Jump to content

அகேனம் (ஃ) விருதைப் பெறும் குறமகளம்மா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகேனம் (ஃ) விருதைப் பெறும் குறமகளுக்கு எமது வாழ்த்துக்கள்.

kuramagal_1.jpg

ஆறுமுகநாவலர் முதல் மனுஸ்ய புத்திரன் வரை எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் -எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் – குறமகள்

kuramakal-300x249.jpg

2008 - 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள்

மேற்கண்டவாறு ரொரண்ரோவில் நடைபெற்ற 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் தெரிவித்திருந்தார். மனுஸ்யபுத்திரன் குஸ்பு விவாகரத்தில் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதற்கு மேலும் இச் சந்திப்பில் கண்டனம் தெரிவித்திருந்தார். கைலாசபதி போன்ற விமர்சக மேதைகள் புகழ்ந்த ஆறுமுக நாவலரையே குறமகள் விமர்சித்துள்ளார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநாவலர்கள் அவர்களும், முன்பு இருந்ததை விட மோசமான நிலையில் பெண்களுக்கான விதிமுறைகளைக் கவனத்திற்கு எடுத்தார். குடும்பத்துக்கான பொறுப்புக்களை மாத்திரமல்ல அவளது உணர்வுகளை சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் எழுதிவைத்தார். சாதியத்தைவிடக் கடும்போக்காகப் பெண்களை ஒடுக்கும் வகைகளை எடுத்தியம்பினார்.” என தனது யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலில் தெரிவித்துள்ளார். பெண்கள் மறுவாழ்விற்காக தனது எழுத்துக்களை சமர்ப்பித்த குறமகளுக்கு இவ் வருடம் ‘அகேனம் (ஃ) விருது” வழங்கப்பட்டுள்ளதாக சுயாதீன கலை திரைப்பட கழகத்தின் நிறைவேற்று இயக்குனர் திரு. த. சிவசதாசன் அறிவித்துள்ளார்.

“குறமகள், பெண்ணியம், மனிதநேயத்திற்குப் புதிய பொலிவும் அர்த்தமும் ஆழமும் பாய்ச்சுதல் வேண்டும். இதனைத் துல்லியமாக உணர்ந்தவர்” என அந்தனி ஜீவா தெரிவித்துள்ளார் (புதிய பார்வை – தை 16-31 2008) “பயந்தாங்கொள்ளிகளாக வீட்டில் முடங்கிக் கல்வியறிவற்று உலக அனுபவமின்றி வாழந்த இவர்கள் ஒரு நூற்றாண்டு காலத்துள் எப்படி மாறினார்கள், இவர்களின் விலங்கொடுத்தவர்கள் யார்?, கல்வியறிவ+ட்டியவர்கள் யார்?, தன்னம்பிக்கையை வளர்த்தவர்கள் யார்? இவ் வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியாக யுhழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு என்ற தனது நூலின் முன்னுரையில் குறமகள் குறிப்பிடுகின்றார். இந்த நூல் ஒன்றே இவரது பெண்கள் சமத்துவத்துக்கான ஒரு சிறந்த பங்களிப்பாக குறிப்பிடலாம். இந் நூலில் தரவுகளின் பிண்ணனி கொடுக்கப்பட்டிருப்பின் தமிழில் பெண்கள் பற்றி வெளிவந்த ஒரு சிறந்த நூல் வரிசையில் இடம் பெற்றிருக்கும். இலங்கை சட்டசபையின் முதலாவது உறுப்பினர் குமாரசாமியின் மனைவிகூட எழுத்தறிவற்றவர் என்ற அதிர்ச்சியான தகவல்களும் இந் நூலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றை விட பெண்கள் ஒடுக்கு முறை பற்றிய பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ஏழு சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

“இலங்கையில் வெளிவந்த தமிழ்மகள் பெண்கள் சஞ்சிகையின் ஆசிரியரான மங்கம்மாள் என்பவரைப் பற்றி ஆய்வுக் கட்டுரையை குறமகள் எழுதியுள்ளார். இலங்கையில் பெண்கள் அமைப்புக்கள் எதுவும் இச் சஞ்சிகையைப் பற்றியோ அதன் ஆசிரியரைப் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. இவ் ஆய்வு பெண்களின் ஆரம்ப நிலை பற்றி பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது” என கலாநிதி பார்வதி கந்தசாமி தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவரது இயற் பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம். பெண்கள் பத்தாம் வகுப்புடன் திருமணம் செய்த காலத்தில் இவர் இந்தியா சென்று பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவியாக “நாடகக் கல்வி” பயின்றார். பெண்கள் பாடசாலைக்கு வெளியே நாடகத்தில் நடிக்க அஞ்சும் அக் காலகட்டத்தில் நாடகக் கல்வியை தேர்வு செய்தமை மிக துணிச்சலான செயலாகும். இவர் யுவதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் கார் ஓடிய சில பெண்களில் குறமகளும் ஒருவர். கோப்பாய் ஆசிரிய பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் எழுத்துலகிற்கு வந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடந்த பல வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார். என்பது வயதை நெருங்கும் குறமகளை பல இலக்கய கூட்டங்களில் ஒக்சிசன் சிலிண்டருடன் காணக் கூடியாத இருக்கும். பொதுவாக இந் நிலையை அடையும் எவரும் வீட்டை விட்டே வெளியே வருவதில்லை. மிகவும் மனத்துணிச்சலுடன் எவரது உதவியுமின்றி இவர் உலா வருகின்றார். இன்றும் பல பத்திரிகைகளில் எழுதி வருகின்றார்.

இவரது பெண்ணிய அணுகு முறை இன்றைய பெண்ணிய அணுகு முறையில் இருந்து வித்தியாசப்படுகின்றது. குடும்பம் என்ற அமைப்பு உடைபடக் கூடாது என்ற கவனத்தை இவரது எழுத்துக்களில் காணலாம். எங்கல்ஸ் குறிப்பிடவது போல் “ஒடுக்குமுறையற்ற ஆணாதிக்க சிந்தனையில்லாத குடும்ப முறை” தான் இவரது தேர்வு எனலாம். குடும்ப அமைப்பு பெண் ஒடுக்குமுறைக்கு ஒரு மிக முக்கிய பிரதான காரணி.

தனது கருத்துத் தளத்தை விரிபுபடுத்தும் நோக்குடன் தேடல் அதிகமிக்கவர். மனுஸ்யபுத்திரனுக்கும், ஜெயமோகன்களுக்குமிடையில் ஒளிந்துள்ள பெண் ஒடுக்குமுறைச் சிந்தனையை வெளிப்படையாகவே விமர்ச்சிக்கும் துணிச்சலும் இவருக்குண்டு.

கேனம் (ஃ) விருதைப் பெறும் குறமகளுக்கு எமது வாழ்த்துக்கள். கடந்த காலங்களில் பி.விக்கினேஸ்வரன், பாலேந்திரா, டொமினிக் ஜீவா, திருமதி வசந்தா டானியல் போன்றோர் இவ் விருதைப் பெற்றுள்ளனர்.

மூலம் - http://www.oodaru.co...=5201#more-5201

நன்றி ஊடறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணிவும், திறமையும் மிக்க, குறமகளுக்கு, இந்த விருது கிடைத்தது, மிகவும் பொருத்தமானதே!

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னைகுறமகளுக்கு வாழ்த்துக்கள்

மாவீர அன்னையாய் நீடூழி வாழ்க!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.