Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதங்களையும், தமிழர் நிலங்களையும் அவமதிக்கும் சிங்களவர்கள்.

Featured Replies

சிறீலங்காவில் குடியிருக்கும் சிங்களவர்கள் மனித நேயத்தை மட்டுமன்றி, மதங்களையும் அவமதிக்கும் தன்மை கொண்டவர்கள் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ள பின்புலத்தில், தற்பொழுதும் அது தமிழ் மக்களை எந்த அளவில் பாதித்துள்ளது என்பதற்கு மற்றொரு ஆதாரம் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர், கீரிமலை நைநாதீவு நாகபூசணி மற்றும் தொண்டமனாறு செல்வச்சன்னிதி என்று நீளும் மத ஆக்கிரமிப்பு பட்டியலுக்கு அடுத்த கட்டமாக கிறிஸ்தவ மக்களின் அருள்மிக்க புனித தலமாக போற்றப்படும் மடு ஆலயத்தில் அண்மையில் நிறுவப்பட்டுள்ள அறிவித்தல் பலகை ஒன்று அங்கு எந்த அளவில் மத அவமதிப்பு இடம்பெற்றுள்ளது என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

ஆக்கிரமிப்பு போர்க்காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆதரவு வழங்கியபோது முன்னொரு சந்தர்ப்பத்தில் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளான இவ் ஆலயம், தற்போது படையெடுக்கும் சிங்களவர்களின் கலாச்சார ஊடுருவலின் மையமாகிவிடும் அச்சம் காணப்படுவதை உணர்ந்த நிர்வாகம் அங்கு சில அறிவித்தல்களை செய்துள்ளது. அதில் மிக முக்கியமானது ஆடைகளினால் ஆன கலாச்சார பிரதிபலிப்பு பற்றியதாகும்.

மடு ஆலய வளாகத்துக்குள் பிரவேசிக்கும் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இல் அறிவிப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல தமிழ் இளைஞர், பெண்கள் முன்னர் போன்றே இவ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டவாறு தமது கலாசாரத்தைப் பேணி வருகின்றனர்.

ஆனாலும் தமிழர் தாயகத்தஜலுள்ள இந்த ஆலயத்திற்குச் செல்லும் சிங்களவர்கள் இதை பின்பற்றாது தொடர்ந்தும் தமிழ் மக்களின் கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலான ஆடையாலங்காரங்களுடன் இவ் ஆலய வளாகத்துக்குள் பிரவேசிப்பதாக மன்னார் செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

கண்டி புனித தலதா மாளிகையினுள் உள்நுளைய பிரத்தியோக கட்டளைகளை பின்பற்றும் சிங்களவர்கள், ஏன் தமிழ் மக்களின் ஆலயங்களை அவமதிக்கின்றார்கள் என்பதற்கு விடை இனவாதமே என்பதை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும் என இந்த ஆலயத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் எமது செய்தியாளரிடம் ஆதங்கம் வெளியிட்டிருக்கின்றார்.

சிங்களவர்கள் ஆடை அணிவதில் ஒழுக்கத்தைப் பேணத் தவறுவதாலேயே, இந்த அறிவிப்புப் பலகையில் முதலில் சிங்களத்தில் எழுதி, பின்னர் ஒப்புக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.