Jump to content

சத்தீஸ்கர் படுகொலை: ப.சிதம்பரம் பதவி விலக மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல்


Recommended Posts

டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 20 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றதாக கூறப்படும் சம்பவம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் 200 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் சி.ஆர்.பி.எப். முகாமிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிகளையே படையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. இதை உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும் உறுதி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி சச்சார், சுவாமி அக்னிவேஷ், பி.டி. சர்மா போன்ற மனித உரிமை ஆர்வலர்கள், இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் பகிரங்க மன்னிப்பு கோரவும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலகவும் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் உள்துறை அமைச்சக அதிகாரிகள் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். சுட்டுக் கொன்றது மாவோயிஸ்டுகள்தான் என்றும் சிறுவர்களை மாவோயிஸ்டுகள் தங்களது படையில் சேர்த்திருக்கின்றனர் என்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

www.Thatstamil.com

Link to comment
Share on other sites

[size=4]தலைவி சோனியாவும் அவரின் தாளத்திற்கு ஆடும் மன்மோகனும் சிதம்பரத்தாரை எக்காரணம் கொண்டு கைவிடமாட்டார்கள். [/size]

[size=4]இவர்களை இந்திய மக்கள் ஆட்சியை விட்டு நிரந்தமாக கலைத்தால் மட்டுமே இவர்களை அகற்றலாம்.[/size]

Link to comment
Share on other sites

சிதம்பரம் தப்பிப் பிழைப்பது நன்மைக்கே. அதாவது மான்மோகன் சிங் இல்லாத போது இந்த ஆளுதான் காங்கிரசின் முன்னனி நடிகர். இவர் 2G, சத்தீஸ் கொலை எல்லாவற்றிலும் சோனியாவால்தான் காப்பாற்றப்பட்டு அடிமைப்படுத்தபட்டிருக்கிறார். இவர் தமிழ் நாட்டிலேயே ஒரு தொகுதி வெல்ல முடியாதவர் அகில இந்தியாவுக்கு பிரதமர் ஆவதற்கு சோனியா ஆசை காட்டி வைத்திருக்கிறா. அதாவது தமிழ் நாட்டில் தூக்கி எறியப்பட்ட காங்கிரசுக்கு மறுவாழ்வு கொடுத்து, எழும்ப முடியாமல் தவிக்கும் நொண்டி ராகுகலை ஏற்றிக் கட்டிச் சுமந்து திரிய சரியான களுதை ஒன்றைக் கண்டு பிடித்து, இரண்டு-மூன்று மாங்காய்களை ஒருகல்லில் அடிக்க பார்க்கிறா சோனியா. தமிழ் நாடு என்ற திமிறிக்கொண்டு ஓடும் திருக்கையை தலையாட்டிப் பொம்மைத் தொழிலான "காங்கிரசின் பிரதமர்" என்ற இறாலைப்போட்டு வளைச்சுப்பிடிக்க பார்க்கிறா. பிரதமாராக்கி, குடும்பி இல்லாத மொட்டை சிதம்பரத்தின் தலையை மன்மோகன் சிங்கின் தலையை ஆட்டிவைக்க முடியுமா என்பதை விட தமிழமக்களை இவ்வளவு மலிவாக நினைத்தாவானல் அடுத்த தேர்தலில் அதற்கு இன்னுமொருதடவை நன்கு படிப்பிக்கப்படுவ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.