Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேஸ்புக்கில் உங்களது மின்னஞ்சல் முகவரி மாற்றப்பட்டுள்ளதனை அவதானித்தீர்களா?

Featured Replies

[size=4][size=5]பேஸ்புக்கில் உங்களது மின்னஞ்சல் முகவரி மாற்றப்பட்டுள்ளதனை அவதானித்தீர்களா?[/size][/size]

[size=4]பேஸ்புக் அதன் சேவையில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்துவதும் பின்னர் அது சர்ச்சைக்குள்ளாவதும் வழமையான விடயமாகும்.

குறிப்பாக பாவனையாளர் 'புரொபைல்' இன் தோற்றத்தில் மாற்றத்தினைக் கொண்டுவந்தமை, 'டைம் லைன்' எனப்படும் மாற்றத்தினைக் கொண்டுவந்தமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஆனால் தற்போது பேஸ்புக் கொண்டுவந்துள்ள மாற்றமானது பல்வேறு தரப்பினரின் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

அதாவது எங்களது புரொபைலில் நாம் குறிப்பிட்டு வைத்திருக்கும் மின்னஞ்சல் முகவரியினை பேஸ்புக் மாற்றியுள்ளது.[/size]

[size=4]உங்களது மின்னஞ்சல் சேவை வழங்குநருக்குப் பதிலாக @facebook.com என்ற பேஸ்புக்கின் மின்னஞ்சல் சேவையின் முகவரியினை பேஸ்புக் மாற்றியுள்ளது.[/size]

[size=4]பேஸ்புக் அதன் மின்னஞ்சல் சேவையினை கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தது. எனினும் அச்சேவை பெரிய வரவேற்பினைப் பெறவில்லை.

எனினும் தனது மின்னஞ்சல் சேவையினை ஊக்குவிக்கும் பொருட்டு பாவனையாளர்கள் தங்கள் பேஸ்புக் புரொபைலில் குறிப்பிட்டிருந்த மின்னஞ்சல் முகவரியினை மாற்றியுள்ளது.

பாவனையாளர்களின் அனுமதியைப் பெறாமல், அறிவிப்புக்கள் எதனையும் மேற்கொள்ளாமலேயே இம்மாற்றத்தினை பேஸ்புக் மேற்கொண்டுள்ளது.

ஆனால் டைம்லைன் தோற்றத்தினைக் கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமே இம்மாற்றமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பேஸ்புக் மின்னஞ்சல் முகவரிக்கு யாராவது மின்னஞ்சல் அனுப்பினால் அது உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள மெசேஜுக்குள் வந்து சேரும்.

[size=5]HOW TO CHANGE YOUR EMAIL ADDRESS BACK

1. Go into the 'About' section of your profile

2. Where the email address is displayed, click 'Edit'

3. Click on the circle along from the @facebook.com address

4. Change setting to 'hidden from timeline'

5. Click on circle next to other email address and choose 'shown on timeline'

6. Hit save at the bottom of the edit box [/size]

இதன்மூலம் பேஸ்புக் பாவனையாளர்கள் மின்னஞ்சல் சேவைக்கும் அதனை சார்ந்திருப்பதை அந்நிறுவனம் விரும்புவதாகவும் அதனாலேயே இம்மாற்றத்தினை ஏற்படுத்தியிருப்பதாக பாவனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் இதனூடாக தனது தளத்தில் செலவு செய்யும் நேரத்தினையும், பிரவேசிக்கும் தடவைகளின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதுடன் இவற்றின் மூலமாக விளம்பர வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தினைப் பேஸ்புக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.

பேஸ்புக் பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்ததையடுத்து தனது வருவாயை பெருக்கும் பல மாற்றங்களை உத்தேசித்து வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதில் ஒன்றாக இதனையும் கருத முடிகின்றது.

உங்களது பழைய மின்னஞ்சல் முகவரியே புரொபைலில் தோன்ற விரும்பினால் அதனை நீங்கள் மாற்றவும் முடியும்.

அதற்காக மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றினாலேயே போதுமானது.[/size]

