Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரின் ஆக்கிரமிப்பு மன்னாரிலும் நிலப்பறிப்பு – ஆதரவு கோரும் மன்னார் மக்கள்.(படங்கள்)

Featured Replies

தாயகத்தில், குறிப்பாக வட தமிழீழத்தில் ஆரம்பித்துள்ள சிறீலங்காவின் நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுக் கொண்டுள்ள நிலையில், சிறீலங்காவும் தனது மறைமுக ஆக்கிரமிப்பை பல இடங்களில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இவ்வாறு மறைமுக ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுள்ளதை, புலனாய்வுச் செய்திப்பிரிவு ஆதாரங்களுடன் கண்டறிந்துள்ளது.

குறிப்பாக மன்னார் மடு பிரதேச செயலர் பிரிவினுள் அடங்கும் குஞ்சுக்குளம் எனப்படும் அழகிய ஒரு பிரதேசத்தின் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பிலான நிலங்களை சிறீலங்கா கடற்படையினர் ஆக்கிரமித்து அங்கு தமது அறிவிப்பு பலகையை இட்டுள்ளனர்.

கடலில் இருந்து பல மைல் தொலைவில் உள்ள இவ் பிரதேசத்தில் கடற்படை என்ன செய்யப் போகின்றது என்னும் ஏக்கத்துடன் அவ் பகுதி மக்கள் எதிர்த்துப் பேச முடியாத நிலையில் மௌனமாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது.

இன்று தமிழ் மக்கள் தமது உதிரி நேரங்களை செலவிட செல்லும் ஒரு சுற்றுலா நிலையமாக மன்னார் குஞ்சுக்குளம் மாறியுள்ள நிலையில், அதை கையகப்படுத்திக் கொள்ள சிறீலங்கா கடற்படையை ஏவிட்டுள்ளனர் சிறீலங்கா ஆக்கிரமிப்பாளர்கள்.

அத்துடன், இதன் மூலமாக மடுச்சந்திக்கு அடுத்தபடியாக ஒரு சிங்கள கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் ஆக்கிரமிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர் எனபதையும் மன்னார் செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

குஞ்சுக்குளம் தொங்குபாலத்துக்கு பிற்புறமாக அமைந்துள்ள காட்டை அண்டிய பெரும் தொகை நிலம் உட்பிரவேசிக்க முடியாதவாறு வேலியிப்பட்டு அறிவிப்பு பலைகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களிற்குச் சொந்தமான இந்தப் பகுதியை சிறீலங்கா படைகள் உரிமை கொண்டாடுவது தொடர்பாக, பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாது உள்ளதாக அல்லது எதுவும் வெளியே தெரிவிக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள எமது செய்தியாளர்கள், இவ்வாறு இன்னும் பல ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் விபரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கள் சிங்கள குடியேற்றங்கள் மூலம் நிலப்பரம்பலை மாற்றி, அதன் ஊடாக தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்த விடாது, அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் வேகமடைய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், முறிகண்டி போன்று மன்னாரிலும், இவ்வாறு ஆக்கிரமிப்பு நடைபெறும் அனைத்து இடங்களிலும் நில ஆக்கிரமிப்புக்கும், பறிப்புக்கும் எதிரான போராட்டங்கள் வெடிக்க வேண்டும் எனவும், இதன் மூலமே அனைத்துலக சமூகத்தின் கவனத்தை பெற முடியும் எனவும், இவ்வாறான போராட்டங்களிற்கு புலம்பெயர்ந்த மக்களும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Mannar_land_grab_002.jpgMannar_land_grab_005.jpgMannar_land_grab_003k.jpg

http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.