Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி.க்கு பாராளுமன்றத்தில் ஆசனம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? : தயாசிறி எம்.பி. கேள்வி

Featured Replies

[size=5]கே.பி.க்கு பாராளுமன்றத்தில் ஆசனம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? : தயாசிறி எம்.பி. கேள்வி[/size]

[size=4]தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் நிதி உரிமையாளருமான கே.பி. க்கு பாராளுமன்றத்தில் ஆசனம் ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திரக்கின்றதா... என ஐக்கிய தேசியக் கட்சியின் தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில், அவ்வாறானதொரு தீர்மõனத்தை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக் கிழமை அமர்வின் வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தயாசிறி ஜயசேகர எம்.பி. யினால் மேற் கண்டவாறு கேட்கப்பட்ட இடைக் கேள்வியின் போதே இவ்வாறு அமைச்சர் தினேஷ் பதிலளித்தார்.

முன்னதாக கேள்வி எழுப்பிய தயாசிறி எம்.பி. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பிரிவின் தலைவராக அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளவருக்கு எதிராக இலங்கை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதா...? எனக் கேள்வி எழுப்பிய அவர் நிதி உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடராது வேறு நபர்களுக்கு வழக்குத் தொடரப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்றும் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில்,

புலிகள் அமைப்பின சர்வதேச நிதிப் பிரிவின் தலைவராக சுப்பிரமணியம் சிவகுமார் என்கின்ற ராஜன் என்பவர் இனங் காணப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக நெதர்லாந்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும் இலங்கை நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படவில்லை. இருந்த போதிலும் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

இதன்போது பிறிதொரு கேள்விøயத் தொடுத்த தயாசிறி எம்.பி. , கே.பி. எனப்படுகின்ற குமரன் பத்மநாதனின் பெயர் மேற்படி புலிகளின் சர்வதேச நிதிப் பிரிவின் தலைவர் என்ற வகையில் குறிப்பிடப்படவில்லையா... எனக் கேட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

புலிகளின் சர்வதேச நிதிப் பிரிவின் உரிமையாளரான கே.பி.க்கு எதிராக வழக்கு தொடராத நிலையில் வேறு உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதான் அரசின் நிலைமை.

புலிகள் அமைப்பானது இந் நாட்டுக்கு பாரிய அழிவினை ஏற்படுத்திய அமைப்பாகும். அதில் இருந்த கருணா அம்மன் இன்று இந்தப் பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சரõக இருக்கின்றார். ஜோர்ஜ் மாஸ்டர் தயா மாஸ்டர் ஆகியோர் அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதனை இந்த பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்து இங்கு ஆசனம் ஒதுக்கித் தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதா... அல்லது தீர்மானத்தில் உள்ளதா...? எனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன,

அவ்வாறானதொரு தீர்மானத்தை அரசு மேற்கொள்ளவில்லை. அத்துடன் உறுப்பினர் கேட்கும் வகையில் அவர் கூறுகின்ற சகலருக்கும் வழக்குத் தொடர அரசினால் முடியாது.

1987 இல் ஏற்படுத்திக் கொண்ட இலங்கை இந்திய உடன்படிக்கையின்போது புலிகள் அமைப்பில் எத்தனை பேருக்கு பொது மன்னிப்பளிக்கப்பட்டது என்பது குறித்து எதிர்க் கட்சித் தலைவரைக் கேட்டால் தெரிந்து கொள்ள முடியும் என்றார். ___[/size]

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=38916

... இந்தக்கேள்வியை நம்ம யாழ்கள பாண்டர் 007 ஐ கேட்டால் தெரிந்து விடும், பதில்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.