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39022

பேஸ்புக் என்பது ஒரு ஆபத்தானது.எந்த ஒரு குற்றச்செயல் அமைப்பையும் பல நாடுகளின் பாதுகாப்பு பிரிவினர் இலகுவாக கூண்டோடு கைது செய்வதற்கு காரணம் இந்த பேஸ்புக்தான்.அண்மையில் மொன்றியலில் கைது செய்யபட்ட ஒரு கும்பலில் அனியாயமாக ஆறு பேர் மாட்டி தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளார்கள்.இவர்கள் கைதுக்கு காரணம்,தவறானவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததுதான்.இனி இவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதானால் ஒரு சில லட்சம் டொலர்களை செலவு செய்ய வேண்டியிருக்கும்.ஆகவே பேஸ் புக்கில் எமக்கு நேரடியாக தொடர்பில்லாவிட்டாலும் எமது நண்பர்கள் மூலமாக இணையலாம்.ஆகவே உங்கள் எதிர் காலம் தான் உங்களுக்கு முக்கியம் அரட்டை அடிப்பதல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு அடிக்கடி birthday calendar சேரச்சொல்லி ஓரள் மாறி ஓரள் அனுப்பி கொண்டு இருக்கிறார்கள், அதில் சேருவதில் என்ன பிரச்சனை, இப்ப இன்னுமோரல் எதோ job recruiters அனுப்பி இருக்கறார். அவற்றில் இணைவதால் என்ன பிரயோசனம்/ பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எனது முகநூலில் இருந்த ஒரு நட்பு பிறந்த நாளுக்கு உரிய நாள் காட்டியை அனுப்பிக் கொண்டே இருந்தார்..சரி பிறந்த நாள் கலண்டர் தானே என்றுட்டு ஓப்பிண் பண்ணினால் அது ரைம் லைனுக்குள் போய் விட்டது..வளமையாக யாராச்சும் மெயில் அனுப்பி இருந்தால் அல்லது பிரண்ட் அட்டுக்கு கேட்டு இருந்தால் மட்டுமே அக்ஸ்சப் பண்ணுவேன். அதுவும் அவர்களின் புறோ பைலைப் போய் பார்த்து அவர்களோடு யார்,யார் எல்லாம் பிரண்டாக இருக்கிறார்கள், என்ன எல்லாம் அவர்களின் பேஸ்புக்கில் இணைக்கப்பட்டு இருக்கு,எந்த விசயத்தில் அவர்களின் ஆர்வம் இருக்கிறது என்று நிறைய விடையங்களை கவனித்து பிடிக்கும் பட்சத்தில் தான் உள் நுளைய அனுமதி அளிப்பது வளக்கம்.இப்படி இருந்தே எப்படி நான் ரை லைனுக்குள் நுளைந்தேன் என்று எனக்கே ஆச்சரியம்....எங்களை அறியாமலே சில,சில தவறுகளை விட்டு விடுகிறோம்.இப்போ தேவை இல்லாமல் ரைம்லைனுக்கு மாறிட்டு... :(ஆகவே நன்கு அவதானித்து எமக்கு அந்த விசயத்தில் பூரண திருப்தி என்றால் மட்டுமே எதையும் செய்யவும் எரிமலை அண்ணா...எனக்கு இவற்றில் நிறைந்த அனுபவம் இல்லை என் அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன்.

Edited by யாயினி

ஆம். நானும் அவதானித்தேன். என் email address போட தேவையில்லை என்பதால் hidden என்பதில் விட்டிருந்தேன். எனக்கு மட்டும் தான் அப்படி வருகிறதாக்கும் என்று நினைத்தேன். அனைவருக்கும் என்று இப்ப தான் தெரியும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எனது முகநூலில் இருந்த ஒரு நட்பு பிறந்த நாளுக்கு உரிய நாள் காட்டியை அனுப்பிக் கொண்டே இருந்தார்..சரி பிறந்த நாள் கலண்டர் தானே என்றுட்டு ஓப்பிண் பண்ணினால் அது ரைம் லைனுக்குள் போய் விட்டது..வளமையாக யாராச்சும் மெயில் அனுப்பி இருந்தால் அல்லது பிரண்ட் அட்டுக்கு கேட்டு இருந்தால் மட்டுமே அக்ஸ்சப் பண்ணுவேன். அதுவும் அவர்களின் புறோ பைலைப் போய் பார்த்து அவர்களோடு யார்,யார் எல்லாம் பிரண்டாக இருக்கிறார்கள், என்ன எல்லாம் அவர்களின் பேஸ்புக்கில் இணைக்கப்பட்டு இருக்கு,எந்த விசயத்தில் அவர்களின் ஆர்வம் இருக்கிறது என்று நிறைய விடையங்களை கவனித்து பிடிக்கும் பட்சத்தில் தான் உள் நுளைய அனுமதி அளிப்பது வளக்கம்.இப்படி இருந்தே எப்படி நான் ரை லைனுக்குள் நுளைந்தேன் என்று எனக்கே ஆச்சரியம்....எங்களை அறியாமலே சில,சில தவறுகளை விட்டு விடுகிறோம்.இப்போ தேவை இல்லாமல் ரைம்லைனுக்கு மாறிட்டு... :(ஆகவே நன்கு அவதானித்து எமக்கு அந்த விசயத்தில் பூரண திருப்தி என்றால் மட்டுமே எதையும் செய்யவும் எரிமலை அண்ணா...எனக்கு இவற்றில் நிறைந்த அனுபவம் இல்லை என் அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன்.

அக்கா, timeline இலிருந்து பழைய வடிவத்திற்கு மாற்ற விரும்பினால் நுணாவிலன் அண்ணாவின் இந்த முறையை பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்தி நான் பழைய வடிவத்திற்கு மாற்றியுள்ளேன். இது எனக்கு சரி வந்தது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99304&#entry739387

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.