Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்வதற்காக படையினர்மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன: பாதுகாப்பு அமைச்சு விசனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gotabayan.jpg

[size=4]வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசபடையினர்மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு சிறிலங்கா அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து அதன் மூலம் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size]

[size=4]இந்த நடவடிக்கைகளுக்கு சில அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து இவ்வாறு புகலிடம் கோரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size]

[size=4]யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், தமது பிள்ளைகள் பாதுகாப்பு படையினரால் துன்புறுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தி கடிதம் ஒன்றை வழங்குமாறு மேயரிடம் கோரியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.[/size]

[size=4]வர்த்தகரின் பிள்ளைகள் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருவதாகவும், வீசாவை நீட்டித்துக் கொள்ள இவ்வாறு போலி ஆவணமொன்று அவசியப்படுவதாக அந்நாட்டு சட்டத்தரணி வழங்கிய ஆலோசனைக்கு அமைய வர்த்தகர் போலி ஆவணங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளது.[/size]

[size=4]இவ்வாறு பலர் போலியான முறையில் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு படையினர் அச்சுறுத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும் குற்றம் சுமத்திவருவதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் இவ்வாறு போலியான முறையில் மேற்குலக நாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ள முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

[size=4]கோத்தா, பசில், பொன்சேகா, பாலிதா போன்றவர்களே வெளிநாடுகளில் ஒரு காலை வைத்தவண்ணமே நாட்டிற்காக "உழைக்கும்போழுது" சாதாரண மக்கள் மட்டும் அதை தெரிவு செய்வது பிழை என்று கூறமுடியாது. [/size]

[size=4]வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசபடையினர்மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு சிறிலங்கா அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து அதன் மூலம் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size]

----

[size=4]----[/size]

[size=4]-----[/size]

[size=4]இவ்வாறு பலர் போலியான முறையில் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு படையினர் அச்சுறுத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும் குற்றம் சுமத்திவருவதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. [/size]

என்னமோ அரச படையினரால் நாட்டில் பிரச்சினையே இல்லாத மாதிரி கதைக்கினம். :wub:

அரசாங்கமும், அரச படையினரும் ஒழுங்காக இருந்திருந்தால் மக்கள் ஏன் வெளிநாட்டுக்கு செல்லப்போகிறார்கள். எப்படி அவர்கள் மேல் போலியாக தன்னும் குற்றச்சாட்டு வைப்பார்கள்?

சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து இராணுவத்தால்/பொலிஸால் நாம் துன்புறுத்தப்படுகிறோம், அந்த நாடுகளில் எம்மால் வாழ முடியாது என்று போலியாக தன்னும் சொல்லி வேறு நாடுகளில் விசா எடுக்க முடியுமா? இல்லை தானே?

அது ஏன் என்று அரசாங்கத்துக்கு இன்னும் புரியவில்லை போலிருக்கு. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ போய் விதானை வீட்டில ஒளித்துவிட்டார் போலும்.

அங்கு இருப்பவர்களுக்கு வெளிநாட்டுக்காறனுக்கும் ஒரு முகம் காட்டணும்

சிங்களவனுக்கும் ஒரு முகம் காட்டணும் என்றநிலை.

இதில் ஒழித்து மறைக்க என்ன இருக்கு.

இந்த விசயத்தில கோத்தபாய பொய் சொல்லல.

ஆனால் இலங்கை தமிழருக்கு ஆபத்தான நாடு என்பதை எல்லோருமே ஒத்துக்கொள்கிறார்கள்.

அங்குள்ளவர்களுக்கு ஆபத்து என்பதே அவராலே தான்.

அதை அவர் உணர்ந்தால் ஏன் இன்னும் புலம்பெயர்வு???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.