவா எழுதியிருப்பேன்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளங்கையில் நெல்லிக்கனி என்று கூறுவார்கள்.

அது எதற்காக?

இணைப்பிற்கு நன்றி நெல்லையன் அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.