Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டை அச்சுறுத்த கேரளாவை கைக்குள் போட்டுக்கொள்ள முயற்சிக்கும் இலங்கை.

Featured Replies

தமிழ்நாட்டில் இலங்கை எதிர்ப்பு அலை வீசி வருகின்ற நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுடன் மோதிக்கொள்ளும் கேரளாவை தன் கைக்குள் போட்டுக் கொள்ள இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் கேரளா மாநிலத்துடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்டமாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் கடந்த வாரம் மூன்று நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அவர் கடந்த 12ம் நாள் கேரள முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்துப் பேசினார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தாரூரும் இந்தச் சந்திப்பில் உடனிருந்தார்.

இதன்போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வாழ்த்துக்களை கேரள முதல்வருக்கு பிரசாத் காரியவசம் பரிமாறிக் கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் கேரளாவுக்கும் இடையில் நெருக்கமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து இந்தச் சந்திப்பின் போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கொச்சியில் வரும் செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ‘கேரள எழுச்சி – 2012‘ என்ற வர்த்தக, முதலீட்டு ஊக்கவிப்பு மாநாட்டில் இலங்கையையும் பங்கேற்குமாறும் கேரள முதல்வர் உம்மன்சாண்டி அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைத் தூதுவருக்கு கேரள உள்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஸ்ணன் இராப்போசன விருந்தளித்து கௌரவித்துள்ளார். இதன்போது கேரள உள்துறை, உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் கேரளாவின் காடுகள், வனவிலங்குகள், விளையாட்டு மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் கணேஸ் குமாரையும் பிரசாத் காரியவசம் சந்தித்துள்ளார்.

இதன்போது கேரளாவுடன் இணைந்து இலங்கையின் திரைப்படத் தொழிலை விருத்தி செய்வது குறித்தும் பேசப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இலங்கை எதிர்ப்பு அலை வீசி வருகின்ற நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுடன் மோதிக்கொள்ளும் கேரளாவை தன் கைக்குள் போட்டுக் கொள்ள இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இலங்கை அரசியல்வாதிகள் கால்வைக்க முடியாத நிலை தோன்றியுள்ள நிலையிலும், இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்கள் இடம்பெறும் நிலையிலும் கேரளா மீது இலங்கை கண்வைத்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக இலங்கைக்கு மிக அருகே உள்ளது கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.