Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்கச்சி ஊரனியன்பற்று கிராம மக்களின் காணியை அபகரித்த 552ஆவது படைபிரிவு ! (படங்கள்)

Featured Replies

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள இயக்கச்சி ஊரனியன்பற்று கிராமத்தில் 35ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுமக்களின் காணியை ஆக்கிரமித்து சிறிலங்கா இராணுவத்தின் 552ஆவது படைப்பிரிவு தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. தாங்கள் முகாம் அமைத்தது மட்டுமன்றி பொதுமக்களின் காணியை டயலொக் நிறுவனத்திற்கு கோபுரம் அமைப்பதற்கும் பெருந்தொகை பணத்தை வாங்கி கொண்டு இராணுவத்தினர் காணியை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர் அப்பகுதிக்கு சென்று பொதுமக்களை சந்தித்து நேரடியாக திரட்டிய தகவல்களை இங்கே தருகிறோம்.

ஏ9பாதையில் யாழ்ப்பாணத்திலிருந்து வருபவர்கள் பளை, புதுக்காட்டு சந்தி ஆகியவற்றை கடந்து வந்தால் இயக்கச்சி சந்தியை அடையலாம். இயக்கச்சி ஊரனியன்பற்று கிராமம் பல தலைமுறைகளாக தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமமாகும். இயற்கை வளம்மிக்க ஒரு பூர்வீக விவசாய கிராமமாகும். இது பச்சிலைப்பள்ளி முகாவில் KN 80 கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.

இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் அந்த மக்களை செய்தியாளர் சந்தித்த போது அவர்கள் போர் காரணமாக தங்கள் இடப்பெயர்வு அவலங்களை விபரித்தனர்.

552-Brigade.jpg

இந்த கிராமத்தில் முதலாவது இடப்பெயர்வு 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவ படைநகர்வு காரணமாக இடம்பெற்றது. பின்னர் இரு மாதங்களில் இந்திய இராணுவத்தினர் எமது வீடுகளில் குடியமர எம்மை அனுமதித்தனர்.

பின் 1991ம் ஆண்டு தைமாத காலப்பகுதியில் ஆணையிறவு யுத்தத்தின் காரணமாக ஊரனியன்பற்றிலிருந்து இடம்பெயர்ந்து யாழ் தென்மராச்சி பகுதிக்கு சென்று ஐந்து மாதகாலம் வசித்துவிட்டு பின் 1991ம் ஆண்டு ஆனி மாதகாலப்பகுதியில் மீண்டும் இயக்கச்சி ஊரனியன்பற்றுக்கு வந்து மீள்குடியேறினோம்.

தொடர்ந்து 1992ம் ஆண்டு ஆனி மாதகாலப்பகுதியில் விடுதலைபுலிகளிற்கும் சிறிலங்கா இராணுவத்திற்குமிடையில் யுத்தம் உச்சமடைந்த காலப்பகுதியில் ஊரனியன்பற்று என்னும் கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்து வடமராட்சி மற்றும் கிளிநொச்சி பகுதிகளை அண்டி தற்காலிகமாக வசித்து வந்தோம்.

பின் 2000ம் ஆண்டு சித்திரை மாதகாலப்பகுதியில்; இலங்கை இராணுவத்திடமிருந்து ஆனையிறவு உட்பட இயக்கச்சி பகுதிகளை விடுதலைப்புலிகள் மீட்டெடுத்தனர். அதன்பின் 2002ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்குமிடையில்; போர்நிறுத்த ஒப்பந்த கைச்சாட்டிருந்த காலப்பகுதியில்; 2002ம் ஆண்டு ஆவணி மாதமளவில் ஆங்காங்கே சிதறி வசித்து வாழ்ந்த இயக்கச்சி ஊரனியன்பற்று கிராம மக்கள் அணைவரும் ஒன்றிணைந்து எமக்கு சொந்தமாக காணியில் மீளக்குடியமர்ந்து நிரந்தரமான வீடு கிணறு போன்றவற்றை கட்டி நான்கு வருடகாலம் வசித்து வந்தோம்.

iyakkachi-2.jpg2006ம் ஆண்டு ஆவணி மாதகாலப்பகுதியில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக 2006.08.11ம் திகதி எமது ஊரனியன்பற்று ஊர்மக்கள் அனைவரும் இடம் பெயர்ந்து உமையாள்புரம், கிளிநொச்சி, விசுவமடு, தேராவில் உடையார்கட்டு, தேவிபுரம், செந்தூரன்சிலையடி, மாத்தளன், பொக்கணை, இறுதியாக வட்டுவாகல் போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வட்டுவாகல் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து இராணுவத்தினரின் மூலம் வவுனியா மெனிக்பாம் இடைத்தங்கள் நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்.

பின்னர் 14.04.2010ம் திகதி அன்று பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் இராணுவத்தினரின் மூலம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இயக்கச்சி ஊரனியன்பற்று என்னும் கிராமத்தில் வசித்து வந்த சுமார் 25 குடும்பத்தினருக்கு உரித்தான 35 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணியில் இராணுவத்தினரின் படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த 25 குடும்பத்தைச் சேர்ந்த எமக்கு எமது காணிக்கு பதிலாக மாற்று காணிகளோ அல்லது எமது சொந்தக்காணிகளையோ வளங்கப்படாத நிலையில் தற்போது எமது உறவினர்களின் காணிகளிலேயே தங்கி வசித்து வருகிறோம்.

இது தொடர்பாக பல தடைவை இராணுவ படைமுகாமிற்கு சென்று பொறுப்பான இராணுவத்தளபதிகளிடம் எமது காணியை எப்போது எமக்கு தருவீர்கள் என்று வினவியபோது. பொறுப்பாக உள்ள இராணுவத்தளபதிகள் கூறிய பதில்கள்.

• இவ்வாறான பாரிய இராணுவப்படை முகாமை திடீரென மூடவோ அல்லது மாற்றவோ முடியாது.

• இந்த 35 ஏக்கர் பரப்பளவும் விடுதலைப்புளிகளுடையது என்று திட்டவட்டமாக தெரிகிறது அதனை உங்களிடம் ஒப்படைக்க முடியாது.

• புதிதாக வருகின்ற இராணுவ படைத்தளபதிகள் மேலிடத்திலிருந்து எப்பொழுது குறித்த காணியைவிட்டு வெளியேறச் சொல்கிரார்களோ அப்போது தான் உங்கள் காணிகளை உங்களிடம் ஒப்படைக்க முடியும்.

• இதற்கு முதல் காலங்களில் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது உங்களுடைய காணி தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசிப்பார்க்கிறோம்.

Iyakkachi-1.jpgஇப்படி பொறுப்பற்ற முறையில் அந்த முகாமில் உள்ளவர்கள் பதிலளிக்கின்றனர். அதேவேளை இந்த 35 ஏக்கர் காணிக்கும் உரிய உறுதி எம்மிடம் இருக்கின்றது என்று கூறினோம். அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

2010ம் ஆண்டு நடுப்பகுதியில் இந்த 35 ஏக்கர் நிலப்பரப்பையும் தமது இராணுவ படைமுகாமிற்கு அன்பளிப்பு செய்யுமாறு கட்டாயப்படுத்தி கையெழுத்து இடும்படி கூறினார்கள். இருப்பினும் நாம் கையொப்பம் இடவில்லை. இராணுவத்தினருக்கு பயந்து நீங்கள் இருக்கும் வரை இருந்து விட்டு போகும்போது காணியை எம்மிடம் ஒப்படைத்து விட்டு செல்லுங்கள். என்று வாய் பேச்சாக கூறினோம்.

ஆனால் தொடர்ந்து இந்த நிலப்பரப்பில் பல படையணிகள் மாறி மாறி இருந்து இறுதியாக தற்போது 552வது இராணுவத்தலைமைச் செயலகமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஊரனியன்பற்று மக்களுக்கு உரித்தான காணியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தலைமையக செயலகத்திற்குள் தம்பையா வள்ளிபுனம் என்னும் நபருக்கு உரித்தான 13 பரப்பு காணியில் இரண்டு தனியாருக்கு சொந்தமான (டயலொக் நிறுவனத்திற்கு) தொலைபேசி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் அமைப்பது தொடர்பாக காணி உரிமையாளரிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் இராணுவத்தினரே ஒப்பந்தம் பேசி குறித்த தொலைபேசி கோபுரத்தின் உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றிருப்பார்கள் என்று காணி உரிமையாளர் கூறுகின்றார்.

இதேவேளை மீளக்குடியமர்ந்தவர்களுக்கான வீட்டுத்திட்டம் அரசினால் தற்சமயம் வழங்கப்பட்டு வருகின்றது. அரசினால் எமக்கும் வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான பெயர்பட்டியலில் பெயர் வந்தும் எமது காணி இராணுவத்தினரின் ஆதிக்கத்தின்கீழ் இருப்பதனால் எமது காணியில் வீடுகட்டமுடியாத சூழ்நிலையில் உறவினர்களின் காணிகளிளேயே தற்காலிகமாக தங்கி வசித்து வருகின்றோம்

Iyakkachi.jpgஇந்த 35ஏக்கர் காணிக்குள் எமது பாட்டன் முப்பாட்டன் காலங்களில்; அமைக்கப்பட்ட மிகவும் பூர்வீகமான ஐந்து கோவில்கள் மற்றும் சிறுவர் பாடசாலை வீடுகள் கிணறுகள் மற்றும் பயண்தரும் மரங்கள் இருந்தன. அனைத்தும் தற்போது எமது காணிக்குள் இருக்கின்றதா அல்லது இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுள்ளதா? என்று எதுவும் தெரியாமலேயே உறவினர்களின் காணியிலேயே தங்கி வசித்து வருகிறோம். தயவு செய்து விரைவில் எமக்கு உரித்தான காணிகளை இராணுவத்திடமிருந்து எமக்கே மீட்டுக்தரும்படி கேட்கிறோம் என அந்த மக்கள் கண்ணீர் மல்க கூறினர்.

எமது நிலம் எமக்கு வேண்டும், எனது வீட்டில் நான் படுத்துறங்க வேண்டும் என கோரி நிற்கும் தமிழ் மக்களின் நியாயம் குடத்திற்குள் ஒலிக்கும் குரலாகவே உள்ளது. இந்த மக்களின் அவலங்கள் பற்றி இதுவரை எந்த தமிழ் அரசியல் தலைவர்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அந்த மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

போரின் வடுக்களையும் வலிகளையும் சுமந்தவாறு கடந்த 20வருடங்களுக்கு மேலாக இடப்பெயர்வு வாழ்வை சந்தித்த இயக்கச்சி ஊரனியன்பற்று கிராம மக்கள் தங்கள் தாய் நிலத்தில் வாழ வேண்டும் என்ற ஏக்கங்கள், வாழ்வியல் உரிமைகள் நிறைவேறுமா? தமிழ் தலைவர்கள் இவர்கள் பக்கமும் தங்கள் பார்வையை திருப்புவார்களா?

http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.